Header Ads

Header ADS

பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில்!! பகுதி - 2



12.ஆட்சியதிகாரம் இல்லாத அமீரிடம் பைஅத்!
13.ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும் ஒரே இமாம்!
14.பைஅத் நபிக்கு மட்டும் விஷேடமானதா?
15.இமாமிற்குரிய தகைமைகள் எவை?
16.பல தலைவர்களுக்கு பைஅத் செய்யலாமா?  

17.அல்ஜமாஅத் மீண்டும் தோன்றுவது எவ்வாறு?
18.அல்ஜமாஅத் தோன்றிவிட்டால் அதில் இணைவது கடமையாகும்!
19.பைஅத் செய்வோரை ஜாஹிலிய்யத்தில் உள்ளோர் தூற்றுவார்கள்!
20.இறுதியாக.....!  




 12.ஆட்சியதிகாரம் இல்லாத அமீரிடம் பைஅத்!

மகத்தான அல்லாஹ் கூறுவதாவது:-
உங்களினின்றும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறக் கூடியோருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் அழகிய முன்மாதிரி உள்ளது.
( 33 : 21 )

அல்லாஹ்வின் திருப்தியின் மூலம் மறுமை வெற்றியை நோக்கமாகக் கொண்டவர்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் மிகச்சிறந்த முன்மாதிரி காணப்படுகின்றது. அவர்களது இஸ்லா மிய வாழ்க்கை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முன்மாதிரியாகும். ஒரு முஸ்லிம் தனது வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுவது அவர்களது கடமைகளில் பிரதானமானதாகும். அதனை அவர்கள் அழகாக நிறைவேற்றிவிட்டுச் சென்றுள்ளார்கள். ஆகவே அவர்களைவிட சிறந்த ஒரு முஸ்லிம் தோன்ற முடியாது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தங்களது வாழ்வில் சாதித்த மிகப்பெரிய சாதனை நாற்பது வயதில் அல்லாஹ்வினால் கொடுக்கப்பட்ட நேர்வழியைக் கையில் எடுத்துக்கொண்டு தனிமனிதனாக வந்த அவர்கள் இருபத்து மூன்று வருடங்களுக்குள் ஒரு இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியதாகும். இந்த வெற்றியின் ஆரம்பம் கொள்கைக்காக ஒன்றுபட்டவர்களை ஒரே தலைமைத்துவத்தின் கீழ் அணிதிரட்டிதே. இஸ்லாத்தை ஏற்றவர்கள் பூமியில் ஓர் இஸ்லாமிய ஆட்சி நிறுவப்படுவதற்கு முன்னர் உடலால் பல்வேறு இடங்களில் சிதறி வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்தவர்கள் என்பதால் ஒரே தலைவரின் கட்டுப்பாட்டில் ஒன்றுதிரண்டிருந்தார்கள். அவ்வாறு அவர்களை ஒன்றுதிரட்டக் கூடிய பைஅத்தைத் தங்களது அழைப்புப் பணியின் துவக்கநாள் முதலே தொடங்கிவிட்டார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் ஆரம்ப காலம் மக்காவிலே கழிந்தது என்பது எங்களுக்குத் தெரியும். ஆட்சியதிகாரத்தை நினைத்துப் பார்ப்பதுகூட சிரமமான அந்த மக்கா வாழ்க்கை என்பது மிகவும் சோதனைகளை எதிர்கொண்ட ஒரு காலப்பகுதியாகும். ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு விட்டார் என்று தெரிந்து விட்டாலே அது அவருக்குப் பெரும் சோதனைகளை ஏற்படுத்தி விடும். இருந்தும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மிகவும் பொறுமையுடனும், அசைக்க முடியாத உறுதியுடனும் அல்லாஹ்வின் தீனை பூமியிலே நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். இரகசியமாகவும், வெளிப்படையாகவும் அவர்கள் செய்த பிரச்சாரம் அவர்கள் பிறந்த ஊரில் அல்லாஹ்வின் தீனை சுதந்திரமாகப் பின்பற்றும் அளவிற்கு நிலைமையைத் தோற்று விக்கவில்லை. எனவே அவர்கள் வெளியூர்களில் இருந்து மக்கள் வந்து ஒன்றுகூடும் வியாபார சந்தைகளிலும், ஹஜ்ஜுடைய காலத்தில் அறபா, மினா போன்ற இடங்களிலும் அவர்களை அணுகி அவர்களிடம் அழ்ழாஹ்வின் தீனை சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்வதற்காக தனக்குப் புகலிடம் கொடுக்க உங்களில் எவரேனும் தயாரா? எனக் கேட்டுக் கேட்டு மக்களுக்கு மத்தியில் அலைந்தார்கள்.

இந்த அயராத முயற்சியின் காரணமாக அல்லாஹ் தனது தூதருக்கு ஒரு வாசலைத் திறந்து விட்டான். மதீனாவில் இருந்து வந்திருந்த ஒரு சிலர் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது அழைப்பு சத்திய அழைப்பு என்பதை விளங்கி அதனை ஏற்றுக்கொள்ள முன்வந்தனர். அவ்வாறு முன்வந்த பன்னிரண்டு பேர் மதீனாவின் எல்லைப்புறத்தில் உள்ள அகபா எனும் பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இரகசியமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை சந்தித்து இஸ்லாத்திற்காக பைஅத் செய்தார்கள். இதனை முதலாவது அகபா பைஅத் எனக் கூறப்படுகிறது.

இவ்வாறு பைஅத் செய்த அந்த முஸ்லிம்கள் தங்களது ஊரிற்குத் திரும்பிச் சென்றதும் அதனை ஏனையவர்களுக்கும் சிறிது சிறிதாகப் பிரச்சாரம் செய்தார்கள். இதன் விளைவாக மதீனாவில் இஸ்லாம் வேகமாகப் பரவி அங்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை கூட்டிக்கொண்டு வரும் அளவிற்கு நிலைமை மேம்பட்டு விட்டது. மக்காவில் மக்களால் அங்கும் இங்கும் துரத்தப்படும் நிலையில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை எத்தனை நாட்களுக்குத்தான் விட்டுவைப்பது என மதீனாவாசிகள் கவலையடைந்து தங்களது ஊரிற்கு அழைத்துவரும் எண்ணத்துடன் எழுபது பேர் ஒன்று சேர்ந்து புறப்பட்டுச் சென்று அதே பள்ளத்தாக்கில் இரவு நேரத்தில் இரகசியமாக செய்த பைஅத்தைத்தான் இரண்டாம் அகபா பைஅத் எனக்கூறப்படுகிறது. ஆட்சியதிகாரத்தைக் கனவு காண்பது கூட சிரமமான நிலையில் ஊரிற்கு வெளியில் இரவு நேரத்தில் இரகசியமாக செய்துகொள்ளப்பட்ட பைஅத்தில் பங்கேற்றவர்கள் கூறுகின்ற செய்தியைப் பாருங்கள்.

ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
நானும் எனது தந்தையும், எனது இரண்டு மாமாக்களும் இஸ்லாத்திற்காக மக்காவின் பள்ளத்தாக்கில் (அகபா உடன்படிக்கை) பைஅத் செய்தவர்களாவோம்.
(ஸஹீஹுல் புஹாரி கி.ப.ஸஹாபா 72)

உபாதா பின் ஸாமித் ரலியல்லாஹூ அன்ஹூகூறுகின்றார்கள்:-
நிச்சயமாக (அகபா இரவிலே) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு பைஅத் செய்தவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்பாளர்களில் நானும் ஒருவனாவேன். அழ்ழாஹ்வுக்கு எதனையுமே இணையாக்க மாட்டோம், விபச்சாரம் செய்ய மாட்டோம், திருட மாட்டோம், உரிமை இருந்தாலே தவிர அல்லாஹ் தடைசெய்த உயிர்களைக் கொலை செய்ய மாட்டோம், அபகரிக்க மாட்டோம், மாறுசெய்ய மாட்டோம் என்பனவற்றைக் கூறி பைஅத் செய்தோம். அவ்வாறு நடந்தால் சுவனம் கிடைக்கும். அவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்துவிட்டால் அதன் தீர்ப்பு அழ்ழாஹ்விடமே (ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்கள்.)
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ஹுதூத் 10)

வேறு ஊரிலிருந்து வந்து இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதைக்கூட மக்காவிலுள்ளவர்கள் விரும்பவில்லை. எனவேதான் ஊரின் ஒதுக்குப் புறத்தில் இரவு நேரத்தில் ஒருவர் இருவராக ஒன்றுகூடி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் பைஅத் செய்கின்றார்கள். இவ்வாறு பைஅத் எடுத்துக் கொண்டிருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை மக்கா வாசிகள் பைத்தியக்காரர் என்றுதான் கூறிக் கொண்டிருந்தனர். தனது இலட்சியத்தை அடைய வேண்டும் என்பதில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் காட்டிய தீவிர அக்கறை ஏனையோருக்கு பைத்தியக்காரத்தனமாகத்தான் தோன்றியது. இவ்வாறு அதிகமானோரால் பைத்தியக்காரராகப் பார்க்கப்பட்ட அன்றைய நிலையில் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வோரும் இருக்கத்தான் செய்தார்கள். மக்களால் வெருட்டப்படும் நிலையில் இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்:-

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றாhர்கள்:-
ழிமாத் என்பவர் மக்காவிற்கு வந்தார். அவர் "அஸ்த் ஷனூஆ"கோத்திதிரத்தைச் சேர்ந்தவராக இருந்தார். பைத்தியம் பிடித்தவர்களுக்கு மந்திரிப்பவராகவும் இருந்தார். அப்போது மக்காவாசிகளைச் சேர்ந்த சில மடையர்கள் "நிச்சயமாக முஹம்மத் பைத்தியக்காரரே ஆவார்." எனக் கூறுவதைக் கேட்டார். எனவே அவர் "அந்த மனிதரை நான் சந்தித்தால் சிலவேளை அல்லாஹ் எனது கைகளைக் கொண்டு அவரைக் குணப்படுத்தலாம்" எனக் கூறிவிட்டு, (ரஸூலுல்லாஹ்வைச்) சந்தித்து "முஹம்மதே! நிச்சயமாக நான் பைத்தியம் பிடித்தவர்களுக்கு மந்திரிக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகின்றவர்களை எனது கைகளினால் குணப்படுத்துகிறான். உமக்கு (மருந்து செய்யும் நோக்கம்) உள்ளதா? எனக் கேட்டார். அப்போது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் "இன்னல் ஹம்த லில்லாஹி நஹ்மதுஹு வ நஸ்தஈனுஹு மன் யஹ்திஹில்லாஹு பலா முழில்ல லஹு வ மன் யுழ்லில் பலா ஹாதிய லஹு வ அஷ;ஹது அன் லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வ அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரஸூலுஹு அம்மா பஃது" எனக் கூறினார்கள். அதற்கு அவர் "உங்களது இந்த வார்த்தைகளை எனக்கு மீண்டும் கூறுங்களேன்" எனக்கேட்டார். அவற்றை மூன்று விடுத்தம் திரும்பத்திரும்ப ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவருக்குக் கூறினார்கள். உடனே அவர் "குறிகாரர்கள், சூனியக் காரர்கள், கவிஞர்கள் போன்றோரின் வார்த்தையை (நான்) நிச்சயமாகக் கேட்டுள்ளேன். (ஆனால்) இந்த வார்த்தைகளைப் போன்று கேட்டதே இல்லை. (இவை) கடலின் ஆழத்தையே அடைந்து விட்டன. இஸ்லாத்திற்காக பைஅத் செய்வதற்காக தங்களது கையைத் தாருங்கள்" எனக் கூறி பைஅத்தும் செய்தார். பின்னர் "உமது கூட்டத்தாருக்காகவும் (பைஅத் செய்கிறீரா?) என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கேட்டார்கள். அதற்கு அவர் எனது கூட்டத்தாருக்காகவும் (பைஅத் செய்கின்றேன்) எனக்கூறினார்..............
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ஜும்ஆ 13)

இவ்வாறு ஒருவர் இருவராக இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்த ஸஹாபாக்கள் ஒரு கூட்டமாகவே மாறிவிட்டார்கள். வெளிப் படையாக ஜமாஅத் ரீதியிலான செயற்பாடுகளை நிறைவேற்ற முடியாவிட்டாலும் இரகசியமாக மக்காவிலே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒரு ஜமாஅத்தை வழிநடாத்திக் கொண்டுதான் இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை எதிர்த்தவர்கள் உலகில் முதலாவதாக அமைக்கப்பட்ட கஃபதுல்லாஹ்வைத் தங்களது அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தொழுவதற்குத் தடையாக இருந்தார்கள். எனவே மிகச் சிறந்த மஸ்ஜித் காலடியில் இருந்தும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கும், அவர்களோடு இருந்த முஸ்லிம்களுக்கும் அந்த மஸ்ஜிதிலே கூட்டாகத் தொழுவதற்கு முடியாமல் இருந்தது. அவ்வாறு தொழவிடாது தடுத்தவர்களும் தம்மை இப்றாஹீம் நபியைப் பின்பற்றக்கூடிய முஸ்லிம்கள் எனக் கூறியதுதான் மிகப் பெரிய அநியாயம். ஒரு சில சந்தர்ப்பங்களில் கஃபதுல்லாஹ்வில் தனியாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தொழுதபோதுகூட நடந்த கொடுமை நாம் அறிந்ததே. எனவே தங்களிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்த முஸ்லிம்களை சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது மாத்திரம் அவர்களை ஒன்றுசேர்த்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இரகசியமாகத் தொழுகை நடாத்துவார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றைப் பற்றி பின்வரும் சம்பவம் விபரிக்கின்றது.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஜின்களுக்கு ஓதிக்காட்டவும் இல்லை, அவர்களைக் காணவும் இல்லை. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தங்களது தோழர்களில் ஒரு சாராரை அழைத்துக் கொண்டு "உக்காழ்" எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். அப்போது iஷத்தான்களுக்கும் வானத்தின் செய்திகளுக்கும் இடையில் குறுக்கீடு செய்யப்பட்டிருந்தது. (செய்திகளைத் திருட வானத்திற்குச் செல்லும்போது) அவர்கள் மீது நெருப்புக் கங்கிகள் அனுப்பப்பட்டன. எனவே iஷத்தான்கள் தங்கள் சமூகத்தாரிடம் திரும்பி வந்தபோது "உங்களுக்கு என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள். அதற்கு (அவர்கள்) "எங்களுக்கும் வானத்தின் செய்திக்கும் இடையில் தடை ஏற்படுத்தப்பட்டு விட்டது, எங்கள் மீது நெருப்புக் கங்கிகளும் அனுப்பப்பட்டன." எனக் கூறினார்கள். அதற்கு "அவ்வாறு நடப்பது புதிதாக ஒன்று உருவாகியதன் காரணமாகவே அன்றி வேறில்லை. எனவே பூமியின் கிழக்குகளிலும், மேற்குகளிலும் பரந்து சென்று எமக்கும் வானத்தின் செய்திக்கும் இடையில் குறுக்கிட்டது எது எனக் கவனித்துப் பாருங்கள்." எனக் கூறினார்கள். உடனே பூமியின் கிழக்குகளிலும், மேற்குகளிலும் பரந்து சென்றார்கள். (இவர்களில்) "திஹாமா" எனும் இடத்தை நோக்கிச் சென்றவர்கள் உக்காழ் சந்தையை நோக்கிச் செல்லும் வழியில் ஈத்தம்பழத் தோட்டம் ஒன்றில் தங்களது தோழர்களுக்கு பஜ்ர் தொழுகை நடாத்திக் கொண்டிருந்த (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) அவர்களைக் கடந்து செல்ல நேரிட்டது. (தொழுகையில்) குர்ஆன் (ஓதுவதனைக்) கேட்டபோது காது தாழ்த்தி அதனைக் கேட்டுவிட்டுவிட்டு, "இதுதான் எங்களுக்கும் வானத்தின் செய்திக்கும் இடையில் குறுக்கிட்டது." எனக்கூறி, உடனே தங்களது சமூகத்தாரிடம் திரும்பினார்கள். "எங்களது சமூகத்தோரே! நிச்சமாக நாம் ஆச்சரியம் மிக்க ஒரு அல்குர்ஆனைச் செவியுற்றோம். (அது) நேர்வழியின் பால் வழிகாட்டுகின்றது. உடனே நாம் அதனைக் கொண்டு விசுவாசம் கொண்டு விட்டோம். எங்களது ரப்புடன் எவரையும் நாம் இணையாக்கவும் மாட்டோம்." எனக் கூறினார்கள். அப்போது தனது நபி மீது அழ்ழாஹ் " (நபியே!) ஜின்களில் ஒருசிலர் அல்குர்ஆன் ஓதுவதைச் செவிமடுத்ததாக எனக்கு வஹி அருளப்பட்டுள்ளது என நீர் கூறுவீராக!" எனும் வசனத்தை இறக்கி வைத்தான்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ஸலாத் 33)

ஒரு இலட்சியத்தின் அடிப்படையில் ஒன்று சேர்க்கப்படும் மக்கள் அந்த இலட்சியத்தை நோக்கி வழிநடாத்தும் ஒரு தலைமைத் துவத்தைக் கொண்டிருப்பது மிக மிக அவசியமாகும். சர்வஞானம் உடைய அல்லாஹ் இஸ்லாத்தை ஏற்பவர்களை, அவர்களிடம் பைஅத் பெற்று அங்கீகரிக்கும்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழிகாட்டியதன் மூலம் இஸ்லாத்தை இந்தப் பூமியில் தழைத்தோங்கச் செய்வதற்கு மிகச் சரியான ஆரம்பம் எது என்பதை முஸ்லிம்கள் உணரச் செய்துள்ளான். அந்த வழிகாட்டலுக்கு ஏற்ப அல்லாஹ்வின் தூதரவர்கள் ஆரம்பம் முதல் இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்பவர்களிடம் பெற்றுக்கொண்ட பைஅத் தங்களது இலட்சியத்தில் வெற்றிபெறுவதற்கு பெரும் துணையாக அவர்களுக்கு இருந்தது. எனவே இந்த உலகில் ஒரு நடைமுறை இஸ்லாமிய சமுதாயத்தை உருவாக்குவதற்கு எந்தவொரு காலத்திலும் பின்பற்றப்படவேண்டிய வழிமுறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வால் கற்பிக்கப்பட்ட வழிமுறைதான் என்பதில் முஸ்லிம்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. ஆகவே இஸ்லாமியத் தலைமைத்துவம் தோன்றும்போதிருந்தே, இஸ்லாத்தை ஏற்க வரும் ஒவ்வொருவரிடமும் பைஅத் எடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் வழிகாட்டலில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் பின்பற்றப்பட்ட வழிமுறையாகும்.

