Header Ads

Header ADS

பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில்!! பகுதி-1

 


 1 - முன்னுரை!
2 - பைஅத் என்பதன் பொருள்!
3 - பைஅத் வலியுறுத்துவது என்ன?
4 - இஸ்லாமும் பைஅத்தும்!
5 - பைஅத்: இஸ்லாத்தின் நுழைவாயில்! 
6-பைஅத் கூட்டமைப்பின் அத்திவாரம்!
7-பைஅத் செய்வது எவ்வாறு?
8-பைஅத்தின் வகைகள்! 
9-பைஅத் செய்வதன் அவசியம்!
10-பைஅத்தைப் பேணுவதன் அவசியம்!
11-பைஅத்தை முறிப்பதன் விபரீதம்!



1 - முன்னுரை!
கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
மனிதர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களைப் படைத்த உங்களது ரப்பைப் பயந்து கொள்ளுங்கள். அதிலிருந்து அதனது சோடியைப் படைத்தான். அந்த இருவரில் இருந்தும் அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்.
( 0 4 : 0 1 )

இந்தப் பூமியில் மனித இனத்தின் தோற்றம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து ஆரம்பமான மனித வரலாறு அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு ஊரிற்கும் அல்லாஹ் அனுப்பிக் கொண்டிருந்த தூதர்களின் வருகை நிறுத்தப் பட்டுள்ளது ஒன்றே மனித இனத்தின் அழிவு நெருங்கிவிட்டது என்பதை அறிவிக்கப் போதுமானதாகும்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் ஒரு முஸ்லிமாகவும், அல்லாஹ்வின் துதராகவும் இருந்ததனால் முழுஉலகிலும் அல்லாஹ் வின் சட்ட திட்டங்கள் மாத்திரமே நடைமுறையில் காணப்பட்டது. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. அதாவது எமது அறிவுக்கு எட்டியவரையில் உலகிலே அல்லாஹ்வின் சட்டதிட்டங்கள் நிலைநாட்டப்படும் ஒரு நாடுகூட இல்லாத நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணத்தை நாம் எடுத்துப் பார்த்தால் இது அல்லாஹ்வின் ஒரு வழிமுறை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். அதாவது மனித சமூகம் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச் செல்லும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அல்லாஹ்: அவர்களை எச்சரித்து தனது கட்டுப்பாட்டின்பால் அழைக்கக்கூடிய தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தான். தூதர்களது அழைப்பை ஏற்று நேர்வழியை ஏற்றுக் கொண்டவர்களது தலைமுறையினர் மீண்டும் வழிகேட்டில் சென்று விடுகின்றனர். மிகமிக சிரமப்பட்டு நபிமார்களால் உருவாக்கப் படுகின்ற ஜமாஅதுல் முஸ்லிமீன் (இஸ்லாமிய சமுதாயம்) சிறிதுகாலம் சென்றதுமே அழிந்துபோய்விடுகின்றது.

மிகவும் சிரமப்பட்டுத் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீனை மிகவேகமாக அழிவுறச்செய்துவிட்டு, அதனை மீண்டும் தனது நல்லடியார்கள் தோற்றுவிப்பதன் மூலம், அவர்கள் உயர் பதவிகளை அடைந்துகொள்ள வேண்டும் என்பதையே அல்லாஹ் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றான். இதனைத்தான் பின்வரும் ஹதீஸ் மூலம் எமக்கு உணர்த்தப்படுகின்றது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
இஸ்லாம் அறிமுகமற்றதாகவே ஆரம்பமானது. அது ஆரம்பித்தது போன்று அறிமுகமற்ற ஒன்றாகவே (அது) மாறும். (நேர்வழியைப் பின்பற்றும்) அந்த அறிமுகமற்றவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக!
(ஸஹீஹ் முஸ்லிம் கி. ஈமான் 65)

மிகப்பெரும் போரட்டம் நடத்தி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் எதிர்காலத்தில் அழிந்துவிடும் என்பதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்களே எங்களுக்குக் கூறிச் சென்றார்கள். உயிர்த்தியாகங்களுக்கு மத்தியில் கட்டியெழுப்பப் பட்ட இஸ்லாமிய ஆட்சி பன்னிரண்டு தலைவர்கள் தோன்றும்வரை மாத்திரமே உறுதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அழ்ழாஹ் இஸ்லாத்தை வஹிமூலம் மாத்திரமே இறுதித் தூதருக்கு இறக்கிவைத்தான். அந்த வஹியை இறுதி நாள்வரை பாதுகாப்பதாகவும் அவன் வாக்குறுதி அளித்துள்ளான். ஆனால் இன்று எமது சமூகத்தின் நிலை என்னவென்றால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹீ அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டு வந்த இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது மக்களுக்குப் பெரும் ஆச்சரியமாக இருக்கின்றது. "அல்லாஹ் வஹிமூலம் அறிவித்த செய்திகள் மட்டும்தான் இஸ்லாம்" என்பதுகூட எமது சமூகத்தில் ஆச்சரியத்திற்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. அவ்வாறு கூறக்கூடியவர்களை ஆச்சரியத்துடன் பார்க்கின்றார்கள்.

பருவ வயதை அடையும் ஒவ்வொரு மனிதனும் இஸ்லாத் திற்காக உடன்படிக்கை செய்வதன் மூலம் இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்று, முஸ்லிமாக வேண்டும் என்பதுகூட மக்களுக்கு ஆச்சரியமானதாக இருக்கின்றது.

அல்லாஹ் தனது தூதருக்கு வஹிமூலம் இறக்கிவைத்த இஸ்லாத்தை எவ்வித கூடுதல் குறைவும் இல்லாமல் மனித சமுதாயத்திற்கு எடுத்துக் கூறும் மிகச்சிறந்த ஆக்கப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீன் ஷஷபைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில்!|| எனும் இந்த மிக முக்கியமான நூலை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றது.

நீங்கள் ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சுவனத்தை அடைவதற்கான ஒரே வழியைத் தெளிவான ஆதாரங் களுடன் அடையாளம் காட்டும் இந்த நூலை நிதானமாக வாசித்து முழுப் பயனை அடைந்துகொள்ளுமாறு உங்களை அன்பாய் வேண்டுகின்றோம். இதில் உங்களுக்கு சந்தேகங்கள் தோன்றுமானால் அதுபற்றி நீங்கள் தெளிவாக எங்களுக்கு எழுத்துமூலம் அறியத் தரலாம். எமக்குக் கிடைக்கப் பெறும் முக்கியமான சந்தேகங்களை ஒன்றுதிரட்டி அவற்றிற்கான ஆதாரங்களுடன் கூடிய பதிலை இன்ஷh அல்லாஹ் இந்த நூலின் அடுத்த பகுதியாக வெளியிடும் உத்தேசம் எங்களுக்கு இருக்கின்றது என்பதனையும் உங்களுக்கு அறியத் தருவதில் மகழ்ச்சியடைகின்றோம். நேர்வழியைத் தேடும் நல்ல உள்ளங்களுக்கு இந்த நூல் குன்றின் மேல் ஒளியாகத் திகழ வேண்டும் என வல்லவனை வேண்டி விடைபெறுகின்றோம்.
ஜமாஅதுல் முஸ்லிமீன் - இலங்கைக் கிளை.


2- பைஅத் என்பதன் பொருள்!

"பைஅத்" என்பது ஒரு அறபுச் சொல்லாகும். இது "பைஃ" எனும் வியாபாரத்தைக் குறிக்கக்கூடிய சொல்லில் இருந்து பிறந்த தாகும். கண்ணியமிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்:-

விசுவாசிகளே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்கு அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைவு கூறுவதன் பால் விரைந்து செல்லுங்கள். மேலும் (பைஃ) வியா பாரத்தை விட்டு விடுங்கள் ( 62 - 09 )

வியாபாரம் நிறைவேறும்போது சம்பந்தப்பட்ட இருவரும் ஒருவர் மற்றவரது கையைப் பிடித்து உடன்படிக்கை செய்வது அறபிகளின் வழமையாகும். இந்த உடன்படிக்கையை "பைஅத்" அல்லது "முபாயஆ"(பரஸ்பரம் விற்றல்) எனக்கூறப்படும்.

இஸ்லாத்தின் மூலாதாரங்களான குர்ஆனிலும் ஹதீஸிலும் "பைஅத்"எனும் இந்த வார்த்தை இஸ்லாத்தை ஏற்பதற்கு அல்லது இஸ்லாமியக் கடமைகளில் சிலதை நிறைவேற்றுவதற்கான உடன் படிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாத்தின் மூலாதாரங்களில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ள பொருளை நாம் ஆழமாகக் கவனித்துப் பார்க்கும்போது அந்த வார்த்தையின் பிறப்பிடமான அறபு மொழியில் அதற்கேயுரிய இரண்டு முக்கியமான பொருள்களையும் குறிக்கக்கூடியதாகவே அது பயன்படுத்தப்பட்டு ள்ளது என்பதனைத் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியும். அந்த முக்கியமான இரு பொருள்களில் "பரஸ்பரம் ஒருவர் மற்றவருக்கு வழங்குவது" என்பது ஒன்றாகும். பரிமாறிக் கொள்வதனை உறுதிப் படுத்தக்கூடியதாக செய்துகொள்ளும் உடன்படிக்கை மற்றொன்றாகும். இவ்விரண்டுமே "பைஅத்" எனும் சொல் குறிக்கும் கருத்துக்களாகும்.

3-பைஅத் வலியுறுத்துவது என்ன?

பைஅத் செய்யும்போது கூறப்படும் விடயங்களையும், பைஅத் முறிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கான நிபந்தனைக ளையும் கவனித்துப் பார்த்தால் பைஅத்தின் மூலம் அல்லாஹ்வும் அவனது தூதரும் வலியுறுத்துவது என்ன என்பதை விளங்கிக் கொள்ளமுடியும்.

அல்லாஹ் மனிதர்களில் செயல்களால் சிறந்தவர்களைத் தேர்வு செய்வதற்கான ஒரு பரீட்சைக் கூடமாகவே இந்த உலகைப் படைத்துள்ளான். எனவே அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட தீனின் அடிப்படை விதிகளில் ஒன்று எந்த ஒரு மனிதனையும் இஸ்லாத் தைப் பின்பற்றும்படி நிர்ப்பந்திக்கக் கூடாது என்பதாகும். அதன் அடிப்படையில் பிறக்கக் கூடிய ஒவ்வொரு குழந்தைக்கும், அது வளர்ந்து பருவ வயதை அடையும்போது அதன் மார்க்கத்தைத் தேர்வு செய்யும் உரிமையை அல்லாஹ் கொடுத்துள்ளான். முஸ்லிமுக்குப் பிறந்தவன் முஸ்லிமாக வாழவேண்டும் என்றோ அல்லது முஸ்லிம் அல்லாதவனுக்குப் பிறந்தவன் முஸ்லிம் அல்லாதவனாகவே வாழவேண்டும் என்றோ எந்த நிர்ப்பந்தமும் கிடையாது. ஏனெனில் பிறக்கின்ற குழந்தை அது எந்தப் பெற்றோருக்குக் குழந்தையாகப் பிறப்பது என்பதைத் தேர்வு செய்வதில்லை. அப்படி இருக்கையில் முஸ்லிமான ஒருவன் தனது பிள்ளைக்கு, அது தனக்குப் பிறந்தது எனும் காரணத்தினால் தனது மார்க்கத்தை வலுக் கட்டாயமாகத் திணிப்பது முற்றிலும் தவறானது. மனிதர்களுக்கு வாழ்வையும் மரணத்தையும் கொடுத்து நல்லவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற அல்லாஹ்வின் நோக்கத்திற்கு முரணானது.

இஸ்லாத்திலே மனிதனை நிர்ப்பந்தமாக நுழைவிக்கும் தேவையும் அல்லாஹ்வுக்குக் கிடையாது. ஏனெனில் மனிதர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுவதால் அல்லாஹ்வின் பலமோ அல்லது புகழோ சிறிதளவேனும் கூடுவதும் இல்லை. அவர்கள் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை என்பதால் அவை குறைவதும் இல்லை.

எனவே ஒவ்வொரு மனிதனுக்கும் இஸ்லாத்தை ஏற்பதற்கோ அல்லது மறுப்பதற்கோ சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் நியதியாகும். ஆகவே நாம் நினைப்பது போல் முஸ்லிமிற்குப் பிறந்த பிள்ளைக்கு வலுக்கட்டாயமாக இஸ்லாத்தைப் புகுத்த வேண்டும் என்பதை அல்லாஹ் கூறவில்லை. மாறாக உலகில் பிறக்கக்கூடிய ஒவ்வொரு குழந்தையும் சுயமாக முடிவெடுக்கக்கூடிய வயதாகிய பருவ வயதை அது அடைந்ததன் பின்னர் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து வாழ்வதன் மூலம் சுவனம் செல்ல வேண்டும் என்ற நோக்கம் அதற்கு இருக்குமானால் அதுவாக இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்பதுதான் அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும். அவ்வாறு சுய விருப்பின் பேரில் இஸ்லாத்தை ஏற்பதன் அடையாளம்தான் பைஅத் எனும் உடன்படிக்கையாகும். இந்த உடன்படிக்கையை செய்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் இஸ்லாத்தின் அனைத்து அம்சங்களும் கற்பிக்கப்படுகின்றன. எனவே இஸ்லாத்தை ஏற்பதற்கான இந்த பைஅத்தின் மூலம் இஸ்லாத்தில் நிர்ப்பந்தம் இல்லை எனும் அடிப்படை விதி பாதுகாக்கப்படுகின்றது. இது பைஅத் வலியுறுத்தக்கூடிய முதலாவது அம்சமாகும்.

அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழிநடாத்தும் வரை உங்கள் இமாமுக்குக் கட்டுப்படுவதுடன், அதற்கு முரண்பட்டால் கட்டுப்படக் கூடாது என பைஅத் செய்வோருக்கு ரஸூலுல்லாஹி ச வழிகாட்டியுள்ளார்கள். அல்லாஹ்வின் வேதம் என்பது குர்ஆனை யும் ஹதீஸையும் குறிக்கக்கூடிய வார்த்தையாகும். ஆகவே நாம் செய்யக்கூடிய பைஅத் அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின்பற்றுவதற்கான பைஅத் என்பதனை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும். எனவே பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின் பற்ற வேண்டும் என்பதையும் இந்த பைஅத் வலியுறுத்துகின்றது. இது பைஅத் வலியுறுத்தக்கூடிய இரண்டாவது அம்சமாகும்.

தலைமைத்துவத்தை அச்சாணியாகக் கொண்டு உருவாக்கப் படும் முஸ்லிம்களின் கூட்டமைப்பு எக்காரணத்தைக் கொண்டும் பிளவுபடக்கூடாது என்பதே அல்லாஹ்வின் எதிர்பார்ப்பாகும். எனவே முஸ்லிம் எனும் அடையாளத்தைப் பெற விரும்பும் ஒருவன் இஸ்லாமிய தலைமைத்துவத்தில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் அதனை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது. அதேபோன்று இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஒருவன் அந்தத் தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதனையும், மாற்றுத் தலைமைத்துவம் உருவாக்குவதனையும் கொலைக் குற்றம் என இஸ்லாம் தீர்ப்பளிக்கின்றது. எனவே இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான முஸ்லிம்களின் சமுதாயம் ஒரே தலைமைத் துவத்தைக் கொண்ட, இலட்சியத்தை மறந்துவிடாத, கட்டுப்பாடான ஒரு சமூகம் என்பதை இந்த பைஅத் வலியுறுத்துகின்றது. இது பைஅத் வலியுறுத்தக்கூடிய மூன்றாவது அம்சமாகும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
ஒவ்வொரு மனிதனும் தினசரி தனது ஆத்மாவை வியாபாரத்திற்கு உட்படுத்துகின்றான். ( அல்லாஹ்வுக்கு முற்றிலுமாக வழிப்படுவதன் மூலம் ஆத்மாவை அவனுக்கு விற்று ) அதனை விடுதலைபெறச் செய்வோரும் உள்ளனர். அல்லது (அல்லாஹ்வின் வரம்புகளைப் புறக்கணித்து, மனோயிச்சைப்படி நடப்பதன் மூலம் அதனை iஷத்தானுக்கு விற்று) அதனை அழிவில் ஆழ்த்திக் கொள்வோரும் உள்ளனர். (ஸஹீஹ் முஸ்லிம் - கி.தஹாரா)

அல்லாஹ்வுக்கு எமது ஆத்மாவை விற்பதற்காக அவனது பிரதிநிதியிடம் செய்து கொள்ளும் உடன்படிக்கைதான் பைஅத். இது பைஅத் வலியுறுத்தும் நான்காவது அம்சமாகும். அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்யும் கூட்டத்தினருடன் சேர்ந்து கொள்வதை அறிவிப்பதுடன், அதற்கு நேர் எதிரான இணைவைப்போரை விட்டும் பிரிவதனையும் பைஅத் வலியுறுத் துகின்றது. அல்லாஹ் எந்த விதத்திலும் ஏற்காத ஒரு செயல்தான் இணைவைத்தல் என்பதாகும். அதனைத் தவிர அல்லாஹ் ஏனைய அனைத்துப் பாவங்களையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பதாகக் கூறுகின்றான். இணைவைத்தல் என்பது சிலை வணக்கம் மட்டுமே என்பதாக ஒரு சிந்தனை நாம் விரும்பியோ விரும்பாமலோ எம்மிடம் காணப்படுகின்றது. அது முற்றிலும் தவறானது. சிலை வணக்கம் உட்பட ஆகுமானது என நாம் நினைக்கும் எத்தனையோ செயல்களை இஸ்லாம் இணைவைத்தல் என்பதாகக் கூறுகின்றது. எனவேதான் "அதிகமானோர் இணைவைப்போராகவே அன்றி அல்லாஹ்வை விசுவாசம் கொள்வதில்லை (1 2 : 1 0 6)" என அல்லாஹ் கூறுகிறான். எனவே விசுவாசத்துடன் இணைவைத்தலை சேர்த்துக் கொண்டோர் உட்பட அனைத்து இணைவைப்பாளர்களை விட்டும் பிரிந்து விடுவதற்கான ஒப்பந்தம்தான் பைஅத் ஆகும். எனவே இணைவைப்போரை விட்டும் பிரிந்து விடவேண்டும் என்பது பைஅத் வலியுறுத்தும் ஜந்தாவது விடயமாகும்.

ஜரீர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்துக் கொண்டிருக்கும்போது நான் அவர்களிடம் வந்தேன். உடனே "அல்லாஹ்வின் தூதரவர் களே! உங்களுக்கு பைஅத் செய்வதற்காக உங்களது கையை நீட்டுங்கள். (நீங்கள் விரும்பியவாறு) நிபந்தனையிடுங்கள். (எனது நிலைபற்றித் தாங்கள்) நன்கு அறிவீர்கள்" எனக் கூறினேன். "அல்லாஹ்வுக்கு அடிபணிய வேண்டும், தொழுகையை நிலைநாட்ட வேண்டும், ஸகாத் கொடுக்க வேண்டும், முஸ்லிம்களுடன் விசுவாசமாக நடக்க வேண்டும், இணைவைப்போரை விட்டும் பிரிந்துவிட வேண்டும் என்பனவற்றிற்காக உம்மிடம் பைஅத் எடுக்கின்றேன்|| எனக் கூறினார்கள்.
(நஸாஈ - கி. பைஅத் - ஸஹீஹ்)

அல்லாஹ் அனுமதிக்காத மார்க்க சட்டமானாலும், உலக சட்டமானாலும் அவற்றை வேறு ஒருவரிடம் இருந்து பெற்றுக் கொள்வதை அல்லாஹ் இணைவைத்தலாகக் கணிக்கின்றான். அல்லாஹ் தனக்கு மட்டும் இருப்பதாகக் கூறியுள்ள பண்புகள் ஏனையோரிடமும் இருப்பதாக நம்புவதனை இணைவைத்தலாகக் கருதுகின்றான். அவனுக்குச் செய்யப்பட வேண்டிய இபாதத்துக்கள் பிறருக்குச் செய்யப்படுவதனை இணைவைத்தல் என்பதாகக் கூறியுள்ளான். அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்தலை அவன் இணைவைத்தல் என்பதாக அறிவித்துள்ளான். இப்படி இணைவைத்தல் என்பதன் பட்டியல் இஸ்லாமியக் கண்னோட்டத்தில் நாம் நினைப்பதைவிட விரிவானதாகவே இருக்கின்றது. இத்தகைய ஷpர்க்கான காரியங்களைச் செய்யக்கூடியோர் முஷ;ரிக்குகளாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் அனைவரிலிருந்தும் கொள்கை அடிப்படையில் விலகுவது ஒரு உண்மை முஸ்லிமின் அடையாளமாகும். எங்களுக்கு முழு முன்மாதிரியான ஒரு தூதரை அனுப்பி யிருந்தும் அல்லாஹ் மற்றுமொரு நபியினது குறிப்பிட்டதொரு சந்தர்ப்பத்தைச் சுட்டிக் காட்டி, அதிலே எங்களுக்கு அழகிய முன் மாதிரி இருப்பதாக அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:-

"நிச்சயமாக நாம் உங்களையும், நீங்கள் இபாதத் செய்யக் கூடியவைகளையும் விட்டும் நீங்கியவர்களாவோம். உங்களை (நாம்) நிராகரித்து விட்டோம். நீங்கள் அல்லாஹ்வை மாத்திரம் விசுவாசம் கொள்ளும்வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் விரோதமும் குரோதமும் நிலையாக ஏற்பட்டு விட்டது."என இப்றாஹீமும் அவர்களோடு இருந்தவர்களும் கூறிய சந்தர்ப்பம் அவர்களிடத்தில் உங்களுக்கோர் அழகிய முன்மாதிரியாக ஆகிவிட்டது.
( 6 0 : 0 4 )

ஏகத்துவத்தை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம் அந்தக் கொள்கைக்கு முரணான இணைவைப்போரை விட்டும் முற்றாகப் பிரிந்துவிடுவது எந்த அளவு முக்கியமானது என்பதை இந்த அல் குர்ஆனிய வசனத்தின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

4-இஸ்லாமும் பைஅத்தும்!

இஸ்லாம் என்பது சுவனத்தை அடைந்து கொள்வதற்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட ஒரே வழிகாட்டலாகும். சுவனத்தில் நுழைவிக்கப்பட்ட முதல் மனிதர் நபி ஆதம் (அலை) அவர்கள் iஷத் தானின் பொய்யை நம்பி அல்லாஹ்வுக்கு மாறு செய்ததனால் அவர்களை அல்லாஹ் சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றி பூமிக்கு அனுப்பிவிடுகின்றான். நிலையாக சுவனத்தில் வசிக்கமுடியும் எனும் ஆசையைக் காட்டித்தான் iஷத்தான் ஆதம் (அலை) அவர்களைத் தவறு செய்யத் தூண்டினான். எனவே சுவனத்தில் வசிக்கும் ஆர்வம் கொண்ட ஆதம் ர அவர்களைப் பூமிக்கு அனுப்பும் போதே அல்லாஹ் பின்வருமாறு கூறித்தான் அனுப்புகின்றான்.

