Header Ads

Header ADS

இஸ்லாமிய பார்வையில் தொற்று நோய்



தொற்றா நோய்:
==============
.
ஒன்று முடிவதற்குள் இன்னொன்றாக வருஷா வருஷம் மக்கள் பீதியைக் கிளறவென்றே டிசைன் டிசைனாக வந்து சேரும் தொற்று நோய்கள் பட்டியலில், இவ்வருடம் “கொரோனா வைரஸ்” (Coronavirus) முதலிடத்தைப் பிடித்துள்ளது.
.
“சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகெங்கும் பரவுதாம்!”
“இதுவரை இந்த வைரஸ் தாக்குதலுக்கு 106 பேர் பலியாம்!”
“பார்க்கும் இடமெல்லாம் வைரஸ் தொற்றியோர் தொப்பு தொப்பென்று விழுந்து சாகிறார்களாம்!!!”
.
இப்படி ஆளாளுக்கு ஒருபுறம் பயமுறுத்த ஆரம்பிக்க, மறுபுறம், பீதியைக் கிளப்புவதையே தொழிலாகக் கொண்ட சர்வதேச ஊடகங்கள் காட்டில் அடைமழை பொழிகிறது.
.
மனித இனத்தைக் கருவறுக்கத் துடிக்கும் ஷைத்தானின் உத்திகளில், பீதியைக் கிளப்புவதன் மூலம் ஈமானைப் பாழ்படுத்துவதும் ஒரு பிரதான உத்தி. இதன் செயல் வடிவங்களுள் ஒன்று தான் வருடா வருடம் ஏதாவதொரு பெயரில் திட்டமிட்டுக் கிளப்பப்படும் தொற்று நோய்ப் பீதி.
.
ஷைத்தானியர்களது இந்தப் பித்தலாட்டத்தில், யார் ஏமாந்தாலும், ஒரு முஃமின் ஒருபோதும் இதில் ஏமாறக் கூடாது.
.
மனித வாழ்வின் அனைத்து விவகாரங்களுக்கும் தெளிவான, அழகிய அறிவுறுத்தல்களை வழங்கிச் சென்ற நபி (ஸல்) அவர்கள், நோய்த் தொற்று சார்ந்த தெளிவுகளையும் அன்றே வழங்கி விட்டார்கள்.
.
நபியின் தெளிவுகளது அடிப்படையில் மட்டுமே ஒரு முஃமின் தன் வாழ்வில் அனைத்தையும் அணுக வேண்டும்.
.
எதை அஞ்ச வேண்டுமென்று நபி (ஸல்) நமக்குக் கூறினார்களோ, அதை மட்டுமே நாம் அஞ்ச வேண்டும். எதை அஞ்சக் கூடாதென்று நபியவர்கள் கூறினார்களோ, அதை ஒருபோதும் அஞ்சக் கூடாது.
.
இந்த அடிப்படைக்கு மாறாக, மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என்று கண்டவன் பேச்சையெல்லாம் நம்பிக் கண்ட நோய்க்கெல்லாம் அஞ்சுபவன் ஒருபோதும் முஃமினாக இருக்க முடியாது; ஷைத்தானின் அடிமைகளே அவ்வாறு அஞ்சி நடுங்குவார்கள்.
.
தொற்று நோய்கள் பற்றி இஸ்லாம் என்ன தான் கூறுகிறது?
.
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லக் கிளம்பிய நவீன “புத்திஜீவி”களில் அனேகர், தொற்று நோய்கள் தொடர்பான ஓரிரு ஹதீஸ்களை மட்டும் மேற்கோள் காட்டுவதன் மூலம், நவீன கிருமிக் கோட்பாடுகளுக்கு சொம்பு தூக்கும் தவறான விளக்கங்களை சமூகத்தில் பரப்புவதே வேதனை.
.
“தொற்று நோய்களது மையக் கருவாக இன்று உலக சுகாதார அமைப்பு கூறும் அதே கிருமிக் கோட்பாட்டைத் தான் 1400 ஆண்டுகளுக்கு முன்பு நபி (ஸல்) அவர்களும் வேறு வார்த்தைகளில் கூறியுள்ளார்கள்” என்று நபியின் பெயரில் ஒரு பச்சைப் பொய்யை இட்டுக் கட்டிப் பரப்பும் நவீன “முஸ்லிம் புத்திஜீவிகள்”, தமது வியாக்கியானங்களை நியாயப் படுத்தப் பின்வரும் ஹதீஸ் ஆதாரங்களையே பொதுவாக முன்வைப்பது வழமை.
.
ஆதாரம் 1:
“ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியுள்ளதை நீங்கள் கேள்விப் பட்டால், அங்கு செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் இருக்கும் ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டால், அங்கிருந்து நீங்கள் வெளியேறவும் வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஅத் (ரழி) / நூல்: புகாரி 5728
.
ஆதாரம் 2:
“நோயுற்ற ஒரு கால்நடையை ஆரோக்கியமான கால்நடைகளுடன் கலக்க வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 5771
.
மேலோட்டமான பார்வையில் இவ்விரு ஹதீஸ்களும், நவீன கிருமிக் கோட்பாடுகளை உறுதிப் படுத்துவது போலவே அமைந்துள்ளதை மறுக்க முடியாது.
.
இதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் “அறிவியல் முஃப்திகள்”, இந்த ஹதீஸ்களது சரியான அர்த்தங்களைக் கண்டறிவதற்குப் பதிலாக, கிருமிக் கோட்பாட்டை ஆதரிக்கும் வியாக்கியானங்களை இதற்குக் கற்பிப்பதில் மட்டுமே குறியாக உள்ளார்கள்.