13.ஆன்மீகத்திற்கும், அரசியலுக்கும் ஒரே இமாம்!

இந்த உலகில் தோன்றிய மனிதர்களில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஏற்படுத்தியது போன்ற ஒரு மாற்றத்தை வேறு எந்த ஒரு மனிதரும் ஏற்படுத்தவில்லை. இந்த உண்மையை முஸ்லிம்கள் மாத்திரம் அன்றி ஏனையவர்களும் ஏற்றுக்கொள்கின்றார்கள். இத்தகைய ஒரு சாதனையை செய்ய முடிந்ததற்கு பல காரணங்களை நாம் காணலாம். அவற்றில் முக்கிய காரணமாக அல்லாஹ் வகுத்துக் கொடுத்த செயல் திட்டத்தைத்தான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் செயல்படுத்தினார்கள் என்பதைக் குறிப்பிடலாம்.

உலகில் தோன்றிய தலைவர்களில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைத்தவிர ஏனைய எல்லாத் தலைவர்களும் ஒன்றில் மனிதர்களை ஆன்மீகத்துக்கு வழிகாட்டியுள்ளார்கள். அல்லது அரசியலுக்கு வழிகாட்டியுள்ளார்கள். ஆன்மீகத்தலைவர்களுக்கு அரசியல் தெரியாது. அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீகம் தெரியாது. இவர்களுக்கு முற்றிலும் மாறுபட்டு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஆன்மீகத் தையும் அரசியலையும் ஒன்றாக சேர்த்து வழிநடாத்திய காரணத்தினால்தான் அந்நியர்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை உலகில் தோன்றிய தலைவர்களில் முதன்மையானவர்கள் என ஏற்றுள்ளனர். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட நபிமார்களும் தங்களது சமூகங்களை இந்த இரு துறைகளிலும் சேர்த்தே வழிநடாத்தியுள்ளார்கள். இவற்றைக் கொண்டே இஸ்லாம் ஆன்மீகத்திற்கும் அரசியலுக்கும் ஒரே தலைமைத்துவத்தைத்தான் ஏற்படுத்தியுள்ளது என்பதை நாம் விளங்கிக்கொள்ளலாம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் அனுபவ ரீதியான இந்த வெற்றிப்பாதை பின்னால் வரக்கூடிய முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதில் எந்தவொரு உண்மை முஸ்லிமும் சந்தேகம் கொள்ள மாட்டான். ஏனெனில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் அஞ்சி அதிகம் அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூரக்கூடியோருக்கு அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஓர் ஆழகிய முன்மாதிரி இருக்கின்றது என அல்லாஹ் தெளிவாகக் கூறிவிட்டான். எனவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் நபியாக அனுப்பப் பட்டதன் பின்னரான முழு வாழ்க் கையும் பின்னால் வரக்கூடிய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியேயாகும். இதில் இரண்டு விதிவிலக்குகள் காணப்படுகின்றன. மார்க்க விடயங்களைக் கடந்து உலக விடயங்கள் பற்றிக் கூறினால் அவற்றை ஏற்கத் தேவை இல்லை என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களே கூறி விட்டார்கள். இன்னும் சில விடயங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் உரியதாக இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறு விNஷடமாக ஆக்கப்பட்டவை என குர்ஆன் அல்லது ஹதீஸ் எவற்றைக் கூறுகின்றதோ அவற்றையும் நாம் பின்பற்றமுடியாது. இந்த இரண்டும் அல்லாத ஏனைய அனைத்து விடயங்களிலும் முடியுமான வரை அனைத்து முஸ்லிம்களும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைக் கட்டாயம் பின்பற்றி நடக்க வேண்டும்.

எனவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ஒரு ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றுமானால் அதன் இமாம் தன்னிடம் இஸ்லாத்தை ஏற்க வரும் ஏனையவர்களிடம் இருந்து இஸ்லாத்தை ஏற்பதற்காக பைஅத் எடுக்க வேண்டும். அந்த பைஅத்தைச் செய்கின்றவர்கள் ஆன்மீகம், அரசியல் என இரண்டு துறை சார்ந்த விடயங்களுக்காகவும் தங்களது இமாமிடம் பைஅத் செய்ய வேண்டும். அதன்பிறகு அவர்கள் அரசியலுக்கோ அல்லது ஆன்மீகத்திற்கோ வேறு ஒரு தலைவரை ஏற்படுத்த முடியாது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்தவர்கள் ஆன்மீகம் சார்ந்த விடயங்களுக்காகவும் பைஅத் செய்தார்கள். இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் இபாதத்துக்கள் அனைத்தும் அழ்ழாஹ்வுக்கே செய்யப்பட வேண்டும். ஒரு நபிக்குக்கூட அவற்றை நாம் செய்ய முடியாது. ஐந்துநேரம் தொழுவேன், ஸக்காத் கொடுப்பேன், ரமழான் மாததத்தில் நோன்பு நோற்பேன் என்பன போன்ற இபாதத்துக்களைச் செய்வேன் என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் பைஅத் செய்திருக்கின்றார்கள். இதன் பொருள் அந்த இபாதத்துக்களை அந்த ஸஹாபாக்கள் நபியவர்களுக்குச் செய்தார்கள் என்பதல்ல. மாறாக இபாதத்துக்களை அல்லாஹ்வுக்குத்தான் செய்தார்கள். ஆனால் அவற்றைப் பேணி நடப்பதாக அன்று இமாமாக இருந்த அல்லாஹ்வின் தூதரிடம் உடன்படிக்கை செய்து கொண்டார்கள். அதாவது முஸ்லிம்களின் இமாமாக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஒரு மனிதராகத்தான் இருந்தார்கள். இருந்தும்கூட அவர்களிடம் ஸஹாபாக்கள் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விடயங்களுக்கும் பைஅத் செய்தார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் பைஅத் செய்த எந்தவொரு முஸ்லிமும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது காலத்தில் ஆன்மீகம், அரசியல் என வேறு வேறாகப் பிரிக்கவில்லை. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களும் அவ்வாறு வேறுபடுத்திக் கூறிய எந்தவொரு ஹதீஸும் கிடையாது. ஆரம்பத்தில் நாம் கூறியது போன்று முழு முஸ்லிம்களும் ஒரே தலைவரான ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் பைஅத் செய்தார்கள். அந்த பைஅத் ஆன்மீகம், அரசியல் இரண்டையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.

அல்லாஹ்வுக்குச் செய்யப்படும் இபாதத்துக்களைச் செய்வதற்கான பைஅத்தை மனிதர்களில் ஒருவராகிய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் ஸஹாபாக்கள் செய்துள்ளார்கள். எனவே இறுதிநாள் வரைக்கும் தோன்றக்கூடிய முஸ்லிம்கள் தங்களது காலத்து இமாமிடம் இதேபோன்று இபாதத்துக்களைச் செய்வதற்காக பைஅத் செய்ய முடியும். இவ்வாறு பைஅத் செய்வது நபிவழியாகும். நபியிடம் மட்டும்தான் ஆன்மீக பைஅத் செய்யலாம் என்பது எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் முன்வைக்கப்படுகின்ற கூற்று. இந்தக் கூற்று வஹியின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதும் அல்ல. அறிவுபூர்வமாக நிரூபிக்கக்கூடியதும் அல்ல. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மார்க்கமாக செய்த ஒவ்வொரு செயலும் ஏனைய முஸ்லிம்களுக்கு முன்மாதிரியாகும். அவற்றை எந்த அளவிற்குப் பின்பற்றுகின்றோமோ அந்த அளவிற்கு சிறந்த முஸ்லிம்களாக நாம் மாறுவோம். அதேநேரம் ரஸூலுல்லாஹி ச எங்கள் அனைவரையும்விட அழ்ழாஹ்வை அதிகமாகப் பயப்படக் கூடியவர்களாகவும், அதிக இபாதத்துக்கள் செய்பவர்களாகவும் இருந்தார்கள். அதற்கு ஏற்றாற்போல் அவர்களுக்குச் சில விNஷட அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

இங்கு ஒரு உதாரணத்தை மட்டும் முன்வைக்கின்றோம். பஜ்ரில் இருந்து மக்ரிப் வரையில் நாம் நோன்பு நோற்கின்றோம். மக்ரிபுடன் நோன்பை முடிக்காது அதனை நீடித்துச் செல்கின்ற பழக்கம் நபியின் காலத்தில் இருந்தது. ஸஹாபாக்களுக்கு அதனைத் தடை செய்துவிட்டு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதனைச் செய்தார்கள். இது பற்றி ஸஹாபாக்கள் விபரம் கேட்டபோது "எனக்கு அல்லாஹ் உண்ணவும் பருகவும் தருகின்றான்" என விளக்கம் கூறினார்கள். எனவே நபி மட்டும் நோன்பை நீடிக்கலாம் என்பது தெளிவாகிவிட்டது. இவ்வாறு ஏதேனும் ஒரு செயல் நபிக்கு மட்டும் உரியது எனக் கூறுவதானால் இஸ்லாமிய விதிகளின்படி அதற்கான தெளிவான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும். சில செயல்களை இஸ்லாம் நபிக்கு மட்டும் உரியதாக ஆக்கியிருப்பதனை ஒரு சிலர் ஸுன்னாவிலிருந்து தாம் விரும்பாததைப் புறக்கணிப்பதற்குச் சாட்டாகப் பயன்படுத்துகின்றார்கள். இதற்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது. "நபியவர்கள் மட்டும்தான் தொழுகை, நோன்பு, ஸக்காத் போன்ற இபாதத்துக்களைச் செய்வதற்காக பைஅத் எடுக்க முடியும்" என்பதும் இவ்வாறான ஒரு வாதமாகும். இதற்கு அல்லாஹ்வின் வேதத்தில் எந்தவித ஆதாரமும் அறவே கிடையாது. இது சத்தியத்தை மறுக்கும் ஒரு சில அறிஞர்கள் மக்களை வழிகெடுப்பதற்காக மக்களின் உள்ளங்களில் ஏற்படுத்தும் சந்தேகமாகும்.

(நபியே!) நீர் கூறுவீராக. மறைந்திருந்து மனிதர்களின் உள்ளங்களில் சந்தேகங்களை உண்டு பண்னுபவனின் சந்தேகங்களை விட்டும் மனிதர்களின் ரப்பிடத்தில், மனிதர்களின் அரசனிடத்தில், மனிதர்களின் இலாஹிடத்தில் பாதுகாப்புத் தேடுகின்றேன். (அத்தகையோர்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர். ( 114 : 1 - 6 )

14.பைஅத் நபிக்கு மட்டும் விNஷடமானதா?

எமக்குக் கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய அருளாகிய இஸ்லாம் எனும் நேர்வழி அழ்ழாஹ்வினால் ஒரு மனிதர் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு வஹி மூலம் இறக்கிவைக்கப்பட்டது. அது மட்டுமல்ல. மக்களுக்கு நேர்வழியாக இறக்கிவைக்கப்பட்ட இந்த இஸ்லாம் பற்றிய ஒரு தெளிவான விளக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வதும் அந்த மனிதருடைய கடமையாகும். அந்த மனிதர் இறுதித்தூதர் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்தான் என்பதை நாம் நன்கு அறிவோம்.

அழ்ழாஹ் அல்குர்ஆனில் கூறுவதாவது:-
.............. மனிதர்களின்பால் இறக்கப்பட்டதை அவர்களுக்கு (நீர்) தெளிவுபடுத்துவதற்காக உமக்கு (நாம்) நல்லுபதேசத்தை இறக்கியருளினோம். சிலவேளை அவர்கள் (நேர்வழியை ஏற்றுக்கொள்வது பற்றி) சிந்திக்கக்கூடும். ( 1 6 : 4 4 )

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களது கடமையை மிகமிக அழகாக நிறைவேற்றிவிட்டுச் சென்றார்கள். இறுதி ஹஜ்ஜின்போது பெருந்திரளான மக்கள் ஒன்றுகூடியிருந்த அரபா மைதானத்தில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாவது:- 'நிச்சயமாக உங்களது இரத்தங்களும்இ உங்களது சொத்துக்களும்இ (உங்களது சுயமரியாதைகளும்) உங்களது இந்த நாளினதும்,உங்களது இந்த மாதத்தினதும், உங்களது இந்த நகரத்தினதும் கண்ணியத்தைப் போன்று உங்களது ரப்பை (நீங்கள்) சந்திக்கும் நாள் வரை உங்கள் மீது கண்ணியமாக்கப்பட்டுள்ளது. கவனியுங்கள்! (நான் அனைத்தையும்) உங்களுக்கு எத்திவைத்து விட்டேனா?'(நபித்தோழர்கள்) 'ஆம்!' எனக் கூறினார்கள். 'யா அழ்ழாஹ்! நீயே (மறுமைநாளில்) சாட்சியம் கூறுவாயாக! (உங்களில்) சமூகம் தந்திருக்கக் கூடியவர்கள் இங்கு இல்லாதவர்களுக்கு எத்தி வையுங்கள். சிலவேளை செவிமடுப்பவரைவிட எத்திவைப்பவர் மிகவும் பாதுகாக்கக்கூடியவராக இருப்பார். உங்களில் சிலர் உங்களில் சிலரது கழுத்தை வெட்டுவதன்மூலம் எனக்குப் பின்னர் (நீங்கள்) நிராகரிப்பாளர்களாக மாறிவிடாதீர்கள்.'
( ஸஹீஹுல் புஹாரி - கி.ஹஜ்இ 131 )

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அழ்ழாஹ் வஹிமூலம் அறிவித்த அனைத்தையும் மக்களுக்கு அப்படியே எத்திவைத்து விட்டார்கள் என்பதற்கு ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் சாட்சியாளர்கள் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் நிரூபிக்கின்றது. அதேபோன்று ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கொண்டுவந்த நேர்வழியைத் தங்களது வாழ்வில் முழுமையாக செயல்படுத்தி முழு உம்மத்திற்கும் சிறந்த முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டினார்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றுவது அழ்ழாஹ்வின் திருப்தியைத் தேடும் ஒவ்வொரு மனிதன்மீதும் கடமையானது.
கண்;ணியமிக்க அழ்ழாஹ் கூறுவதாவது:-
உங்களில் அழ்ழாஹ்வையும்இ மறுமை நாளையும் அஞ்சு வதுடன் அழ்ழாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுவோருக்கு நிச்சயமாக அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் அழகியதோர் முன்மாதிரி இருக்கின்றது.
( 3 3 : 2 1 )

வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எங்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியுள்ளார்கள். அதேநேரம் நபியாகிய அவர்களுக்கு அழ்ழாஹ் சில விNஷட சட்டங்களையும் கொடுத்திருக்கின்றான். பொதுவாக ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் எமக்கு முன்மாதிரி உள்ளதாதக் கூறிய அழ்ழாஹ் அந்த முன் மாதிரியில் அடங்காத நபிக்குரிய விNஷட சட்டங்கள் பற்றியும் தெளிவாகக் கூறியுள்ளான். எல்லோருக்கும் பொதுவான சட்டத்தையும் நபிக்கு மட்டும் விNஷடமான சட்டத்தையும் நாமாக முடிவெடுக்க முற்பட்டால் நாம் தெளிவான வழிகேட்டில் சென்று விடுவோம். என்பது இஸ்லாமிய வரலாறு நிரூபிக்கும் உண்மையாகும். அழ்ழாஹ் தனது நபிக்கு மட்டும் உரிய சட்டத்தை நேரடியாக அல்குர்ஆனிலோ அல்லது அவனது தூதரின் நாவின் மூலமாகவோ தெளிவாக அறிவித்திருக்கின்றான். அவ்வாறு அறிவிக்கப்படாத நபியினது அனைத்து செயல்களும் முஸ்லிம்களுக்கு முன்மாதிரியானதே என்பதை மேலேயுள்ள அல்குர்ஆனிய வசனத்தின் மூலம் நாம் மிகத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். அல்குர்ஆன் கூறும் இந்த உண்மையை விளங்காததன் காரணமாகத்தான் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மரணித்த உடனேயே இரண்டு சாரார்கள் நிராகரிப்பாளர்களாக மாறிச் சென்றார்கள். ஒரு சாரார் நபிக்கு மட்டும் உரியதை எல்லோருக்கும் பொதுவானது என வாதிட்டு வழிகேட்டில் சென்றார்கள். மற்றொரு சாரார் எல்லோருக்கும் பொதுவான சட்டத்தை நபிக்கு மட்டும் உரியது என வாதிட்டு வழிகேட்டில் சென்றார்கள். 'எனக்குப் பின்னர் எந்த நபியும் இல்லை.' என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியிருக்க இந்த உம்மத்தில் ஒரு சாரார்: நபித்துவம் இந்த உம்மத்தில் முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்அவர்களுக்கு மாத்திரம் விNஷடமானது என தெட்டத் தெளிவாகக் கூறப்பட்டதை மறுத்து 'இல்லை நாமும் நபியாகலாம்' என வாதிட்டதனால் அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹு அவர்களின் காலத்தில் இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேறிச் சென்றார்கள். இதற்கு நேர்மாறாக மற்றுமொரு சாரார்: ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டும் விNஷடமானது எனக்கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாமல் 'ஸகாத் வசூலிப்பது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டும் விNஷடமான அழ்ழாவின் கட்டளை.' என வாதித்து முஸ்லிம்களின் இமாமிடத்தில் ஸகாத்தை ஒப்படைக்க மறுத்தார்கள். அவர்கள் இதற்கு முன்வைத்த ஆதாரம் 'ஸகாத் எடுக்கும்படி அழ்ழாஹ் நபிக்குத்தான் கட்டளையிட்டுள்ளான். எனவே நபிக்குப் பிறகு வரும் இமாம் ஸகாத்தை வசூலிக்க முடியாது' என்பதாகும். ஸகாத் நபிக்கு மட்டும்தான் எடுக்க முடியும் என்பதற்கு இது ஒருபோதும் ஆதாரமாக மாட்டாது. ஏனெனில் பொதுவாக 'அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி உள்ளது.' எனக் கூறிய அழ்ழாஹ்: நபிக்கு மாத்திரம் விNஷடமானவற்றை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளான். எனவே அத்தகைய ஆதாரங் கள் இல்லாத எதுவும் நபிக்கு மட்டுமுரியதாக ஆகமாட்டாது. பின்னால் ஒரு நபி வரமாட்டார் என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் 'எனக்குப் பின்னர் எந்தவித நபியும் கிடையாது.' 'எனது உம்மத்தில் முப்பது பொய்யர்கள் ஏமாற்றுக்காரர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தாம் நபியென வாதிப்பார்கள்.'என்றெல்லாம் எவ்வளவு தெளிவாக இந்த உம்மத்தில் நபிப்பட்டம் தனக்கு மட்டும் உரியது என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். மக்காவை வெற்றிகொள்வதற்காக சிறிது நேரம் கண்ணிய மாக்கப்பட்ட பிரதேசத்தில் யுத்தம் புரிவது தனக்கு மட்டும் விNஷடமாக அனுமதிக்கப்பட்டது என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எவ்வளவு தெளிவாக விளக்கியுள்ளார்கள் என்பதைப் பாருங்கள்.

மக்கா வெற்றியின்போது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எழுந்து நின்று கூறியதாவது:-
நிச்சயமாக அழ்ழாஹ் வானங்களையும், பூமியையும் படைத்த தினத்திலேயே மக்காவை கண்ணியமான பிரதேசமாக ஆக்கிவிட்டான். எனவே அது அழ்ழாஹ் கண்ணியமாக ஆக்கியுள்ளதால் மறுமை நாள் வரை கண்ணியமானதாகவே இருக்கும். எனக்கு முன்னரும் எவருக்கும் (அது) ஆகுமாக்கப்படவில்லை, எனக்குப் பின்னரும் எவருக்கும் (அது) ஆகுமானதாக இருக்க மாட்டாது. எனக்கு(க்கூட) குறிப்பிட்டதொரு நேர அளவைத் தவிர ஆகுமானதாக ஆக்கப் படவில்லை.
( ஸ.புஹாரி கி.மஙாஸி 50 )
எனவே ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மரணித்ததுமே இரண்டு வகையான கூட்டத்தினர் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்றுள்ளனர். இந்த இரண்டு வகையான கூட்டத்தினரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் செல்வதற்குஇ நபிக்கு மட்டும் விNஷடமான செயல் எது? என்பதை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் விளங்கத் தெரியாததே காரணம் என்பது புரிகின்றது. எனவே ஒரு சாரார் நபிக்கு மட்டும் உரியதை: பொதுவாக எல்லோருக்கும் உரியதாக மாற்றி வழிகெட்டார்கள். மறு சாரார் எல்லோருக்கும் பொதுவான சட்டத்தைத் தவறான ஆதாரங்களை முன்வைத்து நபிக்கு மட்டும் உரியதாக்கியதன் மூலம் வழிகெட்டார்கள். இஸ்லாத்தை ஏற்க வருவோரிடம் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இஸ்லாத்திற்காக பைஅத் எடுத்துள்ளார்கள். அவர்களை நோக்கி இஸ்லாத்திற்காகத் தன்னிடம் பைஅத் செய்யுமாறு கூறியுள்ளார்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுக்கும்போது அழ்ழாஹ்வுக்கு மாத்திரம் செய்யப்படும் இபாதத்துக்களைச் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள். அதேநேரத்தில் உலகில் இந்த தீனை மேலோங்கச் செய்வதற்காக ஒவ்வொரு முஸ்லிமும் கடைபிடிக்க வேண்டிய உலக காரியங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். இவை அனைத்தும் பின்னால் வரக்கூடிய முஸ்லிம்கள் எவ்வாறு இஸ்லாத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதற்கு அழகான முன்மாதிரியாகும்.
'இஸ்லாத்துக்காக பைஅத் எடுப்பது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டும் விNஷடமானது" என்ற ஒரு கருத்து சில அறிஞர்களால் முன்வைக்கப்படுகின்றது. இதன் உண்மை நிலையை ஒரு முஸ்லிம் மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அறிந்து கொள்வது அவனது கடமையுமாகின்றது. ஏனெனில் முன்னால் எடுத்துக் கூறப்பட்டது போன்று இதனை சரியாகப் புரிந்துகொள்ளாத ஒருவர் ஏற்கெனவே முஸ்லிமாக இருந்தால்கூட அவர் இதில் விடும் தவறின் காரணமாக இஸ்லாத்தை விட்டும் அவர் வெளியேறிவிடவும் வாய்ப்பு இருக்கின்றது. ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களுக்கு நபித்துவம் கிடைத் ததிலிருந்து அவர்கள் மரணிக்கும்வரை இஸ்லாத்தை ஏற்க வருபவர்களிடம், இஸ்லாத்துக்காக பைஅத் எடுத்துள்ளார்கள் என்பதை நிரூபிக்கக்கூடிய நிறைய ஹதீஸ்கள் இந்த நூலின் முன்பக்கங்களில் தரப்பட்டுள்ளன. புத்தகம் விரிவாகிவிடும் என்பதால் அவற்றை மீண்டும் இங்கு எழுத நாம் விரும்பவில்லை. ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்துக்காக பைஅத் எடுத்துள்ளார்கள் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டதன் பின்னர், 'இஸ்லாத்துக்காக பைஅத் எடுப்பது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் விNஷடமானது' எனக் கூறுபவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றதா? எனப் பார்த்தால்: அவர்களிடம் அவர்களது கூற்றை உண்மைப்படுத்தும் அல்குர்ஆனிய வசனமும் கிடையாது, ஸஹீஹான ஹதீஸும் கிடையாது. 'அழ்ழாஹ்வுக்கு மட்டும் செய்யக்கூடிய இபாதத்துக்களை சரியாகப் பேணி செய்து வருவேன் எனக்கூறி மனிதர்களிடம் பைஅத் செய்ய முடியாது.' என்பதுதான் 'பைஅத் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டும் விNஷடமானது.' எனும் அவர்களது தவறான கருத்துக்குரிய ஒரே நியாயமாகும். இதற்கு அவர்கள் பின்வரும் அல் குர்ஆன் வசனத்தை ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.
கண்ணியமிக்க அழ்ழாஹ் கூறுவதாவது:-
நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் செய்கின்றார்களோ அவர்கள் அழ்ழாஹ்விடமே பைஅத் செய்கின்றனர். அவர்களது கைகளுக்கு மேலால் அழ்ழாஹ்வின் கை இருக்கின்றது. எனவே யார் (மனிதர் மூலமாக அழ்ழாஹ்விடம் செய்த) பைஅத்தை முறிக்கின்றாரோ (அவர்) தனக்கு எதிராகவே (பைஅத்தை) முறிக்கின்றார். மேலும் யார் அழ்ழாஹ்விடம் செய்த பைஅத்தைப் பூரணமாக்குகின்றாரோ அவருக்கு அழ்ழாஹ் மகத்தான கூலியை அதி சீக்கிரத்தில் (நிச்சயமாகக்) கொடுப்பான். ( 4 8 : 1 0 )

மேலேயுள்ள அல்குர்ஆனிய வசனத்திற்கு 'பைஅத் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மட்டும் விNஷடமானது.' எனக் கூறுவோர் பின்வருமாறு விளக்கம் எழுதியுள்ளனர்.

'வணக்க வழிபாடுகள் யாவும் இறைவனுக்கே சொந்த மானது. இதற்கு இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும்தான் உறுதிமொழி எடுக்க முடியும். நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப் பட்டுள்ள நம்மைப் போன்ற அடிமைகளிடம் இந்த உறுதிமொழியை எடுக்கலாகாது. அவ்வாறு எடுத்திருந்தால் அதை உடனடியாக அவர்கள் முறித்துவிட வேண்டும்.' (பி. ஜைனுல் ஆபிதீன். குர்ஆன் மொ.பெ. வி.குறிப்பு 334)

'நம்மைப் போலவே வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப் பட்டுள்ள அடிமைகளிடம் பைஅத் செய்ய முடியாது' எனும் இவர் களது வாதம் சரியாக இருக்குமானால் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பைஅத் எடுத்ததை ஏற்றுக்கொள்ளும் இவர்கள்: ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வணக்க வழிபாடுகள் கடமை இல்லை என்றும் கூறவேண்டும். அவ்வாறு கூறுவதற்கு பீ. ஜெய்னுலாபிதீன் தயாரா.........? அவரது கண்டுபிடிப்பின்படி வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவருக்கு பைஅத் செய்யக்கூடாதல்லவா.....? அல்லது 'ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் பைஅத் எடுத்ததும் தப்பான காரியம்' என பீ. ஜெய்னுலாபிதீன் கூற வேண்டும். (நஊது பில்லாஹி மின்ஹா) ஏனெனில் நம்மைப்போலவே வணக்க வழிபாடுகள் செய்வது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் கடமையாகத்தானே இருந்தது............?

'இறைவனிடமோ, இறைவனால் அனுப்பப்பட்ட தூதரிடமோ மட்டும்தான் உறுதிமொழி எடுக்க முடியும் என்பதற்கான ஆதாரத்தைத்தான் கேட்கின்றோம்.........? அது எங்கே......?

உண்மை என்னவெனில் 'வணக்க வழிபாடுகள் செய்யக் கடமைப்பட்டவர்களுக்கு நாம் பைஅத் செய்ய முடியாது' என்பதோ அல்லது 'பைஅத் நபிக்கு மட்டும் விNஷடமானது.' என்பதோ அழ்ழாஹ்வின் வேதத்திலுள்ள ஆதாரங்களைக் கொண்டு நிரூபிக்கப் பட்ட உண்மைகளல்ல. மாறாக மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடாது எனக் கூறிவிட்டு, புதிய மத்ஹபுகளை உருவாக்கியுள்ள தனி மனிதர்களது தவறான கொள்கைகளே அவை. இவ்வாறு ஆதாரங்கள் இல்லாமல் தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அழ்ழாஹ்வின் வேதத்திலுள்ள வசனங்களை தமக்குச் சார்பாக வளைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பெரும் விபரீதங்களைத் தோற்று வித்துவிடும் என்பதை நல்ல நோக்கம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் உணர்ந்துகொள்ள வேண்டும். அத்தகைய விபரீதங்களில் ஒன்றை உங்கள்முன் தெளிவு படுத்துகின்றோம். பைஅத் செய்வது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரமே என்பதனை எந்தவித்திலும் கூறாத மேற்கண்ட அல்குர்ஆனிய வசனத்தினை அந்த வழிகேடான கொள்கையை நிரூபிக்கும் நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்கள், ஸகாத் வசூலிப்பது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரம் விNஷடமானது என வாதிட்டவர்களது குப்ரான வாதத்தினையும் ஏற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தோன்றுகின்றது. ஏனெனில் அவர்கள் தங்களது குப்ரான கொள்கையை நிலைநாட்டுவதற்கும் அழ்ழாஹ்வின் வேதத்தைத் தமக்கு சார்பாக வளைப்பதைத்தான் வழிமுறையாகக் கைக்கொண்டார்கள்.

கண்ணியமிக்க அழ்ழாஹ் கூறுவதாவது:-
(நபியே) அவர்களது சொத்துக்களில் இருந்து ஸகாத்தாக (ஒரு பகுதியை) நீர் எடுப்பீராக! அதன் மூலம் அவர்களை (நீர்) சுத்தப்படுத்தி வைப்பதுடன்இ அவர்களை (உளத்)தூய்மை அடையவும் செய்வீராக! மேலும் அவர்களுக்காக (நீர்) பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக உமது பிரார்த்தனை அவர்களுக்கு ஆறுதல் தரக்கூடியதாக இருக்கும். அத்துடன் அழ்ழாஹ் யாவையும் செவிமடுப்பவனாகவும்இ யாவற்றையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். ( 0 9 : 1 0 3 )

பைஅத் நபிக்கு மட்டும் உரியது என்பதை விளங்குவதற்கு இவர்கள் பயன்படுத்திய குர்ஆனிய வசனத்தைவிடஇ ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கி ஒருமையில் இடப்பட்டுள்ள: ஸகாத்தை எடுக்கும்படியான கட்டளையை வைத்து அது நபிக்கு மட்டும் விNஷடமானது என விளங்குவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஏனெனில் 'நீங்கள் ஸகாத் எடுங்கள்' என நபியைப் பார்த்துக் கட்டளைபட்டதுபோன்று 'நீங்கள் பைஅத் எடுங்கள்' என இவர்கள் முன்வைத்த அல்குர்ஆனிய வசனத்தில் கூறப்படவில்லை. ஸகாத் நபிக்கு மட்டும் விNஷடமானது எனும் கருத்தை முன்வைத்து இஸ்லாத்தை விட்டும் வெளியேறிச் சென்றவர்களுக்கு எதிராக இந்த உம்மத்தின் நேர்வழிநின்ற முதலாவது ஹலீபாவினால் அன்று போராட்டமே நடாத்தப்பட்டு அந்த வழிகெட்ட கொள்கை அன்றே அடியோடு ஒழிக்கப்பட்டுவிட்டது. அல்ஹம்துலில்லாஹ்! அதே போன்று 'பைஅத் நபிக்கு மட்டும் உரியது' எனும் ஆதாரமற்ற ஜாஹிலிய்யக் குரலுக்கு எதிராக அல்குர்ஆனைக் கொண்டு போராட்டம் நடாத்துவது முஸ்லிம்களின் கடமையாகும். நாற்பத்தியெட்டாவது அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தினை ஆதாரமாகக் கொண்டு பைஅத் நபிக்கு மட்டும் விNஷடமானது என வாதிப்பது ஸகாத் நபிக்கு மட்டும் விNஷடமானது என்கின்ற வாதத்தைவிட ஆதாரத்தால் பலவீனமானது. இந்த வாதங்களினால் ஏற்பட்ட விளைவுகளை வைத்துப் பார்த்தால் இரண்டுமே சமமானவையாகும். அதாவது ஸகாத்தை முஸ்லிம்களின் இமாம் வசூலிப்பதை மறுத்தவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவர்களாகக் கருதப்பட்டது போன்று, முஸ்லிம்களின் இமாமிடம் பைஅத் செய்ய வேண்டும் என்பது பற்றிய ஆதாரங்கள் தெளிவு படுத்தத்தப்பட்டதன் பின்னர் முஸ்லிமான ஒருவர் அது நபிக்கு மட்டும் உரியது எனக்கூறி பைஅத்தை முறிக்கும்போது அவரும் இஸ்லாத்தை விட்டும் வெளியேறியவராவார் என்பதுதான் இஸ்லாத்தினது அசைக்கமுடியாத முடிவாகும்.