நிச்சயமாக என்னிடமிருந்து ஓர் நேர்வழி உங்களுக்கு வரும். எனது நேர்வழியை யார் பின் பற்றுகின்றார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் கிடையாது, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள்.
( 02 - 38 )

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறியிருக்கக்கூடிய இந்த சம்பவம் மிகச்சிறிதாக இருந்தாலும் இது இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படை உண்மைகளைத் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றது. அந்த அடிப்படைகளில் ஒன்றுதான் நாம் இழந்துவிட்ட சுவனத்தை அடைந்து கொள்வதற்கான ஒரே வழி அல்லாஹ் இறக்கி வைத்த வஹியைப் பின்பற்றுவது என்பதாகும். அத்துடன் சுவனத்தை அடைவதற்காக நாம் எமது உயிர்களையும், உடமைகளையும் பகரமாகக் கொடுத்து விடவேண்டும். இவ்வாறு செயல்பட்டுத்தான் ஆகவேண்டும் என்பதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒரு மனிதன் இஸ்லாத்தினுள் நுழையும்போதே அவன் தன்னை அப்படியே அல்லாஹ்வுக்கு அடிபணியச் செய்வதாக வாக்குறுதி அளித்தே இஸ்லாத்தினுள் நுழைகின்றான். எனவே இதனடிப்படையில் அல்லாஹ்விடமிருந்து வந்த நேர்வழியைப் பின் பற்றும்படி தெளிவாக அவன் கூறியதன் பின்னர் வேறு எதனையும் ஒரு முஸ்லிம் பின்பற்றமுடியாது. அவனுக்கு அடிபணிவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். இது முதல் காரணமாகும்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
நிச்சயமாக அல்லாஹ் விசுவாசிகளிடமிருந்து அவர்களது உயிர்களையும், அவர்களது உடமை களையும் அவர்களுக்கு சுவனம் இருப்பதாக(க்கூறி) விலை கொடுத்து வாங்கிக் கொண்டான்............. ( 09 - 111 )

உண்மையிலேயே தமது உயிர்களையும், உடமைகளையும் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துவதில் அர்ப்ப ணிக்கக் கூடியோரைத்தான் அல்லாஹ் மீண்டும் அந்த சுவனத்தில் நுழைவிப்பதாகக் கூறுகி;ன்றான். எனவே சுவனம் நுழையவேண்டும் என்பது எங்களது உண்மையான ஆசையாக இருந்தால் அதனை அடைவதற்கும் அல்லாஹ் இறக்கிவைத்ததைப் பின்பற்றித்தான் ஆகவேண்டும். இது இரண்டாவது காரணமாகும்.
அல்குர்ஆன் வேறு ஒரு இடத்தில் கூறுவதாவது:-
அல்லாஹ்வை விசுவாசம் கொண்டு அவன் தூதருடன் சேர்ந்து போராடுங்கள் என ஒரு அத்தியாயம் இறக்கப்பட் டால் (விசுவாசம் மட்டும் கொண்டுவிட்டு) அவர்களினின்றும் போராட வசதியுடையவர்கள் (கூட) வராதவர்களுடன் நாமும் இருப்பதற்கு விட்டுவிடுவீர்களாக! என உம்மிடம் அனுமதி கேட்கின்றனர். (போரிட சக்தியற்றோருடன்) தங்கிவிடுவ தையே அவர்கள் விரும்புகின்றனர். (இதனால்) அவர்களது உள்ளங்கன் மீது முத்திரையிடப்பட்டுவிட்டது. எனினும் அவர்கள் உணர்ந்துகொள்ள மாட்டார்கள். எனினும் ; தூதரும் அவர்களோடு உள்ளவர்களும் தங்களது உடமை களைக் கொண்டும், தமது உயிர்களைக் கொண்டும் போராடினார்கள். (எனவே) அவர்களுக்குத்தான் (மறுமை) நலவுகளனைத்தும் உரித்துடையது. மேலும் அவர்கள்தான் வெற்றியாளர்களுமாவார்கள். கீழால் ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அல்லாஹ் அவர் களுக்காக ஏற்பாடு செய்துள்ளான். அவர்கள் அதிலே நிலையாக இருப்பார்கள். அதுதான் மிகப் பெரிய வெற்றியாகும். ( 09 - 86, 87, 88, 89 )

பைஅத் செய்வதன் மூலம் அல்லாஹ் இறக்கிய அல் குர்ஆனையும், ஸஹீஹான ஹதீஸ்களையும் பின்பற்றுவதாக வாக்குறுதி அளித்துவிட்டுப் பின்னர், அதிலிருந்து பின்வாங்கும் ஒரு சாராரைப் பற்றியே இந்த வசனங்கள் கூறுகின்றன. விசுவாசம் கொள்ளுங்கள் எனக்கூறப்பட்டதும் விசுவாசம் கொண்டு விட்டார்கள். ஆனால் அந்த விசுவாசம் இன்று எம்மில் அதிகமானோர் விளங்கி வைத்திருப்பது போன்ற விசுவாசமாகத்தான் இருந்தது. அதாவது அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் முற்றுமுழுதாக அடிபணிவதாக வாக்குறுதி அளித்துவிட்டுப் பின்னர் அவர்கள் நிறைவேற்றவேண்டிய கட்டளைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறப்படும்போது அதிலிருந்து ஒதுங்கிக்கொள்வதற்கு அனுமதிகேட்டனர். அல்லாஹ்வின் பாதையில் போராடுவது என்பது ஒரு முஸ்லிம் நிறைவேற்றுகின்ற தலையாய கடமைகளுள் ஒன்றாகும். எந்த ஒரு இபாதத்திற்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை இஸ்லாம் இதற்குக் கொடுத்துள்ளது. எனவேதான் மேலேயுள்ள அல்குர்ஆனிய வசனத்தில் போராடுவதற்குரிய அத்தனை வசதிகளும் இருந்தும், அதனை விட்டும் நழுவ முயற்சிப்போரது உள்ளங்களில் முத்திரை குத்திவிட்டதாக அல்லாஹ் கூறுகின்றான்.

ஆனால் உண்மையான முஸ்லிம்கள் தங்களது தலைவராகிய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களுடன் சேர்ந்து போராடினார்கள். இதன் மூலம் அவர்கள் செய்த உடன்படிக்கையை (பைஅத்தை) அவர்கள் உண்மைப்படுத்திக் காட்டியதால் அவர்கள் ஆசையுடன் எதிர் பார்த்திருக்கும் சுவனம் அவர்களுக்காகக் காத்திருக்கின்றது என அல்லாஹ் நன்மாராயம் கூறுகின்றான். விசுவாசம் கொண்டு, போராட்டத்திலும் ஈடுபட்டவர்களுக்கு மாத்திரம்தான் இந்த வெற்றி சொந்தமானது என்பதையும் அல்லாஹ் இங்கு தெளிவாகக் கூறி விட்டான். விசுவாசத்தை உண்மைப்படுத்தும் செயல்பாடு இல்லாமல் வெறும் விசுவாசம் மாத்திரம் மனிதனுக்கு சுவனத்தைப் பெற்றுத் தருமாக இருந்தால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் விசுவாசம் கொண்டு, போராட்டம் கடமையாக்கப்பட்டபோது அதற்குரிய எல்லா வசதிகளும் இருந்தும் அதனைச் செய்யாமல் நழுவிச் சென்றவர் களுக்கும் சேர்த்து அல்லாஹ் சுவனத்தை வாக்களித்திருக்க வேண்டும். மாறாக அத்தகையவர்களது உள்ளங்களில் முத்திரையிட்டுவிட்டதாக அழ்ழாஹ் கூறுகின்றான்.

இஸ்லாத்தை ஏற்று உடன்படிக்கை செய்துவிட்டு ஒரு சாரார் சுவனம் செல்வதற்குரிய கடமைகளில் ஒன்றான போராட்டம் செய்வதிலிருந்து பின்வாங்கியது போல், மற்றொரு சாரார் பைஅத் செய்யும்போதே போராட்டத்திலிருந்து சலுகை பெற்றுக்கொள்ள முயற்சித்தனர். ரஸூலுல்லாஹி ச அத்தகையோரிடமிருந்து அவர்களது நிபந்தனையை அங்கீகரிக்கவே இல்லை. இஸ்லாத்தை ஏற்றால் அவற்றைச் செய்யவேண்டும் என சுட்டிக் காட்டினார்கள்.

வஹப் என்பவர் கூறுகின்றார் :-
சகீப் கோத்திரத்தினர் பைஅத் செய்தபோது அவர்களது நிலைப்பாடு பற்றி ஜாபிர் வ அவர்களிடம் கேட்டேன். (அப்போது அவர்கள்) கூறியதாவது: (நாம் பைஅத் செய்தால்) ஸக்காத் கொடுக்கவும் மாட்டோம், (ஜிஹாத் கடமையாகிவிட்டால்) ஜிஹாத் செய்யவும் மாட்டோம் என நிபந்தனையிட்டார்கள். அதன் பின்னர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் "இஸ்லாத்தை (அவர்கள்) ஏற்றுக்கொண்டால் நிச்சயமாக ஸக்காத்தும் கொடுப்பார்கள், ஜிஹாதும் செய்வார்கள்.|| என்பதாகக் கூறினார்கள்.
(அபூ தாவூத் - கி.ஹராஜ்......, ஸஹீஹ் )

விருப்பிலும் வெறுப்பிலும், இலகுவானதிலும் சிரமத்திலும் முடியுமானவரை இஸ்லாமிய சட்டதிட்டங்களை ஏற்று நடப்பதன் மூலம் அல்லாஹ்வின் அருளைக் கொண்டு சுவனம் செல்ல வேண்டும் என்பதற்காகவே பைஅத் செய்யப்படுகின்றது. இவ்வாறு செய்யப்படும் பைஅத் அந்த மனிதனை சுவனம் இட்டுச் செல்லத் தடையான நிபந்தனைகளுடன் செய்யப்பட்டால் அதில் அந்த மனிதனுக்கு என்னதான் பிரயோசனம் இருக்க முடியும்?

இதுவரை பைஅத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பை விளங்கிக்கொள்வதற்குரிய ஒரு பகுதியை உங்களுக்கு நாம் அல்குர்ஆனிய வசனங்களையும், ஹதீஸ்களையும் முன் வைத்துத் தெளிவுபடுத்தியுள்ளோம். இதன் மூலம் பைஅத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பின் முதல் பகுதியை நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். அதாவது பைஅத் எனும் சொல்லின் இரண்டு அடிப்படைக் கருத்துக்களில் ஒன்று வியாபாரம் செய்தல் என்பதாகும். வியாபாரத்தில் ஈடுபடக்கூடிய ஒருவர் தான் தேவை எனக் கருதக் கூடியதை, தன்னிடம் இருக்கும் ஒன்றைக் கொடுத்துப் பெற்றுக் கொள்கிறார். பணத்திற்குப் பதிலாகப் பொருளைப் பெற்றுக் கொள்வதைப் பொதுவாக வியாபாரம் எனவும், பொருளிற்குப் பதிலாக பொருளைப் பெற்றுக் கொள்வதனைப் பண்டமாற்று வியாபாரம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

எனவே இந்தக் கருத்தின் அடிப்படையில் நீங்கள் பார்க்கும் போது பைஅத் என்றால் முழுமையான இஸ்லாத்தைக் குறிக்கக் கூடியதாக இருக்கின்றது. ஏனெனில் நாம் எமது உயிர்களையும், உடமைகளையும் அல்லாஹ்விடம் கொடுத்துவிட்டு, அதற்குப் பதி லாக சுவனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உடன்பட்டுள்ளோம். மேலே நாம் சுட்டிக்காட்டியுள்ள ஒன்பதாவது அத்தியாயத்தின் நூற்றிப் பதினோராவது வசனமும், அதே அத்தியாயத்தின் எண்பத்தி ஆறாவது வசனத்திலிருந்து தொடராக வரக் கூடிய வசனங்களும் இந்த உண்மையை எமக்குத் தெளிவாக எடுத்துக்கூறுகின்றன. எனவே இந்த உண்மை எங்கள்மீது சுமத்தக்கூடிய கடமையையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமது உயிர்களையும், உடமைகளையும் அல்லாஹ்விடம் ஒப்ப டைத்து விடுகின்றவர்களைப் பொருந்திக் கொண்டதன் காரணமாக அவர்களுக்கு அல்லாஹ் தனது அருளினால் சுவனத்தைக் கொடுக்கின்றான். அவ்வாறு செய்வதனை அவன் வியாபாரம் எனக் கூறுகின்றான். நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதானது அந்த வியாபாரத்தைச் செய்வதற்கான உடன்பாடாகும். ஆகவே நாம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அந்த நேரத்திலிருந்து எங்களது உயிர்களும், உடமைகளும் எமக்குரியது என்ற நிலையிலிருந்து மாறி எம்மிடம் தரப்பட்டுள்ள அமானிதம் என்றாகின்றது. எனவே இ;ஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோருக்கு எது சொந்தம் என்று கேட்டால் சுவர்க்கம் மட்டுமே என்பதுதான் பதிலாகும்.

ஆகவே எம்மிடமுள்ள சொத்துக்களையோ அல்லது உயிர் களையோ நாம் நினைத்தவாறு ஒருபோதும் செலவு செய்ய முடி யாது. எமக்குரியதாக இருந்த அவற்றைக் கொடுத்துவிட்டு, அவற் றிற்குப் பதிலாக சுவனத்தைக் கேட்டு யாருடன் நாம் வியாபாரம் செய்துள்ளோமோ அவனது முழு வழிகாட்டலின்படியே அவற்றை நாம் செலவு செய்யவேண்டும். ஏனெனில் அந்தச் சொத்துக்கள் இப்போது எமது கையில் அமானிதமாகத்தான் உள்ளன. அவை எமக்குச் சொந்தமானவையல்ல. நாம் ஈமான் கொண்டதன் மூலம் அந்த சொத்துக்களையும், உயிர்களையும் சுவனத்திற்குப் பகரமாகத் தருவோம் என அல்லாஹ்வுடன் உடன்படிக்கை செய்துள்ளோம். ஆனால் அல்லாஹ்வின் பெருந்தண்மை: அந்த சொத்துக்களை எமது தேவைகளுக்காக செலவு செய்வதை அணுமதிப்பதாக மட்டும் கூறவில்லை. மாறாக தேவையான செலவுகளைச் செய்வதனை எம்மீது கடமையாக ஆக்கியிருக்கிறாhன். அந்த அளவிற்கு அல்லாஹ் தனது தயாள குணத்தைக் காட்டியுள்ளான். எனவே நாம் வீண்விரயம் செய்வதும் கூடாது, அவனது விருப்பத்திற்கு மாறாக அவற்றைச் செலவு செய்வதும் கூடாது. எமது உடலில் இருக்கும் உயிரையும் நாம் நினைத்த விதத்தில் பயன்படுத்தி வீணாக்கிவிட முடியாது. அவ்வாறு செய் யும்போது சுவனத்தைப் பெறுவதற்காகக் கொடுத்த விலையை நாம் மீளப் பெற்றவர்களாகி விடுகிறோம். அதன்மூலம் நாம் செய்து முடித்திருந்த வியாபாரத்தை உடைத்தவர்களாக மாறுகின்றோம். எனவே அல்லாஹ்வும் எம்முடன் செய்துகொண்ட வியாபாரத்தை செல்லுபடியற்றதாக ஆக்கிவிடுகின்றான். எமது உயிருக்குப் பதி லாக எமக்கு நிச்சயம் தருவதாகக் கூறியிருந்த சுவனத்தையும் தர மாட்டேன் எனத் தனது தூதர் மூலம் அறிவித்து விடுகின்றான்.

அபூ ஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஹைபர் யுத்தத்திற்குச் சென்றிருந்தோம். அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்கள்: முஸ்லிம் எனக் கூறிக்கொண்டு தங்களுடன் இருந்த ஒரு மனிதரைக் காட்டி "இவர் நரகவாசிகளில் நின்றும் உள்ளவர்." எனக் கூறினார்கள். யுத்த (கள)த்திற்கு வந்ததும் அந்த மனிதர் காயங்கள் அதிகரித்துவிடும் அளவிற்கு மிகக் கடுமையாகப் போராடினார். அதனால் மக்களில் சிலர் (நபியின் வார்த்தையில்) சந்தேகம் கொள்ளும் அளவிற்கு நெருங்கிவிட்டனர். அப்போது அந்த மனிதர் காயத்தின் (கடுமையான) வலியை உணர்ந்து தனது அம்புகள் இருந்த உறையில் தனது கையை நுழைத்து அதிலிருந்து ஒரு அம்பை எடுத்து அதனைக் கொண்டு தொண்டைக் குழியில் குத்தித் தற்கொலை செய்துகொண்டார். (இதனைக் கண்டு) முஸ்லிம்களில் சிலரின் (நம்பிக்கை) அதிகரித்துவிட்டது. (அவர்கள் நபியவர்களிடம் வந்து) "அல்லாhஹ்வின் தூதரவர்களே! தங்களது செய்தியை அல்லாஹ் உண்மைப் படுத்திவிட்டான். குறிப்பிட்ட நபர் தொண்டைக் குழியில் குத்தித் தற்கொலை செய்து கொண்டார்."எனக் கூறினார்கள். அப்போது (ரஸூலுல்லாஹி ச ) "இன்ன நபரே! எழுந்து சென்று நிச்சயமாக விசுவாசியைத் தவிர மற்ற எவரும் சுவனம் நுழைய மாட்டார். நிச்சயமாக அல்லாஹ் இந்த தீனை கெட்ட மனிதரைக் கொண்டும் உறுதிப்படுத்துகின்றான் என அறிவிப்பீராக!|| எனக் கூறினார்கள். (ஸ. புஹாரி-கி.ஜிஹாத்177 )

இஸ்லாம் என்பது உலகிலே தோன்றிய முதலாவதும் முழுமையானதுமான கொள்கையாகும். இந்தக் கொள்கையின் வரம்புகளுக்கு உள்ளே இருக்கும் ஒரு மனிதன் அந்த வரம்புக ளைக் கடக்காத வரையில் அந்தக் கொள்கையை ஏற்றிருப்பதன் காரணமாக அவனுக்குக் கிடைக்கப்பெற்ற பெயரைப் பாதுகாத்துக் கொள்கின்றான். இந்த உண்மையை இஸ்லாம், முஸ்லிம் எனும் இரண்டு வார்த்தைகளின் மூலமும் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"இஸ்லாம்" எனும் அறபு வார்த்தைக்கு: அடிபணிதல் சர ணடைதல், கட்டுப்படுதல் போன்ற பொருள்கள் காணப்படுகின்றன. முஸ்லிம் எனும் சொல் இஸ்லாம் என்பதிலிருந்தே பிறந்துள்ளது. ஆகவே முஸ்லிம் எனும் வார்த்தை அடிபணியக் கூடியவனைக் குறிக்கும். பரம்பரை ஹிந்துவாக வாழ்ந்த ஒருவன் உங்களிடம் வந்து இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்ற மறு வினாடி அந்த மனிதனைச் சுட்டிக்காட்டி "இவர் யார்?" எனக் கேட்டால் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம் என நீங்கள் உடனடியாகக் கூறுவதனை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். அப்படி சிந்தித்துப் பார்த்தால் உங்களுக்கு முஸ்லிம் எனும் வார்த்தையின் பொருளை நாம் எழுதாமலே ஓரளவு புரிந்துகொள்ள முடியும். அதாவது இஸ்லாம் எனும் அல்லாஹ்விடம் இருந்து இறக்கப்பட்ட வஹியின் கட்டளை களுக்கு அடிபணிகின்றேன் என ஒப்புக்கொள்கின்றவன் முஸ்லிம் என்பதுதான் பொருள். "இஸ்லாம்" எனும் அறபுச் சொல்லிலிருந்து பிறந்த "முஸ்லிம்" எனும் வார்த்தை அதனைத்தான் குறிக்கின்றது அதாவது "முஸ்லிம்" என்றால் அடிபணிபவன், சரணடைபவன், கட்டுப்படுபவன் என்பது பொருளாகும்.

மற்றொரு கோணத்தில் இதே விடயத்தை விளங்கிக் கொள்வதானால் சில பக்கங்கள் முன்னால் நாம் தொடங்கி வைத்த விடயத்தைத் தொடர்வதன் மூலம் நீங்கள் அதனை விளங்கிக் கொள்ளமுடியும். முதல் மனிதர் ஆதம் (அலை) முஸ்லிமாகவே இந்த உலகில் தோன்றினார்கள். அவர்களது வழித் தோன்றல்கள் இஸ்லாமிய வரம்புகளுக்கு உள்ளே இருக்கும்வரை முஸ்லிம்களாகவே அவர்கள் இருந்தார்கள். இப்போது நீங்கள் விடைதேடவேண்டிய கேள்வி என்னவென்றால் உலகில் முஸ்லிம் அல்லாதவர்கள் எங்கிருந்து தோன்றினார்கள்? என்பதாகும். இதற்கான சரியான பதிலை நீங்கள் தெரிந்து கொண்டால் முஸ்லிம் எனும் வார்த்தை குறிக்கும் கருத்து பற்றி உங்களுக்கு இருக்கும் விளக்கம் மேலும் அதிகரிக்கும்.

மேலே உள்ள கேள்விக்கான விடை அவர்கள் முஸ்லிம் களில் இருந்துதான் தோன்றினார்கள் என்பதைத் தவிர வேறு பதில் கிடையாது. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் பருவ வயதை அடைந்தும் இஸ்லாமிய வரம்புகளுக்கு அடிபணிவதாக உடன்படிக்கை செய்யாதவர்கள் முஸ்லிம்களின் பரம்பரையாக இருந்தாலும் அவர்கள் அடிபணியாதவர்களாகவே உலகம் தொடங் கிய நாள் முதல் கணிக்கப்பட்டார்கள். அதனையே நாம் அடிப ணியாதவன் எனும் தமிழ் சொல்லுக்குப் பதிலாக முஸ்லிம் எனும் அறபு வார்த்தையைப் பயன்படுத்தி முஸ்லிம் அல்லாதவர்கள் எனக் கூறுகின்றோம். எனவே இப்போது உங்களுக்கு முஸ்லிம் எனும் வார்த்தை எதனைக் குறிக்கின்றது என்பது தெளிவாகப் புரிந்திருக்கும். அதாவது இஸ்லாம் எனும் அல்லாஹ்வின் வழிகாட்டலை வாழ்க்கையின் வரம்புகளாக ஏற்று அடிபணிபவனை "முஸ்லிம்"(அடிபணிபவன்) எனக்கூறுகின்றோம். ஏனையோர்களை "முஸ்லிம் அல்லாதவர்கள்" (அடிபணியாதவர்கள்) எனக் கூறுகின்றோம்.

எனவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான உடன்படிக் கையை அல்லாஹ்வின் வேதம் பைஅத் எனக் கூறுகின்றது. பைஅத் எனும் அறபு வார்த்தையின் இரண்டு கருத்துக்களில் ஒன்றான உடன்படிக்கை எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே அவ்வாறு கூறப்பட்டுள்ளது. எனவே அந்த அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாத்தின் நுழைவாயிலாக பைஅத் காணப்படுகின்றது. இந்த வாயிலைக் கடக்காதவன் முஸ்லிம் அல்லாதவனாகவே இருப்பான் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். எனவே பைஅத் என்பதை இஸ்லாம் அதனது இரண்டு கருத்தையும் கொண்டதாகவே எடுத்துக் கூறுகின்றது. எனவே அதன் இரண்டு கருத்துக்களின் அடிப்படையிலும் சுவனம் செல்ல விரும்பும் ஒவ்வொருவரும் பைஅத் செய்வது கடமையாகின்றது. வியாபாரம் எனும் பொருளில் பார்க்கும்போது சுவனத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும் என்றாகின்றது. சுவனத்தின் விலை உயிர், உடமையைப் பணயமாக வைத்தாவது அல்லாஹ் அருளிய நேர்வழியைப் பின்பற்றுவதாகும். அதேபோல் உடன்படிக்கை எனும் பொருளில் பார்க்கும்போது சுவனம் செல்ல விரும்பும் யாவரும் அல்லாஹ் வழங்கிய நேர்வழியை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாகவும், அந்த நேர்வழியைக் கொண்டு வழிநடாத்தக்கூடிய தலைமைத்துவத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதன் அடையாளமாகவும் உடன்படிக்கை செய்யவேண்டும்.