.
அதாவது, நோய்க் கிருமிகள் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதன் மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதைக் கருத்திற் கொண்டே, நோயுற்றவர்களை சுகதேகிகளோடு கலக்க வேண்டாமென்று நபியவர்கள் எச்சரித்ததாகவும், இதன் மூலம், கிருமிக் கோட்பாட்டின் “தனிமைப் படுத்தல்” (Quarantine) எனும் வழிமுறையைத் தான் நபியவர்கள் ஏவியுள்ளார்கள் என்றும் விளக்கம் கூறுகிறார்கள்.
.
உண்மையில், இந்த வியாக்கியானமே நகைப்புக்குரியது.
.
கிருமிகள் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்றுவதன் காரணமாகவே தொற்று நோய்கள் பரவுகின்றன எனும் அர்த்தத்தில் எந்தக் கருத்தையும் நபியவர்கள் எங்குமே சொன்னதில்லை. இது போன்ற நம்பிக்கைக் கோட்பாடுகளை இஸ்லாம் அடியோடு மறுக்கிறது.
.
அவ்வளவு ஏன்? ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் “தொற்றும் நோய்கள்” எனும் பேச்சுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.
.
ஆதாரம் 1:
“தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; ஹாமா (எனும் மூட நம்பிக்கை) கிடையாது; ஸஃபர் (எனும் பீடை) கிடையாது.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 5757
.
ஆதாரம் 2:
“தொற்று நோய் (என்று எதுவும்) கிடையாது; பறவை சகுனமும் கிடையாது; ஸஃபர் (பீடையும்) கிடையாது; ஹாமாவும் கிடையாது.” என்று நபி (ஸல்) கூறினார்கள். அப்போது ஒரு கிராமவாசி, “அல்லாஹ்வின் தூதரே, பாலைவனத்தில் மான்களைப் போல் (சுகமாக) இருக்கும் ஒட்டகங்களிடம் ஒரு சொறி பிடித்த ஒட்டகம் வந்து சேரும் போது, அவை அனைத்துக்கும் அதே சொறி தொற்றி விடுகிறதே. இதை என்னவென்பது?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “அப்படியாயின், அந்த முதல் ஒட்டகத்துக்கு அந்த நோயை முதலில் தொற்றச் செய்தது யார்?” என்று திருப்பிக் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 5770
.
இஸ்லாத்தின் நம்பிக்கைக் கோட்பாடுகளில் “தொற்று நோய்” என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை மேலுள்ள ஹதீஸ்கள் பச்சையாகவே கூறுகின்றன.
.
இவ்வளவு தெளிவாகத் தொற்று நோய்களை அடியோடு மறுத்துள்ள நபியவர்கள், மறுபுறம் தனக்குத் தானே முரணாக, “வரும்; ஆனால் வராது” என்பது போல், “ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்க் கிருமிகள் தொற்றும்” என்று கூறியிருப்பார்களா? இந்த ஒரு சிறிய விடயத்தைக் கூடவா நம்மால் சிந்திக்க முடியவில்லை?
.
ஹதீஸ்களைப் புரிவதிலும், அவற்றை மக்களுக்குத் தெளிவு படுத்துவதிலும் இன்று நம் புத்திஜீவிகளுக்குத் தான் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளனவே ஒழிய, ஹதீஸ்களில் எந்தக் குழப்பமும் இல்லை. ஹதீஸ் நிலைபாடுகள் தெளிவானவை.
.
“ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்க் கிருமிகள் தொற்றுவதனாலேயே தொற்று நோய்கள் பரவுகின்றன” எனும் கோட்பாடே இஸ்லாத்துக்கு எதிரானது. இதில் எந்தச் சந்தேகமும் வேண்டியதில்லை.
.
அப்படியாயின், ஏற்கனவே நாம் பார்த்த இரு ஹதீஸ்களிலும், நோய் பரவும் ஊர்களுக்குள் செல்ல வேண்டாமென்றும், நோயுற்ற கால்நடைகளை சுகதேகிகளுடன் கலக்க வேண்டாமென்றும் நபியவர்கள் கூறியதன் அர்த்தம் தான் என்ன?
.
ஓரிரு ஹதீஸ்களது மேலோட்டமான அர்த்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு இந்தக் கேள்விக்கு சரியான பதிலைக் கண்டறிந்து விட முடியாது. இது குறித்த ஏனைய ஹதீஸ்களையும் ஆய்வுக்கு உட்படுத்தி, அனைத்தினதும் தொகுப்பில் இருந்தே சரியான விளக்கங்களை அடைய முயற்சிக்க வேண்டும். அப்போது தான் தெளிவுகள் பிறக்கும். இந்த முயற்சியின் வெளிப்பாடாகவே இக்கட்டுரை அமைந்துள்ளது.
.
முதலில் ஓர் அடிப்படையை நாம் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்.
.
மக்களிடையே பரவும் நோய்களை இஸ்லாம் இரண்டு வகைகளாக வகுத்துள்ளது.
.
முதல் வகை: “அDத்வா” (தொற்று நோய்)
இரண்டாவது வகை: “தாஊன்” (கொள்ளை நோய்)
.
இந்த இரண்டில், “தொற்று நோய்” எனும் முதல் வகையை அடியோடு மறுத்துள்ள நபியவர்கள், “கொள்ளை நோய்” எனும் இரண்டாவது வகையை மட்டுமே உண்மையென்று உறுதிப் படுத்தியுள்ளார்கள்.