15.இமாமிற்குரிய தகைமைகள் எவை?
மூன்று நபர்களோ அல்லது அதற்கு மேற்பட்டவர்களோ முஸ்லிம்களாக வாழவேண்டும் என்றால் அவர்கள் தங்களுக்கு என ஒரு அமீரை ஏற்படுத்திக் கொள்வது கடமை என்பதை ஏற்கனவே நாம் தெளிவுபடுத்தியதில் இருந்து நீங்கள் விளங்கியிருப்பீர்கள். இவ்வாறு தமக்கென ஒரு அமீர் இருக்க வேண்டும் என்பதை விளங்கிய அனேகமானோருக்கு ஏற்படக்கூடிய கேள்வி அந்த அமீரை நாம் எவ்வாறு அடையாளம் காண்பது என்பதாகும்.

முஸ்லிம்களை வழிநடாத்தும் அமீர் முற்றிலும் அழ்ழாஹ்வைப் பயப்படக்கூடிய, சிறந்த இஸ்லாமிய அறிவுஞானம் உள்ள ஒரு நல்லடியாராக இருக்க வேண்டும் என நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றோம். இந்த எதிர்பார்ப்பு நியாயமானதே.

இருந்தாலும் முஸ்லிம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பவர் எத்தகைய தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதைக்கூட நாமாக முடிவு செய்ய முடியாது. இஸ்லாம் அதற்கும் சில வரம்புகளை விதித்திருக்கின்றது.

உம்மு ஹுஸைன் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுடன், அவர்களது இறுதி ஹஜ்ஜின்போது நானும் ஹஜ் செய்தேன். ஜம்ரதுல் அகபாவிலே தங்களது வாகனத்திலே அமர்ந்தவாறு கல் எறிந்துவிட்டுத் திரும்பியபோது அவர்களுடன் பிலாலும், உஸாமாவும் இருப்பதைக் கண்டேன். அவர்களில் ஒருவர் (நபியினது) வாகனத்தை ஓட்டிச் சென்றார். மற்றவர் தனது ஆடையை வெயிலின் காரணமாக ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது தலைமீது பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகமான வார்த்தைகளைக் கூறினார்கள். பின்னர் அவர்கள் கூற (நான்) கேட்டதாவது:-

கால், கைகள் துண்டிக்கப்பட்ட (கறுப்பானவர் எனக் கூறிய தாகவும் நினைக்கின்றேன்) அடிமை ஒருவர் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டு (அவர்) அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழிநடாத்தும் காலமெல்லாம் அவர் சொல்வதை செவிமடுத்துக் கட்டுப்படுங்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ஹஜ் 51)

அமீராக இருக்கக்கூடியவர் அனைத்துக்கும் முதலாக அழ்ழாஹ் வின் வேதத்தைக் கொண்டு மக்களை வழிநடாத்த வேண்டும். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆனையும், ஹதீஸையும் குறிப்பதற்காக அழ்ழாஹ்வின் வேதம் எனும் வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார்கள். இஸ்லாத்திற்காக பைஅத் செய்ய முன்வருகின்ற ஒருவர் யாரிடம் பைஅத் செய்யப்போகின்றாரோ அவர் அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழிநடாத்துகின்றாரா என முதலில் பார்க்க வேண்டும். ஏனெனில் பல சிரமங்களுக்கு மத்தியில் நாம் செய்கின்ற பைஅத்தை இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறுவதற்காகவே செய்கின்றோம். இஸ்லாம் எனும் அழ்ழாஹ்வினால் இறக்கிவைக்கப்பட்ட கொள்கை அவனது வேதத்தில் மாத்திரமே இருக்கின்றது. அதனைக் கைவிட்டுவிட்டு எவரும் சுவனம் செல்ல முடியாது.

இன்று எமக்கு மத்தியில் பரவியுள்ள அனைத்து வகையான வழிகேடுகளையும் விட்டகன்று அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் தானும் பின்பற்றுவதுடன் தன்னோடு வந்து இணையும் மக்களையும் அதனடிப்படையில் வழிநடாத்தக்கூடிய தலைமைத்துவமே உண்மையான இஸ்லாமியத் தலைமைத்துவமாகும். எனவே பைஅத் செய்வதற்குத் தகுதியான அமீரைத் தேடுபவர் அவரிடம் இந்தத் தகுதி உள்ளதா? என்றுதான் முதலில் பார்க்க வேண்டும். ஒரே சந்தர்ப்பத்தில் பெரும்பாலான மக்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பின்போது மிக முக்கியமான செய்திகளை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மக்களுக்கு எத்தி வைத்தார்கள். அவற்றிலே இஸ்லாமியத் தலைமைத்துவத்தைப் பற்றியும், அதற்கு அடிபணிவதன் அவசியத்தையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எடுத்துக் கூறியுள்ளார்கள். இவ்வளவு முக்கியமான சந்தர்ப்பத்தில் ஒரு விடயத்தைக் கூறுவதே அதனது முக்கியத்துவத்தை உணர்த்தக்கூடியதாகும்.

அபூபக்ரா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஒட்டக சர்ச்சை நடந்த தினங்களில் ஒட்டகவாசிகளுடன் சேர்ந்து (நான்) போரிட நெருங்கிவிட்ட வேளையில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் இருந்து செவிமடுத்திருந்த வார்த்தையைக் கொண்டு அழ்ழாஹ் எனக்குப் பிரயோசனம் கிடைக்கச் செய்தான். பாரசீகத்தில் உள்ளவர்கள் தங்கள்மீது (தலைவியாக) கிஸ்ராவின் மகளை அதிகாரத்தில் அமர்த்திய (செய்தி) ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை அடைந்த போது "தமது அதிகாரத்தைப் பெண் ஒருவரிடம் ஒப்படைக்கும் எந்தவொரு சமூகமும் அறவே வெற்றிபெற மாட்டாது.|"எனக் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி கி.மஙாஸி 77)

அழ்ழாஹ் மனிதர்களில் ஒவ்வொரு சாராரையும் ஒவ்வொரு பொறுப்புக்கள் சுமத்தப்பட்டவர்களாகப் படைத்துள்ளான். மென்மையாகப் படைக்கப்பட்டுள்ள பெண்களுக்கு வீட்டுடன் கூடிய பொறுப்புக்களை அழ்ழாஹ் வழங்கியுள்ளான். பிள்ளைகளைப் பராமரித்து வளர்க்கும் பொறுப்பை அவர்களைவிடத் திறமையாக ஆண்களால் ஒருபோதும் நிறைவேற்ற முடியாது. அதேபோன்று கடினமான வேலைகளை அதற்கேற்பப் படைக்கப்பட்டுள்ள ஆண்களிடம் அழ்ழாஹ் ஒப்படைத்துள்ளான். அத்தகைய கடினமான கடமைகளில் தலைமைத்துவப் பொறுப்பும் ஒன்றாகும். இந்தத் தலைமைத்துவப் பொறுப்பை பெண்களிடம் ஒப்படைப்பதை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. எனவே இதற்கு மாற்றமான முடிவை எடுக்கக்கூடிய எந்தவொரு சமூகமும் வெற்றிபெற மாட்டாது என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெளிவாகக் கூறிவிட்டார்கள். எனவே முஸ்லிம்களின் தலைமைத்துவம் எப்போதுமே அவர்களில் உள்ள ஒரு ஆணின் கையில்தான் இருக்க வேண்டும்.

அழ்ழாஹ் அல்குர்ஆனில் கூறுவதாவது:-
விசுவாசம் கொண்டவர்களே! (நீங்கள்) அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடவுங்கள். (அத்துடன் அவனது) தூதருக்கும், உங்களில் நின்றும் உள்ள அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்பட்டு நடவுங்கள். அழ்ழாஹ்வையும், மறுமை நாளையும் (நீங்கள்) விசுவாசம் கொள்வோராக இருந்தால் ஏதேனும் ஒன்றில் (நீங்கள்) முரண்பட்டால் அதனை அழ்ழாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அந்தத் தீர்ப்பை முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்.) அதுதான் மிகச் சிறந்ததும், அழகான முடிவுமாகும்.
( 0 4 : 5 9 )

இந்த அல்குர்ஆனிய வசனம் நாம் பைஅத் செய்வதற்கு ஒரு மனிதரிடம் இருக்கவேண்டிய மற்றுமொரு தகுதியை சுட்டிக் காட்டுகின்றது. அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படச் சொல்லும் அழ்ழாஹ் அதனுடன் சேர்த்து உங்களில் நின்றும் உள்ள அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுமாறு கூறுகின்றான். எனவே எங்களது விடயங்களை நாம் ஒப்படைக்கும் அதிகாரி எம்மைச் சேர்ந்தவராகவே இருக்க வேண்டும் என்பதே அழ்ழாஹ் இங்கு சுட்டிக் காட்டும் அந்தத் தகுதியாகும். அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு பிறரை வழிநடாத்தினால் மாத்திரம் போதாது. மாறாக அழ்ழாஹ்வின் வேதம் கூறுவதுபோன்று அவரும் நடக்க வேண்டும். அவ்வாறு நடக்கின்ற ஒருவரால்தான் ஏனையவர்களையும் அழ்ழாஹ்வின் வேதத்தின்படி சரியாக வழிநடாத்த முடியும். எனவே அழ்ழாஹ் முஸ்லிம்களின் காரியங்களுக்குப் பொறுப்பாக இருந்து அவர்களை வழிநடாத்தக்கூடிய இமாமும் ஒரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளான். எப்போது அந்த இமாம் ஒரு முஸ்லிமிற்குரிய குறைந்த பட்சத் தகுதியை இழக்கின்றாரோ அந்தச் சந்தர்ப்பத்தில் உடனடியாக அவரிடம் இருந்து அதிகாரத்தைப் பறித்து அழ்ழாஹ்வின் வேதத்தைக்கொண்டு வழிநடாத்தக்கூடிய வேறு ஒரு முஸ்லிமான ஆணிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைப்பது அனைத்து முஸ்லிம்களினதும் கடமையாகும்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
சில தலைவர்கள் தோன்றுவார்கள். அவர்களில் (நீங்கள்) நல்லவற்றையும் காண்பீர்கள். தீயவற்றையும் காண்பீர்கள். எனவே யார் (அவர்களிடம் இருக்கக்கூடிய தீயவற்றை) அறிந்து வெறுக்கின்றாரோ (அவர் குற்றத்திலிருந்து) நீங்கிவிட்டார். யார் (அத்தீயவற்றை) மறுக்கின்றாரோ (அவர்) வெற்றியடைந்து விட்டார். ஆனால் யார் (அத்தீயவற்றை) விரும்பி, பின்பற்றியும் நடக்கின் றாரோ (அவர் குற்றவாளியாவார். அப்போது ஸஹாபாக்கள்) அவர்களுடன் (நாம்) போராட வேண்டாமா? எனக் கேட்டார்கள். (அந்தத் தலைவர்கள்) "தொழும் வரைக்கும் (அவர்களுடன்) போராட வேண்டாம்." எனக் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 16)

சில பாவங்களை செய்யக்கூடியவராக அமீர் மாறிவிட்டால் தொழுகையை நிலைநாட்டும் வரைக்கும் பொறுமை காக்கும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் உத்தரவிட்டதில் இருந்து தொழுகையை விட்டுவிட்டால் அந்தத் தலைவருக்குக் கட்டுப்பாடு கிடையாது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இதற்கான காரணம் தொழுகையை விடுகின்ற மனிதன் இஸ்லாத்தை நிராகரித்தவனாக அழ்ழாஹ்விடம் கணிப்பிடப்படுகின்றான் என்பதாகும். முஸ்லிம்களின் அமீராக மற்றொரு முஸ்லிம்தான் இருக்க வேண்டும் எனும் நியதிக்கு ஏற்ப தொழுகையை விடுவதன் மூலம் நிராகரிப்பாளனாக மாறிவிட்டவரது தலைமையைப் புறக்கணிப்பதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அனுமதிக்கின்றார்கள். இவ்வாறு தெளிவான ஆதாரங்களுடன் கூடிய குப்ரான காரியங்களை அமீர் செய்தால் அவரை அகற்றுவதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அனுமதித்ததன் மூலம் முஸ்லிமான ஒருவரே ஏனைய முஸ்லிம்களுக்கு அமீராக இருக்க வேண்டும் என்பதும் உறுதியாகின்றது.

முஹம்மத் பின் ஜுபைர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
குரைஷ; வம்சத்தினின்றும் உள்ள ஒரு தூதுக்குழுவில் நான் முஆவியா
ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களிடத்தில் இருந்தபோது "கஹ்தான் கோத்திரத்தில் இருந்து ஒரு அரசர் தோன்றுவார்." என அம்ர் பின் ஆஸ் ரலியல்லாஹூ அன்ஹூ ஹதீஸ் அறிவிப்பதாக செய்தி வந்தடைந்தது. உடனே முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ கோபத்துடன் எழுந்து நின்று, வழமையாக அவர்கள் புகழுவதைக்கொண்டு அழ்ழாஹ்வைப் புகழ்ந்த பின்பு கூறியதாவது:-

நிற்க! நிச்சயமாக உங்களில் சில மனிதர்கள் ஹதீஸ்களைப் பரிமாறிக் கொள்கின்றனர். (அவை) அழ்ழாஹ்வின் புத்தகத்திலும் இல்லை, ரஸூலுழ்ழாஹி
ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படவும் இல்லை. அவர்கள் உங்களில் உள்ள அறிவீனர்கள் ஆவார்கள். நப்பாசை கொள்ளக்கூடியோரை வழிகேட்டில் ஆழ்த்திவிடும் ஆசைகளை விட்டும் உங்களை (நான்) எச்சரிக்கின்றேன். "நிச்சயமாக ஆட்சியதிகாரம் குரைஷ; வம்சத்தில்தான் இருக்கும். (அவர்கள்) தீனை நிலை நாட்டும்வரை எவராவது அவர்களைப் பகைத்தால் அவரை முகம் குப்புற வீழ்த்தாது அழ்ழாஹ் விடமாட்டான்." என நிச்சயமாக நான் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறக் கேட்டுள்ளேன்.
(ஸஹீஹுல் புஹாரி கி.மனாகிப் 02)

குரைஷ; வம்சத்தை அழ்ழாஹ் ஆட்சிக்குரிய தகுதிகளுடன் படைத்துள்ளான். ஆண்களைப் பெண்களைவிட நிர்வாகத் திறமை உள்ளவர்களாகப் படைத்திருப்பது போன்று ஆண்களிலும் குரைஷpயர்களை இன்னும் திறமையுள்ளவர்களாக அழ்ழாஹ் படைத்துள்ளான். ஆகவே சுவனம் செல்லக்கூடிய முஸ்லிம்களின் கூட்டத்தில் குரைஷpயர்களும் ஏனையவர்களும் கலந்து இருந்தால் அதிகாரத்திற்கு குரைஷpயர்களை முற்படுத்த வேண்டும். இந்த முன்னுரிமை அவர்கள் தீனை நிலைநாட்டும் வரைக்கும்தான் அவர்களுக்கு இருக்கும். தீனை நிலைநாட்டுவதனை விட்டும் அவர்கள் ஒதுங்கி விட்டால் அதன்பிறகு அவர்களுக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. அத்துடன் அவர்களில் எவருமே இந்த நேர்வழியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்கள் இல்லாமல் ஏனையோர் இந்த நேர்வழியைப் பின்பற்ற முடியாது என்பது இஸ்லாத்தின் முடிவல்ல. எனவேதான் குரைஷpயரிடம் ஆட்சியதிகாரம் இருக்கும் எனக்கூறிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் "தீனை நிலை நாட்டும் வரை" எனும் நிபந்தனையையும் கூறினார்கள்.