எனவே முடிவாக இஸ்லாத்திற்கும், பைஅத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்ன எனப் பார்த்தால் சுவனத்திற்கும் அதன் நுழைவாயிலுக்கும் இடையில் உள்ள தொடர்புதான் இஸ்லாத்திற்கும் பைஅத்திற்கும் இடையில் காணப்படுகின்றது. பைஅத் எனும் நுழைவாயிலைக் கடக்காமல் இஸ்லாத்தை அடைய முடி யாது. பைஅத் எனும் நுழைவாயிலின் ஊடாக இஸ்லாம் எனும் கோட்டைக்குள் நுழைந்துவிட்ட ஒருவர் அழ்ழாஹ்வின் திருப்தி ஒன்றை மாத்திரம் நோக்கமாகக் கொண்டு உயிர், உடைமை போன்ற அனைத்தையும் இழந்தாலும் அல்லாஹ்வின் நேர்வழியைக் கைவிடாது பின்பற்றி மரணிப்பது அல்லாஹ்வுடனான பைஅத்தை (வியாபாரத்தை) நிறைவேற்றுவதாகும். எனவே ஓட்டுமொத்தமாகப் பார்த்தால் இஸ்லாம் என்றாலே பைஅத் என்று ஆகிவிடுகின்றது. ஆகவே பைஅத் இல்லாமல் இஸ்லாம் இல்லை என்பதையும் கடந்து இஸ்லாம் என்றாலே பைஅத்துத்தான் என்று கூறினால் அந்தக் கூற்றில் எந்தவிதத் தவறும் இல்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். அழ்ழாஹ் அனைவரது உள் ளங்களையும் சத்தியத்தின்பால் திறந்தருள்வானாக!


5 - பைஅத்: இஸ்லாத்தின் நுழைவாயில்!

பைஅத் அடிப்படையில் இரண்டுவகையாகக் காணப்படுகிறது. ஒன்று அல்லாஹ்வுடனான பைஅத்தாகும். இரண்டாவது வகை முஸ்லிம்களின் தலைமைத்துவத்துடன் செய்துகொள்ளக் கூடிய பைஅத்தாகும். இரண்டாவது வகை பைஅத்துத்தான் அல்லாஹ் வுடனான பைஅத்தை ஏற்றுக் கொள்வதன் அடையாளமாகவும், இஸ்லாத்தின் நுழைவாயிலாகவும் காணப்படுகின்றது. பைஅத் இரண்டு வகைப்படுவது பற்றி முன்பக்கங்களில் நாம் போதுமான விளக்கத்தைத் தந்துள்ளோம். எனவே இப்போது நாம் இஸ்லாத்தை ஏற்பதற்காக முஸ்லிம்களின் இமாமிடத்தில் செய்யப்படும் பைஅத் பற்றித் தெளிவு படுத்துகின்றோம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முதன்முதலாக வஹி இறங்கியது முதல் அந்த நேர்வழியை ஏற்று பைஅத் செய்யுமாறு தான் அவர்கள் மக்களை அழைத்தார்கள். இந்த பைஅத் பல்வேறு விதங்களில் இடம்பெற்றிருந்தாலும் அதன் கருத்து அணுவளவேனும் மாறுபடவில்லை. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் பைஅத் செய்வதற்குப் பொதுவான ஒரு வழிமுறை காணப்பட்டது. எனினும் வெளிப்படையான அந்த வழிமுறைக்கு மாற்றமான விதங்களிலும் சிலவேளைகளில் இஸ்லாத்திற்கான பைஅத் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால் அந்த பைஅத் குறிக்கக் கூடிய கருத்தில் எந்தவிதமான வித்தியாசங்களும் இருக்கவில்லை. எனவே இதன் மூலம் பைஅத் செய்யப்படும் வழி முறையைவிட அது குறிக்கக்கூடிய கருத்திற்குத்தான் இஸ்லாம் முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றது என்பதை நாம் விளங்கி;க் கொள்ளலாம்.

ஜமாஅதுல் முஸ்லிமீனை நோக்கி வருவோருக்கு இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்யுங்கள் என்றுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள்.

ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள் : -
நாட்டுப்புறத்து அறபி ஒருவர் நபி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரை நோக்கி "இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக என்னிடம் பைஅத் செய்வீராக" என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம்) கூறினார்கள். உடனே அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பைஅத் செய்தார். பின்னர் மறுநாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவராக வந்து "நான் (இஸ்லாத்திற்காகச் செய்த) உடன்படிக்கையை முறித்துவிடுவீராக!" எனக் கூறினார். (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம்) மறுத்துவிட்டார்கள். (வந்தவர்) திரும்பிச் சென்றபோது "மதீனா துருத்தி போன்றது: அதிலுள்ள கெட்டதை (அது) அகற்றிவிடும், அதிலுள்ள நல்லதைத் தேக்கி வைத்துக் கொள்ளும்|| என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் ) கூறினார்கள்.
( ஸ. புஹாரி கி - அஹ்காம். )

இவ்வாறு இஸ்லாத்தை நோக்கி வரக்கூடியவருக்கு பைஅத் செய்யுங்கள் எனக் கூறி இஸ்லாத்தில் நுழைவதற்கான வாசலை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் காட்டியிருக்கின்றார்கள். மனிதனைப் படைத்த அழ்ழாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள வாழ்க்கைத் திட்டத்தை இந்தப் பூமியில் தானும் பின்பற்றி, முழு உலகையும் அந்த வழிமுறைக்கு அடிபணிய வைக்கும் முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் அறிவிப்பைத்தான் இஸ்லாத்தை ஏற்பது என நாம் கூறுகின்றோம். எனவே இந்த இலட்சியம் வெறுமனே அந்தக் கொள்கையின் தாரக மந்திரத்தை நாவினால் மொழிந்துவிடுவதால் நிறை வேறிவிடாது. மாறாக அந்த இலட்சியத்தை அடையும் முயற்சியில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த வினாடியிலிருந்து அவனும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு முழு முயற்சி செய்ய வேண்டும். எனவேதான் அல்லாஹ் அவனது தீனின் நுழைவாயிலாக தலை மைத்துவத்துடன் செய்துகொள்கின்ற உடன்படிக்கையை ஆக்கி வைத்திருக்கின்றான். இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பைஅத் மூலமே ஒருவர் இஸ்லாத்தினுள்ளே நுழையலாம் எனும் செய்தியை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் ஆரம்பமுதலே முன்வைத்திருந்தார்கள். எனவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்ததன் பிறகும், மக்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பயணம் மேற்கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களைத் தேடிவந்து அந்தக் காலத்தில் பைஅத் செய்தார்கள்.

அபூ ஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்க நான்) வரும்போது வழியிலே "இவ்வளவு நீண்டதும், சிரமமானதுமான இரவாக இருக்கின்றதே! இருந்தும் அது குப்ர் நாட்டினை விட்டும் (என்னைக்) காப்பாற்றி விட்டது." (என கவிதையாகக்) கூறிக் கொண்டேன். அத்துடன் வழியிலே எனக்குச் சொந்தமான ஒரு அடிமையும் என்னை விட்டு ஓடிவிட்டார். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தடைந்ததும் அவர்களுக்கு நான் பைஅத் செய்தேன். (சிறிதுநேரம்) நான் அவர்களிடம் இருந்தபோது அந்த அடிமை வந்து சேர்ந்தார். உடனே ரஸூலுல்லாஹி ச என்னை நோக்கி "அபூ ஹுரைராவே! இதோ உமது அடிமை (வந்திருக்கின்றார்)" எனக் கூறினார்கள். அதற்கு நான் "அவர் அல்லாஹ்வுக்காக சுதந்திரம் அடைந்தவராவார்." எனக் கூறி அவருக்கு (நான்) சுதந்திரம் அளித்து விட்டேன்.
( ஸஹீஹுல் புஹாரி - கி.மஙாஸி 71 )

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதும் அபூ ஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதற்காக மதீனாவை நோக்கி மிகச் சிரமத்துடன் பிரயாணம் செய்து வந்திருக்கின்றார்கள். இஸ்லாத்தை ஏற்க வரும்போதே அவர்களுக்கு சோதனை ஆரம்பித்து விடுகின்றது. மிகப் பெரிய சொத்தாகவும், வழித் துணையாகவும் இருந்த அவர்களது அடிமை அவர்களை விட்டு ஓடிவிடுகின்றார். சோதனைகளுக்கும், சிரமங்களுக்கு மத்தியில் மதீனாவுக்கு வந்து சேந்த அபூ ஹுரைரா ரலியல்லாஹூ அன்ஹூ இஸ்லாத்தை ஏற்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்கிறார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்கு வரக்கூடிய ஒவ்வொருவரும் பைஅத் செய்தே இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள். ஒரு கொள்கையை ஏற்பதற்கு உடன்படிக்கை அவசியம் என்பது யாரும் விளங்கிக் கொள்ளக்கூடிய இயற்கையான ஒரு விடயம். எனவேதான் இயற்கை மார்க்கமாகிய இஸ்லாமும் அதனை வலியுறுத்துகின்றது.

நாபிஃ வ கூறுகின்றார்கள்:-
உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு முன்னதாகவே உமர் ரலியல்லாஹூ அன்ஹூவின் மகன் இஸ்லாத்தை ஏற்றுவிட்டதாக மக்கள் கதைத்துக் கொள் கின்றார்கள். (அது) அவ்வாறல்ல! மாறாக ஹுதைபிய்யா உடன் படிக்கை செய்யப்பட்ட தினத்தில் அன்ஸார்களில் ஒருவரிடத்தில் இருந்த தனக்குரியதொரு குதிரையை அதன் மீது ஏறிச் சென்று யுத்தம் புரிவதற்காக, எடுத்துக்கொண்டு வரும்படி உமர் ரலியல்லாஹூ அன்ஹூ (தனது மகனாகிய) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள். அச்சந்தர்ப்பத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் மரத்தடியில் பைஅத் எடுத்துக் கொண் டிருந்தார்கள். இதுபற்றி உமர் ரலியல்லாஹூ அன்ஹூஅறிந்திருக்கவில்லை. எனவே அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ ( ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் ) அவர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். பின்னர் குதிரையை எடுத்துவரச் சென்று அதனை உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடம் எடுத்துக்கொண்டு வந்தார்கள். உமர் ரலியல்லாஹூ அன்ஹூ
அவர்களோ யுத்தம் புரிவதற்கு ஆயத்தம் செய்துகொண்டு இருந்தார்கள். "ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் மரத்திற்குக் கீழே பைஅத் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.|| எனக் கூறினார்கள். உடனே (உமர் ரலியல்லாஹூ அன்ஹூ) புறப்பட்டு ( அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ ) வுடன் சென்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம்
அவர்களிடம் பைஅத் செய்தார்கள். இதனைத்தான் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு முன்னதாகவே உமர் ரலியல்லாஹூ அன்ஹூ வின் மகன் இஸ்லாத்தை ஏற்றுவிட்டதாக மக்கள் கதைத்துக் கொள்கின்றனர்.
( ஸ. புஹாரி கி - மஙாஸி 33 )
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களால் சிறந்தவர்கள் என சான்று வழங்கப்பட்டவர்களது சிந்தனையில் பைஅத் ( உடன்ப டிக்கை) என்றதுமே இஸ்லாத்திற்காக செய்யப்படும் பைஅத் என்பதுதான் முதலில் உதித்திருக்கின்றது. எனவே அவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தின் நுழைவாயில் பைஅத் எனும் உண்மை எந்த அளவு பரவியிருந்தது என்பதை இது காட்டுகின்றது. இந்த அடிப்படையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் தங்களுக்கு நேர்வழி கிடைத்தது முதல் கொண்டு இஸ்லாமிய ஆட்சியின் தலைவராகி மரணிக்கும் வரை இஸ்லாத்தை ஏற்க வரும் ஒவ்வொருவரிடமும் இஸ்லாத்திற்காக பைஅத் (உடன்படிக்கை) எடுத்திருக்கின்றார்கள். இஸ்லாத்திற்காக பைஅத் எடுப்பதனை வழிமுறையாகவே கொண்டிருந்தார்கள்.

முஜாஷpஃ வ கூறுகின்றார்கள்:-
எனது சகோதரனாகிய அபூ மஃபதை அழைத்துக் கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரவர் களே! ஹிஜ்ரத் செய்வதற்காக இவரிடம் பைஅத் எடுப்பீர்களாக!" எனக் கூறினேன். "ஹிஜ்ரத்: அதனைச் செய்தவர்களுடன் முடிவ டைந்துவிட்டது." எனக் கூறினார்கள். "அப்படியானால் எதற்காக அவரிடம் பைஅத் எடுப்பீர்கள்?"எனக் கேட்டேன். "இஸ்லாத்தை ஏற்பதற்காகவும், ஜிஹாத் செய்வதற்காகவும், நற்காரியங்கள் செய்வதற்;காகவும் (பைஅத் எடுப்பேன்)" எனக் கூறினார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 20 )

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் வாழ்நாள் முழுவதும் இஸ்லாத்தை ஏற்பதற்காக பைஅத் எடுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ் நிரூபிக்கின்றது. இஸ்லாத்திற்காக வாழ்நாள் முழுவதும் பைஅத்
எடுத்த ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் , பைஅத் செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள் என்பதை ஹதீஸின் மூலம் முன்னால் உறுதிப் படுத்தியுள்ளோம். இவ்வாறு இஸ்லாத்திற்காக பைஅத் செய்ய வருமாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் விடுத்த அழைப்பு மக்களைக் கூட்டம் கூட்டமாக நபியவர்களிடம் வந்து பைஅத் செய்ய வைத்தது.
தல்க் பின் அலி ரலியல்லாஹூ அன்ஹூகூறுகின்றார்கள்:-
ஒரு கூட்டமாக நாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று அவர்களிடம் பைஅத் செய்தோம். அவர்களுடன் தொழு தோம். (பின்னர்) எங்கள் ஊரிலே எங்களுக்குச் சொந்தமான ஒரு தேவாலயம் இருக்கின்றது என்பதை அறிவித்து, (அதனை சுத்தப் படுத்துவதற்காக ) அவர்கள் வுழுச் செய்துவிட்டு மீதமான நீரைத் தரும்படி கேட்டோம். உடனே நீரைக் கொண்டுவரும்படி கூறி, வுழுச் செய்து வாய் கொப்பளித்தார்கள். பின்னர் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றிவிட்டு "புறப்பட்டுச் செல்லுங்கள். உங்கள் ஊரை வந்து சேர்ந்ததும் உங்களது தேவாலயத்தை உடைத்து விட்டு, அந்த இடத்தில் இந்த நீரைத் தெளியுங்கள். (அதன் பிறகு) அதனை மஸ்ஜிதாக ஆக்கிக் கொள்ளுங்கள்." என எங்களுக்குக் கட்டளை இட்டார்கள். "நிச்சயமாக எங்களது ஊர் தூரத்தில் உள்ளது. சூடும் கடுமையாக இருக்கிறது. (வழியிலேயே) நீர் காய்ந்து (வற்றி) விடும்." எனக் கூறினோம். "மேலும் நீரைக் கொண்டு அதனை அதிகரித்துக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்வது அதன் சிறப்பைத் தான் அதிகரிக்கும்." எனக் கூறினார்கள். (நாம்) புறப்பட்டு எங்கள் ஊரை வந்தடைந்ததும் எங்களது தேவாலயத்தை உடைத்து விட்டுப் பின்னர் அந்த இடத்தில் (நீரைத்) தெளித்தோம். அதனை மஸ்ஜிதாகவும் ஆக்கிவிட்டோம். பின்பு அதிலே அதானும் சொன்னோம். (அதிலே இருந்த) துறவி ஷஷதை|| கோத்திரத்தைச் சார்ந்தவராவார். (அவர்) அதான் ஓசையைக் கேட்டதும் " சத்திய அழைப்பு" எனக் கூறிவிட்டு, எங்களது (ஊர்) மலைகளில் ஒன்றை நோக்கிச் சென்றார். அதன் பிறகு அவரை (நாம்) காணவே இல்லை.
(நஸாஈ - கி.மஸாஜித், அறிவிப்பாளர் வரிசை சரியானது.)

இஸ்லாம் கூறுவது சத்தியம் என்பதை உணர்ந்ததும் தல்க் ரலியல்லாஹூ அன்ஹூ தங்களது தோழர்களுடன் அன்றைய தலைமைத்துவத்திடம் அதனை ஏற்று பைஅத் செய்துள்ளார்கள். இவ்வாறு முஸ்லிம்களின் ஒரே தலைமைத்துவத்துடன் தம்மை இணைத்துக் கொள்வதே சுவனம் செல்லும் கூட்டத்தில் இருப்பதற்கான அடையாளமாகும்.

அலி பின் iஷபான் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
(நாம்) புறப்பட்டு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து சேர்ந்தோம். பின்னர் அவர்களுக்கு பைஅத் செய்து விட்டு, அவர் களின் பின்னால் தொழுதோம். அப்போது அவர்களது ஓரக்கண் களுக்கு ருகூவிலும், ஸுஜூதிலும் தனது முதுகெழும்பை நேராக (சிறிது நேரத்திற்கு) வைத்திராத ஒருவர் தென்பட்டு விட்டார். நபி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் தொழுகையை முடித்துக் கொண்டதும் "முஸ்லிம்களே! ருகூவிலும், ஸுஜூதிலும் தன் முதுகெழும்பை நேராக (சிறிது நேரம்) வைத்திருக்காதவருக்குத் தொழுகையே கிடையாதுஷஷ என்பதாகக் கூறினார்கள்.
(இ. மாஜா, இ. ஹுஸைமா, இ. ஹிப்பான் - ஸஹீஹ்)

இவ்வாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களின் காலத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்துள்ளார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் இஸ்லாத்தின் அழைப்பைத் தெளிவாக முன்வைத்ததன் காரணமாக அன்றிருந்த மக்கள் இஸ்லாத்தின் உயிரோட்டத்தைப் புரிந்து கொண்டார்கள். இஸ்லாம் முற்று முழுதாக மனிதனை அல்லாஹ்வின் அடிமையாக மாற்றுவதற்கான ஒப்பந்தம் என்பதை அவர்கள் விளங்கியிருந்தனர். அந்த ஒப்பந்தத்தின்போது கூறப்படும் வார்த்தை சுருக்கமாக இருந்தாலும், அது எங்கள் வாழ்வையே வேறு திசையில் திருப்பி விடுவதனை ஒப்புக்கொள்வதாகும் என்பதனை அவர்கள் விளங்கியிருந்தனர். எனவேதான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் எனும் அழைப்பை ஏற்கும் எண்ணம் எழுந்ததும் அவர்கள் அன்றைய முஸ்லிம்களின் தலைவராக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களைத் தேடி வந்து பைஅத் செய்துள்ளனர். இஸ்லாத்தின் உயிரோட்டத்தை விளங்கி, அதனை பைஅத் செய்து ஏற்ற அவர்களுக்கு அதற்கேற்ப தங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாக இருந்தது. இதனை வலியுறுத்துவதாகவே விசுவாசிகள் முற்றிலும் இஸ்லாத்தினுள் நுழையவேண்டும் என எதிர்பார்க்கும் அழ்ழாஹ் இஸ்லாத்தை ஏற்பதற்கு பைஅத்தை நிபந்தனையாக ஆக்கி வைத்துள்ளான்.
இஸ்லாத்தின் நுழைவாயில் பைஅத் எனும் அம்சம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்கள் பற்றிய தகவல் முதன்முறையாகக் கிடைப்பவரைக்கூட எட்டிவிடும் அளவிற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களது பிரச்சாரம் இருந்துள்ளது என்பதனைப் பின்வரும் சம்பவத்தின் மூலமும் நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

அபூ ஸுப்யான் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுவதாவது:-
ஹிரகல் (மன்னர்) நட்சத்திரங்களைக் கொண்டு மறைவானவற்றைப் பற்றிக் கூறுபவராக இருந்தார். கவலை கொண் டவராக அவரைப் பார்த்த அவரது நண்பர்கள் அதுபற்றிக் கேட்டபோது அவர்களை நோக்கி "இரவு (நான்) நட்சத்திரங்களைக் கொண்டு கணித்துப் பார்த்தபோது ஹத்னா செய்து கொள்வோரின் அரசர் தோன்றியிருப்பதைப் பார்த்தேன். இந்த (மனித) சமூகத்தில் யார் ஹத்னாச் செய்து கொள்கின்றார்கள்?" எனக் கேட்டார். "யூதர்களை அன்றி வேறு எவரும் ஹத்னா செய்து கொள்வதில்லை. அவர்களது விடயம் உங்களைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். உங்களது ஆட்சியின் கீழுள்ள ஒவ்வொரு நகருக்கும் அவர்களில் உள்ள யூதர்களைக் கொன்றுவிடும்படி எழுதி அனுப்புங்கள்." எனக் கூறினார்கள். இவ்வாறு அவர்கள் தமது விடயத்தில் (மூழ்கி) இருந்தபோது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களது செய்தியை அறிவிப்பதற்காக கஸ்ஸான் நாட்டு மன்னன் அனுப்பிய ஒரு மனிதனை ஹிரகல் மன்னரிடம் கொண்டு வந்தார்கள். அவனிடமிருந்து செய்தியைப் பெற்றதும் "அவர் ஹத்னா செய்தவரா? இல்லையா? என சென்று பாருங்கள்" என ஹிரகல் கூறினார். அவரைப் பார்த்து விட்டு, நிச்சயமாக அவர் ஹத்னா செய்பவர்தான் எனக் கூறினார்கள். அறபிகளைப் பற்றி அவரிடத்தில் கேட்டார். அவர்களும் ஹத்னா செய்கிறார்கள் எனக் கூறினார். அப்போது ஹிரகல் "இவர்தான் நிச்சயமாகப் (புதிதாகத்) தோன்றியுள்ள இந்த சமூகத்தின் அரசர் ஆவார்." எனக் கூறினார். பின்னர் ரோமாபுரியில் உள்ள அவரது ஒரு தோழருக்கு (இது பற்றி) எழுதினார். அவரும் இவரைப் போன்று (நட்சத்திர சாஸ்திர) அறிவுள்ளவராக இருந்தார். "ஹிம்ஸ்" நகரை நோக்கிப் புறப்பட்ட ஹிரகல் "ஹிம்ஸை"ச் சென்றடைவதற்கிடையில் அவரது தோழரிடம் இருந்து நபி ஸல்லல்லாஹி அலைஹிவஸல்லம் அவர்களின் வருகை பற்றியும், அவர் நபிதான் என்பது பற்றியும் இவரது கருத்தை ஒத்த கடிதம் ஒன்று வந்தடைந்தது. உடனே ஹிரகல் "ஹிம்ஸிலே தனது ஒரு கோட்டையில் ரோமாபுரியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை ஒன்று சேர்த்துவிட்டு, அதன் கதவுகளை மூடிவிடும்படி (அவரால்) ஏவப்பட்டது. (அவை) மூடப்பட்டன. பின்னர் முன்னால் வந்து ஷஷரோம் வாசிகளே! நேர்வழி பெற்று, வெற்றி பெறுவதுடன், உங்களது ஆட்சி நிலைத்திருக்கவும் வேண்டுமானால் இந்த நபிக்கு பைஅத் செய்யுங்கள். (என்ன கூறுகின்றீர்கள்)?|| எனக் கேட்டார். உடனே (அவர்கள்) கதவுகளை நோக்கி காட்டுக் கழுதைகளைப் போன்று வெருண்டோடினார்கள். கதவுகள் பூட்டப்பட்டிருக்கக் கண்டார்கள். அவர்கள் வெருண்டோடுவதைக் கண்ட ஹிரகல் (அவர்கள்) விசுவாசம் கொள்வார்கள் என்பதில் நம்பிக்கை இழந்து, அவர்களை என்னிடம் திரும்பி வரச் செய்யுங்கள் எனக் கூறினார். அத்துடன் ஷஷசற்று முன்னர் நான் கூறிய எனது கூற்றை உங்களது தீனிலே உங்களது உறுதியைப் பரீட்சிப்பதற்காகவே அதனைக் கூறினேன். அதனை நான் கண்டுகொண்டேன்|| எனக் கூறினார். உடனே அவர்கள் ஹிரகலுக்கு ஸுஜூது செய்து, அவரைப்பற்றி திருப்தியும் அடைந் தார்கள். இதுதான் ஹிரகலுடைய இறுதியான நிலைப்பாடாக இருந்தது.
(ஸஹீஹுல் புஹாரி கி.பத்இல் வஹி, ஸஹீஹ் முஸ்லிம் )

இவ்வளவு தெளிவான ஒரு விடயம் எம்மை விட்டும் எவ்வாறு தவறிப்போனது என்று எம்மில் ஒரு சிலர் சிந்திக்கலாம். அல்லாஹ் விடம் இருந்தும் அவனது தூதரிடம் இருந்தும் அறிவைப் பெற்றுக் கொள்ளும் நிலை எப்போது எம்மை விட்டு நீங்கியதோ, அன்றுமுதல் இஸ்லாமிய அறிவை நாம் இழந்துவிட்டோம் என்பதுதான் உண்மை. மீண்டும் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்க நாம் ஆரம்பித்து விட்டால் வெண்ணெய்யைக் கையிலே வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்து திரிந்த எமது அவல நிலை எமக்குப் புரிந்துவிடும்.


