Header Ads

Header ADS

முஹர்ரம் ஆஷூரா நோன்பு ஒன்பதும் பத்தும் சேர்த்து பிடிக்க எந்த ஆதாரமும் இல்லையா?


 பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்


அகிலங்களின் ரப்பாகிய அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். முஹர்ரம் மாதம் ஆஷூரா நோன்பின் சிறப்பை பற்றியோ அல்லது அதன் வரலாறு பற்றியோ நான் இந்த பதிவில் பேசபோவதில்லை அதை பற்றி தான் எல்லா முஹர்ரம் நோன்பை பற்றிய பதிவுகளிளும் பேசப்படுகிறது. ஆனால் யாரும் இந்த நோன்பு எப்போ நோற்க வேண்டும் பற்றிய சரியான கருத்தை சொல்லுவதை எந்த பதிவுலும் நான் காணவில்லை. எனவே அதை சமூகத்திற்கு தெரிவிப்பதற்கே இந்த பதிவு. 

 

அஷூரா நோன்பை பொருத்த வரையில் அதிகமானவர்கள் சொல்வது 9,10 இரண்டிலும் தான் இந்த நோன்பை நோற்க வேண்டும் என்று, ஆனால் நீங்கள் அவ்வாறு சொல்பவர்களிடம் அதற்கான ஆதரத்தை கேட்டால் இமாம்கள் இப்படி சொல்லி உள்ளார்கள், இப்படி தான் நாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், காலம் காலமாக இப்படி தான் நாங்கள் பின்பற்றுகிறோம். புதுசு புதுசா எதாவது சொல்லி குழப்பம் செய்வது. என்ற ஜாஹிலிய வாதங்களை தான் அவர்கள் வைப்பார்களே ஒழிய, கியாம நாள் வரை 9,10 சேர்த்து பிடிக்க ஒரே ஒரு ஹதீஸ் கூட அவர்களால்  காட்ட முடியாது.  


இன்னும் சிலர் உடைய வாதம் நபி அவர்கள் உயிரோடு இருந்த போது பிடித்தது பத்தில் எனவே பத்தில் பிடிப்பது சுன்னது எனவே ஒன்பது பத்து இரண்டிலும் பிடிப்பதாக ஹதீஸ் பற்றிய அறிவில்லாதவர்கள் சொல்கிறார்கள். மார்க்க அறிவு உடைய ஹதீஸ் அறிவு உடையவர்கள் இதை ஏற்க மாட்டார்கள். காரணம் பத்தில் பிடித்த நபி தான் அடுத்த வருடம் ஒன்பதில் பிடிப்போம் என்று சொல்வதன் மூலம் சட்டத்தை மாற்றி விட்டார்கள், பத்தாம் நாள் பிடிக்கும் நோன்பை ஒன்பதாம் நாளுக்கு மாற்றி விட்டார்கள். இப்படி தான் ஹதீஸ்களிள் ஆரம்பகாள் சட்டம் மாற்ற பட்ட சட்டம் என்பதை பிரிப்பார்கள். இதை இவர்கள் சொல்வது போல் எடுக்க போனால் இதே போன்ற பல மாற்ற பட்ட சட்டங்களையும் இதே போன்று எடுக்க வேண்டி வரும் என்பதை இவர்கள் நினைவிள் வைக்க வேண்டும். ஒரு வாதத்திற்கு இவர்கள் சொல்லுவது போல் நபி அவர்கள் பத்தில் பிடித்தார்கள் எனவே அது தான் சுன்னது என்றால் இவர்களின் வாதப்படி  இவர்கள் பத்தில் மாத்திரமே பிடிக்க வேண்டும் ஏனென்றால் நபி உயிரோடு இருக்கும் போது ஒன்பது பத்து சேர்த்து பிடிக்கவில்லை பத்தில் மாத்திரமே பிடித்தார்கள்.

 

 அடுத்து இன்னும் சிலர் 9,10 பிடிக்கலாம் அல்லது 10.11 பிடிக்கலாம் என்று சொல்கிறார்கள், இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா என்றால் அஹ்மத், இப்னு குஸைமா, பைஹகி போன்ற கிதாப்களில் ஒரு செய்தி பதியப்பட்டுள்ளது, ஆனால் இது பளவீனமான செய்தியாகும். ஆனால் 9,10 அல்லது 10,11 கருத்தை சொல்பவர்களும் இந்த செய்தி பலவீனம் என்பதை ஏற்கிறார்கள். ஆனால் அவர்களின் வாதம் என்னவென்றால் நபியின் நோக்கம் யூதர்களுக்கு மாறு செய்வதே எனவே 10, 11 பிடிப்பதும் யூதர்களுக்கு மாறு செய்வது என்று சொல்கிறார்கள். உண்மையில் இஸ்லாமும் இவர்கள் சொல்வது போல தான் சொல்கிறது என்றால் நபியவர்கள் ஏன் அடுத்த வருடம் ஒன்பது வரை கார்த்திருந்தார்கள்? 11 இல் பிடித்திருக்களாமே? எனவே இதுவு ஆதாரம் இல்லாத கூற்று.

 

அப்போ ஆஷூரா நோன்பு எப்போ பிடிப்பது? 

நபி எப்போ பிடிக்க சொன்னார்களோ அப்போ தான் பிடிக்க வேண்டும். 

அந்த ஹதீஸை நேரடியாக பார்த்தாளே போதும். அந்த ஹதீஸை பாருங்கள். 


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?" என்று வினவினர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்" என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2088.
அத்தியாயம் : 13. நோன்பு

 

 நபி ஒன்பது பத்தில் பிடிப்போம் என்று சொல்லவில்லை நபி சொன்னது அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று தான்.  எனவே நாம் ஆஷுரா நோன்பு நோறக வேண்டிய நாள் ஒன்பதாவது நாள் ஆகும். இதற்கு மாற்றமாக ஒன்பது பத்து இரண்டு நாளும் பிடிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அதற்கான ஹதீஸை பதியுங்கள் இன்ஷா அல்லாஹ் நானும் அந்த ஹதீஸின் படி அமல் செய்ய அது உதவும். ஆனால் ஹதீஸை ஆதாரம் போடாமல் மேலே நான் சொன்னது போன்று கதைகள் சொல்வது என்றால் தயவு செய்து கொம்மன்ட் செய்து உங்களுடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீனடிக்க வேண்டாம் அதால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. அல்லாஹ் இஸ்லாத்தை சரியாக புரிந்து நேர்வழியில் வாழ்ந்து  மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள்வானாக. அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

  

(எழுத்து பிழைகள் இருந்தாள் மண்ணிக்கவும் சுட்டிக்காட்டவும்)

 

- Ashfaaq Reshard -

 

No comments

Powered by Blogger.