.
இந்த வித்தியாசத்தை முறையாகப் புரிந்தாலே பல குழப்பங்கள் தீர்ந்து விடும். இனி இதைக் கொஞ்சம் விலாவாரியாகப் பார்க்கலாம்.
.
“அத்வா” எனும் தொற்று நோய்:
.
ஆதாரம் 1:
“(இஸ்லாத்தின் பார்வையில்) தொற்று நோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. அதே நேரம், “ஃப’ல்” (நல்ல சொற்கள்) எனும் சகுனத்தை நான் விரும்புகிறேன்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) / நூல்: புகாரி 5756
.
ஆதாரம் 2:
“நோயுற்ற ஒரு கால்நடையை சுகதேகியான கால்நடைகளிடம் கொண்டு செல்ல வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 5771
.
ஆதாரம் 3:
“தொற்று நோய் கிடையாது” என்று நபி (ஸல்) கூறியதாக அறிவித்த அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், “நோயுற்ற ஒரு (கால்நடையை) சுகதேகிகளிடம் கொண்டு செல்ல வேண்டாம்” என்று நபியவர்கள் கூறியதாகவும் அறிவித்தார்.
நூல்: முஸ்லிம் 2221 / பாடம் 26, ஹதீஸ் 5511
.
மேலுள்ள மூன்று அறிவிப்புகளிலும், முதல் அறிவிப்புக்கு நேர்முரணாக, இரண்டாம் / மூன்றாம் அறிவிப்புகளில் வேறொரு கருத்தை நபியவர்கள் கூறியிருப்பது போலவே தோன்றுகிறது.
.
தனக்குத் தானே முரண்பட்டு நபி (ஸல்) ஒருபோதும் பேச மாட்டார்கள். அப்படியாயின், ஒன்றுக்கொன்று முரண் போலிருக்கும் இவ்விரு ஹதீஸ்களையும் எப்படி இணைத்துப் புரிவது? இவ்விரு ஹதீஸ்களதும் ஒருங்கிணைந்த அர்த்தம் தான் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலும் ஹதீஸ்களிலேயே உண்டு.
.
ஆதாரம் 1
“தொற்று நோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது; ஹாமாவும் கிடையாது” என்று நபி (ஸல்) கூறினார்கள். உடனே ஒரு கிராமவாசி எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே, ஒரு சொறி பிடித்த ஒட்டகம் (வந்து சேரும் இடத்தில்) எல்லா ஒட்டகங்களுக்கும் சொறி பிடிக்கிறதே. இதைப் பற்றி என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அன்னார், “இறைவன் எழுதிய விதியின் காரணமாக மட்டுமே அது நடக்கிறது. (தொற்றுவதன் மூலம் அது நடப்பதில்லை). அவ்வாறு இல்லாத பட்சத்தில், வேறெப்படி முதல் ஒட்டகத்துக்கு சொறி பிடித்தது?” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரழி) / நூல்: இப்னுமாஜா 91, 3669
.
ஆதாரம் 2:
(ஒருமுறை) எங்கள் மத்தியில் எழுந்து நின்ற நபி (ஸல்) அவர்கள், “ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எந்த (நோயும்) தொற்றுவதில்லை” என்று கூறினார்கள். அப்போது ஒரு கிராமவாசி, “அல்லாஹ்வின் தூதரே, ஓர் ஒட்டகத்துக்கு சிரங்கு பிடித்த பிறகு, அதை ஏனைய ஒட்டகங்களோடு தங்க வைத்தால், எல்லா ஒட்டகங்களுக்குமே சிரங்கு பிடிக்கிறதே. (இது எப்படி)?” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், “அப்படியாயின், முதல் ஒட்டகத்துக்கு சிரங்கு தொற்ற யார் காரணம்?” என்று கேட்டு விட்டு, “தொற்று நோய் கிடையாது; ஸஃபர் பீடையும் கிடையாது. ஒவ்வோர் ஆத்மாவையும் அல்லாஹ்வே படைத்தான். அவற்றின் ஆயுளையும், இரணத்தையும், இன்னல்களையும் (முன்கூட்டியே விதியில்) அவன் எழுதியும் விட்டான். (விதிப் படி மட்டுமே நோய்கள் ஏற்படுவதல்லாமல், யாரிடமிருந்தும் எவருக்கும் எதுவும் தொற்றுவதில்லை.)” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரழி) / நூல்: திர்மிதி 2293
.
கிருமிகள் மூலம் ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்கள் தொற்றும் என்று யாராவது நம்பினால், “கத்ர்” எனும் ஈமானின் ஆறாவது அம்சத்தையே அவர் மறுக்கிறார் என்றே அர்த்தம். இதைத் தான் மேலுள்ள ஹதீஸ்கள் தெளிவாகவே நமக்கு எச்சரிக்கின்றன.
.
ஈமானின் ஆறு அம்சங்களில் ஒன்றை மறுத்தால் கூட, இறைவனிடம் அது பாரதூரமான குற்றம். இந்தக் குற்றத்தைத் தான் இன்று நம்மில் பலர் எந்த உறுத்தலும் இல்லாமல் செய்கிறார்கள். நவீன மருத்துவ அறிவியல் மீது கொண்ட அதீத நம்பிக்கையே இக்குற்றத்தை அனேகர் செய்யக் காரணம்.
.
ஆக, நோய் தொற்றல் எனும் கோட்பாடு ஈமானுக்கே எதிரானது என்பது இங்கு தெளிவாகி விட்டது. இருந்தாலும், இன்னும் ஒரு கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டிய தேவையும் இங்கு உள்ளது.