 6-பைஅத் கூட்டமைப்பின் அத்திவாரம்!

வரலாற்றில் என்றுமே தோன்றியிராத ஒரு சமூகத்தை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தோற்றுவித்தார்கள். அவர்களது அந்தஸ்தை ஒருபோதும் பின்னால் வருபவர்கள் அடைய முடியாது. எனினும் அந்த சமூகம் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பிலேயே மறுமை நாள் வரை ஒவ்வொரு இஸ்லாமிய சமூகமும் தோற்றுவிக்கப்பட வேண் டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையாகும். அந்த சமூகத்தைத் தோற்றுவிப்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பின்பற்றிய செயற்திட்டம் அழ்ழாஹ்வினுடையதாகும். அதனை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அணுவும் பிசகாமல் செயல் படுத்தியதன் காரணமாக வரலாறு காணாத வெற்றியை அடைந்தார்கள். அதனை மாற்றுமாறு இஸ்லாத்தை ஏற்காதவர்கள் கேட்ட போதெல்லாம் அந்த உரிமையே தனக்கு இல்லை எனக் கூறிவிட்டார்கள். முஸ்லிம்களின் கூட்டமைப்பு இல்லாதபோது மீண்டும் அதனைத் தோற்றுவிப்பதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்று அல்லாஹ்வின் செயற்திட்டத்தை உறுதி யுடன் செயற்படுத்தக்கூடிய சிறந்ததொரு தலைமைத்துவமும், அந்த செயற் திட்டத்தை முற்றிலும் ஏற்கக்கூடிய முஸ்லிம்களுமே தேவை.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்:-
அவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண் பிக்கப்பட்டால் எம்மை சந்திப்பதை நம்பாதவர்கள் "இது அல்லாத ஒரு குர்ஆனைக் கொண்டு வருவீராக! அல்லது அதனை மாற்றி விடுவீராக!" எனக் கூறுகின்றனர். "(நபியே!) நீர் கூறுவீராக! நானாகவே அதனை மாற்றிவிடும் உரிமை எனக்குக் கிடையாது. எனக்கு வஹி மூலம் அறிவிக்கப்படுவதை அன்றி எதனையும் நான் பின் பற்றுவதில்லை. எனது ரப்புக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் வேதனையை நான் பயப்படுகிறேன்" ( 10 : 15 )
எனவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அல்லாஹ்வை மாத்திரம் இலாஹ் என ஏற்று தங்களது தலைமைத்துவத்தின் கீழ் ஒன்று படுமாறுதான் மக்களை ஆரம்பம் முதல் அழைத்தார்கள். இந்த அழைப்பை ஏற்பவர்கள் பைஅத் எனும் நுழைவாயிலினால் தான் இஸ்லாம் எனும் கோட்டைக்குள் புகுந்தார்கள். இந்த அமைப்பில் ஒன்றிணைந்த மக்களுக்குத்தான் படிப்படியாக சட்டங்கள் இறக்கி வைக்கப்பட்டன. இதுதான் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதற்கான அத்திவாரம். இது இஸ்லாமிய சமூகத்தை உருவாக்குவதற்கு அல்லாஹ்வினால் காண்பிக்கப்பட்ட வழிகாட்டல். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களே சில காலங்களில் முஸ்லிம்களின் தலைமைத்துவமும், கூட்டமைப்பும் இல்லாத நிலை தோன்றும் என்பதை எமக்கு உணர்த்தியுள்ளார்கள். எனவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் உருவாக்கியது போன்று மீண்டும் ஒரு இஸ்லாமிய சமுதாயம் உருவாக வேண்டுமனால், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எந்த அத்திவாரத்திலிருந்து ஆரம்பித்தார்களோ அதே அத்திவாரத்திலிருந்து ஆரம்பிப்பதுதான் அந்த முயற்சி அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப் படுவதற்கும், உலகில் சரியான விளைவைத் தருவதற்கும் கார ணமாக இருக்கும். அன்றி நாம் நினைத்தவாறு செயல்பட்டால் முதலில் அது அல்லாஹ்வின் பொருத்தத்தில் இருந்தும் எம்மைத் தூரமாக்கி விடும். இரண்டாவதாக அந்த முயற்சி எமது இலட்சி யத்தில் வெற்றியைத் தரப்போவதும் இல்லை.

அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கு அமைய வஹியை மாத்திரம் ஏற்று தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டில் மக்களை இணைத்து விட ஆரம்பமுதல் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எவ்வாறு சிரமப்பட்டார்கள் என்பதை பின்வரும் நீண்ட ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
பத்து வருடங்கள் மக்காவிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் உக்காழ், மிஜன்னா போன்ற சந்தைகளுக்கு மக்கள் வரும்போதும், ஹஜ் காலங்களில் மினாவிலும் மக்களுக்குப் பின்னால் அலைந்துகொண் டிருந்தார்கள். "எனது ரப்பின் தூதை எத்திவைப்பதற்காக எனக்கு புகலிடம் தரக்கூடியோர் யார்? எனக்கு உதவி செய்யக் கூடியோர் யார்? அவருக்கு சுவனம் கிடைக்கும்" எனக் கூறுவார்கள். எந்த அளவுக்கு எனில் யமனைச் சேர்ந்த அல்லது முழர் கோத்திரத் தைச் சேர்ந்தவர் தங்களது கூட்டத்தினரிடம் வந்ததும் "(மக்கா விற்குச் சென்றால்) குரைஷ; கோத்திரத்தைச் சேர்ந்த இளைஞர் உன்னை பித்னாவிற்கு உட்படுத்திவிடாமல் எச்சரிக்கையாக இரு ந்து கொள்!" எனக் கூறுவார்கள். (பொது இடங்களில் ஒன்று கூடும்) மனிதர்களுக்கு மத்தியில் நடந்து செல்லும்போது விரல்களால் சுட்டிக்காட்டி (அடையாளம் காட்டி) எச்சரிப்பார்கள்.

இறுதியிலே அல்லாஹ் (இன்றைய மதீனா) யஸ்ரிபிலிருந்து எங்களை அவர்களின்பால் அனுப்பிவைத்தான். நாம் அவர்களுக்குப் புகலிடம் கொடுத்து அவர்களை உண்மைப்படுத்தினோம். எனவே எங்களினின்றும் உள்ளவர்கள் அவர்களிடம் சென்று விசுவாசம் கொண்டு, அவர்கள் அல்குர்ஆனைக் கற்றுக் கொடுத்தன் பின்னர் தங்களது குடும்பத்தாரிடம் திரும்பி வருவார். (அதன்) பின் அவர் மூலம் (குடும்பத்தவர்கள்) இஸ்லாத்தை ஏற்பார்கள். இவ்வாறு அன்ஸார்களின் வீடுகளில் இஸ்லாத்தை வெளிப்படுத்தும் ஒரு சிலராவது இல்லாமல் எந்தவொரு வீடும் மீதம் இருக்கவில்லை. பின்னர் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து "எதுவரைக்கும்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயந்துகொண்டு, மக்காவின் மலைகளில் விரட் டப்படுவதை அனுமதிப்பது" எனச் சிந்தித்தோம்.

ஆகவே எங்களினின்றும் எழுபது நபர்கள் ஹஜ்ஜுடைய காலத்தில் அவர்களிடம் புறப்பட்டுச் சென்றோம். (இரவில்) பள்ளத்தாக்கில் அவர்களை நாமனைவரும் சந்திப்பதாக வாக்குறுதி அளித்தோம். அவ்வாறே ஒருவர் இருவராக அனைவரும் அவர்க ளிடத்தில் ஒன்று கூடியதன் பின்னர் நாம் "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! உங்களிடம் நாம் பைஅத் செய்கின்றோம்" எனக் கூறினோம். "உற்சாகமான வேளையிலும் சோர்வான வேளையிலும்
செவிமடுத்துக் கட்டுப்படுவோம் எனவும், இலகுவிலும் சிரமத்தின் போதும் செலவு செய்வோம் எனவும், நன்மையை ஏவி தீமையைத் தடுப்போம் எனவும், குறைசொல்லக் கூடியோரின் குற்றச் சாட்டைப் பொருட்படுத்த மாட்டோம் எனவும், எனக்கு உதவி செய்வதுடன் நான் உங்களிடம் வந்தால் உங்களையும் உங்கள் மனைவிமார் களையும் உங்களது பிள்ளைகளையும் எவற்றிலிருந்தெல்லாம் பாதுகாப்பீர்களோ அவற்றிலிருந்து என்னைப் பாதுகாப்பீர்கள் என் றும் பைஅத்துச் செய்தால் உங்களுக்கு சுவனம் கிடைக்கும்" எனக் கூறினார்கள். உடனே நாம் எழுந்துசென்று அவர்களிடம் பைஅத் செய்தோம். அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு எங்களில் மிகச்சிறியவரான அஸ்அத் பின் ஸுராரா (எம்மை நோக்கி) "யஸ்ரிப் வாசிகளே! சிறிது பொறுங்கள். இவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதை நாங்கள் அறிந்துகொண்டேயன்றி ஒட்டகங்களை நாம் ஓட்டிவரவில்லை. இவர்களை இன்று வெளியேற்றிச் செல்வது ஒட்டுமொத்தமாக அறபிகளையே பிரிந்து விடு;வதாகும். உங்களில் சிறந்தவர்களைக் கொலை செய்வதாகும். வாள்கள் எப்போதும் உங்களுடன் ஒன்றிவிடும். இவற்றின்மீது நீங்கள் பொறுமையுடன் இருக்கக்கூடிய கூட்டமாக இருந்தால் உங்களுக்கான கூலியைத் தருவது அல்லாஹ்மீது கடமையாகி விடும். அவ்வாறன்றி கோழைத் தனத்தினால் நீங்கள் உங்களைப் பற்றிப் பயப்படுவோராக இருந்தால் அதனை நீங்கள் தெளிவுபடுத்தி விடுங்கள். அது அல்லாஹ்விடத்தில் உங்களது ( மன்னிப்பிற்கான ) காரணமாக ஆகிவிடும்." எனக் கூறினார்.

(அதற்கு எம்முடன் இருந்த ஏனையோர்) அஸ்அதே! எமக்கு இடம் தருவீராக. அல்லாஹ்மீது சத்தியமாக இந்த பைஅத்தை நாம் ஒரு நாளும் விடமாட்டோம். அதனைச் (செய்துவிட்டுப்) பறித்து விடவும் மாட்டோம்." எனக் கூறிவிட்டு (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) அவர்க ளின்பால் எழுந்து சென்று பைஅத் செய்தோம். எங்களிடம் (பைஅத்) எடுத்தாhர்கள், நிபந்தனைகளை இட்டார்கள். அவற்றிற்கெல்லாம் சுவனம் கிடைக்கும் எனக் கூறினார்கள்.
(அஹ்மத் - ஸஹீஹ்)

எனவே முன்னைய நபியினால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த ஹஜ் எனும் நற்செயலை அவர்கள் விரும்பியவாறு அமைத்துக் கொண்டு, அதற்காக ஒன்றுகூடும் மக்களிடம் சென்று அல்லாஹ்வை இலாஹாக ஏற்று தன்னிடம் பைஅத் செய்யுமாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பிரச்சாரம் செய்து கொண்டு அவர்களுக்குப் பின்னால் அலைந்து திரிந்துள்ளார்கள். ஆனால் அவர்களோ நேர்வழியில் இருப்பதாகக் கருதிக்கொண்டு, பைஅத் எனும் நுழைவாயிலால் இஸ்லாத்தினுள் நுழைவதற்குப்பதிலாக ஏனையோரையும் நேர்வழியை ஏற்கவிடாது நபியவர்களை சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளனர்.

இருந்தும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொடர்ந்தும் பைஅத் எனும் நுழைவாயிலினால் இஸ்லாத்தினுள்ளே மக்களை அழைத்துவருவதன் மூலம் அவர்கள் அழ்ழாஹ்வுடன் செய்துகொண்ட வியாபாரத்தைப் பூர்த்தி செய்யவைக்க மிகவும் சிரமப்பட்டு, முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வஹியின் அடிப்படையில் "கூடாது" எனத் தடைசெய்தவற்றை, தொழுகை, ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகளைச் செய்துகொண்டிருந்த மக்கள் "கூடுமானது" எனக் கூறி செய்துகொண்டிருந்தார்கள். அத்தகையோர் தன்னிடம் பைஅத் செய்யவேண்டும் என்பதற்காக அல்லாஹ்வின் வழிகாட்டலில் எந்தவொன்றையும் மாற்றிக்கொள்ள ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒருபோதும் தயாராக இருக்கவில்லை. பைஅத் எனும் நுழைவாயிலின் மூலமாக இஸ்லாத்தினுள் நுழைவதற்காக ஒரு கூட்டம் வந்தபோது நடந்த சம்பவத்தைப் பாருங்கள்.

உக்பா பின் ஆமிர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஒரு கூட்டம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்களிடம் (பைஅத் செய்வதற்காக) வந்தது. ஒன்பது நபர்களிடம் பைஅத் எடுத்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
ஒருவரை விட்டுவிட்டார்கள். அப்போது (அங்கு இருந்தவர்கள்) "அல்லாஹ்வின் தூதரவர்களே! ஒன்பது நபர்களிடம் பைஅத் எடுத்தீர்கள், இவரை விட்டுவிட்டீர்களே?" எனக் கேட்டனர். அதற்கு "அவர் தாயத்துக் கட்டியிருக்கின்றார்." எனக் கூறினார்கள். உடனே அவர் தனது கையை நுழைத்து அதனை அறுத்து (எறிந்து)விட்டார். பின்னர் அவரிடமும் பைஅத் எடுத்துவிட்டு "யார் தாயத்து தொங்கவிடுகின்றாரோ நிச்சயமாக அவர் இணைவைத்து விட்டார்." எனக் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ்)

ஒரு மனிதன் பைஅத் செய்கின்றான் என்றால் அதன் உண்மையான பொருள் என்ன என்பதை இச் சம்பவத்தின் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம். அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு மக்களை வழிநடாத்தும் தலைமைத்துவத்துடன் மக்கள் இஸ்லாத்தினுள் நுழைவதற்காக செய்து கொள்ளும் ஒப்பந்தமே பைஅத் (உடன்படிக்கை) ஆகும். அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர் அந்த பைஅத்தைச் செய்வதால் அல்லாஹ்விடம் அவருக்கு எந்த இலாபமும் ஏற்படப்போவதில்லை. எனவேதான் தாயத்துக் கட்டியதன் மூலம் ஷpர்க்கைச் செய்து கொண்டிருக்கும் ஒருவர் அதிலிருந்து விடுபடும் வரை அவர் இஸ்லாத்தினுள் நுழைவதால் பிரயோசனம் இல்லை என்பதனை பைஅத் எடுக்க மறுத்ததன்மூலம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் உணர்த்தியுள்ளார்கள். எனவே இஸ்லாமிய தலைமைத்துவத்துடன் பைஅத் செய்யும் ஒருவர் அழ்ழாஹ்வின் நேர்வழியைப் பின் பற்றுவதற்காகவே அவர் அந்த பைஅத்தைச் (உடன்படிக்கையை) செய்கின்றார். அந்த நேர்வழிக்கு மாற்றமான நம்பிக்கைகள், வணக்கவழிபாடுகள், பழக்கவழக்கங்கள் போன்ற அத்தனை அம்சங்களையும் அவர் முற்றிலும் சீர்திருத்தி அமைத்திட வேண்டும். தீய பழக்கம் உள்ள ஒருவர் பைஅத் செய்ய வந்தபோது நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

அபூ ஷஹ்ம் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
மதீனாவில் வைத்து எனக்கு அருகாமையால் ஒரு அடிமைப்பெண் சென்றாள். அப்போது நான் அவளது இடுப்பினால் (அவளைப்) பிடித்தேன். மறுநாள் காலையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
மக்களிடம் பைஅத் எடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுஅவர்களிடம் (நான் பைஅத் செய்வதற்காக) வந்தேன். என்னிடம் பைஅத் எடுக்கவில்லை. "(பெண்ணைப் பிடித்து) இழுத்தவர் இப்போது (பைஅத் செய்ய) வந்திருக்கின்றார்." எனக் கூறினார்கள். (அதற்கு நான்) "அல்லாஹ்மீது சத்தியமாக மீண்டும் செய்யமாட்டேன்." எனக் கூறினேன். உடனே என்னிடம் பைஅத் எடுத்தார்கள்.
(முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ் )

இஸ்லாத்தை ஏற்பதற்காக முஸ்லிம்களின் இமாமிடம் வந்து ஷஹாதாவை மொழிந்து, பைஅத் செய்து விட்டுத் தொடர்ந்தும் ஷpர்க்கைச் செய்து கொண்டிருக்கக் கூடிய மனிதருக்கு அவர் செய்யும் பைஅத்தோ அல்லது அவர் கூறக்கூடிய ஷஹாதாவோ எந்தவிதப் பிரயோசனத்தையும் கொடுக்காது. ஜாஹிலிய்யத்தில் இருக்கும்போது தீய பண்புகளுடன் வாழ்ந்த ஒருவர் அதே பண்புகளுடன் இஸ்லாத்தில் நுழைவதானால் பைஅத்தின் மூலம் அவர் அடையக்கூடிய நன்மைதான் என்ன?

எனவே இஸ்லாத்தின் நுழைவாயிலான பைஅத்தின் ஊடாக இஸ்லாத்திலே நுழையும் ஒருவர் அவரது ஜாஹிலிய்ய சிந்தனைகள், ஜாஹிலிய்ய நம்பிக்கைகள், ஜாஹிலிய்ய வணக்கவழிபாடுகள், ஜாஹிலிய்யப் பழக்க வழக்கங்கள் போன்ற அத்தனையையும் களைந்துவிட்டு ஒரு புது மனிதராகவே அவர் இஸ்லாத்தில் நுழைய வேண்டும் என்பதே அல்லாஹ்வினதும் அவனது தூதரினதும் எதிர்பார்ப்பாகும். இதன்படி இஸ்லாத்தினை ஏற்க வரும் நபர்களிடத்தில் அதற்கு முரணான அம்சங்கள் காணப்பட்டால் அவற்றைச் சுட்டிக்காட்டி அவை திருத்தி அமைக்கப்பட்ட பின்பே அவர்களிடத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்துள்ளார்கள். இஸ்லாத்தை ஏற்க வருபவரிடம் இருக்கக்கூடிய இஸ்லாத்திற்கு முரணான அம்சங்களைக் களைந்துவிடும்படி வழிகாட்டுவதற்கும், ஒரு முஸ்லிம் கண்டிப்பாக செய்யவேண்டியவற்றைத் தவறாது செய்ய வேண்டும் என நிபந்தனையிடுவதற்கும் இஸ்லாத்திற்காக பைஅத் செய்யும் சந்தர்ப்பத்தை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பயன்படுத்தியுள்ளார்கள்.


7-பைஅத் செய்வது எவ்வாறு?

இஸ்லாம் எனும் நேர்வழியை உண்மை என விளங்கிய ஒருவன் அந்த நேர்வழியில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான உடன்படிக்கைதான் பைஅத் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். அவ்வாறு விளங்கிக் கொள்வதானது பைஅத் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதனைத் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும். இஸ்லாத்தின் ஒவ்வொரு செயலையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எங்களுக்கு நடைமுறைப் படுத்திக் காட்டியுள்ளார்கள். அந்த வகையில் பைஅத் செய்வதற்கும் அவர் கள் காட்டித்தந்த ஒரு முறை காணப்படுகின்றது. அந்த வழிமுறை என்ன என்பதை முதலி;ல் பார்ப்போம்.

அம்ர் பின் ஆஸ் ரலியல்லாஹூ அன்ஹூகூறுகின்றார்கள்:-
அல்லாஹ் எனது உள்ளத்தில் இஸ்லாத்தை ஏற்படுத்திய போது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் வந்து "( நான் ) உங்களுக்கு பைஅத் செய்வதற்காக உங்களது வலது கையை நீட்டுங்கள்" எனக் கூறினேன். அவர்களது வலது கையை நீட்டினார்கள். உடனே (நான்) எனது கையை மடக்கிக் கொண்டேன். "அம்ரே! உமக்கு என்ன (நடந்தது)?" எனக் கேட்டார்கள். "நிபந்தனை இடுவதற்கு நினைத்தேன்." எனக் கூறினேன். "என்ன நிபந்தனையிடப்போகிறீர்?" என்றார்கள். "எனக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும்" எனக் கூறினேன். "நிச்சயமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது அதற்கு முந்திய (பாவங்களை) அழித்துவிடும், ஹிஜ்ரத் அதற்கு முந்திய (பாவங்களை) அழித்துவிடும், ஹஜ் செய்வது அதற்கு முந்திய (பாவங்களை) அழித்து விடும் என்பதை நீர் அறியவில்லையா?" எனக் கேட்டார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.ஈமான் 54 )

இஸ்லாத்தின் உயிரோட்டத்தைத் தெளிவுபடுத்தக்கூடிய ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். அம்ர் பின் ஆஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதுமே அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாகவும், நபியாகவும் இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்களிடம் விரைந்து வந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்களது கையை நீட்டுமாறு வேண்டினார்கள். அவ்வாறு பைஅத் செய்து தன்னை ஜமாஅதுல் முஸ்லிமீனுடன் இணைத்துக் கொள்வதை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதாகக் குறிப்பிட்டார்கள்.

இஸ்லாத்தை ஏற்பதற்கான வழிமுறை அந்தந்தக் காலத்தில் இருக்கக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமிடம் சென்று இஸ்லாத்திற்காக பைஅத் செய்தல் என்பதனை இந்த ஹதீஸ் எமக்குத் தெட்டத்தெளிவாக உணர்த்துகின்றது. இவ்வாறு ஒருவர் தூய்மையுடன் அல்லாஹ்வுக்காக ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமிடம் பைஅத் செய்கின்றபோதுதான் அவர் இஸ்லாத்தை ஏற்றவராகின்றார். அத்தகையவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னர் செய்த அத்தனை பாவங்களும் அவர் இஸ்லாத்தை ஏற்றதன் காரணமாக அல்லாஹ்வினால் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.