இங்கு முன்வைக்கப்பட்டுள்ள சம்பவத்தில் இரண்டு ஹதீஸ்கள் காணப்படுகின்றன. இரண்டாவது ஹதீஸை அறிவிக்கும் முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக முதலாவது ஹதீஸ் தெளிவாக வந்து கிடைக்காத காரணத்தினால் அது ஒருசில மனிதர்களது கூற்று என நினைத்து அதனை மறுத்து விடுகின்றார்கள். ஆனால் அதுவும் ஆதாரபூர்வமான ஹதீஸ் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. அபூபக்கர், உமர் ரலியல்லாஹூ அன்ஹூ போன்றோர்கூட சில ஹதீஸ்களை அறியாமல் இருந்தார்கள் என்பதை இமாம் நவவி அவர்கள் சுட்டிக்காட்டியிருக்கும்போது முஆவியா ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு இந்த ஹதீஸ் தெரியவில்லை என்பதில் ஆச்சரியம் இல்லை.

குரைஷ; கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ஜமாஅதுல் முஸ்லிமீனில் இருக்கும் காலங்களில் அவர்கள் முஸ்லிம்களை அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழிநடாத்துவார்கள். அவர்கள் தீனை விட்டுவிட்டால் தீனை நிலைநாட்டக்கூடிய ஒருவரை அமீராக நியமித்து சுவனம் செல்ல விரும்புபவர்கள் இஸ்லாத்தில் வாழ்வார்கள். குரைஷpகள் மட்டும்தான் அமீராக இருக்க வேண்டும் என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ஒருபோதும் நிபந்தனையாகக் கூறவில்லை. எனவே முஸ்லிம்களின் இமாமுக்கு இருக்க வேண்டிய ஏனைய தகைமைகளைப் போன்று அவர் குரைஷpயாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை அல்ல. எனவேதான் குரைஷpயர்கள் ஆட்சி செய்வார்கள் எனக்கூறிய அதே ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் குரைஷp அல்லாத ஒருவர் கஹ்தான் கோத்திரத்தில் இருந்து முஸ்லிம்களை ஆட்சி செய்யக்கூடிய அரசராக வருவார் எனவும் கூறியுள்ளார்கள். ஆகவே குரைஷpயாக இருப்பது அமீருக்கான நிபந்தனை அல்ல. பைஅத் செய்துதான் இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டவர்கள் முன்னால் தோன்றக்கூடிய அடிப்படைக் கேள்வி அதற்குத் தகுதியானவரை அடையாளம் காண்பது எவ்வாறு? என்பதாகும். இக்கேள்விக்கு விடையாக பலரும் பல்வேறு அடையாளங்களை ஒன்றோ சுயமாகக் கற்பனை செய்து கூறியுள்ளார்கள். அல்லது அவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்களிடம் இருக்க வேண்டிய தகுதிகள் என ஆதாரம் இல்லாமல் கூறியுள்ளார்கள். ஆனால் நாமோ ஆதாரங்களின் அடிப்படையில் இஸ்லாத்திற்காக பைஅத் எடுக்கக் கூடிய ஒருவரிடம் இருக்க வேண்டிய மூன்று அம்சங்களை நேரடியான ஆதாரங்களுடன் மேலே தெளிவு படுத்தினோம். அவற்றோடு சேர்த்து "குரைஷpகளுக்கு அவர்கள் தீனை நிலைநாட்டும் வரை முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" எனக் கூறுகின்ற ஹதீஸ்களைச் சிலர் தவறாக விளங்கி, "குரைஷpயாக இருப்பதும் ஒரு நிபந்தனை" என அதனை மற்றொரு நிபந்தனையாகக் கூறியுள்ளனர். அந்தத் தவறான விளக்கம் மக்களுக்கு சத்தியத்தை விளங்குவதில் தடையாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக அது பற்றியும் நாம் விளக்கியுள்ளோம்.

இஸ்லாத்திற்காக பைஅத் எடுக்கக்கூடியவரை அடையாளம் காண்பதற்கு அவரிடம் இருக்கவேண்டிய மூன்று அம்சங்களை ஆதாரங்களுடன் குறிப்பிட்டோம். முதலில் அவர் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்ற முஸ்லிமாக இருக்கவேண்டும். அவர் ஓர் ஆணாகவும் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது அம்சமாகும். அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழிநடாத்தக்கூடியவராக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது அம்சமாகும். இந்த மூன்றும் அவரிடம் கட்டாயம் காணப்பட வேண்டிய அம்சங்களாகும்.

இஸ்லாத்திற்காக பைஅத் எடுப்பவரிடம் இருக்க வேண்டிய மூன்று அம்சங்களும் ஒருவரிடம் இருக்கின்றதா என்பதை அறிந்து அவரிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்ததன் பின்னர், தொடர்ந்தும் அந்தத் தகைமைகளுடன் அமீர் இருக்கின்றாரா? என்பதனையும் நாம் கண்காணிக்க வேண்டும். ஏனெனில் ஒரு சிலர் முஸ்லிம்களின் இமாமாக ஆகியதன் பின்னர் அந்தப் பதவியில் இருப்பதற்குரிய தகுதியை இழந்து விடுவர் என்பதனை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

எனவே இஸ்லாத்தை ஏற்று ஆரம்பத்தில் பைஅத் செய்கின்றவர்கள் அழ்ழாஹ்வின் வேதத்தின் அடிப்படையில் வழிநடாத்த வேண்டும் எனும் நிபந்தனையுடன் முஸ்லிமான ஒரு ஆணிடமே அந்த பைஅத்தைச் செய்ய வேண்டும். அவ்வாறு பைஅத் செய்தவர்கள் தங்களது இமாமிடம் தெளிவான ஆதாரங்களுடன் கூடிய குப்ரைக் காணும் வரை அந்த இமாமின் கட்டுப்பாட்டை விட்டும் வெளியேறக் கூடாது.

முஸ்லிம்களின் இமாம் எப்போது குப்ர் அல்லது ஷpர்க்கைச் செய்ய ஆரம்பிப்பதன் மூலம் முஸ்லிம் எனும் வட்டத்தை விட்டும் வெளியேறுகின்றாரோ அப்போதுமுதல் அவர் முஸ்லிம்களுக்கு இமாமாக இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றார் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். அதேபோன்று அழ்ழாஹ்வின் வேதத்தைக் கைவிட்டுவிட்டு, அல்லது அதனுடன் ஏனைய விடயங்களையும் சேர்த்து ஆதாரங்களாக வைத்துக்கொண்டு வழிநடாத்த ஆரம்பிக்கின்றாரோ அப்போதும்கூட அவர் இமாமாக இருப்பதற்குரிய தகுதியை இழந்தவராகின்றார். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பதவியில் இருப்பவரை ஒதுக்கிவிட்டு, முஸ்லிம்களின் இமாமாக இருப்பதற்குரிய மூன்று நிபந்தனைகளையும் கொண்டிருக்கக்கூடிய வேறு ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்துவது அனைத்து முஸ்லிம்களினதும் தலையாய கடமையாகும்.

ஸலமா பின் யஸீத் ரலியல்லாஹூ அன்ஹூ
ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் விடம் கேட்கின்றார்கள்:-
"அழ்ழாஹ்வின் நபியவர்களே! எங்களுக்கு சில அமீர்மார்கள் தோன்றி அவர்களது உரிமைகளை எம்மிடம் கேட்கின்ற அதே வேளை எமது உரிமைகளை மறுத்தால் (நீங்கள்) எங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றீர்கள்?" அவரை விட்டும் (ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பின்னர் (மீண்டும்) கேட்டார்கள். (மீண்டும்) அவரை விட்டும் (ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். பின்னர் இரண்டாவது விடுத்தம் அல்லது மூன்றாவது விடுத்தம் கேட்டபோது அவரை அஷ;அஸ் பின் கைஸ் ரலியல்லாஹூ அன்ஹூ இழுத்தார்கள். அப்போது (ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) "(அவர்கள் கட்டளையை) செவிமடுத்துக் கட்டுப்படுங்கள். அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்கள் மீது கடமையாகும். உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்கள் மீது கடமையாகும்." எனக் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 12)

இஸ்லாமிய சமுதாயத்தின் தலைமைத்துவத்தை வழிநடாத்தும் இமாமுக்குச் செலுத்தவேண்டிய கடமைகளை ஒவ்வொரு முஸ்லிமும் முழுமையாக நிறைவேற்றிவிட வேண்டும். அந்த இமாம் மக்களுக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தவில்லை என்பது அவருக்குச் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணமாக இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட மாட்டாது. சுய இலாபங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களை இஸ்லாம் அடியோடு மறுக்கின்றது. அழ்ழாஹ்வின் கொள்கையைப் பூமியில் பரவச்செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட தலைமைத்துவத்தை எமது உரிமை கிடைக்கவில்லை எனும் அற்ப காரணத்திற்காகப் புறக்கணித்து, பலம் இழக்கச் செய்ய முடியாது.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
"நிச்சயமாக எனக்குப் பின்னர் ஒருசிலரை ஏனையவர்களைவிட முற்படுத்துவதும், நீங்கள் பிழையாகக் காணக்கூடிய விடயங்களும் மிக விரைவில் ஏற்படும்." (இதனைக் கேட்ட நபித் தோழர்கள்) "எங்களில் அந்த (நிலையை) அடைந்தவருக்குத் தாங்கள் எவ்வாறு (நடக்கும்படி) ஏவுகின்றீர்கள்?"எனக் கேட்டார்கள். அதற்கு "உங்கள் மீதுள்ள கடமைகளை (நீங்கள்) நிறைவேற்றுங்கள். உங்களுக்குக் கிடைக்கவேண்டியதை (கிடைக்கச் செய்யும்படி) அழ்ழாஹ்விடம் கேளுங்கள்." எனக் கூறினார்கள்.
(முஸ்லிம் கி.இமாரா 10)
பைஅத் என்பது அழ்ழாஹ்விடம் பிரதிபலனை எதிர்பார்த்து மேற்கொள்ளப்படும் ஒப்பந்தமாகும். எனவே நாம் அந்த பைஅத்தின் மூலம் என்ன வகையான பிரதிபலனை எதிர்பார்த்தாலும் அதனை அழ்ழாஹ்விடம் இருந்து மாத்திரமே எதிர்பார்க்க வேண்டும். அதேபோன்று நாம் அந்த பைஅத்தின் மூலம் என்னென்ன கடமைகளை நிறைவேற்றுகின்றோமோ அவற்றை அழ்ழாஹ் வுக்காகவே நிறைவேற்ற வேண்டும். அவற்றிற்கான கூலியை அழ்ழாஹ்விடமே எதிர்பார்க்க வேண்டும். உண்மையில் இமாமுக்கு நாம் செலுத்தக்கூடிய கடமைகள் அழ்ழாஹ்வுக்கு செய்யக்கூடிய இபாதத்துக்கள் எனும் ஆழமான உண்மையை ஒரு முஸ்லிம் தெளிவாக விளங்கி வைத்திருக்க வேண்டும். இதுபற்றிய ஹதீஸை இப்புத்தகத்தில் அறுபத்திமூன்றாம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

மிகப் பரந்துபட்ட ஒரு நோக்கத்திற்காக நாம் பைஅத் செய்திருக்கின்றோம். அந்த நோக்கத்தை அடைவதற்காக அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு எம்மை வழிநடாத்தக் கூடிய எமது இமாமுக்கு நாம் முற்றிலும் கட்டுப்பட்டு நடக்கின்றோம். எந்த நோக்கத்திற்காக நாம் பைஅத் செய்திருக்கின்றோமோ அந்த நோக்கம் இமாமினால் உடைக்கப்படுகின்றபோது மாத்திரம்தான் இமாமுக்கான கட்டுப்பாடுபற்றி சிந்திக்குமாறு இஸ்லாம் எமக்குக் கட்டளை இடுகின்றது. சுய உரிமைகள் கிடைக்காதபோதும் கட்டுப்பட்டு நடக்கும்படி கூறிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அந்தக் கட்டுப் பாட்டை உடைப்பதற்கான சந்தர்ப்பத்தையும் தெளிவு படுத்தி யுள்ளார்கள். அது பல கட்டங்களாக அமைகின்றது. முதலாவது கட்டம் பற்றிப் பின்வரும் ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறினார்கள்:-
உங்களது சிறந்த இமாம்கள் யாரெனில் நீங்கள் அவர்களை விரும்புவீர்கள், அவர்கள் உங்களை விரும்புவார்கள். அவர்கள் அழ்ழாஹ்வின் அருளை உங்களுக்கு வேண்டுவார்கள், நீங்கள் அழ்ழாஹ்வின் அருளை அவர்களுக்கு வேண்டுவீர்கள். உங்களது கெட்ட இமாம்கள் யாரெனில் நீங்கள் அவர்களைக் கோபிப்பீர்கள், அவர்கள் உங்களைக் கோபிப்பார்கள். நீங்கள் அவர்களை சபிப்பீர்கள், அவர்கள் உங்களை சபிப்பார்;கள். "அழ்ழாஹ்வின் தூதரவர்களே! அவர்களுடன் (நாம்) வாள் எடுத்துப் போராட வேண்டாமா?" எனக் கேட்கப்பட்டது. உங்களுக்கு மத்தியில் தொழுகையை நிலைநாட்டும் வரை (போராட) வேண்டாம். உங்களது பொறுப்பாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் ஒன்றைக் கண்டால் அவரது (அந்தத் தவறான) செயலை வெறுத்து விடுங்கள். (அப்போதும்கூட) கட்டுப்பாட்டிலிருந்து எந்த விதத்திலும் கையை உருவிக் கொள்ளாதீர்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 17)

தவறுகள் இல்லாமல் அவனை அடிபணிவதற்கு அழ்ழாஹ் மலக்குகளைப் படைத்துள்ளான். மனிதனைத் தவறிழைக்கக் கூடியவனாகவே அழ்ழாஹ் படைத்துள்ளான். எனவே மனிதனாக இருக்கக்கூடிய முஸ்லிம்களின் இமாம் சிலவேளை தவறிழைத்து விட்டால் அவரது தவறை நாம் வெறுக்க வேண்டுமே ஒழிய அந்த இமாமையே எடுத்த எடுப்பில் புறக்கணிக்க ஆரம்பித்து விடக் கூடாது. இது எல்லா முஸ்லிம்களுக்கும் பொருந்தும். எல்லா மனிதர்களையும்போல முஸ்லிம்களின் இமாமும் சில தவறுகளைச் செய்யும்போது அவரை நாம் அவரது பதவியில் இருந்து அகற்றிவிட முடியாது. ஆனால் இமாம் செய்யும் தவறை ஏனைய முஸ்லிம்கள் சரிகாணவும் முடியாது. மனிதர்களை மலக்குகளாக மாற்ற முயற்சிக்கும் சாத்தியமற்ற போக்கிற்கும், இலட்சியத்தை மறந்து தனிமனித வழிபாட்டைத் தோற்றுவிக்கும் தவறான போக்கிற்கும் இடையில் அழ்ழாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தரக்கூடிய அறிவுபூர்வமான போக்கிற்கு இஸ்லாம் வழிகாட்டுகின்றது. எனவே எம்மை வழிநடாத்தக் கூடியவர் பாவங்கள் செய்தாலும் அந்தப் பாவங்கள் அவரை முஸ்லிம்களின் இமாமுக்கு இருக்க வேண்டிய தகைமைகளில் ஒன்றை இழந்தவராக ஆக்கிவிடாத வரையில் அவரது கட்டுப்பாட்டில் நாம் இருந்தே ஆக வேண்டும். தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவதனை இஸ்லாம் பாதுகாக்கும் விதத்தைப் பார்க்கும்போது இஸ்லாமிய அறிவு இல்லாமல் இஸ்லாமிய ஆர்வம் மட்டும் உள்ளவர்கள் ஆட்டம் கண்டு விடுவார்களோ எனும் அச்சம் ஒரு சிலருக்குத் தோன்றலாம். அந்த அளவிற்கு தலைமைத்துவத்தை மையமாக வைத்துக் கட்டியெழுப்பிய இஸ்லாமிய சமூக அமைப்பைப் பாதுகாப்பதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். முஸ்லிம்களின் இமாம் சில தவறுகளைச் செய்யக்கூடியவராக இருப்பார் என்பதனை சுட்டிக்காட்டக்கூடிய ஒரு ஹதீஸை முதலாவது கட்டமாக உங்கள் முன் எடுத்துவைத்தோம். அந்த இமாமின் தவறான போக்கு வளர்ந்துவிட்டதனை சுட்டிக்காட்டும் மற்றொரு ஹதீஸை இரண்டாவது கட்டத்தை நீங்கள் உணர்ந்துகொள்வதற்காக இப்போது உங்களுக்குத் தருகின்றோம்.