.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு எந்த நோய்களும் தொற்றுவதே இல்லையென்றால், பிறகு எதற்காக நபியவர்கள் நோயுற்ற உயிரினங்களை சுகதேகிகளுடன் கலக்க வேண்டாம் என்று தடை விதித்தார்கள்?
.
இந்தக் கேள்விக்கான பதில் பின்வரும் ஹதீஸில் ஒளிந்துள்ளது.
.
ஆதாரம்:
“தொற்று நோய் கிடையாது; ஹாமா கிடையாது; ஸஃபர் கிடையாது. அதே நேரம், நோயுற்ற ஒரு கால்நடையின் உரிமையாளர், அதை சுகதேகியான கால்நடைகள் நிறுத்தப்படும் இடத்தில் நிறுத்தக் கூடாது. ஆனால், சுகதேகியான ஒரு கால்நடையின் உரிமையாளர், அதை எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள். “இதற்கு என்ன காரணம், அல்லாஹ்வின் தூதரே?” என்று சிலர் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், “அதனால் (வேறு) தீங்குகள் விளையும்” என்று பதில் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அதியா (ரழி)
நூல்: முவத்தா மாலிக் பாடம் 50, ஹதீஸ் 1732
.
இந்த ஹதீஸில் பல நுணுக்கமான செய்திகள் உண்டு.
.
நோயுற்ற ஒரு மிருகத்தை சுகதேகி மிருகங்களுக்கு அருகில் நிறுத்துவது “தீங்கு ஏற்படுத்தும்” என்று கூறும் நபியவர்கள், “தொற்று நோய்” என்று எதுவுமே கிடையாதென்றும் அதே செய்தியில் கூறியுள்ளார்கள் என்றால், நிச்சயமாக இச்செய்தியில் கூறப்படும் தீங்கு என்பது நோய் தொற்றுதல் அல்ல என்பது தெளிவு.
.
அப்படியாயின், இங்கு நபியவர்கள் குறிப்பிடும் “தீங்கு” என்பது என்ன? இதற்கான பதிலை, இந்த ஹதீஸைப் பதிவு செய்த மதீனாவின் மூத்த இமாம் மாலிக் (ரஹ்) அவர்களே மறைமுகமாக வழங்கி விட்டார்கள்.
.
இமாம் மாலிக் (ரஹ்) தனது முவத்தா கிரந்தத்தில், “கண்ணேறு” எனும் தலைப்பின் கீழேயே இச்செய்தியைப் பதிவு செய்துள்ளார்கள். இதிலிருந்தே, “தீங்கு” எனும் வார்த்தை மூலம் நபியவர்கள் இங்கு குறிப்பிட்டிருப்பதே கண்ணேறின் தீங்குகளைத் தான் என்பது தெளிவாகிறது.
.
கண்ணேறின் தீங்குகளைத் தான் இந்த ஹதீஸ் குறிக்கிறது என்பதை நடைமுறை வாழ்விலிருந்து கூட நாம் அழகாகப் புரியலாம்.
.
பொதுவாக, சுகதேகியான ஒருவர், ஒரு நோயாளியின் வீட்டுக்கோ, மருத்துவமனைக்கோ சென்று அவரைப் பார்க்கும் போது, நோயுற்றவர் உள்ளத்துக்கு ஓர் ஆறுதல் கிடைக்கிறது.
.
அதே நேரம், அதே நோயாளியைப் பல சுகதேகி மனிதர்கள் சுதந்திரமாக அளவலாவும் ஓரிடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு அனைவர் மத்தியிலும் அமர வைத்தால், நிச்சயம் அந்த நோயாளியின் உள்ளத்தில் ஆறுதலுக்குப் பதிலாக ஒரு தாழ்வு மனப்பான்மையும், வேதைனைகளுமே மிகைக்கும்.
.
அதாவது, சுற்றியிருக்கும் சுகதேகிகள் சந்தோஷமாக உலவுவதைப் பார்க்கும் அந்த நோயாளியின் உள்ளத்தில், தன்னாலும் அதுபோல் சுகதேகியாக நடமாட முடியவில்லையே என்ற ஏக்கமும், கவலையும், பொறாமையுமே மிகைக்கும்.
.
இந்தப் பொறாமையுணர்வு சில சமயங்களில் கண்ணேறாகவும் மாற வாய்ப்புண்டு. இந்த உளவியல் யதார்த்தங்களையும் கருத்திற்கொண்டே சுகதேகிகள் சஞ்சரிக்கும் இடத்தில், நோயுற்ற ஒரு கால்நடையைக் கொண்டு சென்று நிறுத்துவது தீங்கு விளைவிக்கும் என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.
.
மற்றப்படி, ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றும் எனும் அர்த்தத்தில் நோயாளியை சுகதேகிகளுடன் கலக்க வேண்டாம் என்று நபியவர்கள் கூறவே இல்லை. “தொற்று நோய் கிடையாது” எனும் வாசகமே இதை உறுதிப் படுத்தி விட்டது.
.
ஆக, நமது சந்தேகங்கள் பலவற்றுக்கு இந்த ஹதீஸில் பதில் கிடைத்து விட்டது. இனி இன்னொரு சர்ச்சைக்குரிய ஹதீஸையும் பார்த்து விடலாம்.
.
ஆதாரம்:
“தொற்று நோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது; ஹாமா கிடையாது; ஸஃபர் பீடையும் கிடையாது. அதே நேரம், சிங்கத்திடமிருந்து வெருண்டோடுவது போல், குஷ்டரோகியிடமிருந்து ஒருவர் தூரமாகி விட வேண்டும்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 5707
.