வாழையடி வாழையாக எம்மை நாமே முஸ்லிம்கள் என மார்தட்டும் எம்மில் மிக அதிகமானோருக்கு இஸ்லாத்திற்காக முஸ்லிம்களின் இமாமிடம் பைஅத் செய்ய வேண்டும் என்பது ஆச்சரியத்துக்குரிய செய்தியாக இருக்கின்றது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்களின் காலத்தில் சிலை வணக்கத்திலும், வரம்புமீறல்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்காவாசிகளுக்கு மத்தியில் முஸ்லிமாக வேண்டும் என்றால் முஸ்லிம்களின் இமாமிடத்தில் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்கள். அதாவது பைஅத் இன்றி இஸ்லாம் இல்லை என அவர்கள் விளங்கிவைத்திருந்தார்கள். இஸ்லாத்தை ஏற்க வருபவர்களிடம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தங்களது வலது கரத்தால் அவர்களது வலது கரத்தைப் பிடித்து பைஅத் எடுத்திருக்கின்றார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் படித்துக்கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. இதே போன்று அல்லாஹ்வும் தனது அல்குர்ஆனில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
பைஅத் எடுத்த விதம் பற்றிப் பின்வருமாறு விபரிக்கின்றான்:-

நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் செய்கின்றார்களோ அவர்கள் அல்லாஹ்விடமே பைஅத் செய்கின்றனர். அல்லாஹ்வின் கை அவர்களது கைகளுக்கு மேலால் இருக்கின்றது. எனவே யார் (பைஅத்தை) முறிக்கின்றாரோ (அவர்) தனக்கு எதிராகவே அதனை முறிக்கின்றார். யார் அல்லாஹ்விடம் பைஅத் செய்ததை நிறை வேற்றுகின்றாரோ அவருக்கு விரைவில் (அழ்ழாஹ்) மகத்தான கூலியைக் கொடுப்பான்.
( 48 : 10 )

இந்த அல்குர்ஆனிய வசனமும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பைஅத் எடுக்கும்போது பைஅத் செய்பவர்களின் கையைப் பிடித்துத்தான் பைஅத் எடுத்துள்ளார்கள் என்பதை உறுதிப் படுத்துகிறது. இதன் மூலம் பைஅத்தில் ஈடுபடக் கூடிய இருவரும் தத்தமது வலது கையினால் மற்றவரது கையைப் பிடித்து அந்த பைஅத்தைச் செய்துகொள்ள வேண்டும் என்கின்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளலாம்.

ஜரீர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
"அல்லாஹ்வைத்தவிர தகுதியுள்ள இலாஹ் எவரும் இல்லை எனவும், முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் எனவும், தொழுகையை நிலைநாட்டுவதெனவும், ஸக்காத் கொடுப்பதெனவும், (அமீரின் கட்டளைகளுக்குச்) செவிமடுத்துக் கட்டுப்படுவதெனவும், எல்லா முஸ்லிம்களுக்கும் விசுவாசமாக நடந்துகொள்வதெனவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் நான் பைஅத் செய்தேன்.
(ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ)

இஸ்லாத்திற்காக பைஅத் (உடன்படிக்கை) செய்ய வருபவர்களது வலது கையை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தங்களது வலது கையினால் பிடித்து என்ன கூறுவார்கள் என்பது பற்றியே இந்த ஹதீஸ் விபரமாகத் தெளிவுபடுத்துகின்றது. இஸ்லாம் கூறக்கூடிய அனைத்து சட்டங்களுக்கும் அடிபணிவதற்கு நான் தயார் எனக் கூறக்கூடிய உடன்படிக்கையை சுருக்கமானதும் மிகப் பெறுமதி யானதுமான வார்த்தைகளைக் கொண்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்துள்ளார்கள். அதுதான் "அல்லாஹ்வைத்தவிர தகுதியுள்ள இலாஹ் எவரும் இல்லை, முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்" என்பதாகும். அதன் பின்னர் அதனுடன் சேர்த்து இஸ்லாத்தின் பல்வேறு அடிப்படை அம்சங்களை எடுத்துக்கூறி அவற்றிற்காக பைஅத் எடுத்துள்ளார்கள். இந்த ஹதீஸில் அவற்றுள் சில விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெண்களைப் பொறுத்தவரையில் அவர்களது வலது கையைப் பிடித்து அந்நியவரான இமாம் இவ்வாறு பைஅத் எடுக்க முடியாது. அந்நிய பெண்களைத் தொடுவது இஸ்லாத்தில் முற்றாகத் தடைசெய்யப்பட்ட விடயமாகும். ஆனால் அதேநேரம் அவர்கள் சுவனம் செல்வதானால் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வது அவர்கள் மீது கடமையாகின்றது. அப்படியானால் இதற்குரிய தீர்வு என்ன? பைஅத் என்பது இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுத் தன்னை இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் இணைத்துக் கொள்வதற்காக இமாமின் கையைப் பிடித்து செய்யப்படும் உடன்படிக்கையாகும். பெண்களின் விடயத்தில் பைஅத்தின் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பெண்களின் கைகளைப் பிடிப்பதை மாத்திரம் தவிர்த்துள்ளார்கள். எனினும் அவர்களிடம் இஸ்லாத்திற்காக பைஅத் எடுப்பதை விடவில்லை. பெண்களின் விடயத்தில் விNஷடமாக பைஅத் எடுக்கும்படி அழ்ழாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குக் கட்ளையிட்டுள்ளான். அவர்களிடம் பைஅத் எடுக்கும்போது கூறப்படக்கூடிய விடயங்களையும் அழ்ழாஹ் அல்குர்ஆன் மூலம் கற்றுக் கொடுத்துள்ளான். ஆயிஷh ரலியல்லாஹூ அன்ஹா கூறுகின்றார்கள்:-
விசுவாசியான பெண்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தால், "விசுவாசிகளே! விசுவாசியான பெண்கள் உங்க ளிடம் ஹிஜ்ரத் செய்து வந்தால் அவர்களை நீங்கள் பரீட்சித்துப் பாருங்கள்"எனும் அல்லாஹ்வின் கூற்றிற்கு அமைய அவர்களைப் பரீட்சிப்பார்கள். இந்த நிபந்தனையை விசுவாசியான பெண்களில் யார் ஏற்கின்றனரோ பரீட்சையிலே (அவர்களை) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அங்கீகரிப்பார்கள். அவர்கள் இதனைத் தங்களது வார்த்தை யினால் ஏற்றுக் கொண்டுவிட்டால் அவர்களை நோக்கி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் "நீங்கள் செல்லுங்கள். உங்களிடம் நான் பைஅத் எடுத்து விட் டேன்" எனக் கூறுவார்கள். இல்லை! அல்லாஹ் மீது சத்தியமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது கைகள் எந்தவொரு பெண்ணின் கையையும் அறவே தொடவில்லை. மாறாக வார்த்தையைக் கொண்டே அவர்களிடம் பைஅத் எடுத்துள்ளார்கள். அல்லாஹ் மீது சத்தியமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஏவி யதன் காரணமாகவேயன்றி பெண்களிடம் (பைஅத்) எடுக்கவில்லை. அவர்களிடம் (பைஅத்) எடுத்தால் "உங்களிடம் பைஅத் எடுத்து விட்டேன்" என வார்த்தையில்தான் கூறுவார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 21 )

அல்லாஹ்வின் ஒவ்வொரு கட்டளையையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் செயல்படுத்தினார்கள். ஒரு கட்டளையை செயல்படுத்தும்போது மற்றொரு கட்டளையைப் புறக்கணித்து விடும் தன்மை அவர்களி டம் இருக்கவில்லை. கட்டாயம் பைஅத் எடுத்தேயாக வேண்டும். ஆனால் அந்நிய பெண்களின் கைகளைப் பிடிப்பது தடுக்கப்பட் டுள்ளதால் வார்த்தைகளினால் மாத்திரம் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதனை அறிவிக்கச் செய்தார்கள். இது மஹ்ரம் அல்லாத பெண்களிடம் பைஅத் எடுக்கவேண்டிய முறையாகும். இதுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பைஅத் எடுக்கும் வழமை யான முறையாக இருந்தாலும் முஸ்லிம்களின் தலைமைத்துவத் துடன் தன்னை இணைத்துக் கொள்வதனை அறிவிக்கக் கூடிய வகையில் வேறு விதங்களில் தற்செயலாக பைஅத் அமைந்து விட்டால் அதனையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அங்கீகரித்துள்ளார்கள்.

இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூகூறுகின்றார்கள்:-
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஹாலித் பின் வலீத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை பனூ அஹ்பஸா அல்லது ஜதீமா கோத்திரத்தினரிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்களை (ஹாலித் பின் வலீத் ரலியல்லாஹூ அன்ஹூ ) இஸ்லாத் தின்பால் அழைத்தார். எனினும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுவிட்டோம் எனக் கூறத் தெரியாமல் இருந்தார்கள். எனவே அவர்கள் "மதம் மாறிவிட்டோம்! மதம் மாறிவிட்டோம்" எனக்கூற ஆரம்பித்தார்கள். அவர்களை ஹாலித் ரலியல்லாஹூ அன்ஹூ கைதுசெய்தும், கொலை செய்தும் விட்டார்கள். அத்துடன் எங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கைதியைக் கொடுத்து மறுநாள் காலையானதும் எங்களில் ஒவ் வொருவரும் தனது கைதியைக் கொலை செய்துவிடும்படியும் கூறினார்கள். அப்போது நான் "அல்லாஹ் மீது சத்தியமாக! எனது கைதியை நான் கொலை செய்யவும் மாட்டேன். எனது தோழர்க ளிலும் எவரும் அவரது கைதியைக் கொலை செய்யவும் மாட்டார்." எனக் கூறினேன். பின்னர் (அனைவரும்) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து ஹாலித் ரலியல்லாஹூ அன்ஹூ வின் செயல் பற்றிக் கூறினார்கள். உடனே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தங்களது இரு கைகளையும் (வானத் தின்பால்) உயர்த்தி "யாஅல்லாஹ்! ஹாலித் செய்ததனை விட்டும் நான் நீங்கியவனாவேன்" என இரண்டு விடுத்தம் கூறினார்கள்.
(முஸ்னத் அஹ்மத்- ஸஹீஹ்)

அன்றைய காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களை முஸ்லிம் அல்லாதவர்கள் "ஸாபிஃ" (மதம்மாறியவன்) என்றுதான் கூறினார்கள். எனவே இஸ்லாத்தை எவ்வாறு ஏற்பது என்பதனை அறிந்திராத அவர்கள் தங்களது மார்க்கத்தை விட்டுவிட்டு வேறு ஒரு மார்க்கமாகிய இஸ்லாத்தை ஏற்பதனைக் குறிக்கும் விதத்தில் "மதம் மாறிவிட்டோம்." எனக் கூறினார்கள். பைஅத் செய்யும் விதம் மாறியிருந்தாலும் அவர்களது நிலைப்பாடு இஸ்லாமியத் தலை மைத்துவத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதாக இருக்கும் போது அது கட்டாயம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை, அதற்கு மாற்றமாக ஹாலித் ரலியல்லாஹூ அன்ஹூ செய்த செயலுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனக் கூறியதன் மூலம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வெளிப் படுத்தியுள்ளார்கள்.

ஷரீத் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
(பைஅத் செய்ய வந்திருந்த) சகீப் கோத்திரத்தாரின் தூதுக் குழுவினரில் தொழு நோயினால் பீடிக்கப்பட்ட ஒரு மனிதர் இருந்தார். உடனே அவருக்கு "உம்மிடம் நாம் பைஅத் எடுத்து விட்டோம். நீர் திரும்பிச் செல்வீராக!" என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் செய்தி அனுப்பினார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.ஸலாம் 36 )

நோய்களில் பல வகைகள் உள்ளன. உடலின் வெளிப் பாகத்தில் தோன்றக்கூடிய சில நோய்களுக்கு ஆளானவர்களைப் பார்க்கும்போது மக்கள் வெறுக்கவும் செய்கின்றனர். இத்தகைய நோயினால் பீடிக்கப்பட்டவர்கள் சுகதேகிகளுக்கு மத்தியில் உலாவக்கூடாது என்பதும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது கூற்றாகும். விNஷடமாக இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் உறுப்புக்கள் மீதுள்ள சதைகள் கரைந்து விரல்கள் போன்றவை விழுகின்ற நோயினால் பீடிக்கப்பட்டவரைக் கண்டால் வெருண்டோடும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். "அதற்கான காரணம் அது மற்றவர்களுக்குத் தொற்றி விடும்" என சரியான இஸ்லாமிய அறிவற்ற ஒரு சிலர் கூறியுள்ளனர். ஆனால் "தொற்றுநோய் கிடையாது." என்பதே இஸ்லாத்தின் தீர்ப்பாகும். அத்தகைய நோயிற்குள்ளான ஒருவர் இஸ்லாத்தில் நுழைவதனை நாம் மறுக்கமுடியாது. எனவே அவரிடம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்துள்ளார்கள். ஆனால் அவரது நோய் காரணமாக அவரது கையைப் பிடிக்கவில்லை. முஸ்லிம்களின் தலைவரிடம் பைஅத் செய்யும்போது கையைப் பிடிப்பதில் தடைகள் இருக்கும் பட்சத்தில் அது இல்லாமலும் பைஅத் நடைபெறலாம் என்பதை நாம் இந்தச் சம்பவம் எமக்கு உணர்த்துகின்றது.

8-பைஅத்தின் வகைகள்!

பைஅத் என்பதன் பொருளை நாம் ஆரம்பத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். எனவே இங்கு நாம் பைஅத் எனக் கூறும்போது இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் செய்து கொள்ளும் பைஅத்தையே அது குறிக்கும். அல்லாஹ்வுடன் செய்யும் வியாபாரம் எனும் பொருளில் பயன்படுத்தக்கூடிய பைஅத்தைக் குறிக்காது என்பதை முதலில் உங்களுக்குக் கூறிக் கொள்கின்றோம். இஸ்லாத்தின் அடிப்படையான இந்த பைஅத்தின் வகைகளை இப்போது நாம் விரிவாகப் பார்ப்போம்.

1 - இஸ்லாத்தை ஏற்பதற்கான பைஅத்!
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பைஅத்தின் முதலாவதும், முக்கியமானதுமான வகை இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக செய்யப்படும் பைஅத்தாகும். முஸ்லிம்களுக்கு என ஒரு தலை மைத்துவம் இருக்கும் எல்லாக் காலங்களிலும் இஸ்லாத்தை ஏற்க வரும் அனைவரும் இந்த பைஅத்தைச் செய்தே ஆகவேண்டும். ஏனெனில் இந்த பைஅத் (உடன்படிக்கை) இஸ்லாத்தின் நுழை வாயிலாகும். இதனைச் செய்வதன் மூலமே ஒருவன் முஸ்லிமாக மாற முடியும். இஸ்லாத்தை ஏற்பதற்கான இந்த பைஅத்தை இஸ்லாத்தை ஏற்க வருபவர்களிடம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் உலகை விட்டுப் பிரியும் வரை எடுத்துக்கொண்டே இருந்தார்கள். இதற்குச் சான்றாக சில ஹதீஸ்களைத் தருகின்றோம்.

அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
உக்ல் கோத்திரத்தைச் சேர்ந்த எட்டு நபர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பைஅத் செய்தார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.கஸாமா )

கஅப் பின் மாலிக் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
இஸ்லாத்திற்காக நாம் பைஅத் செய்த அகபா இரவில் நிச்சயமாக நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் அங்கு இருந்தேன். இதனைவிட மக்களிடத்தில் அதிகம் நினைவு கூறப்படக் கூடியதாக (பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்ட செயல்) இருந்தாலும், இதற்குப் பகரமாக பத்ரிலே கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத் திருக்க வேண்டும் என்று நான் (ஒருபோதும்) விரும்பவில்லை.
( ஸஹீஹுல் புஹாரி கி - ம. அன்ஸார். )

அபூ ஷ{ஐப் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
உமைமா பின்து ரகீகா ரலியல்லாஹூ அன்ஹூ இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அப் போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் "அழ்ழாஹ்வுக்கு இணைவைக்கக் கூடாது எனவும், திருடக்கூடாது எனவும், விபச்சாரம் செய்யக் கூடாது எனவும், உமது குழந்தையைக் கொலை செய்யக் கூடாது எனவும், அபாண்டத்தை நீராகவே உருவாக்கி (எங்களிடம்) கொண்டுவரக் கூடாது எனவும், மையித்திற்காக ஓலமிட்டு அழக்கூடாது எனவும், ஆரம்பகால ஜாஹிலிய்யத்தில் அலங்கரித்துக் கொண்டு சுற்றித் திரிந்ததுபோல் சுற்றித் திரியக்கூடாது எனவும் உம்மிடம் பைஅத் எடுக்கின்றேன்." எனக் கூறினார்கள்.
(மு. அஹ்மத் - ஸஹீஹ் )

இவ்வாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஒவ்வொருவரும் பைஅத்துச் செய்தே இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள். இது பைஅத்தின் முதலாவது வகையாகும். பருவ வயதடைந்த ஒவ்வொரு மனிதனின் மீதும் இந்த வகையான பைஅத் கடமையாகின்றது. முஸ்லிம்களின் கூட்டமைப்பும், அவர்களுக்கென ஒரு இமாமும் உள்ள காலத்தில் இந்த வகையான பைஅத்தைச் செய்யாதவர்கள் மரணித்துவிட்டால் அவர் யாராக இருந்தாலும் அவர் அல்லாஹ்வைச் சந்திக்கின்றபோது தன்னை முஸ்லிம் என நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் அவரிடம் இருக்காது. இஸ்லாத்திற்கான இந்த பைஅத்தைச் செய்து உலகில் முஸ்லிம்களுடன் தன்னை இணைத்துக்கொள்ளாத எவரும் சுவனம் செல்லவும் முடியாது. ஆகவே பைஅத் செய்து இஸ்லாத்தினுள் நுழையாமல் இஸ்லாத்தின் ஏனைய கடமைகள் அத்தனையையும் செய்து, தான் ஒரு முஸ்லிம் என எவரேனும் சொல்லிக் கொண்டாலும் அவர் முஸ்லிமாக ஆக முடியாது எனும் மிகப்பெரிய உண்மையைப் பின்வரும் ஹதீஸ் எமக்குத் தெளிவாக எத்திவைக்கின்றது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்.
ஜந்து விடயங்களை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை அல்லாஹ் எனக்கு ஏவினான். (அவை) கூட்டமைப்பாக இருத்தல், (இமாமின் கட்டளைகளை) செவிமடுத்தல், (அதற்குக்) கட்டுப்படுதல், (இஸ்லாத்திற்காக) ஹிஜ்ரத் செய்தல், அல்லாஹ்வின் பாதையில் போராடுதல் (என்பனவாகும்.) யார் கூட்டமைப்பை விட் டும் சாண் அளவு வெளியேறுகின்றாரோ நிச்சயமாக அவர் திரும்பி வந்தாலேயன்றி இஸ்லாத்தின் வளையத்தைத் தனது கழுத்தை விட்டும் களைந்து விட்டார். யார் (இவற்றிற்கு மாறாக) ஜாஹிலிய்யத்தின் வாதங்களை முன்வைக்கின்றாரோ அவர் நரகின் எரிபொருளாவார். அப்போது "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! (அவன்) நோன்பு பிடித்து, தொழுதாலுமா?" என (ஸஹாபாக்கள்) கேட்டார்கள். "(அவன்) நோன்பு பிடித்து, தொழுது, தான் முஸ்லிம் எனக் கூறிக் கொண்டாலும் சரியே! எனவே முஸ்லிம்களை அழ்ழாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயர்களான முஸ்லிம்கள், முஃமின்கள், அல்லாஹ்வின் அடியார்கள் போன்ற அவர்களது பெயர்களைக் கொண்டு (நீங்கள்) அழையுங்கள்!
(மு. அஹ்மத் அறி: அபூமாலிக் - ஸஹீஹ்)

ஒவ்வொருவர் மீதும் கட்டாயக் கடமையாகின்ற ஒரே பைஅத் இதுவாகும். இது பைஅத்தின் முதலாவது வகையாகும்.

2 - நற்காரியங்களுக்கான பைஅத்!

பைஅத் (உடன்படிக்கை) மூலம் இஸ்லாத்தினுள் நுழையும் ஒருவர், அல்லது ஏற்கனவே பைஅத் செய்து இஸ்லாத்தினுள் நுழைந்துவிட்ட ஒருவர்: இஸ்லாம் கற்பிக்கும் நற்காரியங்களைச் செய்வதற்காகவும் பைஅத் செய்துகொள்ள முடியும். சில வேளைகளில் முஸ்லிம்கள் தாமாகவே முன்வந்து இந்த பைஅத்தைச் செய்வார்கள். இன்னும் சில வேளைகளில் முஸ்லிம்களின் இமாம் கட்டளையிட்டதனால் இந்த பைஅத் செய்யப்படும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில் இந்த வகையான பைஅத் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்றுள்ளதை நாம் ஹதீஸ்களில் காணலாம். அவ்வாறான ஹதீஸ்களில் சிலதை இங்கு தருகின்றோம்.

ஜுனாதா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-

உபாதா பின் ஸாமித் ரலியல்லாஹூ அன்ஹூ நோயுற்றிருந்த சந்தர்ப்பத்தில் நாம் அவர்களிடம் சென்று "அல்லாஹ் உங்களைக் குணப்படுத்தி அருள்புரிவானாக! தாங்கள் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் இருந்து கேட்ட ஒரு ஹதீஸைக் எங்களுக்குக் கூறுங்களேன்! அல்லாஹ் அதற்கு உங்களுக்குக் கூலியைத் தருவான்" எனக் கூறினோம். (உபாதா பின் ஸாமித் ரலியல்லாஹூ அன்ஹூ ) கூறினார்கள் :- நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எங்களை அழைத்து (பைஅத் செய்யுமாறு கூறினார்கள்) உடனே நாங்கள் பைஅத் செய்தோம். விருப்பிலும், வெறுப்பிலும், எங்களுக்கு சிரமமானவற்றிலும் எங்களுக்கு இலகுவானவற்றிலும், எங்களைவிட பிறருக்கு முன்னுரிமை கொடுத்தபோதிலும் (எங்கள் அமீரின் கட்டளைகளை) செவிமடுத்துக் கட்டுப்பட வேண்டும், அல்லாஹ்விடமிருந்து கிடைத்த சான்றுகளின் அடிப்படையில் தெளிவான நிராகரிப்பைக்காணாத வரையில் அதிகாரத்தை அதற்குரியவர்களிடம் இருந்து பறிக்கக் கூடாது போன்றவை எங்களிடம் வாக்குறுதி பெற்று நாம் பைஅத் செய்த விடயங்களில் அடங்கும்.
( ஸஹீஹுல் புஹாரி கி - பிதன் 02)

உபாதா பின் ஸாமித் ரலியல்லாஹூ அன்ஹூ ஆரம்பத்தில் பைஅத் செய்துவிட்ட ஒரு ஸஹாபியாவார்கள். அவர்களும் மற்றும் சில ஸஹாபாக்களும் இருக்கும்போது அவர்கள் அனைவரையும் அன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அழைத்து, தாங்கள் அவசியம் எனக் கருதிய நற்காரியங்களை முன்னிறுத்தி மேலே உள்ள சம்பவத்தில் பைஅத் எடுத்துள்ளார்கள். இது ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள், அவர்களின் இமாம் கட்டளை இட்டதன் பேரில் நற்காரியங்களைச் செய்வதற் காக உடன்படிக்கை செய்ததனைக் காட்டுகின்றது. இதேபோன்று இன்னும் சில சந்தர்ப்பங்களில் ஏற்கனவே பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றிருந்த முஸ்லிம்கள், தாங்களாகவே சில நற் காரியங்களைச் செய்ய வேண்டும் என்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து பைஅத் செய்துள்ளார்கள். அவ்வாறு தாங்களாகவே முன்வந்து நற்காரியங்களுக்காக நபித் தோழர்கள் பைஅத் செய்த சந்தர்ப்பங்களில் ஒன்றைப் பின்வரும் சம்பவம் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

அம்ர் பின் ஆஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஒரு மனிதர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து "ஜிஹாத் செய்வதற்காகவும், ஹிஜ்ரத் செய்வதற்காகவும் தாங்களிடம் பைஅத் செய்யப் போகின்றேன். (அதன் மூலம்) அழ்ழாஹ்விடம் இருந்து கூலியை எதிர்பார்க்கின்றேன்." எனக் கூறினார். அப்போது ( ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ): "உமது தாய் தந்தையரில் எவரேனும் உயிருடன் உள்ளனரா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர் "ஆம்! அவர்கள் இருவருமே (உயிருடன் உள்ளனர்)" எனக் கூறினார். "அப்படியானால் அல்லாஹ்விடமிருந்து (நீர்) கூலியை எதிர் பார்க்கின்றீரா?"எனக் கேட்டார்கள். "ஆம்" எனக் கூறினார். உடனே "உமது தாய் தந்தையரிடம் திரும்பிச் சென்று அந்த இருவருக்கும் பணிவிடை செய்வீராக!" என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்) கூறினார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.பிர்ரி... 01 )

ஹிஜ்ரத், ஜிஹாத் போன்றவை இஸ்லாத்திலே மிகச்சிறந்த நற்காரியங்களாகும். ஆனால் ஒரு இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்டதன் பின்னர் அந்த இஸ்லாமிய நாட்டில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்வதென்பது கிடையாது. அதேபோன்று ஜிஹாத் என் பது சில சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை என்பது போன்று, இன்னும் சில சந்தர்ப்பங்களில் அக்கடமையை நிறைவேற்றிட போதிய முஸ்லிம்கள் இருக்கும் காரணத்தினால் ஏனைய பொறுப்புக்கள் இல்லாதவர்களை மாத்திரம் ஜிஹாதிற்காக முஸ்லிம்களின் இமாம் தேர்வு செய்வார். அந்த வகையில் இங்கு ஒரு முஸ்லிம் தாமாகவே சில நற்காரியங்களுக்காக பைஅத் செய்ய முன்வந்தபோது அவரது நிலையில் அவர் செய்யவேண்டிய கடமையை அவருக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் போதித்தார்கள்.