கஅப் பின் உஜ்ரா ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ஒருமுறை நாங்கள் ஒன்பது பேர் இருக்கும்போது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எங்களிடம் வந்தார்கள். ஐந்தும் நான்குமாக இரண்டில் ஒரு எண்ணிக்கை அரபியர்களாகவும், மற்றது அஜமிகளாகவும் இருந்தோம். அப்போது (ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் ) கூறினார்கள்:-

கேளுங்கள்! (பொய் சொல்வதுடன் அநீதம் இழைக்கக்கூடிய) தலைவர்கள் எனக்குப் பின்னால் தோன்றுவார்கள் என்பதை செவியுற்றீர்களா? யார் அவர்களிடத்தில் சென்று அவர்களது பொய்யை உண்மைப்படுத்துவதுடன், அவர்கள் செய்யும் அநீதத்திற்கும் அவர்களுக்கு உதவிசெய்கின்றானோ (அவன்) என்னில் நின்றும் உள்ளவன் இல்லை. நான் அவனில் நின்றும் உள்ளவனும் இல்லை. (அவன் மறுமை நாளில்) நீர்த்தடாகத்தில் (நான் நிற்கும்போது) என்னிடம் வரக்கூடியவனும் இல்லை. யார் அவர்களிடம் செல்லாமலும், அவர்கள் செய்யும் அநீதத்தில் அவர்களுக்கு உதவிசெய்யாமலும், அவர்கள் சொல்லக் கூடிய பொய்களில் அவர்களை உண்மைப் படுத்தாமலும் இருக்கின்றாரோ அவர் என்னில் நின்றும் உள்ளவராவார். நான் அவரில் நின்றும் உள்ளவன் ஆவேன். அவர் (மறுமைநாளில்) நீர்த்தடாகத்தில் (நான் நிற்கும்போது) என்னிடம் வந்தடைவார்.
(திர்மிதி, அஹ்மத் - இதனை அல்பானி, ஷ{ஐப்
போன்றோர் ஸஹீஹ் என ஏற்றுள்ளனர்.)

ஆரம்ப கட்டத்தைவிட மோசமான நிலையிலுள்ள தலைவர்களைப் பற்றி இந்த ஹதீஸ் கூறுகின்றது. அவர்கள் பொய் பேசுவதுடன் மக்களுக்கு அநீதம் இழைப்பதற்கும் தயங்க மாட்டார்கள். இத்தகைய தலைவர்களின் அநியாயத்தின் காரணமாக மறுமையில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் கையிலிருந்து நீர் பெற்றுப் பருகும் பாக்கியம்கூட இவர்களுக்குக் கிடைக்காது. அதுமட்டுமல்ல! இவர்கள் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைச் சேர்ந்தவர்களாகவும் கணிப்பிடப்பட மாட்டார்கள். இத்தகைய கெட்ட தலைவர்கள் எமக்கு அமீர்மார்களாக வரும் பட்சத்தில் அவர்களது பாவங்களுக்குத் துணைபோகாமல் அவர்களை விட்டும் தூரமாகியிருந்து எமது தீனைப் பாதுகாத்துக் கொள்வதே எமது கடமையாகும். இந்த அளவிலும் நாம் பொறுமையைக் கையாள வேண்டும் என்றுதான் இஸ்லாம் எமக்குக் கூறுகின்றது.

இந்த நிலைமை இன்னும் மோசமாகி மூன்றாவது கட்டத்தை சிலவேளை அடையும். அந்த மூன்றாவது கட்டம் தோன்றிவிட்டால் அந்தத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு முஸ்லிம் இருக்கக் கூடாது என இஸ்லாம் போதிக்கின்றது. இந்த மூன்றாவது கட்டம் என்பது முஸ்லிம்களின் இமாமிற்கு இருக்கவேண்டிய மூன்று தகுதிகளில் ஒன்றை இழந்துவிடுகின்ற நிலையாகும். இந்த நிலையை மிகத் தெளிவாகப் பிரித்தறிந்து கொள்வதற்குத்தான் இதனது ஆரம்ப இரு கட்டங்கள் பற்றிய ஹதீஸ்களை உங்கள் முன்வைத்துத் தெளிவுபடுத்தியுள்ளோம். தெளிவான, நேரடி ஆதாரங்களுடன்கூடிய குப்ரையோ அல்லது ஷpர்க்கையோ செய்வதன் மூலம் ஒரு மனிதன் இந்த நிலையை அடைகின்றான். அதுபற்றி விளக்கக்கூடிய ஹதீஸ்களைப் பாருங்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
மிக விரைவில் உங்கள் மீது சில தலைவர்கள் தோன்றுவார்கள். (அவர்கள்) தொழுகையை அதற்குரிய நேரங்களை விட்டும் பிற்படுத்துவார்கள். அத்துடன் பித்அத்துக்களையும் தோற்றுவிப்பார்கள். (அப்போது) "நான் எவ்வாறு செய்துகொள்ள வேண்டும்?" என இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூ அன்ஹூ கேட்டார்கள். "உம்மு அப்தின் மகனே! எவ்வாறு செய்துகொள்ள வேண்டும் என என்னிடம் கேட்கின்றாயா? "அழ்ழாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது." எனக் கூறினார்கள்.
( இப்னுமாஜா, அஹ்மத், தபரானி - ஸஹீஹ் ஜா.ஸ-3664 )

முஸ்லிம்களின் தலைவர்கள் மோசமடைந்து, தொடர்ந்தும் அவர்கள் முஸ்லிம்களுக்குத் தலைவர்களாக இருக்கும் தகுதியை இழந்துவிடுபவர்களை இனம் காண்பதற்காக ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறிய ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். இந்த ஹதீஸில் தெளிவான குப்ரில் அடங்கக்கூடிய இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. தொழுகையை அதன் கடைசி நேரத்தை விடவும் தாமதப்படுத்துதல், பித்அத் செய்தல் என்பனவே தெளிவான குப்ரில் அடங்கக்கூடிய அந்த இரண்டு விடயங்களுமாகும்.

விசுவாசிகள்மீது நேரம் குறிப்பிடப்பட்டதாகவே தொழுகை கடமையாக்கப்பட்டிருப்பதாக அழ்ழாஹ் கூறுகின்றான். ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரம், இறுதிநேரம் என இரண்டிரண்டு நேரங்கள் உள்ளன. இஷhத் தொழுகையைத் தவிர ஏனைய தொழுகைகளுக்கு அவற்றின் ஆரம்ப நேரம் சிறந்ததாகும். இருந்தாலும் அவற்றிற்குரிய இறுதி நேரத்திற்கிடையில் அவற்றைத் தொழுவதற்கு ஒரு முஸ்லிமுக்கு அனுமதி உள்ளது. ஆனால் பிரயாணியல்லாத எவரும் அந்தந்தத் தொழுகைக்குரிய இறுதி நேரத்தை விடவும் சுயமாகத் தாமதப் படுத்தினால் அது இஸ்லாத்தில் தொழுகையாகக் கணிக்கப்பட மாட்டாது. அவ்வாறு தொழுபவன் அதனை விட்டவனாகவே கருதப்படுவான். தொழுகையை விடுகின்றவன் நிராகரித்து விட்டவன் எனவும், இணைவைத்துவிட்டவன் எனவும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியுள்ளார்கள். நேரம் குறிப்பிடப்பட்டு கடமையாக்கப்பட்ட தொழுகையை அவற்றிற்குரிய இறுதி நேரம் வரைக்கும் தொழாத தலைவர்கள் நிராகரிப்பாளர்களாக, இணைவைப்பாளர்களாக மாறிவிடுகின்றார்கள். எனவேதான் எத்தiனையோ பாவங்கள் செய்யும்போது கட்டுப்பாட்டை விட்டும் கையை உருவிக்கொள்ள வேண்டாம் எனக் கூறிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம், தொழுகையை அதற்குரிய இறுதி நேரம் வரை தொழாத தலைவர்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது எனக் கூறிவிட்டார்கள். நல்லவைகளையும், தீயவைகளையும் காணும் பட்சத்தில் பாவமான விடயங்களில் மாத்திரம் கட்டுப்பாடு கிடையாது எனக் கூறிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தொழுகைக்குரிய இறுதி நேரம் வரைக்கும் அதனைத் தொழாத தலைவர்கள் தோன்றினால் அத்தகைய தலைவர்களுக்கே கட்டுப்பட வேண்டாம் எனக் கூறுகின்றார்கள். இவ்வாறு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுவதற்கான காரணம் முஸ்லிம்களை வழிநடாத்தக்கூடிய அமீர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்பதாகும். தொழுகையை விடுவதன் மூலம் இத்தகையோர் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி விடுகின்றனர். எனவே அவர்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு அமீர்களாக இருக்கும் தகுதியை இழந்து விடுகின்றனர்.

தொழுகையை விடுவது போன்றே பித்அத்துக்களைச் செய்வது அல்லது அவற்றைத் தோற்றுவிப்பது முஸ்லிமாக இருப்பவனை இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேற்றி விடும். இபாதத்தை உருவாக்கக்கூடிய அதிகாரம் அழ்ழாஹ்வுக்கு மட்டும் உரியது. அந்த அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு ஏனையவர்களும் மார்க்கத்தில் இல்லாதவைகளை நல்லவையென செய்வதுதான் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பித்அத் எனப் படுகின்றது. இவ்வாறு செய்வோர் அழ்ழாஹ்வுக்கு இணைகற்பித்த குற்றத்திற்கு ஆளாகி, இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றனர். அல்குர்ஆனில் அழ்ழாஹ் பின்வருமாறு கேட்கின்றான். அழ்ழாஹ் அனுமதிக்காத மார்க்க சட்டதிட்டங்களை அவர் களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய (அழ்ழாஹ்வுக்கு) இணையானவர்கள் இருக்கின்றனரா?.......................
( 4 2 : 2 1 )

எனவே பித்அத்தைத் தோற்றுவிப்பவன் அழ்ழாஹ்வுக்கு நிகரான இணையாக முயற்சிக்கின்றான் என அழ்ழாஹ் கூறுகின்றான். இதன்மூலம் இவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகின்ற காரணத்தினால் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்குத் தலைவர்களாக இருக்கும் தகுதியை இவர்கள் இழந்துவிடுகின்றனர். எனவே இத்தகையவர்களுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்படவேண்டிய அவசியம் கிடையாது என்பதனையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மேற்கண்ட ஹதீஸில் முஸ்லிம்களுக்குப் போதிக்கின்றார்கள். இவ்வாறு பித்அத்துக்களை உருவாக்குபவர்களது இறுதி முடிவு என்னவாகும் என்பதையும் இன்னும் தெளிவாக ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பின்வரும் ஹதீஸிலே விபரிக்கின்றார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் பிரசங்கம் செய்தார்கள். அப்போது கூறினார்கள்:-

நிச்சயமாக நீங்கள் பாதணி அற்றவர்களாகவும், ஆடை அணியாதவர்களாகவும், ஹத்னா செய்யப்படாதவர்களாகவும் அழ்ழாஹ்வின்பால் ஒன்று சேர்க்கப் படுவீர்கள்.
முதலாவது படைக்கும்போது ஆரம்பித்தது போன்ற (நிலைக்கு) அவனை மீண்டும் (நாம்) கொண்டுவருவோம். (இது) நம்மீது கடமையான ஒரு வாக்குறுதி ஆகும். நிச்சயமாக நாம் (இதனைச்) செய்பவர்களாவோம்.(21-104)
பின்னர் மறுமை நாளில் முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுபவர் இப்றாஹீம் (அலை) அவர்களாவார்கள். அறிந்துகொள்ளுங்கள்! எனது உம்மத்தில் இருந்து சிலரைக் கொண்டுவரப்படும். அவர்கள் இடது புறமாக (நரகிற்கு) ஓட்டிச் செல்லப்படுவார்கள். அப்போது நான் "எனது ரப்பே! (அவர்கள்) எனது தோழர்கள்." எனக் கூறுவேன். உடனே "உமக்குப் பின்னால் (அவர்கள்) ஏற்படுத்திய பித்அத்துக்கள் பற்றி நீர் அறியமாட்டீர்." எனக் கூறப்படும். அப்போது (நான்) "அவர்களுக்கு மத்தியில் இருக்கும்வரை அவர்களை நான் கண்காணித்துக் கொண்டிருந்தேன். .................வசன முடிவு வரை ( 5 : 117 )" என (அழ்ழாஹ்வின்) சிறந்த அடியார் கூறியது போன்று கூறுவேன். அதற்கு "நிச்சயமாக இவர்கள் நீர் இவர்களை விட்டுப் பிரிந்தது முதல் இவர்கள் வந்த வழியிலேயே மிக வேகமாகத் திரும்பிச் செல்லக் கூடியோராகவே (முர்தத்துகளாகவே) இருந்து கொண்டிருந்தனர்." எனக் கூறப்படும்.
(ஸஹீஹுல் புஹாரி கி.தப்ஸீர் ஸூ.மாயிதா)

அவசியமான தகுதிகளுடன் முஸ்லிம்களின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர்கள் காலப்போக்கில் தொழுகையை விடுவதன் மூலம் அல்லது பித்அத்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறக்கூடிய தலைவர்கள் தோன்றுவர். அத்தகையவர்கள் தோன்றிவிட்டால் அவர்களுக்கு முஸ்லிம்கள் எந்தவகையிலும் கட்டுப்படக்கூடாது என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியுள்ளதை இது வரை பார்த்தோம். அதேபோன்று முஸ்லிம்களின் விடயங்களைப் பொறுப்பேற்கும் தலைவர்கள் அழ்ழாஹ்வின் வேதத்தைப் புறக்கணித்துவிட்டு, அது அல்லாததைக் கொண்டு வழிநடாத்தும் நிலையும் தோன்றலாம் என்பதையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எச்சரிக்கின்றார்கள். அத்தகைய சந்தர்ப்பத்தில் ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதையும் அவர்கள் எமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
எனக்குப் பின்னர் உங்களது விடயங்களை சில மனிதர்கள் பொறுப்பேற்பார்கள். (நீங்கள்) பாவமாகக் கருதுபவற்றை நன்மையானது என உங்களுக்குக் கூறுவார்கள். (நீங்கள்) நன்மையானவை என அறிந்திருக்கக்கூடியவற்றை பாவங்கள் என மறுத்துரைப்பார்கள். உங்களினின்றும் யார் அந்தக் (காலத்தை)அடைகின்றாரோ (அவர் அத்தகையோருக்குக் கட்டுப்படாமல் இருக்கட்டும்.) ஏனெனில் கண்ணியமும் மகத்துவமும் மிக்க அழ்ழாஹ்வுக்கு மாறு செய்தவருக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது.
( தபரானி, ஹாகிம் - ஸஹீஹ். ஜா.ஸ-3672 )

அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு முஸ்லிம்களை வழிநடாத்துவதற்கு உடன்படுபவர்தான் முஸ்லிம்களுக்கு அமீராக ஆகமுடியும். அந்த அமீரிடம் பைஅத் செய்யக்கூடியவர்களும் அழ்ழாஹ்வின் வேதத்தைப் பின்பற்றுவதற்காகத்தான் பைஅத் செய்கின்றார்கள். பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் தனது கொள்கையை மாற்றிக் கொண்டால் அவரது முடிவுகளுடன் ஏனைய முஸ்லிம்களது முடிவுகள் நிச்சயமாக முரண்படும். அழ்ழாஹ்வின் வேதத்தில் நல்லவைகள் எனக் கூறப்பட்டிருப்பவை கொள்கையை மாற்றிக்கொண்ட தலைவருக்கு தீயதாகவே தென்படும். அழ்ழாஹ்வின் வேதத்தில் தீயவைகள் எனக்கூறப்பட்டிருப்பவை அவருக்கு நல்லவையாகத் தோன்றும். அதனைத்தான் மேற்கண்ட ஹதீஸில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சுட்டிக் காட்டுகின்றார்கள்.

ஐவேளைத் தொழுகையை விடுதல், பித்அத் செய்தல் என்பன போன்று அழ்ழாஹ்வின் வேதத்தைக் கைவிடுவதும் முஸ்லிமாக இருப்பவரை இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக் கூடிய செயலாகும். எனவேதான் எம்மை அடித்து, எமது சொத்துக்களைப் பறித்தெடுக்கும் அமீருக்குக்கூட கட்டுப்படும்படி கூறிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் முஸ்லிம்கள் பின்பற்றக்கூடிய அழ்ழாஹ்வின் வேதத்தின் முடிவுகளுக்கு முரணான திசையில் அந்த அமீர் செல்லும்போது அவருக்கு எந்தவிதக்; கட்டுப்பாடும் கிடையாது எனக் கூறுகின்றார்கள். முஸ்லிம்களுக்கு அமீராக இருப்பதற்கு மூன்று தகைமைகள் இருக்க வேண்டும் என நாம் குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியதை இந்த ஹதீஸ்களும் உண்மைப்படுத்துகின்றன. அதாவது அந்த நிபந்தனைகள் உடையும்போது கட்டுப்பாடு கிடையாது என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறியுள்ளதன் மூலம் அவை உறுதிப்படுத்தப் படுகின்றன.