குஷ்டரோகியை நெருங்க வேண்டாமென்று இச்செய்தியில் நபியவர்கள் கூறிய அறிவுறுத்தலையும் சிலர் தொற்று நோய்க்கு சார்பாக அர்த்தம் செய்வதுண்டு. “தொற்று நோயே கிடையாது” என்று ஏற்கனவே நபியவர்கள் ஆணித்தரமாகக் கூறியிருக்கும் போது, தொற்று நோய்க்குச் சார்பாக இந்த ஹதீஸை அர்த்தம் செய்வதே தவறு.
.
இச்செய்தியில், குஷ்டரோகியை நெருங்க வேண்டாமென்று நபியவர்கள் கூறியதன் அர்த்தமே வேறு.
.
இஸ்லாத்தின் பார்வையில், குஷ்டரோகம் என்பது, வெறும் நோயாக மட்டுமே பார்க்கப்படும் ஓர் அம்சம் கிடையாது. சிலரைச் சோதிக்கவோ, அல்லது தண்டிக்கவோ, அவர்கள் மீது அல்லாஹ் நேரடியாகவே இறக்கும் ஓர் அழிவாகவே குஷ்டரோகம் கருதப்படுகிறது.
.
“உங்கள் கைகளால் உங்களை நீங்களே அழிவினுள் தள்ளி விடாதீர்கள்.” (அல்குர்ஆன் 2:195) எனும் திருமறை வசனத்துக்கமைய, சிலர் மீது அல்லாஹ் அழிவுகளை இறக்கும் போது, அவர்களிடம் நாமாக வலியச் சென்று, அந்த அழிவில் ஒரு பங்கை நாமும் அடைந்து கொள்ள முயற்சிப்பது மார்க்கத்தில் தடுக்கப் பட்டுள்ளது.
.
இந்தத் தடைக்கு அமைய மட்டுமே குஷ்டரோகியிடம் நெருங்கக் கூடாதென்று நபி (ஸல்) தடுத்துள்ளார்கள். பின்வரும் ஆதாரங்கள் வாயிலாக இந்த உண்மையைப் புரியலாம்.
.
ஆதாரம் 1:
“குஷ்டரோகத்தில் இருந்தும், பித்துப் பிடிப்பதில் இருந்தும், யானைக்கால் நோயிலிருந்தும், தீய நோய்களிலிருந்தும் அல்லாஹ்வே உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்” என்று நபி (ஸல்) அடிக்கடி பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) / நூல்: அபூதாவூத் 1554
.
ஆதாரம் 2:
“எந்தவொரு முஸ்லிம் தன் வசமுள்ள உணவுகளை (தர்மம் செய்யாமல்) பதுக்கி வைத்துக் கொள்கிறாரோ, அவரைக் குஷ்டரோகியாகவோ, திவாலாகவோ ஆக்கி, அல்லாஹ் வேதனை செய்கிறான்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உமர் (ரழி) / நூல்: இப்னுமாஜா 2238
.
ஆதாரம் 3:
(நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுப்பதற்காக) வந்த தாகிஃப் கூட்டத்தார் மத்தியில் ஒரு குஷ்டரோகி இருந்தார். (அவர்களை ஊருக்குள் வர அனுமதிக்காத) நபி (ஸல்) அவர்கள், “உங்கள் உறுதிமொழியை நான் ஏற்றுக் கொண்டேன். நீங்கள் அப்படியே திரும்பிச் செல்லுங்கள்.” என்று செய்தியனுப்பினார்கள்.
அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஷரீத் / நூல்: நஸாஈ 4182
.
ஆக, இச்செய்திகளிலிருந்து, குஷ்டரோகம் என்பது வெறும் நோய் மட்டுமல்ல; அது சிலரைச் சோதிக்கவோ, தண்டிக்கவோ அல்லாஹ் இறக்கும் ஓர் அழிவு என்பதைப் புரிய முடிகிறது.
.
ஏற்கனவே ஓர் அழிவு இறக்கப் பட்டிருக்கும் ஓர் இடத்துக்கு நாமாகச் சென்று, அதில் பங்கெடுப்பதை மார்க்கம் தடுத்துள்ளது. இந்தத் தடைக்கு அமையவே குஷ்டரோகியிடமிருந்து தூரமாகுமாறு நபி (ஸல்) கூறியுள்ளார்கள்; நோய் தொற்றி விடும் எனும் அடிப்படையில் அல்ல.
.
சில சமூகங்கள் மீது சோதனையாகவோ, தண்டனையாகவோ அல்லாஹ் இறக்கும் பேரழிவுகளில் குஷ்டரோகம் மட்டும் என்றில்லாமல், இன்னும் சில வகை நோய்களும் உண்டு. அவற்றைக் “கொள்ளை நோய்கள்” என்று மார்க்கம் கூறுகிறது. இவற்றிலிருந்தும் நாம் தள்ளியிருக்க வேண்டும். இனி இது குறித்த சில விபரங்களையும் அடுத்து பார்க்கலாம்.
.
கொள்ளை நோய்:
.
“தாஊன்” (Plague), “வBபா’அ” (Epidemic), மற்றும் “வஜா’அ” (நோவினை) போன்ற பதப் பிரயோகங்கள் மூலம் ஹதீஸ்களில் குறிப்பிடப் பட்டிருப்பவை எல்லாமே கொள்ளை நோய்களையே குறிக்கின்றன.
.