மனிதன் உலகில் தோன்றுவதற்குப் பெற்றோர் காரணமாக இருக்கின்றனர். எனவே தனக்கு நன்றி செலுத்துவதுடன் அடுத்த படியாக அவர்களுக்கும் நன்றி செலுத்தவேண்டும் என அல்லாஹ் உபதேசித்துவிட்டுப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வோருக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுத்து விடுகின்றான்.

இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
(ஹுதைபிய்யா உடன்படிக்கை நடந்ததற்கு) அடுத்த வருடம் திரும்பவும் (உம்ராவிற்காகச்) சென்றோம். எந்த மரத்திற்குக் கீழே நாம் பைஅத் செய்தோமோ அது இந்த மரம்தான் என்பதில் (குறைந்த பட்சம்) எங்களில் இருவராவது ஒன்றுபட்டு ஒரு மரத்தைச் சுட்டிக் காட்டவில்லை. (அந்த அளவிற்கு அது எங்களுக்கு மறந்து விட்டது. அது) அல்லாஹ்வின் அருளாகவே இருந்தது. (ஜுவைரியா எனும் அறிவிப்பாளர் கூறுகின்றார்) அப்போது நான் நாபிஃ வ அவர்களிடம் "எதன் மீது அவர்கள் பைஅத் செய்தார்கள்? மரணிக்கவும் தயார் என்பதற்காகவா?" எனக் கேட்டேன். "இல்லை. பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் பைஅத் எடுத்தார் கள்." எனக் கூறினார்கள்.
( ஸஹீஹுல் புஹாரி கி.ஜிஹாத் 109 )

அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஹந்தக் யுத்த களத்திற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு முஹாஜிர்களும், அன்ஸார்களும் குளிரான ஒரு பகல் பொழுதிலே அகழ் வெட்டிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்காக அதனைச் செய்யக் கூடிய அடிமைகள் அவர்களுக்கு (அப்போது) இருக்கவில்லை. அவர்களது சிரமத்தையும், பசியை யும் (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) கண்டதும் "யா அழ்ழாஹ்! நிச்சயமாக (உண்மையான) வாழ்வு என்பது மறுமை வாழ்வேயாகும். எனவே (அங்கு) அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் மன்னித்தருள் வாயாக!" என (கவிதையில்) கூறினார்கள். உடனே அதற்குப் பதிலாக (நபித்தோழர்கள்) "நாம் தான் உயிருள்ளவரையும் போராடுவோம் என முஹம்மதுக்கு பைஅத் செய்தவர்கள்." என்பதாக (கவிதையிலேயே பதில்) கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.மஙாஸி 27, ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறு நற்காரியங்கள் செய்வதற்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களிடம் அவர்களின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்துள்ளார்கள். இன்னும் சில வேளைகளில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் அவர்களாகவே முன்வந்து அவர்கள் விரும்பும் நற்செயல்களைச் செய்வதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்துள்ளார்கள். இஸ்லாத்தைக் கட்டியெழுப்புவதற்கும், முஸ்லிம்களின் பலவீனங்களை அகற்றி அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்றுவதற்கும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இந்த வகையான பைஅத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது அங்கிருந்த முஸ்லிம்களிடம் உயிரைத் தியாகம் செய்வதற்காக எடுத்த பைஅத்தை உதாரணமாகக் கூறலாம். ஹுதைபிய்யாவின் பின்னர் நடைபெற்ற ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டபோது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் நேரடியாகக் களத்தில் இறங்கியதுடன், "(ஹுதைபிய்யாவின்போது) மரத்திற்குக் கீழே பைஅத் செய்தவர்கள் எங்கே?" எனக் கேட்டார்கள்.

3 - புதிய இமாமிற்கான பைஅத்!

தலைமைத்துவத்தை அச்சாணியாகக் கொண்ட இஸ்லாம் மூன்று முஸ்லிம்கள் என்றாகிவிட்டால் அவர்களுக்கு ஒரு இமாம் இருப்பதனைக் கடமையாக்குகின்றது. இதன் அடிப்படையில் ஒரு தலைவரைக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் தங்களது தலைவரை இழப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவ்வாறான எல்லா சந்தர்ப்பங்களிலும் அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய புதியதொரு தலைவர் முஸ்லிம்களுக்கு அவசியமாகிறார். இவ்வாறு வரக்கூடிய இமாமுக்கு ஒரு முஸ்லிம் செய்யக் கூடிய பைஅத்தை அதனது மூன்றாவது வகையாகக் குறிப்பிடலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்தான் இந்த உம்மத்தின் முதல் இமாமாக இருந்தார்கள். அவர்கள் தங்களது அறுபத்தி மூன்றாம் வயதில் இந்த உலகை விட்டும் பிரிந்து சென்றதனால் இந்த உம்மத்தின் முதலாவது தலைமுறையினர் தங்களது இமாமை இழந்தனர். அவர்களுக்குப் பின்னால் இமாமாக வரவேண்டியவரை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் நேரடியாகக் கூறாவிட்டாலும் நேரடியாகக் கூறிய தைப் போன்ற உறுதியைத் தரக்கூடிய எத்தனையோ குறிப்புகள் மூலம் அடையாளம் காட்டியுள்ளார்கள். அக்குறிப்புகள் அனைத்தும் அழ்ழாஹ்வின் உதவியால் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலே பதியப்பட்டுள்ளன. அவற்றை விபரிப்பது இந்த இடத்திலே எமது நோக்கமல்ல என்பதனால் அதனை விட்டுவிட்டு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் தோன்றிய தலைமைத்துவத்திற்கான பைஅத் எவ்வாறு அமைந்தது என்பதனை நாம் நோக்குவோம்.

ஆயிஷh ரலியல்லாஹூ அன்ஹா கூறுகின்றார்கள்:-
சகீபா பனூ ஸாஇதாவிலே ஸஅத் பின் உபாதா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை நோக்கி மதீனாவாசிகள் ஒன்று கூடி, எங்களிலிருந்து ஒரு அமீர், (முஹாஜிர்களாகிய) உங்களிலிருந்து ஒரு அமீர் (என இருவரை நியமிப்போம்) எனக் கூறினார்கள். அப்போது அபுபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ, உமர் ரலியல்லாஹூ அன்ஹூ, அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹூ அன்ஹூ போன்றோர் அங்கு சென்றடைந்தனர். உமர் ரலியல்லாஹூ அன்ஹூ கதைப்பதற்கு முயற்சி செய்தார்கள். அவரை அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அமைதியாக இருக்கச் செய்துவிட்டாhர்கள். "அல்லாஹ் மீது சத்தியமாக நான் ஏற்பாடு செய்து வைத்திருந்த எனக்கு மிக விருப்பமான சில வார்த்தைகளைச் சொல்வதற்கே நான் நாடினேன். அவற்றை அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ எத்திவைக்க மாட்டார் என நான் பயந்தேன்." என்று (பின்பு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ) கூறிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ கதைக்க ஆரம்பித்து மக்களுக்கு எத்தி வைக்க வேண்டியதைக் கூறிவிட்டார்கள். அவர்களது பேச்சிலே "நாங்கள் அமீர்மார்களாக இருப்போம், நீங்கள் அமைச்சர்கள்." எனக் கூறினார்கள். அதற்கு ஹப்பாப் பின் முன்திர் ரலியல்லாஹூ அன்ஹூ "இல்லை! அல்லாஹ் மீது சத்தியமாக நாம் அவ்வாறு செய்ய மாட்டோம். எங்களில் ஒரு அமீரும் உங்களில் ஒரு அமீருமே இருக்க வேண்டும்." எனக் கூறினார்கள். அதற்கு அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ "இல்லை! நாங்கள்தான் அமீர்மார்களாக இருப்போம். நீங்களோ அமைச்சர்களாகவே இருப்பீர்கள். ஏனெனில் (முஹாஜிர்களாகிய) அவர்கள் வசிப்பிடத்தால் சிறந்தவர்கள், அறபிகளில் மூல கோத் திரத்தைச் சேர்ந்தவர்கள். எனவே உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அல்லது அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு பைஅத் செய்யுங்கள்." எனக் கூறினார்கள்.

உடனே உமர் ரலியல்லாஹூ அன்ஹூ, (அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை நோக்கி) "மாறாக உங்களுக்குத்தான் (நாம்) பைஅத் செய்வோம். நீங்கள் எங்கள் தலைவர், எங்களில் சிறந்தவர், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எங்கள் எல்லோரைவிடவும் (நீங்கள்) விருப்ப மானவர்கள்." எனக் கூறிவிட்டு அவர்களது கையைப் பிடித்து பைஅத்தும் செய்தார்கள். உடனே மக்களும் பைஅத் செய்தார்கள். அப்போது "ஸஃத் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை வீழ்த்தி விட்டீர்களே!" என ஒருவர் கூறினார். அதற்கு "மாறாக அல்லாஹ் அவரை வீழ்த்தி விட்டான்" என உமர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.ப.ஸஹாபா 05)

இந்த உம்மத்தின் மிகச் சிறந்த தலைமுறையினராகிய நபித் தோழர்கள் தங்களது இமாம் இந்த உலகை விட்டுப் பிரிந் ததும் உடனடியாக முதலாவது செய்த செயல் அவர்களது அடுத்த இமாமை நியமித்துக் கொண்டதாகும். இவ்வாறு புதிய இமாமைத் தேர்வு செய்து அவரை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக அவருக்கு மக்கள் பைஅத் செய்துள்ளார்கள். இது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான பைஅத் அல்ல. மாறாக ஏற்கனவே பைஅத் செய்து இஸ்லாத்தில் நுழைந்து விட்டவர்கள் செய்கின்ற பைஅத் ஆகும். எனவே இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனையல்ல. ஏற்கனவே இருந்த தலை மைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடந்ததைப் போன்று தொடர்ந்தும் புதிய தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடந்தால் போதுமானது. பொதுவாக புதிய அமீர் தேர்வு செய்யப்படும்போது அந்த சபை யிலுள்ளவர்கள் பைஅத் செய்வார்கள். பின்னர் பகிரங்கமாக அது மக்களுக்கு அறிவிக்கப்படும் போது அங்குள்ளவர்கள் பைஅத் செய்வார்கள். புதிய இமாமிற்கான இந்த பைஅத் அதன் மூன்றாவது வகையாகும்.

ஏற்கனவே பைஅத் செய்து இஸ்லாமியத் தலைமைத் துவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொருவரும் புதிய தலை வருக்கு பைஅத் செய்வது கடமை இல்லாவிட்டாலும் சமூகத்தில் முக்கியமானவர்கள் இந்த பைஅத்தைச் செய்வதனை அனைவரும் எதிர்பார்ப்பார்கள். அத்தகையவர்கள் புதிய இமாமுக்கு பைஅத் செய்யாமல் இருந்து அதற்கு நியாயமான காரணமும் இருக்கும் போது மக்கள் அதனைப் பெரிது படுத்த மாட்டார்கள். காரணம் இல்லாமல் இருந்தால் அது மக்களால் தவறாகப் பார்க்கப்படும். இந்த உண்மைகளை நேர்வழி நடந்த ஹலீபாக்களின் வரலாற் றைப் படிக்கும்போது நாம் பார்க்க முடியும். முதலாவது ஹலீபா அபூபக்கர் ல தேர்வு செய்யப்பட்டபோது நடந்த சம்பவம் ஆதார பூர்வமான அறிவிப்பாக ஸஹீஹ் முஸ்லிமிலே பின்வருமாறு பதிவாகியுள்ளது:-
ஆயிஷh ல கூறுகின்றார்கள்:-
....................................ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்பு ஆறு மாதங்கள் (பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா ) உயிர் வாழ்ந்தார்கள். அவர்கள் மரணித்த போது அவர்களது கணவரான அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் இரவிலேயே அவர்களை அடக்கம் செய்து விட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களே தொழுகையும் நடாத்தினார்கள். பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா உயிருடன் இருந்தபோது மக்கள் அலி ரலியல்லாஹூ அன்ஹூ வுடன் நல்ல முறையில் நடந்து கொண்டார்கள். அவர்களது மரணத்தின் பின் மக்கள் முகத்திலே ஒரு வகையான புறக்கணிப்பைக் கண்டார்கள். எனவே அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுடன் சமரசம் செய்து, அவர்களுக்கு பைஅத் செய்ய நினைத்தார்கள். அந்த (ஆறு) மாதங்களில் பைஅத் செய்திருக்கவில்லை. எனவே அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களைத் தமது இடத்திற்கு வருமாறும், அவர்களுடன் வேறு எவரும் வரவேண்டாம் எனவும் கேட்டார்கள். அப்போது "தனியாக நீங்கள் அவரிடம் செல்ல வேண்டாம்"- என உமர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள். அதற்கு "அவர்கள் என்னை என்னதான் செய்யப் போகிறார்கள். அல்லாஹ் மீது சத்தியமாக நான் அவர்களிடம் செல்லத்தான் போகிறேன்" எனக் கூறினார்கள். அவர்களிடம் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ சென்றபோது அலி ரலியல்லாஹூ அன்ஹூ தஷஹ்ஹுத் கூறியதன் பின் தெரிவித்ததாவது:- அபூபக்கர் அவர்களே! உங்களது சிறப்பையும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ளதையும் நிச்சயமாக நாம் அறிவோம். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியுள்ள நலவிற்கு நாம் போட்டியிடவில்லை. ஆனாலும் நீங்கள் முழுமையாக அதிகாரத்தைக் கையில் எடுத்துவிட்டீர்கள். நாங்களோ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உறவினர்கள் என்பதால் எங்களுக்கும் அதில் உரிமை இருப்பதாக எண்ணியிருந்தோம். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ வின் கண்களில் இருந்து கண்ணீர் ஓடும்வரை அலி ரலியல்லாஹூ அன்ஹூ கதைத்துக் கொண்டே இருந்தார்கள். அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ கதைத்தபோது கூறியதாவது: -
"எவன் கைவசம் எனது உயிருள்ளதோ அவன்மீது சத்தியமாக எனது உறவுகளைச் சேர்ந்து நடப்பதைவிட ரஸூலுல்லாஹ்வினது உறவினர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். இந்த சொத்துக்களில் எனக்கும் உங்களுக்குமிடையில் நடந்ததைப் பொறுத்த வரையில் அதில் நிச்சயமாக நான் சத்தியத்திலிருந்து சாயமாட்டேன். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதிலே ஏதேனும் ஒன்றைச் செய்ய நான் பார்த்திருந்தால் அதனைச் செய்யாமல் நான் விடப் போவதும் இல்லை." அதன் பின்னர் அலி ரலியல்லாஹூ அன்ஹூ "பகல் நேரத்தில் பைஅத் செய்வதாக உங்களிடம் வாக்குறுதி அளிக்கிறேன்" எனக் கூறினார்கள். ளுஹர் தொழுகையைத் தொழுததும் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ மிம்பர் மீது ஏறி தஷஹ்ஷ{த் கூறியதன் பின்னர் அலி ரலியல்லாஹூ அன்ஹூ அவர்க ளது நிலையைக்கூறி பைஅத் செய்வதற்குப் பின்வாங்கியதையும் கூறி, அதற்கு அவர்கள் தன்னிடம் முன்வைத்த காரணத்தையும் கூறியதன் பின்னர் பாவமன்னிப்புத் தேடினார்கள். அதன் பின்னர் அலி ரலியல்லாஹூ அன்ஹூ தஷஹ்ஹுத் கூறிய பின் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களது உரிமைகளின் மகத்துவம் பற்றிக் கூறினார்கள். தான் செய்த செயலிற்கான காரணம் "அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ வுடன் போட்டிபோடுவதோ அல்லது அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள சிறப்புக்களை மறுப்பதோ அல்ல. மாறாக அதிகாரத்தில் எங்களுக்கும் பங்கு இருக்கத்தக்க, அவர்கள் முழுமையாக எடுத்துக் கொண்டார்களே என நாம் நினைத்திருந்தோம். அதனால்தான் எங்களது உள்ளத்தில் வருத்தம் ஏற்பட்டது." எனக் கூறினார்கள். இந்த (நிகழ்ச்சியி னால்) முஸ்லிம்கள் மகிழ்வடைந்து "சரியான (முடிவை) பெற்றுக் கொண்டீர்கள்!" எனக் கூறினார்கள். (மற்றுமோர் அறிவிப்பில்) பின்பு அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ வை நெருங்கி பைஅத் செய்தார்கள். அதிலே அலி ரலியல்லாஹூ அன்ஹூ சரியான விடயத்தை ஏற்றுக் கொண்டதும் முஸ்லிம்கள் அலி ரலியல்லாஹூ அன்ஹூ வுடன் நெருக்கமாகி விட்டார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.ஜிஹாத் 16)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது இறுதி நாட்களில் ஒருநாள் தங்களது மகளான பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா விடம் ஒரு ரகசியம் கூறினார்கள். உடனே பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா அழ ஆரம்பித்து விட்டார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா அவர்களிடம்இந்த சம்பவம் பற்றிக்கூறி "அப்போது ஏன் அழுதீர்கள்?" எனக் காரணம் கேட்டதற்கு, "தந்தையின் மரணம் நெருங்கி விட்டதை அறிவித்தார்கள். எனவே நான் அழுதுவிட்டேன்." எனக் கூறினார்கள். அன்புத் தந்தையின் மரணம் நெருங்கிவிட்டது என்பதற்காகவே அழுத பாதிமா ல தந்தையின் மரணத்துடன் அந்தக் கவலையினால் நோயுற்று விட்டார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ஆறு மாதங்களே உயிர் வாழ்ந்த பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா மரணிக்கும்வரை நோயுடனேயே வாழ்ந்தார்கள்.

கணவன் என்பதனாலும், பாதிமா ரலியல்லாஹூ அன்ஹா மீது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வைத்திருந்த அன்பைப் பற்றி அறிந்திருந்ததனாலும் அலி ரலியல்லாஹூ அன்ஹூ தங்களது மனைவிக்குப் பணிவிடை செய்வதிலேயே கவனம் செலுத்தினார்கள். மனைவியின் மரணம் வரை அலி ரலியல்லாஹூ அன்ஹூ பைஅத் செய்யாமல் இருந்ததை ஸஹாபாக்கள் தப்பாகக் கருதவும் இல்லை இவை மேலேயுள்ள சம்பவத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. மனைவியின் மரணத்தின் பின்னர் தமது நிலையைக் கூறியதும் இமாமாக இருந்த அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ கண்ணீர்விட்டு அழுதுள்ளார்கள். நியாயமான காரணம் இருந்தபோது ஆறு மாதங்கள் பைஅத் செய்யாமல் இருந்ததை அந்த ஸஹாபாக்கள் குறை காணவில்லை என்றால் இஸ்லாத்திற்காக செய்யப்படும் பைஅத்தையும், புதிய இமாமுக்கு செய்யப்படும் பைஅத்தையும் அவர்கள் விளங்கி வைத்திருந்தார்கள் என்பதுவே காரணமாகும்.

அலி ரலியல்லாஹூ அன்ஹூ ஸஹாபாக்கள் சமூகத்தில் நான்காவது அந்தஸ்த்தில் வைத்துப் பார்க்கப்பட்டார்கள். எனவே அவர்களுக்கு இருந்த வேலைப்பழு நீங்கியதும் அவர்கள் புதிய அமீருக்கு பைஅத் செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்த்தார்கள். ஏற்கெனவே இஸ்லாத்திற்காக பைஅத் செய்திருந்த அலி ரலியல்லாஹூ அன்ஹூ தங்களது மனைவி மரணித்ததன் பின்; மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்காக புதிய இமாமுக்கு பைஅத் செய்ய முடிவு செய்து, அதனைச் செய்ததும், அவர்களுடன் மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

4- மீண்டும் மீண்டும் பைஅத்!

பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களிடம் இருந்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மீண்டும் மீண்டும் பைஅத் எடுத்துள் ளார்கள். எனவே இதுவும் இஸ்லாமிய வழிமுறைகளில் ஒன்று என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரே சபையில் ஒருவரிடம் இருந்து பலமுறை பைஅத் எடுக்கப்பட்டுள்ளது. வௌ;வேறு சந்தர்ப்பங்களில் ஒரே நபரிடம் இருந்து பலமுறை பைஅத் எடுக்கப்பட்டும் இருக்கின்றது.

அவ்ப் பின் மாலிக் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-

(ஒருமுறை) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் நாம் ஒன்பது அல்லது எட்டு அல்லது ஏழு பேர் இருந்தோம். அப்போது "அல்லாஹ்வின் தூதரிடத்தில் நீங்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்வதில்லையா?" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கேட்டார்கள். நாமோ புதிதாகத்தான் பைஅத் செய்திருந்தோம். எனவே "அல்லாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பைஅத் செய்து விட்டோமே!" எனக் கூறினோம். பின்னர் (மீண்டும்) "அல்லாஹ்வின் தூதரிடத்தில் நீங்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்வதில்லையா?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பைஅத் செய்துவிட்டோமே!" எனக் கூறினோம். பின்னர் (மீண்டும்) "அல்லாஹ்வின் தூதரிடத்தில் நீங்கள் பைஅத் (உடன்படிக்கை) செய்வதில்லையா?" எனக் கேட்டார்கள். இப்போது எமது கைகளை நீட்டி "அல்லாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக நாம் உங்களுக்கு பைஅத் செய்துவிட்டோமே!" எனக் கூறிவிட்டு, "எதன்மீது தாங்களுக்கு நாம் பைஅத் செய்ய வேண்டும்?" எனக் கேட்டோம். அதற்கு "அல்லாஹ்வுக்கு இபாதத் செய்வதாகவும், அவனுக்கு எந்த ஒன்றையும் இணையாக்க மாட்டீர்கள் எனவும், ஐந்து நேரத் தொழுகைக்காகவும், (இமாமுக்குக்) கட்டுப்பட்டு நடப் பீர்கள் எனவும் (சப்தம் இல்லாமல் இரகசியமாக) மனிதர்களிடம் எதனையும் கேட்க மாட்டீர்கள் எனவும் (பைஅத் செய்யுங்கள்)" எனக் கூறினார்கள்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.ஸகாத் 35)

பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றிருந்த முஸ்லிம்களிடம் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களாகவே ஆர்வம் ஊட்டி இந்த பைஅத்தை எடுத்துள்ளார்கள். ஒரே சந்தர்ப்பத்தில் ஒரே நபரிடம் இருந்து பலமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்தனைப் பின்வரும் ஹதீஸ் நிரூபிக்கின்றது.