16.பல தலைவர்களுக்கு பைஅத் செய்யலாமா?
மனிதர்களின் சிந்தனைகள் வித்தியாசமானவை. ஒரே கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள்கூட முரண்படக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படவே செய்கின்றன. ஒவ்வொரு விடயத்திலும் வாழ்நாள் முழுக்க ஒரே கருத்தைக் கூறிய இரண்டு மனிதர்களை மனித வரலாற்றிலேயே காண முடியாது. இவ்வாறு முரண்படும் தன்மையைக் கொண்டவனாக மனிதனைப் படைத்த அழ்ழாஹ் மனிதனது நலன்கருதி ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அவர்கள் ஒருமித்திருப்பதை அவர்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதனை நடைமுறைச் சாத்தியமாக்கிடுவதற்கான வழியையும் அவன் வகுத்துத் தந்துள்ளான்.

சுவனம் செல்வதற்கு ஆசையுள்ளவர்கள் அனைவரும் ஒரே அமைப்பாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். எனவே அவர்களை ஒரே அமைப்பாக அணிதிரளச் செய்வதற்காக தலைமைத்துவத்தை ஏற்று பைஅத் செய்வதனைக் கடமையாக்கிய அழ்ழாஹ் அந்தக் கட்டமைப்பை உடைக்கும் எந்தவொரு செயலுக்கும் அவனது தீனிலே இடம் வைக்கவில்லை. அந்த வகையில் மாற்றுத் தலைமைத்துவம் ஏற்படுத்துவதற்கு அழ்ழாஹ்வின் தீனில் எந்த அனுமதியுமில்லை. மாற்றுத் தலைமைத்துவம் ஏற்படுத்தவே முடியாதபோது, அந்த தலைமைத்துவத்திடம் பைஅத் செய்வது எங்ஙனம் அனுமதிக்கப்படப் போகின்றது. ஒரே நோக்கம் கொண்ட வர்கள் இரண்டுபட முடியாது எனும் அடிப்படைத் தத்துவத்தை அழ்ழாஹ்வின் வேதம் போதித்தது போன்று வேறு எந்தக் கொள்கையும் போதித்தது கிடையாது. ஆனால் பரிதாபத்திற்குரிய நிலை என்னவெனில் இந்த உம்மத் பிளவுபட்டது போன்று வேறு எந்த உம்மத்தும் பிளவுபட்டதும் கிடையாது. ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
நிச்சயமாகக் குழப்பங்கள் குழப்பங்களாகத் தோன்றும். இந்த உம்மத்தின் அதிகாரம் ஒன்றுபட்டிருக்கும்போது அதனைப் பிளவுபடுத்த எவராவது முயற்சித்தால் அவர் யாராக இருந்தாலும் அவரை வாளினால் வெட்டிவிடுங்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 14)

நரகின் அடித்தட்டிற்குச் செல்லக்கூடிய நயவஞ்சகர்களைக் கூட சில காரணங்களுக்காக வெட்டுவதற்கு அனுமதிக்காத ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மாற்றுத் தலைமைத்துவம் உருவாக்க முயற்சிப்பவர் நல்லவரா? கெட்டவரா? என்பதைக்கூடப் பார்க்காது வெட்டிவிடும்படி கூறுகின்றார்கள். திருட்டு, விபச்சாரம் என்பன இஸ்லாத்தில் பெரும்பாவங்களாகும். முஸ்லிமான ஒருவன் அவற்றை செய்துவிட்டால் அவற்றிற்காக அவன் மறுமையில் தண்டிக்கப்பட்டாலும் சுவனம் செல்வதனை அவை ஹராமாக்கி விடமாட்டாது. ஆனால் ஜமாஅத்திலிருந்து வெளியேறி மாற்றுத் தலைமைத்துவம் உருவாக்க முயற்சிப்பவன் ஒருபோதும் சுவனம் செல்லமுடியாது. முஸ்லிம்களின் ஒன்றுபட்ட அணியை உடைப்பதை அந்த அளவிற்கு பாரிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இந்த முடிவு மனிதர்கள் சிந்தித்து எடுத்த முடிவு அல்ல. மாறாக நுண்ணறிவுள்ளவன் என நாம் அனைவரும் ஏற்று, நம்பும் அழ்ழாஹ்வின் முடிவாகும். இதுபற்றி அழ்ழாஹ் தனது தூதரின் மூலம் மேலதிக விளக்கத்தையும் எடுத்துக் கூறியுள்ளான்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
நிச்சயமாக எனக்குப் பின்னர் குழப்பங்கள் குழப்பங்களாகத் தோன்றும். எனவே எவராவது ஜமாஅத்தை விட்டும் பிரிந்தால் அல்லது முஹம்மத் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் உம்மத்தின் ஒன்றுபட்ட நிலையை (மாற்றி அதனைப்) பிளவுபடுத்த எவராவது முயற்சிப்பதைப் பார்த்தால் அவர் யாராக இருந்தாலும் அவரைக் கொன்று விடுங்கள். ஏனெனில் கூட்டமைப்பின்மீதே அழ்ழாஹ்வின் கை இருக்கின்றது. iஷத்தான் பிரிந்து சென்றவனுடன் இருந்துகொண்டு (அவனை இஸ்லாத்திற்கு எதிராகத்) தூண்டிக்கொண்டிருக்கின்றான்.
(இ.ஹிப்பான், நஸாஈ - அறிவிப்hளர் வரிசை ஸஹீஹானது)

அழ்ழாஹ்வின் கட்டளைப்படி பைஅத் எனும் வாசலினால் இஸ்லாத்தினுள் நுழைந்த ஒருவன் எக்காரணத்தைக் கொண்டும் முஸ்லிம்களின் ஜமாஅத்தை விட்டும் அவன் பிரிந்து செல்ல முடியாது. தலைமைத்துவத்துடன் முரண்படக்கூடிய முடிவுகள் ஏற்பட்டுவிட்டால் பிரிந்துசெல்வது அல்லது கூட்டமைப்பை உடைக்க முயற்சிப்பதுதான் அதற்குரிய பரிகாரம் என அறிவற்ற மனிதன் நினைக்கின்றான். ஆனால் பொறுமையுடன் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி சர்வ ஞானம் கொண்ட அழ்ழாஹ் போதிக் கின்றான். அதனையும் மீறி செயல்படுபவனைக் கொன்று விடும்படி அழ்ழாஹ் தனது தூதர் மூலம் கட்டளையிடுகின்றான். அந்த வரம்பை மீறக்கூடியவன் அழ்ழாஹ்வின் கட்சியிலிருந்து விலகி, iஷத்தானின் தோழமையில் இருக்கின்றான் என்பதையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெளிவாகக் கூறிவிட்டார்கள். இவை அனைத்துக்கும் மேலாக முஸ்லிம்களினதும், அவர்களது இமாமினதும் இஸ்லாத்தைவிட சிறந்த இஸ்லாத்தைத் தேடி, பிரிந்துசென்ற அவனை iஷத்தானே செயல்படுத்திக் கொண்டிருக்கின்றான் என்கின்ற உண்மையையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

சாண் ஏற முழம் சறுக்கும் அறிவீனமான வழிமுறைகளை இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருமித்த தலைமைத்துவம் இருக்க இரண்டாம் தலைமைத்துவம் தோன்றுவதை இஸ்லாம் அறிவீனமாகவே நோக்குகின்றது. எனவே இரண்டாம் தலைமைத் துவத்திற்கு பைஅத் செய்வது ஒருபுறம் இருக்க அத்தகைய ஒரு தலைமைத்துவத்தையே இஸ்லாம் மறுத்து விடுகின்றது. இதனையும் மீறி செயல்படுகின்றவர்கள் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறி, iஷத்தானின் தோழமையில் அவனால் ஆட்டுவிக்கப்படும் iஷத்தானின் அடிமைகள் என்பதாகவே அவர்கள் பற்றி இ;ஸ்லாம் தீர்ப்பு வழங்குகின்றது. குழப்பங்கள் தோன்றும்போதே பிரிவினைகளும் அதற்கான முயற்சிகளும் ஆரம்பிக்கின்றன என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் மேலேயுள்ள ஹதீஸ்களில் உணர்த்திவிட்டார்கள். அத்தகைய குழப்ப சூழ்நிலை காரணமாக யாராவது தவறுதலாக இரண்டாம் தலைவருக்கு பைஅத் செய்துவிட்டால்கூட அவர்கள் முதலாவது பைஅத்தையே நிறைவேற்ற வேண்டும்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
பனூ இஸ்ரவேலர்களில் அவர்களது நிர்வாகப் பொறுப்பை நபிமார்கள் செய்துகொண்டிருந்தார்கள். ஒரு நபி மரணிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவருக்குப் பின்னால் மற்றொரு நபி வந்துகொண்டே இருந்தார்கள். (ஆனால்) எனக்குப் பிறகு எந்த நபியும் இல்லை. (மாறாக) ஹலீபாக்கள் தோன்றுவார்கள். (ஒரே காலத்தில் ஹலீபாக்கள்) அதிகமாக இருப்பார்கள். (அப்போது) " எங்களுக்கு (நீங்கள்) எதனை ஏவுகின்றீர்கள்?" என (தோழர்கள்) கேட்டார்கள். அதற்கு "முதன்முதலில் செய்த பைஅத்தை நிறைவேற்றுங்கள். (தவைவர்களாகிய) அவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். அவர்களிடம் கொடுத்த கண்காணிக்கும் பொறுப்பு பற்றி நிச்சயமாக அழ்ழாஹ் அவர்களிடம் விசாரணை செய்வான்." எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.அன்பியா 51)

குழப்பம் காரணமாக இரண்டாவது தோன்றிய தலைவருக்கு ஒரு முஸ்லிம் தற்செயலாக பைஅத் செய்துவிட்டால்கூட கொலை செய்யப்பட வேண்டியவரிடம் செய்த அந்த பைஅத்திற்கு இஸ்லாத்தில் எந்தப் பெறுமதியும் இல்லை. எனவே அவர் முதலாவது செய்த பைஅத்தை மாத்திரமே நிறைவேற்ற வேண்டும். அத்துடன் இரண்டாவது தலைமைத்துவத்தை அழித்துவிடுவது இரண்டாம் தலைமைத்துவத்திற்கு பைஅத் செய்தவர்கள் உட்பட அனைத்து முஸ்லிம்களுக்கும் கடமையாகின்றது. ஏனெனில் இரண்டாவது தோன்றிய தலைவரைக் கொன்றுவிடும்படி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எல்லா முஸ்லிம்களுக்குமே கட்டளையிட்டார்கள்.



17.அல்ஜமாஅத் மீண்டும் தோன்றுவது எவ்வாறு?
ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் இந்தப் பூமியில் மீண்டும் ஒருமுறை ஜமாஅதுல் முஸ்லிமீன் தோற்றுவிக்கப்பட்டது. அந்தப் பொறுப்பைச் செய்வதற்கு அனாதைச் சிறுவராக இருந்த ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அழ்ழாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் பன்னிரண்டு ஹலீபாக்களின் காலம் வரைக்குமே உறுதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும் எனவும் அந்த நல்லவர்களது காலங்களுக்குப் பின்னால் பொய் பரவிவிடும் எனவும் அந்த ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களே கூறிவிட்டார்கள்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நேர்வழிகாட்டியாக வழங்கப் பட்ட அல்குர்ஆனும், ஹதீஸும் பாதுகாக்கப்படும் என அழ்ழாஹ் உத்தரவாதம் அளித்துள்ளான். ஆனால் அவர்களால் உருவாக்கப் பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் இறுதிநாள் வரை நிலைத்திருக்கும் என்பதற்கு அழ்ழாஹ் எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. முஸ்லிம்களின் ஒவ்வொரு தலைமுறையும் இஸ்லாத்தில் இருப்பார்கள் என்பதற்கும் அழ்ழாஹ்வோ அல்லது அவனது தூதரோ எந்தவித உத்தரவாதத்தையும் வழங்கவில்லை. மாறாக உலகில் நபிமார்களால் தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு ஜமாஅதுல் முஸ்லிமீனும் பின்னால் தோன்றக்கூடிய அவர்களது தலைமுறையினர் இஸ்லாத்தை விட்டும் தூரமாகிவிடுவதன் மூலம் அழிந்துவிடும் என்பதாகத்தான் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அறிவித்துவிட்டுச் சென்றுள் ளார்கள். இது எமது கற்பனைகளுக்கு நேர்முரணாக இருந்தாலும் இதுதான் இஸ்லாம் கூறும் உண்மையாகும். இந்த உண்மையை உணர்த்திட ஒரு ஹதீஸை இங்கு தருகின்றோம்.

ஹுதைபா பின் யமான் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் மனிதர்கள் நன்மைகள் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நானோ அவர்களிடம் தீமைகள் பற்றி (அவை) என்னை அடைந்துவிடுமோ என்கின்ற அச்சத்தினால் கேட்டுக்கொண்டிருந்தேன். (ஒரு நாள்) "அழ்ழாஹ்வின் தூதரவர்களே! நிச்சயமாக நாம் ஜாஹிலிய்யத்திலும், தீமையிலும் இருந்தோம். அப்போது அழ்ழாஹ் எங்களிடம் இந்த நலவைக் கொண்டு வந்தான். இந்த நலவிற்குப் பின்னர் ஏதேனும் தீமை ஏற்படுமா?" என (நான்) கேட்டேன். (அதற்கு அவர்கள்) "ஆம்!" எனக் கூறினார்கள். "அந்தத் தீமைக்குப் பின்னர் நலவு ஏற்படுமா?" என (மீண்டும்) கேட்டேன். "ஆம்! அதிலே களங்கம் இருக்கும்." எனக் கூறினார்கள். "அதன் களங்கம் என்ன?" எனக் கேட்டேன். "(அவர்கள்) எனது வழி முறையல்லாததைக் கொண்டு வழிநடாத்தக்கூடிய சமூகமாவார்கள். அவர்களில் நன்மையையும் காண்பீர், தீமையையும் காண்பீர்." எனக் கூறினார்கள். "அந்த நலவிற்குப் பின்னர் கெடுதி ஏற்படுமா?" எனக் கேட்டேன். "ஆம்! நரகின் வாயில் களில் நின்று (அழைக்கும்) அழைப்பாளர்கள் தோன்றுவார்கள். அவர்களது அந்த அழைப்பிற்கு யார் பதிலளிக்கின்றாரோ அவரை அதிலே எறிந்து விடுவார்கள்." அழ்ழாஹ்வின் தூதரவர்களே! அவர்களை (ப்பற்றிய) பண்புகளை எங்களுக்குக் கூறுங்களேன்?" எனக் கேட்டேன். (அதற்கு) "அவர்கள் எங்களது சமூகத்தில் நின்றும் உள்ளவர்களாவார்கள். நாங்கள் கூறக் கூடியவற்றையே கூறுவார்கள்." எனக் கூறினார்கள். "அந்த (நிலைமை) என்னை வந்தடைந்தால் எனக்குத் தாங்கள் கட்டளை இடுவது என்ன?" எனக் கேட்டேன். "ஜமாஅதுல் முஸ்லிமீனுடனும், அவர்களது இமாமுடனும் சேர்ந்திருப்பீராக!" எனக் கூறினார்கள். அவர்களுக்குக் கூட்டமைப்போ, இமாமோ இல்லை என்றால் (என்ன செய்வது?)" எனக் கேட்டேன். "(தலைமைத்துவம் இல்லாத) அந்தப் பிரிவுகள் அனைத்தையும் விட்டு ஒதுங்கி விடுவீராக! உமக்கு மரணம் வரும் வரை மரத்தின் வேரைக் கடித்துக் கொண்டு அதே நிலையில் இருக்க வேண்டி ஏற்படினும் சரியே! (பிரிவுகளுடன் சேர்ந்து விடாதே!)" எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.பிதன் 11, ஸஹீஹ் முஸ்லிம் )
உயிரைப் பணயம் வைத்து ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் உருவாக்கிய ஜமாஅதுல் முஸ்லிமீன் காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களே தெட்டத் தெளிவாக மேலேயுள்ள ஹதீஸில் கூறியுள்ளார்கள். அதேபோன்று ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தோற்றுவித்த இஸ்லாமிய சமூகம் மறைந்து மீண்டும் அது தோன்றும் என்பதையும் இந்த ஹதீஸில் தெளிவுபடுத்துகின்றார்கள். அழ்ழாஹ்வினால் தேர்வு செய்யப்பட்ட ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் தலைமைத்துவப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று அவர்களது உம்மத்தில் மற்ற எவருக்கும் அந்தப் பொறுப்பு நேரடியாக அழ்ழாஹ்வினால் ஒப்படைக்கப்பட மாட்டாது. அப்படியானால் மீண்டும் மீண்டும் தோன்றும் ஜமாஅதுல் முஸ்லிமீன் எவ்வாறு தோற்றம் பெறும்? அதன் ஆரம்பம் எவ்வாறு அமையும்? என்கின்ற கேள்வி எழுகின்றது.