இஸ்லாத்தின் பார்வையில் சாதாரண நோய்க்கும், கொள்ளை நோய்க்கும் வித்தியாசம் உண்டு.
.
சாதாரண நோய்களைப் போலில்லாமல், குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில், குறிப்பிட்ட சில சமூகங்கள் மீது, அவர்களைத் தண்டிக்கவோ, அல்லது சோதிக்கவோ இறைவன் திட்டமிட்டு இறக்கும் பேரழிவே கொள்ளை நோய்.
.
கொள்ளை நோய்க்கு மருத்துவம் கிடையாது. மேலும், குறிப்பிட்ட ஒரு நோயின் வடிவத்தில் மட்டும் தான் கொள்ளை நோய் எப்போதும் வரும் என்றும் இல்லை. எந்த நோயின் வடிவத்தில் வேண்டுமானாலும் கொள்ளை நோய் வரலாம்.
.
ஒரு பிரதேசத்துக்குக் கொள்ளை நோய் வரும் போது, அதை யாராலும் தடுத்து நிறுத்தவும் முடியாது. எந்த ஊரை / நாட்டை நோக்கி இறைவன் அதை அனுப்புகிறானோ, அந்த இடத்தை அது வந்தடைந்தே தீரும். அதற்கென்று நியமிக்கப் படும் காலம் முடியும் வரை அது அங்கேயே தங்கி, கொத்துக் கொத்தாகப் பல உயிர்களைக் காவு கொண்ட பிறகு, அதுவாகவே தன் பாட்டுக்கு விலகிச் சென்று விடும்.
.
அல்லாஹ்வின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ளும் பல சமூகங்கள் மீது பூகம்பங்கள் / பிரளயங்கள் / புயல் காற்றுகள் / வெட்டுக்கிளிகள் போன்ற பேரழிவுகள் அவ்வப்போது தண்டனையாக அனுப்பப் படுவது காலா காலமாக நிகழும் ஒரு வழமை.
.
இது போன்ற பேரழிவுகள் ஓர் ஊருக்குத் தண்டனையாக அனுப்பப் படும் போது, அங்கு நாமாக வலியச் சென்றால், அந்தப் பேரழிவில் ஒரு பங்கு நமக்கும் இலவசமாகக் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.
.
எனவே, இது போன்ற பேரழிவுகள் ஓர் ஊரில் நிகழும் போது, அவ்வூரை விட்டுத் தள்ளியிருப்பதே பாதுகாப்பு.
.
இதே போன்ற அடிப்படையில் தான் கொள்ளை நோய்களையும் இஸ்லாம் கூறுகிறது.
.
கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊருக்குள் நாமாக வலியச் சென்று, அதில் பங்கு கொள்ளவும் கூடாது. நமது ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டால், அதற்குப் பயந்து நாம் ஊரிலிருந்து வெளியேறவும் கூடாது. இதுவே மார்க்கத்தின் கட்டளை.
.
அந்தக் கொள்ளை நோய் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குத் தொற்றி விடும் எனும் அர்த்தத்தில் மார்க்கம் இதைக் கூறவில்லை.
.
ஒரு சமூகத்தைக் குறி வைத்து இறைவனால் அனுப்பப்படும் கொள்ளை நோய் எனும் பேரழிவு, அந்தச் சமூகத்தோடு மட்டுமே முடிந்து விட வேண்டும். அநாவசியமாக வேறு சமூகங்களையும் அந்த அழிவில் சம்பந்தப் படுத்தும் நடவடிக்கைகளில் நாமாக ஈடுபடக் கூடாது என்பதே இந்தத் தடைக்குக் காரணம். இதற்கான ஆதாரங்களை அடுத்து நாம் பார்க்கலாம்.
.
ஆதாரம் 1:
“மதீனா நகரின் வாயில்களில், (நகரின்) காவலுக்கு வானவர்கள் நிறுத்தப் பட்டுள்ளார்கள். எனவே, கொள்ளை நோயும், தஜ்ஜாலும் அங்கு நுழைய முடியாது.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 1880
.
கொள்ளை நோய் என்பது சாதாரண நோய்களைப் போன்றது அல்ல என்பதையும், தஜ்ஜாலைப் போன்றதொரு தீய சக்தியே அது என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவு படுத்துகிறது.
.
ஆதாரம் 2:
“கொள்ளை நோய் என்பது பனூ இஸ்ரவேலர்களில் ஒரு கூட்டத்தாருக்கு அனுப்பப் பட்ட ஒரு விதமான தண்டனையாகும். எனவே, ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதை நீங்கள் செவியுற்றால், அங்கு செல்ல வேண்டாம். உங்கள் ஊரில் ஒரு கொள்ளை நோய் பரவி விட்டால், அதிலிருந்து தப்பிக்கும் நோக்கத்தோடு ஊரிலிருந்து நீங்கள் வெளியேறவும் வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா (ரழி) / நூல்: புகாரி 3473
.
ஆதாரம் 3:
“உங்களுக்கு முந்திய சில சமூகங்களைத் தண்டிக்கவே கொள்ளை நோய்கள் அனுப்பப் பட்டன. அதில் எஞ்சிய சில (கொள்ளை நோய்களே) அவ்வப்போது ஆங்காங்கே வந்து செல்கின்றன. எனவே, ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதை ஒருவர் செவியுற்றால், அவர் அங்கு செல்ல வேண்டாம். மேலும், நீங்கள் வசிக்கும் ஊரில் கொள்ளை நோய் பரவி விட்டால், அதிலிருந்து தப்பிக்க நீங்கள் அங்கிருந்து வெளியேறவும் வேண்டாம்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸாமா (ரழி) / நூல்: புகாரி 6974
.