ஸலமா பின் அக்வஃ ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
..............ஆயிரத்து நானூறு பேரைக் கொண்ட நாம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன் ஹுதைபிய்யா எனும் இடத்தை வந்தடைந்தோம். அங்கு ஐம்பது ஆடுகளும் (எங்களிடம்) இருந்தன. அவற்றிற்குப் போதுமான நீர் இருக்கவில்லை. அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கிணற்றருகில் அமர்ந்து ஒன்றோ அதில் துப்பினார்கள். அல்லது பிரார்த்தித்தார்கள். உடனே நீர் பொங்கி எழுந்தது. பின்பு நாமும் நீரருந்தி விட்டு, (கால்நடைகளுக்கும்) நீர் புகட்டினோம். பின்னர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு பைஅத் செய்ய வருமாறு எங்களை அழைத்தார்கள். உடனே நான் மக்களில் முதலாவது ஆளாக பைஅத் செய்தேன். பின்னர் (ஏனையவர்கள்) பைஅத் செய்து, செய்து மக்களில் அரைவாசிப்பேர் ஆகிவிட்ட நிலையில் "ஸலமாவே! பைஅத் செய்வீராக!" எனக் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் மக்களில் முதலாவது ஆளாக பைஅத் செய்து விட்டேன்" எனக் கூறினேன். (அதற்கு) "மீண்டும்" எனக் கூறிவிட்டு, ஆயுதம் இல்லாத நிலையில் என்னைக் கண்ட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எனக்கு ஒரு கேடயத்தையும் தந்தார்கள். பின்னர் பைஅத் எடுத்தார்கள். மக்களில் இறுதியாளாக நான் நின்றபோது "ஸலமாவே! நீர் எனக்கு பைஅத் செய்வதில்லையா?" எனக் கேட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே! மக்களில் முதலாவதாகவும், மக்களின் நடுவிலும் தாங்களுக்கு பைஅத் செய்து விட்டேன்." எனக் கூறினேன். "மீண்டும்" எனக் கூறினார்கள். எனவே மூன்றாவது முறையாகவும் அவர்களுக்கு (நான்) பைஅத் செய்தேன். பின்னர் என்னை நோக்கி "நான் உமக்குத் தந்த கேடயம் எங்கே?" எனக் கேட்டார்கள். அதற்கு நான் "அல்லாஹ்வின் தூதரவர்களே! எனது சிறிய தந்தை யான ஆமிர் ரலியல்லாஹூ அன்ஹூ , ஆயுதம் இல்லாதவராக என்னை சந்தித்தார்கள். உடனே அதனை அவர்களுக்குக் கொடுத்து விட்டேன்." எனக் கூறினேன். அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
சிரித்துவிட்டு "யா அல்லாஹ்! எனது உயிரைவிட எனக்கு விருப்பமான ஒரு நண்பனை எனக்குத் தந்தருள்வாயாக எனக்கூறிய முன்சென்ற ஒருவரைப் போன்று நீர் இருக்கின்றீர்." எனக் கூறினார்கள்...........................................
( ஸஹீஹ் முஸ்லிம் கி.ஜிஹாத் 45)

ஒரே சந்தர்ப்பத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
ஒரு ஸஹாபியிடமிருந்து மூன்று விடுத்தம் பைஅத் எடுத்துள்ளார்கள். முஸ்லிம்களின் இமாம் விரும்பினால் ஒரே சந்தர்ப்பத்தில் ஒரு நபரிடம் இருந்து பல விடுத்தங்கள் பைஅத் எடுக்கலாம் என்பதனை இந்த ஹதீஸ் எமக்குக் கற்பிக்கின்றது.

எனவே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு ஹதீஸ்களும் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஸ்லிம்களிடம் அவர்களின் இமாம் விரும்பும்போது மீண்டும் பைஅத் எடுக்கலாம் என்பதற்கு சான்றாகவுள்ளன. என்ன விடயங்களுக்காக இவ்வாறு பைஅத் எடுக்கப்படுகின்றதோ அவற்றை பைஅத் செய்தவர்கள் உறுதியுடன் நிறைவேற்றுவதற்கு இத்தகைய பைஅத் தூண்டுகின்றது. ஹுனைன் யுத்தத்தில் முஸ்லிம்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டபோது நிலைமையை சீர்செய்ய ஹுதைபிய்யாவில் உடன்படிக்கை செய்தவர்கள் எங்கே? என்றுதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
கேட்டார்கள்.

எனவே யார் (அந்த உடன்படிக்கையை ) முறித்து விடுகின்றானோ நிச்சயமாக (அவன்) தனக்குக் கேடாகவே (அதனை) முறிக்கின்றான். ( 48 : 10 )


9-பைஅத் செய்வதன் அவசியம்!
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது தஃவாவின் ஆரம்பமுதலே இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்யுமாறு அழைப்பு விடுத்தார்கள். மக்களிடம் இருந்து ஆரம்பத்திலேயே பெற்றுக் கொள்ளப்பட்ட பைஅத் (வாக்குறுதி) உலகில் அல்லாஹ் வழங்கியிருந்த மிகப் பெரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்குத் துணை நின்றது. அந்தப் பொறுப்பை சுமத்திய அல்லாஹ் அதனை சாதிப்பதற்கும் பொருத்தமான வழியைக் காட்டினான். அந்த வழிகாட்டல்தான் இஸ்லாத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் அவர்களது இமாமிடம் பைஅத் செய்ய வேண்டும் என்பதாகும். அதன்படி அன்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட ஸஹாபாக்கள் ஒவ்வொருவரும் இஸ்லாத்திற்காக பைஅத் செய்திருந்தார்கள். பைஅத் செய்வதனையும், இஸ்லாத்தை ஏற்பதனையும் ஒன்றாகப் பார்த்தார்கள். பருவ வயதை அடைவதற்கு முன்னரே அந்தப் பிள்ளைகள் பைஅத் செய்ய வேண்டுமே எனும் எண்ணத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அழைத்து வந்தார்கள். ஒரு சம்பவத்தை உதாரணமாக உங்களுக்குத் தருகின்றோம்.

ஸஹ்ரா பின் மஃபத் என்பவர் தமது பாட்டனாரான அப்துல்லாஹ் பின் ஹிஷhம் வ பற்றி அவர்களது சிறு வயதில் நடந்த சம்பவத்தை அறிவிக்கின்றார்கள்:-

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைச் சந்தித்திருந்த (அப்துல்லாஹ் பின் ஹிஷhம் ரலியல்லாஹூ அன்ஹூ ) அவர்களை அழைத்துக்கொண்டு அவர்களது தாயாரான ஸைனப் பின்த் ஹுமைத்
ரலியல்லாஹூ அன்ஹா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் சென்று "அல்லாஹ்வின் தூதரவர்களே! இவரிடம் பைஅத் எடுங்கள்" எனக் கேட்டார்கள். அதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் "அவர் சிறுவராயிற்றே!" எனக்கூறிவிட்டு, அவரது தலையைத் தடவி விட்டதுடன் அவருக்காகப் பிரார்த்தனையும் செய்தார்கள்...........
( ஸஹீஹுல் புஹாரி கி.ஷரிகஃ 13 )
தங்களது மகன் பருவ வயதை அடைவதற்கு முன்னரே அவரை அந்த ஸஹாபிய்யாப் பெண்மணி பைஅத் செய்விப்பதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்கள். பைஅத் என்பது எந்த அளவு ஸஹாபாக்களுக்கு மத்தியில் பரீட்சயமானதாக இருந்தது என்பதனை இந்த ஹதீஸ் எடுத்துக் காட்டுகின்றது. அதேபோல் பைஅத்தின் அவசியம் பற்றி அவர்கள் என்ன விளங்கி வைத்திருந்தார்கள் என்பதற்கும் இந்த ஹதீஸ் ஒரு சிறந்த சான்றாகும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொண்டு வந்த அல்லாஹ்வின் தீனாகிய இஸ்லாத்தை நோக்கி அவர்கள் பல்வேறு வார்த்தைகளைக் கொண்டு மக்களை அழைத்தார்கள். அவ்வாறு இஸ்லாத்தை நோக்கி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அழைத்த வார்த்தைகளில் "இஸ்லாத்திற்காக பைஅத் செய்வீராக!" என்பதும் ஒன்றாகும். வார்த்தைகள் மாறுபட்டாலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவரும் ஒரே அமைப்பில்தான் காணப்பட்டார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது தலைமைத் துவத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டு நடந்தார்கள், அவர்களுக்கு வரக்கூடிய வஹியை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களது தலைமத்துவத்தை ஏற்று பைஅத் செய்யாதோரை ஜாஹிலிய்யத்தில் உள்ளவர்களாகக் கருதினார்கள்.

ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்: -
நாட்டுப்புறத்து அறபி ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்தார். அவரை நோக்கி "இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக என்னிடம் பைஅத் செய்வீராக!" என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பைஅத் செய்தார். பின்னர் மறுநாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்டவராக வந்து "நான் (இஸ்லாத் திற்காகச் செய்த) உடன்படிக்கையை முறித்து விடுவீராக!" எனக் கூறினார். (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) மறுத்து விட்டார்கள். (வந்தவர்) திரும்பிச் சென்றபோது "மதீனா துருத்தி போன்றது: அதிலுள்ள கெட்டதை (அது) அகற்றிவிடும், அதிலுள்ள நல்லதைத் தேக்கி வைத்துக் கொள்ளும்" என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) கூறினார்கள்.
( ஸ. புஹாரி கி - அஹ்காம். )
இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக பைஅத் செய்யும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள். வந்தவரும் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்தார். இந்த ஹதீஸின் மூலம் இஸ்லாம் பைஅத்தை எந்த நிலையில் வைத்துப் பார்க்கின்றது என்பதை இலகுவாக நாம் விளங்கிக்கொள்ளலாம். இஸ்லாத்தை ஏற்கும் மனிதனுக்கு இஸ்லாத்தின் அடிப்படை வாசகமான "அல்லாஹ்வைத் தவிர (தகுதியுள்ள) இலாஹ் எவரும் இல்லை, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ் வின் தூதர்" என்பதை முக்கியமாகக் கற்றுக் கொடுக்கின்றோம். அதே போன்று அவரிடம் பைஅத்தும் எடுக்க வேண்டும் என்பதை இந்த ஹதீஸ் மிகத் தெளிவாகக் கூறுகின்றது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
(இமாமின்) கட்டுப்பாட்டில் இருந்து யார் கையை உருவிக் கொள்கின்றாரோ (அவர்) மறுமை நாளில் தனக்கு எவ்வித ஆதா ரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார். மேலும் யார் தனது கழுத்திலே (கட்டுப்பாட்டிற்கான) பைஅத் இன்றி மரணிக் கின்றாரோ (அவர் நரகம் செல்லும்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுவார்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 13 )

முதலாவது எழுதப்பட்ட ஹதீஸில் இஸ்லாத்தை ஏற்க வந்தவரிடம் முதன்முதலில் பைஅத் செய்யுமாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஏன் கூறினார்கள் என்பதை இந்த ஹதீஸினைக் கொண்டு உணர்ந்து கொள்ளலாம். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொண்டு வந்த இஸ்லாத்தின்படி பார்க்கும்போது முஸ்லிம் என்பவன் நிச்சயமாக ஒரு இமாமின் கட்டுப்பாட்டில்தான் இருப்பான். ஏனெனில் இஸ்லாத்தை ஏற்பவன் முஸ்லிம்களின் தலைமைத்துவத்திற்கு பைஅத் செய்து தான் இஸ்லாத்தினுள் நுழைகின்றான். எனவேதான் இந்த ஹதீஸில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பைஅத்தை முறிப்பவனுக்கு ஏற்படும் கேட்டைப் பற்றி முதலில் கூறுகிறார்கள். அதேபோன்று யார் அந்தத் தலைமைத்துவத்திடம் பைஅத் செய்யாமல் இருக்கிறார்களோ அவர்கள் சுவனம் செல்லும் ஒரே கூட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்ளாததினால் நிச்சயமாக அவர்கள் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுவார்கள் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அப்பட்டமாகக் கூறிவிட்டாhர்கள். இஸ்லாமிய அழைப்புக் கிடைத்த பின்னர் ஜாஹிலிய்ய மரணத்தைத் தழுவுபவர் நரகையே சென்ற டைவார் என்பதும் இஸ்லாத்தின் உறுதியான தீர்ப்பாகும்.

அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழி நடாத்தும் இஸ்லாமிய தலைமைத்துவத்தில் பைஅத் செய்து முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்ளும் மனிதனின் செயல்கள் அத்தனையும் கட்டுப்பாடாகவே இருக்கின்றது. ஒன்றில் நேரடியாக அல்லாஹ்வின்; கட்டுப்பாடாக அது இருக்கும். அல்லது அவன் தூதருக்குக் கட்டுப்படுவதன் மூலம் அவனுக்குக் கட்டுப் படுவதாக இருக்கும். அல்லது முஸ்லிம்களின் அமீருக்குக் கட்டுப் படுவதன் மூலம் தூதர் ஊடாக அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதாக இருக்கும். இவை அனைத்தும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அல்லாஹ்விற்குக் கட்டுப்படுவதாகவே கருதப்படுகின்றன. அவ்வாறு அடிபணிவதனைத்தான் அல்லாஹ் அடியார்களிடமிருந்து எதிர் பார்க்கின்றான். எனவே கட்டுப்பாட்டிற்கான (உடன்படிக்கை) பைஅத் எந்த அளவு அவசியமானது என்பதை இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
யார் எனக்குக் கட்டுப்படுகிறாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ் வுக்குக் கட்டுப்பட்டு விட்டார். யார் எனக்கு மாறு செய்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மாறு செய்துவிட்டார். யார் அமீருக்குக் கட்டுப்படுகின்றாரோ நிச்சயமாக அவர் எனக்குக் கட்டுப் பட்டுவிட்டார். யார் அமீருக்கு மாறு செய்கின்றாரோ நிச்சயமாக அவர் எனக்கு மாறு செய்துவிட்டார்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 08 )
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
எனது தோழர்களுடனும் பின்னர் அவர்களைத் தொடர்ந்து வரக்கூடியோருடனும் (அதன்) பின்னர் அவர்களைத் தொடர்ந்து வரக்கூடியோருடனும் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள். (அதன்) பின்னர் கேட்கப்படாமலே சத்தியம் செய்யப்பட்டு (அதற்காக) சாட்சி சொல்லும் அளவிற்கு பொய் பரவிவிடும். யார் சுவனத்தின் மத்தியை அடைய விரும்புகின்றாரோ (அவர்) அல்ஜமாஅத்துடன் இணைந்து கொள்ளட்டும். ஏனெனில் நிச்சயமாக iஷத்தான் தனியாக இருப்பவருடனேயே இருக்கின்றான். இருவராக இருக்கும்போது அவன் மிகத் தூரமாக இருக்கின்றான்..............................
(இ.ஹிப்பான், அஹ்மத் அறி: உமர் ல - ஸஹீஹ் )

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
இலகுவான போதிலும், சிரமமான போதிலும், உனது விருப்பிலும், வெறுப்பிலும், பிறருக்கு உன்னைவிட முக்கியத்துவம் கொடுத்த போதிலும் (இமாமின் கூற்றை) செவிமடுத்துக் கட்டுப் படுவது உனக்குக் கடமையாகும்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 08)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இறுதி ஹஜ்ஜிப்போது கூறியதாவது:-
அல்லாஹ்வின் வேதத்தைக்கொண்டு உங்களை வழிநடாத்தும் அடிமை ஒருவர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும் அவர் சொல்வதை செவிமடுத்து, (அதற்கு)க் கட்டுப்படுங்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 08)

இவ்வாறு பல ஹதீஸ்கள் முஸ்லிமாக இருக்க விரும்புபவன் இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் தன்னை இணைத்துக் கொள்வது தலையாய கடமை என்பதைப் போதித்துக் கொண் டிருக்கின்றன. அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்கான வழிதான் அந்தந்தக் காலத்தில் இருக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமிடம் சென்று பைஅத் செய்துகொள்வதாகும்.

10-பைஅத்தைப் பேணுவதன் அவசியம்!

இஸ்லாத்தின் நுழைவாயிலாகிய இமாமுடனான பைஅத்தின் மூலம் இஸ்லாத்தில் நுழைந்த ஒருவர் அவரது பைஅத்தைப் பாதுகாத்துக் கொள்வது பைஅத் செய்வதனை விட முக்கியமானது.
மனதளவிலும், செயலளவிலும் அதனைப் பாதுகாக்க வேண்டும். தூய்மையாக இருப்பதன் மூலமும், உறுதியாக இருப்பதன் மூலமும் அதனை மனதளவில் பாதுகாக்க முடியும். செயலளவில் முழுமையாக இமாமுக்குக் கட்டுப்படுவதன் மூலமும், எந்தக் காரணத்தைக் கொண்டும் கட்டுப்பாட்டை விட்டும் கையை உருவிக் கொள்ளாமல் இருப்பதன் மூலமும் செயலளவில் அதனைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
யார் (இமாமின்) கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறி, ஜமா அத்தை விட்டுப் பிரிந்துவிட்ட நிலையில் மரணிக்கின்றாரோ (அவர்) ஜாஹிலிய்ய மரணத்தைத் தழுவுகின்றார். யார் குடும்பத்தினருக்காகக் கோபமடைந்து, அல்லது குடும்பத்தினருக்காகக் குரல் கொடுத்து, அல்லது குடும்பத்தினருக்கு உதவி செய்வதற்கான குருட்டுத்தனமான போராட்டத்தில் கொல்லப்படுகின்றாரோ அது ஜாஹிலிய்ய மரணமாகும். மேலும் யார் எனது உம்மத்திற்கு எதிராகத் தோன்றி அதிலுள்ள நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொலை செய்கின்றாரோ, அதிலுள்ள விசுவாசியைக்கூட பாதுகாக்காததுடன், பைஅத் பெறும் உரித்துடையவருக்கு (அமீருக்குச் செய்த) தனது உடன்படிக்கையை பாதுகாக்காதும் இருக்கிறாரோ அவர் என்னைச் சார்ந்தவரும் இல்லை. நான் அவரைச் சார்ந்தவனும் இல்லை.
( ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 13 )

இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் பைஅத் செய்து கொள்வதன் மூலம் தன்னை கூட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளாதவர் இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட மரணத்தைத் தழுவுவார் எனக் கூறிய இஸ்லாம், அந்தத் தலைமைத்துவத்திலிருந்து வெளியேறிச் செல்பவரையும் ஜாஹிலிய்ய மரணத்தைத் தழுவுவார் என்றே எச்சரிக்கின்றது. மடமை எனும் பொருளில் இரண்டையுமே ஜாஹி லிய்யத் என இஸ்லாம் கூறினாலும் பைஅத் செய்து அதனை முறிப்பவன் பைஅத் செய்யாதவனை விடவும் மோசமானவன் என்பதும் இஸ்லாத்தின் தீர்ப்பாகும். எனவே பைஅத் செய்த ஒரு மனிதன் அவனது பைஅத்தைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை என்றால் சாண் ஏற முழம் சறுக்கிய கதையாகவே அவனது நிலைமை ஆகிவிடும். அதாவது அவன் இஸ்லாத்தில் வாழ்ந்தகாலம் முழுவதும் செய்த முயற்சிகள் பயனற்று, முன்னரைவிடப் பெரிய குற்றவாளி யாகவும் அவன் ஆகிவிடுகின்றான் என்பதே உண்மையாகும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பின்வருமாறு கூறுகின்றார்கள்:-
ஜந்து விடயங்களை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை அல்லாஹ் எனக்கு ஏவினான். (அவை) கூட்டமைப்பாக இருத்தல், (இமாமின் கட்டளைகளை) செவிமடுத்தல், (அதற்குக்) கட்டுப்படுதல், (இஸ்லாத்திற்காக) ஹிஜ்ரத் செய்தல், அல்லாஹ்வின் பாதையில் போராடுதல் (என்பனவாகும்.) யார் கூட்டமைப்பை விட் டும் சாண் அளவு வெளியேறுகின்றாரோ நிச்சயமாக அவர் திரும்பி வந்தாலேயன்றி இஸ்லாத்தின் வளையத்தைத் தனது கழுத்தை விட்டும் களைந்து விட்டார். யார் (இவற்றிற்கு மாறாக) ஜாஹிலிய் யத்தின் வாதங்களை முன்வைக்கின்றாரோ அவர் நரகின் எரிபொருளாவார். அப்போது அல்லாஹ்வின் தூதரவர்களே! (அவன்) நோன்பு பிடித்து, தொழுதாலுமா? என (ஸஹாபாக்கள்) கேட்டார்கள். (அவன்) நோன்பு பிடித்து, தொழுது, தான் முஸ்லிம் எனக் கூறிக் கொண்டாலும் சரியே! எனவே முஸ்லிம்களை அல்லாஹ் அவர்களுக்குச் சூட்டிய பெயர்களான முஸ்லிம்கள், முஃமின்கள், அல்லாஹ்வின் அடியார்கள் போன்ற அவர்களது பெயர்களைக் கொண்டு (நீங்கள்) அழையுங்கள்!
(மு. அஹ்மத் அறி: அபூமாலிக் - ஸஹீஹ் )
மேலே உள்ள ஹதீஸின் மூலம் இஸ்லாமிய தலைமைத் துவத்திற்கு பைஅத் செய்வதுடன் அதனைப் பாதுகாப்பது எந்த அளவு முக்கியமானது என்பதை நாம் தெளிவாக விளங்கலாம். கூட்டமைப்பாக இருப்பதனை அல்லாஹ் ஏவியுள்ளதன் மூலம் கடமையாக்கியிருக்கின்றான். அந்தக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வெளியேறுவதை இஸ்லாத்தை விட்டே வெளியேறிச் செல்வதாக அல்லாஹ் தனது தூதரின் நாவினால் எச்சரித்துள்ளான்.

ஒவ்வொரு மனிதனது உள்ளத்திலும் பொதுவாக எழக்கூடிய கேள்வி ஸஹாபாக்களுக்கும் தோன்றியுள்ளது. பைஅத்தை முறிக்கக் கூடிய மனிதன் வேறு நன்மைகள் செய்யக்கூடுமே என்கின்ற எண்ணம் இன்றும்கூட மக்களிடம் எழுவதை நாம் பார்க்கலாம். ஆனால் பைஅத்தை அவன் முறித்து விட்டதன் காரணமாக அவன் செய்யும் எந்தவொரு நற்காரியமும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல என்பதுதான் இஸ்லாத்தின் தீர்ப்பாகும். எனவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மிகத் தெளிவான வார்த்தைகளில் "தொழுது, நோன்பு பிடித்து, தானும் ஒரு முஸ்லிம் என வாதிட்டாலும் அவன் நரகின் விறகுக் கட்டை" எனக் கூறியுள்ளார்கள். அல்லாஹ் நலவை நாடியவர்களுக்கு இது ஓர் மிகத் தெளிவான விளக்கமாகும்.

