Header Ads

Header ADS

ஜமிய்யா மழைக்காலத்திற்கு வரக்கூடிய ஹதீஸை கொரோனாவுக்கு அமுல்படுத்துவது சரியா?


எப்போதோ எழுத நினைத்தது எழுதுவதற்க்கு நேரம் கிடைக்கவில்லை இப்போதுதான் நேரம் கிடைத்தது.

கொரோனா நோய் தொற்றுவதாக சொல்லி மழைக்காலத்திற்க்கான சலுகையாக இஸ்லாம் வழங்கிய சட்டத்தை அல்லது ஹதீஸை  கொரோனாவுக்கு ஆதாரமாக எடுத்து உலமா சபை பாங்கில் ("ஷழ்ழூ பீ புயூதிகும்"/"ஷழ்ழூ பீ ரிஹாரிகும்") ஏற்படுத்திய மாற்றம் சரியானதா பிழையானதா என்று வாதம் செய்வதே தவராகும்.

காரணம் உலமா சபை மழைக்காலத்தில் அழிக்கப்பட்ட இந்த ஹதீஸை மழைக்காலத்தில் அமுல் படுத்தி வந்திருந்தால் தான் ஜமிய்யா செய்தது தவரா! சரியா! என்பதை வாதம் செய்வது பொருந்தமாக இருக்கும்.
இந்த ஜமிய்யா எந்த காலத்திlலும் இந்த ஹதீஸை மழைக்காலத்தில் அமுல்படுத்தியதே கிடையாது.
மழைக்காலத்தில் அமுல்படுத்துமாரு வழிகாட்டிய சுன்னாஹ்வை மழைக்காலத்தில் ஒரு தடவை கூட அமுல்படுத்தாமல் எந்த சம்பந்தமும் இல்லாமல் ஒரு நோயிக்கு காரணமாக காட்டி அமுல்படுத்துவதாக சொல்லுவது ஒன்டே போதாவா இந்த உலமா சபை இஸ்லாத்தை தங்களுடைய உலக தேவைக்காக வழைக்கிரார்கள் என்பதற்க்கு.

இதில் இதை விட பெரிய கொடுமை என்ன தெரியுமா?,
மழைகாலங்களில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (அலை) செய்யுமாரு வழிகாட்டிய அந்த சுன்னாஹ்வை மழைக்காலங்களில் உயிர்ப்பித்து அமுல்படுத்திய முஸ்லிம்களை பார்த்து
\\\"புதுசு புதுசா உருவாக்குகிறார்கள், இப்போ பாங்கையும் மாத்திட்டார்கள் இந்த குழப்பவாதிகள்"/// என்று சொன்னவர்கள் தான் இன்றைக்கு ஜமிய்யா சொன்னதும் அதே ஹதீஸை அதாரமாக காட்டுகிறார்கள் சம்பந்தமே இல்லாத கொரோனா நோய்க்கு. ஜமிய்யாவை கண்ணை மூடி தக்லீது செய்யும் இவர்களை திட்டுவதா! அல்லது இவர்களை வழிகெடுக்கும் இந்த உலமாக்களை திட்டுவதா?
ஏமாறுபவன் இருக்கும் வரைக்கும் ஏமாற்றுபவன் இருக்கதான் செய்வான்.
யா அல்லாஹ் இந்த உம்மத்தை வழிகெடுக்கும் உலமாக்களை விட்டும் பாதுகாப்பாயாக.
ஆமீன்.

- Ashfaaq Reshard


No comments

Powered by Blogger.