ஆதரம் 4:
கொள்ளை நோய் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் நான் வினவினேன். அதற்கு அன்னார், “அது அல்லாஹ், தான் நாடியோர் மீது அனுப்பும் தண்டனையாகும். அதையே முஃமின்களுக்கு அருளாகவும் அல்லாஹ் ஆக்கி விட்டான். எனவே, கொள்ளை நோய் பரவியிருக்கும் ஓர் ஊரில் வாழும் ஒருவர், அதில் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவராகவும், அல்லாஹ் விதித்ததைத் தவிர வேறெதுவும் தன்னை அடையாது என்று நம்பிக்கை வைத்தவராகவும் பொறுமையோடு தனது ஊரிலேயே தங்கியிருந்து, (அதில் அவர் மரணிக்க) நேர்ந்தால், ஓர் உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் நன்மை அவருக்குக் கிடைக்கும்.” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி) / நூல்: புகாரி 3474
.
ஆதாரம் 5:
“கொள்ளை நோய் என்பது, ஒவ்வொரு முஸ்லிமையும் உயிர்த் தியாகியாக (மரணிக்கச் செய்யும்) ஒரு காரணியாகும்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரழி) / நூல்: புகாரி 2830
.
ஆதாரம் 6:
“ஐந்து பேர் உயிர்த் தியாகிகளாகக் கருதப் படுகிறார்கள். கொள்ளை நோயில் மரணிப்பவர், பேதியில் (காலரா) மரணிப்பவர், நீரில் மூழ்கி மரணிப்பவர், இடிபாடுகளில் நசுங்கி மரணிப்பவர், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் போராடி மரணிப்பவர் ஆகியோரே அவர்கள்.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி) / நூல்: புகாரி 2829
.
மேலுள்ள ஹதீஸ்கள் அனைத்தையும் பார்க்கும் போது, கொள்ளை நோய் என்பது ஏனைய நோய்களைப் போன்ற சாதாரண நோய் அல்லவென்பதையும், அதற்கு மருத்துவம் கிடையாது என்பதையும், தீயோருக்கு அது தண்டனை என்பதையும், நல்லோருக்கு அதுவே உயிர்த் தியாகம் எனும் அருள் என்பதையும் இலகுவாக நாம் புரிய முடிகிறது.
.
ஆதாரம் 7:
“(இரவில் உறங்கச் செல்லும் போது வீட்டிலுள்ள) பாத்திரங்களை மூடி வையுங்கள். நீர்ப் பைகளை முடிந்து வையுங்கள். ஏனெனில், ஒவ்வொரு வருடத்திலும் ஒரு குறிப்பிட்ட இரவில் ஒரு கொள்ளை நோய் இறங்குகிறது. திறந்து வைத்திருக்கும் எந்தப் பாத்திரத்தினுள்ளும், நீர்ப் பையினுள்ளும் அந்தக் (கொள்ளை நோயில்) ஒரு பகுதி இறங்காமல் அது கடந்து செல்வதே இல்லை.” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி) / நூல்: முஸ்லிம் 2014 / பாடம் 23, ஹதீஸ் 5000
.
ஒவ்வொரு வருடமும் “வைரஸ் நோய்கள்” எனும் பெயரில் புதுப்புது நோய்கள் உலகில் அறிமுகமாவதை இன்று நாம் பரவலாகவே பார்த்து வருகிறோம்.
.
உண்மையில், இது போன்ற புதுப்புது நோய்கள் ஆண்டு தோறும் உலகில் பரவுவதற்கு எந்த வைரஸ் கிருமியும் காரணமில்லை. ஆண்டு தோறும் இறைவன் இறக்கும் கொள்ளை நோய்களில் சில பகுதிகளே “வைரஸ்” எனும் பெயரில் இன்று பரவலாக அறியப் படுகின்றன. யாரிடமிருந்தும் யாருக்கும் இந்நோய்கள் பரவுவதில்லை. இறைவனின் நாட்டப் பிரகாரம், சில மக்கள் மீது நேரடியாகவே இறங்கும் நோய்களே இவை.
.
ஆதாரம் 8:
உமர் (ரழி) அவர்கள் (ஒருமுறை) ஷாம் தேசம் நோக்கிப் புறப்பட்டார்கள். வழியில், தபூக் பிரதேசத்துக்கு அருகில், ஸர்ஃக் எனும் இடத்தை அவர் அடைந்த போது, ஷாம் தேசத்தில் கொள்ளை நோய் பரவியுள்ளதாக அவருக்கு செய்தி கிடைத்தது. அப்போது அவருடனிருந்த அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) அவர்கள், “ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதை நீங்கள் செவியுற்றால், அங்கு செல்ல வேண்டாம்; உங்கள் ஊரில் கொள்ளை அது பரவி விட்டால், அங்கிருந்து நீங்கள் வெளியேறவும் வேண்டாம்” என்று நபி (ஸல்) கூறியதாக அவரிடம் அறிவித்தார். உடனே உமர் (ரழி) அவர்கள் (ஷாம் தேசத்தினுள் பிரவேசிக்காமல்), அங்கிருந்து திரும்பி விட்டார்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு ஆமிர்
நூல்: முவத்தா மாலிக் பாடம் 45, ஹதீஸ் 1623
.