அதேபோன்று இமாமிடம் ஏற்படக்கூடிய தவறுகள் பைஅத்தை விட்டும் வெளியேறுவதற்கு நியாயமான காரணங்களாக எங்களுக்குத் தோன்றலாம். ஆனால் அல்லாஹ்வின் அனுமதி இல்லாத வரையில் ஒரு போதும் அதனை ஒரு முஸ்லிம் செய்யவே முடியாது. எனவே தான் அல்லாஹ்: இமாமின் கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறு வதனைப்பற்றி தனது தூதர் மூலம் பின்வருமாறு எச்சரிக்கின்றான்:-

யார் தனது அமீரில் ஏதேனும் ஒன்றை வெறுக்கின்றாரோ அவர் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில் யார் அதிகாரத்தை விட்டும் ஒரு சாண் அளவு வெளியேறி, (மரணிக்கின்றாரோ அவர்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுகின்றார்.
(ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
முஸ்லிம்களின் அமீரிடத்திலும் நாம் வெறுக்கக் கூடியவை காணப்படலாம் என்பதனை இந்த ஹதீஸ் எமக்குக் கூறுகின்றது. அதே நேரம் அந்தத் தவறு சுவனம் செல்லும் கூட்டத்திலிருந்து வெளியேறிச் செல்வதற்கான அனுமதியாக ஆகிவிடாது என்பதையும் எமக்குக் கூறுகின்றது. கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறும் எண்ணம் ஏற்படினும்கூட அதனைச் செய்ய முடியாது என்பதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இங்கு கூறக் கூடிய ஒரே காரணம் இஸ்லாம் பறிபோய்விடும் என்பதாகும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
மூன்று மனிதர்கள் பற்றி எதுவும் கேட்காதீர்.
(1) ஜமாஅத்தை விட்டும் பிரிந்த மனிதன். (அவன்) தனது அமீருக்கு
மாறு செய்ததுடன் மாறு செய்தவனாகவே மரணிக்கிறான்.
(2) தப்பியோடிய அடிமைப் பெண் அல்லது அடிமையான ஆண்.
(3) தனது கணவன் வெளியில் சென்றிருக்கக்கூடிய பெண்:
அவளது உலகத் தேவைகளை போதியளவு அவளுக்குக்
கொடுத்திருந்தும் கணவன் (சென்றதன்) பிறகு வெளியில்
சுற்றித் திரிந்தவள். அவர்களைப் பற்றி எதுவுமே கேட்காதீர்.
(அஹ்மத் அறி: புழாலா - அறிவிப்பாளர் வரிசை ஸஹீஹ் )

எந்தக் காரணம் கொண்டும் இமாமின் கட்டுப்பாட்டை விட்டும் கையை உருவிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை செய்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அப்படி கட்டுப்பாட்டை மீறுவதானது அவரது தீனுக்கே முடிவுகட்டிவிடும் எனக் கூறியதன் பின், அந்தக் கட்டளையை மீறிச் செல்லும் சாராரைப் பற்றி எதுவும் கேட்க வேண்டாம் எனக்கூறி தங்களது ஆகக் கூடிய வெறுப்பையும் வெளிப் படுத்துகின்றார்கள்.

எனவே இதுவரை நாம் முன்வைத்த அத்தனை ஹதீஸ்களில் இருந்தும்: இஸ்லாத்தில் நுழைவதற்காக நாம் செய்த பைஅத்தை மிகவும் கவனமாகப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

11-பைஅத்தை முறிப்பதன் விபரீதம்!

இஸ்லாத்தினுள் நுழைவதற்காக முஸ்லிம்களின் இமாமிடம் சென்று செய்து கொள்ளும் உடன்படிக்கை பைஅத்தாகும். இந்த பைஅத்தைக் கொண்டு இஸ்லாத்தினுள் நுழையும் அதே நேரம் முஸ்லிம்களின் இமாமின் கட்டுப்பாட்டிற்குள்ளும் வந்துவிடுகிறோம். இவ்வாறு ஒன்று சேர்கின்ற மக்கள் கூட்டம் இஸ்லாத்தை மையமாக வைத்தே ஓன்றுபடுகின்றது. இவ்வாறு ஒன்றுபட்டவர்களை இஸ்லாமிய பரிபாiஷயிலே (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) "ஜமா அதுல் முஸ்லிமீன்" எனக் கூறப்படுகின்றது.

ஆகவே பைஅத் செய்து இஸ்லாத்தில் நுழைந்த ஒரு மனிதன் அந்தக் கூட்டமைப்பினை விட்டும் வெளியேறும்போது அவன் வெறுமனே ஒரு கூட்டத்திலிருந்து வெளியேறவில்லை. மாறாக சுவனம் செல்லும் கூட்டத்தை விட்டு வெளியேறுகின்றான் என்பதுதான் உண்மையாகும். ஒரு கூட்டம்தான் சுவனம் செல்லும் என்பது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது முன்னறிவிப்பாகும். அப்படி இருக்கும்போது அந்தக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது எப்படி சாதாரண ஒரு செயலாக இருக்க முடியும்? அதுமட்டுமல்ல நாம் சிந்திக்கவேண்டிய விடயம் என்னவெனில் ஒரேயொரு கூட்டத்திற்கு மட்டுமே சுவனத்திற்கு அனுமதி வழங்கப்படும் எனப் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் அந்தக் கூட்டத்தினரின் எல்லைக்கு வெளியே நின்றுகொண்டு எப்படி நாம் சுவனம் செல்லமுடியும்....? இந்தப் பின்னணியை நாம் விளங்கிக் கொண்டால் பைஅத்தை முறிப்பதன் விபரீதங்கள் பற்றிய ஹதீஸ்களை இலகுவாக நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
மூன்று (சாரார் உள்ளனர்.) மறுமை நாளில் அல்லாஹ் அவர்களுடன் கதைக்க மாட்டான், அவர்களைப் பார்க்க மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு நோவினை தரக்கூடிய தண்டனையும் காத்திருக்கின்றது. (முதல் சாரார்) பாலைவனத்தில் இருக்கும் போது தனது தேவைபோக மேலதிகமான நீரை வழிப்போக்கர்கள் உபயோகிக்கவிடாது தடுக்கும் மனிதன். (இரண்டாவது சாரார்) அஸ்ர் தொழுகைக்குப் பின்னால் அல்லாஹ்மீது சத்தியம் செய்து இன்னின்ன விலை கொடுத்து வாங்கினேன் எனக்கூறி மற்றொரு மனிதனுக்குத் (தனது) பொருளை விற்கும் மனிதன். வாங்குபவனும் உண்மை என ஏற்றுக் கொள் கின்றான். ஆனால் (வாங்கிய விலை) அவன் கூறியபடி இல்லை. (மூன்றாவது சாரார்) இமாமிடம் பைஅத் செய்யும் மனிதர். உலகத்தை அடைந்துகொள்வதற்கேயன்றி அவன் பைஅத் செய்ய வில்லை. அவனுக்கு (உலக சொத்துக்களைக்) கொடுத்தால் பைஅத்தை நிறைவேற்றுவான், அதிலிருந்து அவனுக்குக் கொடுக்கப்படாவிட்டால் அவன் பைஅத்தை நிறைவேற்ற மாட்டான்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ஈமான் 46)

பைஅத்தை முறிக்கக் கூடியவன் உண்மையில் ஏன் பைஅத் செய்கின்றான் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். வெறும் உலக நோக்கத்திற்காக பைஅத் செய்யும் அவன் அது கிடைக்காத போது பைஅத்தை முறித்து விடுகின்றான். அவ்வாறு பைஅத்தை முறிப்பவன் முஸ்லிம்களினதும், அவர்களது இமாமினதும் கோபத்திற்கு மட்டும் ஆளாவதில்லை. மாறாக அகிலத் தைப் படைத்த அல்லாஹ்வின் கோபத்திற்கே ஆளாகி விடுகின்றான். எனவே பைஅத்தை முறிப்பதன் முதலாவது விபரீதம் அவர்களுடன் அல்லாஹ் கதைக்க மாட்டான், அவர்களைப் பார்க்க மாட்டான், அவர்களை மன்னித்து பாவங்களை விட்டும் தூய்மையாக்க மாட்டான். சுவனம் கிடைப்பதற்குப் பதிலாக அவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனைதான் காத்திருக்கின்றது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
(இமாமின்) கட்டுப்பாட்டில் இருந்து யார் கையை உருவிக் கொள்கின்றாரோ (அவர்) மறுமை நாளில் தனக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லாத நிலையில் அல்லாஹ்வை சந்திப்பார். மேலும் யார் தனது கழுத்திலே (கட்டுப்பாட்டிற்கான) பைஅத் இன்றி மரணிக் கின்றாரோ (அவர் நரகம் செல்லும்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுவார்.
( ஸஹீஹ் முஸ்லிம் கி. இமாரா 13 )

பைஅத் என்பது உலகிலும் மறுமையிலும் ஒரு மனிதனை அவன் முஸ்லிமா? அல்லது முஸ்லிம் அல்லாதவனா? என்பதை அடையாளம் காட்டக்கூடிய ஒன்றாக இருக்கின்றது. உலகிலே (முஸ்லிம்களின் கூட்டமைப்பு) ஜமாஅதுல் முஸ்லிமீன் காணப்படும் காலத்தில் தன்னை முஸ்லிம் என அடையாளப்படுத்த விரும்பும் மனிதன் ஜமாஅதுல் முஸ்லிமீனின் இமாமிடம் பைஅத் செய்திருப் பது கட்டாயமாகின்றது. இந்த பைஅத்தின் பெறுமதி உலக வாழ்வுடன் முடிந்து விடுவதில்லை. மாறாக மறுமைவரை அதன் தேவை இருக்கின்றது என்பதைத்தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது. இந்த பைஅத்தை உலகிலே ஒருவன் முறித்துக் கொண்டால் அவன் எதனையுமே அல்லாஹ்விடம் நிரூபிக்க முடியாமல் போய்விடும். ஏனெனில் அவனிடம் எந்தவொரு ஆதாரமும் இல்லாத நிலையில் அவன் அல்லாஹ்வை சந்திப்பான். அப்படியானால் அவன் ஒரு முஸ்லிம் என்பதை அவன் எப்படி நிரூபிக்க முடியும்.....? எனவே இந்த ஒரு விடயமே இஸ்லாத்திற்காக முஸ்லிம்களின் தலைவருடன் செய்து கொண்ட பைஅத்தை முறிப்பதன் விபரீதத்தை உணர்த்துகின்றதல்லவா?

இஸ்லாத்திற்காக பைஅத் செய்யாதவன் ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள். பைஅத்செய்து இஸ்லாத்தினுள் நுழைந்ததன் பின்னர் ஜமாஅத்தை விட்டுப் பிரிந்து செல்பவனும் ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாகவே கூறியுள்ளார்கள். எனவே இருவரும் சம நிலையில்தான் உள்ளனர் எனும் முடிவிற்கு நீங்கள் வந்தால் அது தவறானதாகும். இருவருக்கும் இடையில் பல்வேறு வித்தியாசங்கள் காணப்படுகின்றன. ஒரேயொரு வித்தியாசத்தை மட்டும் இங்கு எடுத்துக் கூறுகின்றோம். பைஅத் செய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்காதவர்கள் இந்த சத்தியத்தை எதிர்த்தால்கூட மீண்டும் மீண்டும் அவர்களை முடியுமான வரையில் அன்பாக இஸ்லாத்தின்பால் அழைக்க வேண்டும். அவர்களது மரணம் வரை அவர்களை இஸ்லாத்தின்பால் அழைத்துக் கொண்டிருக்க முடியும். அதே நேரம் பைஅத் செய்து இஸ்லாத்தில் நுழைந்ததன் பின்னர் ஜமாஅத்தைக் கைவிட்டு விட்டால் அவனைக் கொலை செய்துவிட வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டமாகும்.

ஸஅத் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
மக்காவை வெற்றிகொண்ட தினத்தில் (பைஅத்தை முறித்துச் சென்றிருந்த) நான்கு ஆண்களையும், இரண்டு பெண்களையும் தவிர எல்லா மனிதர்களுக்கும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பாதுகாப்பு வழங்கி விட்டார்கள். அபூ ஸர்ஹின் மகன் உட்பட அவர்களது பெயர்களையும் குறிப்பிட்டார்கள். (நபியின் கட்டளைப்படி வஹியை எழுதிக் கொண் டிருந்த) அபூ ஸர்ஹின் மகன், உஸ்மான் ரலியல்லாஹூ அன்ஹூ விடத்தில் ஒளிந்து கொண்டார். (இஸ்லாத்தை ஏற்கும்) மக்களை பைஅத் செய்ய வருமாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அழைத்தபோது அவரை கூட்டிக் கொண்டு வந்து, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் நிறுத்திவிட்டு "அல்லாஹ்வின் தூதரவர்களே! அப்துல்லாஹ்விடம் பைஅத் எடுப்பீர்களாக!" எனக் கூறினார்கள். மூன்று விடுத்தம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவரைப் பார்த்தார்கள். ஒவ்வொரு முறையிலும் மறுத்து விட்டார்கள். மூன்று விடுத்தங்களின் பின்னர் அவரிடம் பைஅத் எடுத்தார்கள். பின்னர் தங்களது தோழர்களை நோக்கி: "இவரிடம் பைஅத் எடுப்பதனை விட்டும் எனது கையை மடக்கிக் கொண்டதைக் கண்டு, எழுந்து சென்று அவரைக் கொன்றுவிடக்கூடிய புத்திசாலியான ஒருவராவது உங்களிலே இல்லையா?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள்: "அல்லாஹ்வின் தூதரவர்களே! தங்களது உள்ளத்தில் உள்ளதை நாம் அறியமாட்டோம். தங்களது கண்களால் எங்களுக்கு சைக்கினை செய்திருக்க வேண்டாமா?" எனக் கேட்டார்கள். (அதற்கு) "கண்களால் சைக்கினை செய்வது நபிமார்களுக்கு ஆகுமானதல்ல" என (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ) கூறினார்கள்.
(அபூ தாவூத் கி.ஜிஹாத் 127 - ஸஹீஹ்)

விபச்சாரம் செய்துவிட்டு அவராகவே வந்து குற்றத்தை ஒப்புக் கொண்டவரைக் கல்லெறிந்து கொன்று விடும்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தோழர்களை ஏவினார்கள். தண்டனையை நிறைவேற்றும்போது வேதனை தாங்க முடியாமல் தப்பியோடிய முஸ்லிமை மீண்டும் பிடித்துக் கொலை செய்துவிட்டு, தோழர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். "(ஓடிய) அவரை (நீங்கள்) விட்டிருக்கக் கூடாதா?" என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்டார்கள். கொலை செய்யப்பட வேண்டியவர் தப்பியோடியபோது விட்டிருக்கக் கூடாதா எனக் கேட்ட கருணை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம், ஜமாஅத்தை விட்டும் வெளியேறிச் சென்றவர் மீண்டும் பைஅத் செய்ய வந்திருந்தும் பைஅத் செய்வதற்கிடையில் அவரைக் கொன்றிருக்கக் கூடாதா? எனக் கேட்பதானால் பைஅத்தை முறிக்கக் கூடியவன் எந்த அளவு கெட்டவனாக இருப்பான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளலாம். ஆகவே பைஅத் செய்யாதவனும், பைஅத் செய்து அதனை முறித்துவிட்டவனும் எல்லா வகையிலும் சமமானவர்கள் இல்லை. இரு சாராரும் அதே நிலையில் மரணித்தால் அவர்கள் ஜாஹிலிய் யத்தில் மரணித்ததன் காரணமாக நரகம் செல்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது. இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்யாத வனைவிட, பைஅத் செய்துவிட்டுப் பின்னர் அதனை முறித்தவனது நிலைமை நரகில் மிக மோசமானதாக இருக்கும்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
யார் (இமாமின்) கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறி, ஜமாஅத்தை விட்டும் பிரிந்து, பின்னர் மரணித்தும் விடுகின்றாரோ (அவர்) ஜாஹிலிய்ய மரணத்தையே தழுவுகின்றார். மேலும் யார் உறவினருக்காகக் கோபம் கொண்டு, உறவினருக்காகப் போராடக் கூடிய குருட்டுத்தனமான கொடியின் கீழ் போராடி மரணிக்கின்றாரோ அவர் எனது உம்மத்தில் உள்ளவரல்ல.
( ஸஹீஹ் முஸ்லிம் )

அல்லாஹ்வுக்காக அணிதிரளக்கூடியோரைத் தவிர ஏனைய அனைவரது போக்கையும் இஸ்லாம் அறிவீனமான போக்காகவே கருதுகின்றது. இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட ஒவ்வொன்றையும் அது ஜாஹிலிய்யத் என்பதாகவே கூறுகின்றது. ஜாஹிலிய்யத் என்பதன் கருத்து அறிவீனம் என்பதாகும். எனவே இஸ்லாத்தினுள் நுழைந்த ஒருவன் அவன் செய்திருக்கும் பைஅத்தை முறித்துக் கொள்வது அவனது அறிவு பெருகிவிட்டதன் அடையாளம் அல்ல. மாறாக அது அவனது அறிவு மழுங்கி விட்டதன் அடையாளமேயாகும். இந்த உண்மையை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மேலே உள்ள ஹதீஸின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே பைஅத்தை முறித்துக் கொள்வதன் விபரீதங்களில் அத்தகையவன் தன்னை அறிவீனர்களின் பட்டியலில் இணைத்துக் கொள்கின்றான் என்ப தும் ஒன்றாகும்.

கண்ணியமிக்க அல்லாஹ் கூறுவதாவது:-
அறிவீனர்களில் ஒருவராக (நீரும்) ஆகிவிட வேண்டாம் என நிச்சயமாக நான் உமக்கு உபதேசம் செய்கின்றேன்.
( 11 : 46 )

அதே போன்று ஒரு மனிதன் நியாயத்தின் பக்கம் சார்வதை விட்டுவிட்டு தனது உறவினர் எனும் ஒரே காரணத்தைக் கொண்டு போராடினால் இஸ்லாம் உறவுகளைச் சேர்ந்து நடக்கும்படி கூறி யுள்ளதே என ஒருவர் அதற்கு நியாயம் கூற முடியாது. முதலில் நீதத்தைத்தான் இஸ்லாம் போதிக்கின்றது. எனவே அநீதத்தில் உறவினர்களுக்காகப் போரிடுபவன் குருட்டுத்தனமாக செயல் படுகின்றான் என இஸ்லாம் கூறுவதுடன், அவன் முஸ்லிம் உம்மத்தைச் சேர்ந்தவனே அல்ல எனவும் கூறுகின்றது.
மதீனாவாசிகள் யஸீத் பின் முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களை அகற்றியபோது இப்னு உமர் ரலியல்லாஹூ அன்ஹூ தனது மகனையும் தனக்கு நெருக்கமானவர்களையும் அழைத்துக் கூறுகின்றார்கள்:-

நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறக் கேட்டதாவது : "மறுமை நாளில் ஒவ்வொரு மோசடிக்காரனுக்கும் ஒவ்வொரு கொடி நாட்டப் படும்." நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பைஅத் செய்ததன் அடிப்படையில் இந்த மனிதருக்கு (யஸீத் பின் முஆ வியா ரலியல்லாஹூ அன்ஹூ ) பைஅத் செய்திருக்கின்றோம். அழ்ழாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் பைஅத் செய்ததன் அடிப்படையில் ஒருவ ருக்கு பைஅத் செய்துவிட்டு அவருக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்வதைவிடப் பெரியதொரு மோசடியை நிச்சயமாக நான் அறிய மாட்டேன். உங்களில் எவரேனும் அவரிலிருந்து (கையை) உருவி, அவருக்கு இந்த (நிர்வாக) விடயத்தில் கட்டுப்படவில்லை என்பதை நான் அறிந்தால் எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள தொடர்பு அப்படியே அறுந்துவிடும்.
(ஸஹீஹுல் புஹாரி கி.பிதன் 20)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
யார் பைஅத் செய்துவிட்டுப் பின்னர் அதனை முறிக்கின்றாரோ (அவர் மறுமை நாளில்) தன்னுடன் தனது வலது கை இல்லாத நிலையில் (அவர்) அல்லாஹ்வை சந்திப்பார்.
(தபரானி அவ்ஸத் - ஸனதுஹு ஜையித் ப.பாரி கி.அஹ்காம்)

மறுமையில் வெற்றியாளர்களுக்கு அவர்களது பெறுபேற்றுப் புத்தகம் அவர்களது வலது கையிலேயே வழங்கப்படும். வலது கையையே இழந்தவனாக மறுமையில் வரப்போகும் பைஅத்தை முறித்தவன் வெற்றிபெற முடியும் என இன்னுமா நாம் நம்புவது? பைஅத்தை முறிப்பதன் விபரீதங்களின் உச்சக் கட்டமாக இந்த ஹதீஸை நாம் காணலாம். அல்லாஹ் எங்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கான பைஅத்தைச் செய்து இறுதி வரை அதனைப் பாதுகாத்து மரணிக்கும் முஸ்லிம்களுடன் சேர்த்துவைப்பானாக! பைஅத்தை முறிப்பவன் மறுமையில்தான் தண்டிக்கப்படுவான் என்றிருந்தாலும் அத்தகைய முர்தத்துக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் காலத்தில் நடந்த சம்பவம் ஏனையோருக்கு ஒரு எச்சரிக்கையாகும்.

அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஒரு மனிதர் கிறிஸ்தவராக இருந்தார். பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். பகராவையும், ஆலு இம்ரானையும் ஓதினார். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்காக (வஹியை) எழுதக் கூடியவராகவும் இருந்தார். பின்பு கிறிஸ்தவனாகவே திரும்பிச் சென்றுவிட்டான். "நான் அவருக்கு எழுதிக் கொடுப்பதனைத் தவிர முஹம்மதுக்கு எதுவும் தெரியாது." எனக் கூறிக் கொண்டிருந்தான். பின்னர் அவனை அல்லாஹ் மரணிக்கச் செய்துவிட்டான். அவனை (ஏனையோர்) புதைத்தார்கள். மறுநாள் காலையில் பூமி அவனை வெளியில் எறிந்திருந்தது. உடனே "இது முஹம்மதினதும், அவரது தோழர்களினதும் செயலே!. அவர்களை விட்டுவிட்டு ஓடியதற்காக எங்களது தோழரை வெளியில் எடுத்துப் போட்டுள்ளார்கள்." என (அவரைச் சார்ந்தோர்) கூறினார்கள். பின்னர் குழியை ஆழமாகத் தோண்டி (புதைத்தார்கள்.) மறுநாள் காலையிலும் பூமி அவனை வெளியில் எறிந்திருந்தது. அப்போதும் "இது முஹம்மதினதும், அவரது தோழர்களினதும் செயலே!. அவர்களை விட்டுவிட்டு ஓடியதற்காக எங்களது தோழரை வெளியில் எடுத்து குழியின் வெளியில் போட்டுள்ளார்கள்." எனக் கூறினார்கள். பின்பு (அவர்களால்) முடியுமானவரை பூமியிலே ஆழமாகத் தோண்டிப் (புதைத்தார்கள்.) அடுத்த நாள் காலையிலும் அவனைப் பூமி வெளியில் எறிந்திருந்தது. அப்போது (அவர்கள்) மனிதர்களில் எவரும் (இதனைச் செய்யவில்லை) என்பதை அறிந்து அவனை (அப்படியே) போட்டுவிட்டார்கள்.
( ஸஹீஹுல் புஹாரி - கி. மனாகிப் )

இஸ்லாத்திற்காக பைஅத் செய்துவிட்டு அந்த பைஅத்தைப் பாதுகாக்காத ஒவ்வொருவரும் அல்லாஹ்விடம் மேற்கண்டவனது நிலையிலேயே வைத்துப் பார்க்கப்படுவான் என்பதை ஒவ்வொருவரும் விளங்கி வைத்திருக்க வேண்டும்.



No comments

Powered by Blogger.