நபி (ஸல்) அவர்களது அறிவுறுத்தல்களை அச்சொட்டாகப் பின்பற்றிய உத்தம ஸஹாபாக்கள் கொள்ளை நோய் விவகாரத்தில் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதற்கு இந்த ஹதீஸ் ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.
.
இதுவரை நாம் பார்த்த ஆதாரங்களதும், விளக்கங்களதும் சாராம்சமாகப் பின்வரும் உண்மைகளை நாம் பட்டியலிடலாம்.
.
தொற்று நோய் எனும் ஒரு கோட்பாட்டுக்கே இஸ்லாத்தில் இடமில்லை.
.
கிருமிகள் வாயிலாக ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு நோய்கள் தொற்றும் என்று யார் நம்புகிறாரோ, அவர் இறைவனின் “கத்ர்” எனும் ஈமானின் ஆறாவது அம்சத்தையே மறுக்கிறார் என்று அர்த்தம்.
.
அதே நேரம், கொள்ளை நோய்கள் எனும் வேறொரு வகை நோய்கள் உண்டு. அவை தொற்று நோய்கள் அல்ல. ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு அவை தொற்றுவதில்லை. அவை பரவுவதற்கு எந்தக் கிருமிகளும் காரணமும் இல்லை.
.
அல்லாஹ் நாடும் சமூகங்களுக்குத் தண்டனையாகவோ, சோதனையாகவோ அனுப்பப் படும் அழிவுகளின் ஒரு வடிவமே கொள்ளை நோய்.
.
“தாஊன்” (Plague), “வBபா’அ” (Epidemic), மற்றும் குஷ்டம், காலரா போன்ற பெயர்களில் ஹதீஸ்களில் அறியப் படுபவை எல்லாமே கொள்ளை நோய் வகைகளையே சாரும்.
.
சாதாரண நோய்களையும், கொள்ளை நோய்களையும் இஸ்லாம் இருவேறு வகைகளாகப் பிரித்தே கூறுகிறது.
.
அதில், சாதாரன நோய் எனும் முதல் வகைக்கு நாம் மருத்துவம் செய்ய வேண்டும். கொள்ளை நோய் எனும் இரண்டாம் வகைக்கு மருத்துவம் கிடையாது. அதை அல்லாஹ்வுக்காகச் சகித்துக் கொள்வோரில் சிலர் பிழைப்பார்கள்; சிலர் மரணிப்பார்கள். மரணிப்போர் உயிர்த் தியாகிகளாகவே கருதப் படுவார்கள்.
.
ஆனால், இன்றைய அறிவியல் இந்த இரு வகை நோய்களையும் ஒன்றுக்குள் ஒன்று கலந்து, குழப்பியடித்து, அனைத்தையும் “தொற்று நோய்” எனும் ஒரே பட்டியலில் சேர்த்துள்ளது. இதுவே பலரது குழப்பத்துக்குக் காரணம்.
.
இதன் விளைவாக, சாதாரண நோய்க்கும், கொள்ளை நோய்களுக்கும் வித்தியாசம் தெரியாத மக்கள், இன்று கொள்ளை நோய்களையும் தொற்று நோய்களென்று நினைத்து, அதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளப் படாத பாடு படுகிறார்கள்.
.
ஓர் ஊருக்குக் கொள்ளை நோய் வர வேண்டுமென்று இறைவன் விதித்து விட்டால், அது அங்கு வந்தே தீரும். தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்வதாலோ, முகமூடிகளை அணிந்து கொண்டு சுற்றுவதாலோ எல்லாம் அதை யாரும் தடுத்து விட முடியாது. யாரையெல்லாம் அது அடைய வேண்டுமென்று விதி உள்ளதோ, அவர்கள் அனைவரையும் அது அடைந்தே தீரும்.
.
உதாரணத்துக்கு, இன்று “கொரோனா வைரஸ்” எனும் பெயரில் சீனா போன்ற நாடுகளில் பரவி வரும் கொள்ளை நோய் கூட, எல்லாத் தடுப்பூசிகளையும், முகமூடிகளையும் தாண்டித் தான் அங்கெல்லாம் பரவிக் கொண்டிருக்கிறது. அந்த நோய்க்கு இறைவன் விதித்த காலக்கெடு முடியும் வரை அது பாட்டுக்குப் பரவிக் கொண்டு தான் இருக்கும். இதற்கெல்லாம் யாராலும் அணை போட முடியாது.
.
கொள்ளை நோயாகட்டும்; சாதாரண நோயாகட்டும். அனைத்தும் இறைவனின் விதிப் படியே பரவுகின்றன. எனவே, அவற்றுக்கான தீர்வுகளை இறைவனிடமே நாம் கேட்க வேண்டும். மேலும், இது போன்ற நோய்களை அணுகுவதிலும் நபி (ஸல்) அவர்களது அறிவுரைகளையே முஃமின்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
.
இதற்கு மாற்றமாக, கிருமிகள் தான் அனைத்துக்கும் காரணம் என்று நம்பி, இறைவனை முன்னிறுத்திக் கையேந்தாமல், கிருமிகளை ஒழிப்பதில் யார் அதிக கவனம் செலுத்துகிறாரோ, அவர் ஈமானில் ஒரு பகுதியை இழப்பது நிச்சயம்.
.
இது போன்ற கிருமி ஒழிப்புக் காரியங்கள் முஃமின்களுக்குரியவை அல்ல; ஷைத்தானின் அடிமைகளுக்கு மட்டுமே உரியவை.
.
இதன் நிறைகள் அனைத்தும் அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் அனைத்தும் என்னையே சாரும். அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
.
- அபூ மலிக்

No comments

Powered by Blogger.