ஜமாஅதுல் முஸ்லிமீன் காணப்பட்டால் அதனுடன் இணைந்து கொள்ளும்படியும், அப்படி இல்லாவிட்டால் அனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கிவிடும்படியும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறினார்கள். எனவே ஒரே தலைமைத்துவத்தைக் கொண்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் இல்லாத காலங்களில் முஸ்லிமாக வாழ விரும்புகின்றவர், இஸ்லாம் எனும் பெயரில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கிவிட வேண்டும். ஏனெனில் அவையனைத்தும் நரகின் வாயிலில் நின்றுகொண்டு அழைக்கும் அழைப்பாளர்களைக் கொண்ட பிரிவுகள் என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்கள். அவர்கள் நரகிற்கு அழைத்தாலும், முஸ்லிம்கள் பயன்படுத்தும் அழகான வார்த்தைகளையே அவர்கள் பயன்படுத்துவார்கள். அப்போதுதான் இஸ்லாத்தை நேசிப்பவர்கள் அந்த அழைப்பை ஏற்பார்கள் என்பத அவர்களுக்குத் தெரியும். ஆகவே மக்களை ஏமாற்றுவதற்கு "அழ்ழாஹ்வின் கட்டளைகளை நபிவழியில் பின்பற்றி நடப்போம் வாருங்கள்!" என்றுதான் அழைப்பார்கள். அதன்பிறகுதான் ஆதாரம் இல்லாமல் அவர்கள் பின்பற்றும் வழிகேடுகள் "நபியின் வழிமுறைகள்" என பாமர மக்களை ஏமாற்றுவார்கள். ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தோற்றுவித்த ஜமாஅதுல் முஸ்லிமீன் மறைந்து தீமை பரவியதன் பின்னர் மீண்டும் அந்த ஜமாஅதுல் முஸ்லிமீன் தோன்றுவது பற்றி இரத்தினச் சுருக்கமாகக் கூறும் ஒரு ஹதீஸை முதலில் உங்கள்முன் வைக்கின்றோம்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
இஸ்லாம் அறிமுகமற்றதாகவே ஆரம்பமானது. ஆரம்பித்தது போன்றே (அது) மீண்டும் அறிமுகமற்றதாக ஆகிவிடும். (சொற்ப முஸ்லிம்களான) அந்த அறிமுகமற்றவர்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக!
(ஸஹீஹ் முஸ்லிம். கி.ஈமான் 65)

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தனிமனிதராக அழ்ழாஹ் வழங்கிய இஸ்லாத்தை மக்கள் மத்தியில் கொண்டுவந்தார்கள். அந்த இஸ்லாம் அன்றிருந்த மக்களுக்கு அறிமுகமற்றதாக இருந்ததனால் அவர்கள் இஸ்லாத்தையும், அதனைக் கொண்டு வந்தவரையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அவர்கள் இஸ்லாம் எனக் கூறிக்கொண்டு மூன்று நபிமார்கள் கொண்டுவந்த நேர்வழியை முற்றிலும் மாற்றியமைத்துப் பின்பற்றிக்கொண்டிருந்தனர். அந்த நிலையை சுட்டிக்காட்டி அதேபோன்ற நிலை மீண்டும் தோன்றும் என ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள். அதாவது இஸ்லாம் என நினைத்து மக்கள் எதனையோ பின்பற்றிக் கொண்டிருக்கும் காலத்தில் அழ்ழாஹ்வின் வேதத்தில் கூறப்பட்டுள்ள இஸ்லாத்தின்பால் அழைக்கக்கூடிய தனிமனிதர்கள் தோன்றுவார்கள். அவர்கள் மக்களிடம் இஸ்லாம் எனும் கொள்கைக்காக பைஅத் எடுப்பதன் மூலம் ஒருசிலர் அந்த நேர்வழியில் இணைவதனை ஏனையவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள் என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் முன்னறிவிப்புச் செய்து விட்டார்கள். ஆகவே இந்த ஹதீஸின் மூலம் மறைந்துவிடுகின்ற ஜமாஅதுல் முஸ்லிமீன் மீண்டும் எவ்வாறு உதயமாகின்றது எனும் உண்மையினை நாம் சுருக்கமாக அறிந்து கொள்ளமுடிகின்றது. அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின்பற்றுவதுதான் இஸ்லாம் என்பதை விளங்கி, நரகின்பால் அழைக்கும் எல்லாப் பிரிவுகளையும் விட்டு ஒதுங்கிய மனிதன், பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்பதற்கு என ஒரு தலைமைத்துவம் இல்லாத காலத்தில் அவன் தனித்து இருப்பதுதான் இஸ்லாம் என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் வழிகாட்டலில் இருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம். இவ்வாறு தனித்து இருப்பதற்கும் ஒரு எல்லை இருக்கின்றது. அந்த எல்லையை அடையாத வரையில் அவ்வாறு தனித்து இருக்கக் கூடியவர்கள் அழ்ழாஹ்விடம் முஸ்லிம்களாகவே கருதப்படுவார்கள். ஏனெனில் இஸ்லாத்திற்காக பைஅத் செய்வதற்கு முழு மனதுடன் தயாராக இருக்கும் அவர்களிடம் இஸ்லாத்திற்கான பைஅத்தை ஏற்கக்கூடிய தலைமைத்துவம் இல்லாததினால்தான் அவர்கள் பைஅத் இல்லாமல் தனித்து இருக்கின்றார்கள்.

இவ்வாறு அழ்ழாஹ்வின் வேதத்தை மாத்திரம் பின்பற்ற வேண்டும் என்பதை உணர்ந்து தனித்து இருப்பவர்கள் மூன்று நபர்கள் என்றாகிவிட்டால் அவர்களில் ஒருவர் ஏனைய இருவரையும் வழிநடாத்தக்கூடிய அமீராக ஆகிவிட வேண்டும்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
அபூதரே! நிச்சயமாக உம்மை நான் பலவீனமானவனாகக் காண்கின்றேன். எனக்கு எதனை விரும்புகின்றேனோ நிச்சயமாக அதனையே உமக்கும் விரும்புகின்றேன். இருவருக்குக்கூட (நீர்) ஒருபோதும் அமீராக ஆகிவிட வேண்டாம். அநாதைகளின் சொத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் ஒருபோதும் (நீர்) ஏற்க வேண்டாம்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா 04)

அபூதர் ரலியல்லாஹூ அன்ஹூ வின் பலவீனத்தை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் சுட்டிக்காட்டி அந்த ஸஹாபியை இரண்டுபேருக்குக்கூட அமீராக நீர் ஆகிவிடாதீர் எனக்கூறினார்கள். பொதுவாக மூன்று நபர்கள் என்றாகிவிட்டால் அவர்களில் ஒருவர் அமீராக ஆகுவது என்பது இஸ்லாத்தில் உள்ள ஒரு விடயம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. தலைமைத்துவம் இஸ்லாத்தின் அச்சாணி என்பதால் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் எவ்வளவு குறைவாக இருந்தாலும்
இஸ்லாமியத் தலைமைத்துவம் இறுதிவரைக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
மனிதர்களில் இரண்டு நபர்கள் மீதம் இருக்கும் வரைக்கும் இந்த அதிகாரம் குரைஷ; (கோத்திரத்திலே) தொடர்ந்திருக்கும்.
(ஸஹீஹுல் புஹாரி கி. புயூஃ 93)

முஸ்லிம்கள் உலகில் அழ்ழாஹ்வின் தீனை நிலைநாட்ட வேண்டியவர்கள் ஆவார்கள். முழுமையான தீனை நிலைநாட்டும் சக்தி இல்லாதபோது அந்த சக்தியைப் பெற்றுக்கொள்வதற்குத் திட்டமிட்டு நாம் செயலாற்ற வேண்டும். நம்பிக்கையிழந்து முயற்சி யைக் கைவிட்டுவிடக்கூடாது. அதுவரைக்கும் எம்மால் முடிந்தவரை அழ்ழாஹ்வின் தீனைப் பின்பற்ற வேண்டும். கட்டுப்படுவதற்கு இஸ்லாத்திலே இரண்டு மனிதர்கள்தான் இருக்கின்றார்கள் என்றால் கூட கட்டுப்படுத்தக்கூடிய மூன்றாவது மனிதர் குரைஷpக் கோத்திரத் தைச் சேர்ந்தவராகவே இருப்பார் என்பதை சுட்டிக்காட்டிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம், மூன்று நபர்கள் இருந்தாலும் அவர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு என ஒரு தலைமைத்துவம் நிச்சயம் இருந்தே தீரும் என்பதனை இந்த ஹதீஸின் மூலம் முஸ்லிம்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

இதற்கு முன்னால் எழுதப்பட்டுள்ள ஹதீஸில் நிர்வாகம் செய்யும் சக்தி பெற்றிராத தனது தோழரைப் பார்த்து இருவருக்குக்கூட நீ அமீராக ஆகாதே! என எச்சரித்த ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
அவர்கள் இந்த ஹதீஸில் கட்டுப்படுவதற்கு இரண்டு முஸ்லிம்கள்தான் மீதமாக இருந்தாலும் குரைஷpக் கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் அவர்களை வழிநடாத்துவார் எனக் கூறியதன் மூலம் இஸ்லாத்தின் அச்சாணி எது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.மூன்றுபேர் ஆகிவிட்டதன் பின்னர் ஒரு தலைமைத்துவத்தை உருவாக்காமல் இருப்பதுவும் இஸ்லாத்திலே ஆகுமான செயல் அல்ல.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
கூறுகின்றார்கள்:-
(ஏற்கனவே உள்ள மனைவியை) தலாக் சொல்ல வேண்டும் எனும் நிபந்தனையுடன் பெண் திருமணம் முடிக்கப்படுவது ஆகுமானது அல்ல, தனது சகோதரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் வியாபாரத்தில் அவர் அதனை விட்டுவிடாத வரையில் (அதில்) குறுக்கிட்டு வியாபாரம் செய்வது (முஸ்லிமுக்கு) ஆகுமானதல்ல, பாலைவனத்தில் இருக்கக்கூடிய மூன்று நபர்களுக்குக்கூட தங்களுக்கு என அவர்களில் ஒருவரை அமீராக ஏற்படுத்தாமல் இருப்பது ஆகுமானதல்ல, பாலைவனத்தில் இருக்கக் கூடிய மூன்று நபர்களில் இருவருக்குக்கூட அவர்களது தோழரை விட்டுவிட்டு இரகசியம் கதைப்பது ஆகுமானதல்ல.
(அஹ்மத் அறி: அப்துழ்ழாஹ் பின் அம்ர் - ஹஸன்)

எனவே காலத்திற்குக் காலம் தோன்றி மறைந்துவிடக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீன் நடைமுறையில் இல்லாத காலத்தில் முஸ்லிமாக வாழவேண்டும் எனும் எண்ணம் கொண்ட மூன்று நபர்கள் ஒன்று சேரும்போது அவர்களில் ஒருவர் அமீராக ஆகுவதன் மூலம் அல்லது அவர்களில் இருவர் சேர்ந்து மூன்றாவது நபரை அமீராக நியமிப்பதன் மூலம் ஜமாஅதுல் முஸ்லிமீனைத் தோற்றுவிப்பது அவர்கள் மீது கடமையாகிவிடுகின்றது.

இவ்வாறு இஸ்லாத்திற்காக ஒரு கூட்டமைப்பும், அந்த இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களுக்கு என ஒரு தலைவரும் தோன்றிவிட்ட பின்னர் இஸ்லாத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் அந்தத் தலைமைத்துவத்திடம் பைஅத் செய்வதன் மூலமே இஸ்லாத்தினுள் நுழைய முடியும். மறைந்துவிட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் மீண்டும் உலகில் தோன்றுவதற்கு இதனைத் தவிர ஆதாரபூர்வமான வேறு எந்த வழிமுறையும் இஸ்லாத்தில் அறவே கிடையாது.










18.அல்ஜமாஅத்
தோன்றிவிட்டால் அதில் இணைவது கடமையாகும்!

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
கூறுகின்றார்கள்:-
...................அல்ஜமாஅத்துடன் இணைந்திருப்பது உங்கள் மீது கடமையாகும். பிரிவினையை விட்டும் உங்களை நான் எச்சரிக்கின்றேன். ஏனெனில் நிச்சயமாக iஷத்தான் தனித்திருப் பவனுடன்தான் இருக்கின்றான். இருவரை விட்டும் அவன் தூரமாகவே இருக்கின்றான். ...............................
(திர்மிதி கி.பிதன் 07 - ஸஹீஹ் )

முஸ்லிம்களுக்கு என ஒரு தலைமைத்துவம் காணப்பட்டால் அதில் இணைந்து கொள்வது கடமை என்பதை இந்த ஹதீஸ் உட்பட பல்வேறு இடங்களில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் தெளிவாகக் கூறியுள்ளார்கள். தொழுவது, நோன்பு நோற்பது எவ்வாறு கடமையாகின்றதோ அதே போன்று முஸ்லிமாக வாழ விரும்புபவன், சுவனம் செல்ல விரும்புபவன் அல்ஜமாஅத்துடன் இணைந்து கொள்வது கடமையாகின்றது. உலகிலே தன்னை முஸ்லிம் என அடையாளப்படுத்துவதற்கும், iஷத்தானை விட்டும் தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்கும் முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் இணைந்துகொள்வது அவசியமாகின்றது. அழ்ழாஹ்வின் வேதத்தைக் கொண்டு வழிநடாத்தும் ஒரு முஸ்லிமான ஆணிடம் தலைமைத்துவம் இருப்பதைக் கண்டால் அதில் ஒவ்வொரு மனிதனும் இணைந்து கொள்வது கடமையாகின்றது. அதனை விட்டும் பிரிந்திருப்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இவ்வாறு தோன்றிய இஸ்லாமியத் தலைமைத்துவத்துடனும், முஸ்லிம்களின் கூட்டமைப்புடனும் இணைந்து கொள்வது கடமை எனும் அடிப்படையிலும், அதேநேரம் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் (அல்ஜமாஅத்) கூட்டமைப்புத்தான் சுவனம் செல்வதற்குத் தகுதி பெறுகின்றது எனும் அடிப்படையிலும் சுவனம் செல்ல நினைப்பவர்கள் முஸ்லிம்களின் கூட்டமைப்புடன் தன்னை இணைத்துக் கொள்வது கட்டாயக் கடமையாகின்றது.

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்
கூறுகின்றார்கள்:-
யூதர்கள் எழுபத்தியொரு பிரிவாகப் பிரிந்தனர். (அவற்றிலே) ஒன்று சுவனத்தில் (இருக்கும்.) எழுபது நரகிலே (இருக்கும்.) கிறிஸ்தவர்கள் எழுபத்தியிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். (அவற்றிலே) எழுபத்தியொன்று நரகிலே (இருக்கும்.) ஒன்று சுவனத்திலே (இருக்கும்.) எவன் கையில் முஹம்மதின் உயிர் இருக்கின்றதோ அவன்மீது சத்தியமாக! நிச்சயமாக எனது உம்மத் எழுபத்தி மூன்று பிரிவுகளாகப் பிரியும். (அவற்றிலே) ஒன்று சுவனத்தில் (இருக்கும்.) எழுபத்தியிரண்டு நரகிலே (இருக்கும்.) அப்போது "அவர்கள் யார்?" எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் "அது (அல்ஜமாஅத்) கூட்டமைப்பாகும்." எனக் கூறினார்கள்.
(இப்னுமாஜா கி.பிதன் 17 - ஸஹீஹ் )

சுவனம் செல்வதற்குரிய ஒவ்வொரு நிபந்தனையையும் பூர்த்தி செய்யாத வரையில் ஒரு மனிதன் சுவனம் நுழைந்துவிட முடியாது. அழ்ழாஹ்வின் வேதத்தைப் பின்பற்றுவதுடன் சுவனம் செல்வதற்குத் தடையான எந்தவிதமான செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பது எப்படி சுவனம் செல்வதற்கு நிபந்தனையாக இருக்கின்றதோ அதே போன்று அவர்கள் கூட்டமைப்புடன் இருப்பதும் சுவனம் செல்வதற்குரிய நிபந்தனைகளில் ஒன்று என்பதை இந்த ஹதீஸ் நேரடியாகக் கூறுகின்றது. iஷத்தானைப் பிரிந்து முஸ்லிமாக மாறி, சுவனம் செல்வதற்கு ஒவ்வொரு மனிதனும் முஸ்லிம்களின் கூட்டமைப்புடனும் அவர்களது இமாமுடனும் இணைந்துகொள்வது கட்டாயம் என்பது மேற்படி ஹதீஸ்களின் மூலம் நிரூபணமாகின்றது. ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் கூறுகின்றார்கள்:-
மூன்று விடயங்களை உங்களுக்கு (நான்) ஏவுகின்றேன். மூன்று விடயங்களை விட்டும் உங்களைத் தடுக்கின்றேன். அழ்ழாஹ்வுக்கு இபாதத் செய்யுங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், அனைவரும் அழ்ழாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். அழ்ழாஹ் உங்களது விடயத்தை யாரிடம் ஒப்படைத்துள்ளானோ அவர் (சொல்வதை) செவிமடுத்து அவருக்குக் கட்டுப்படுங்கள் என உங்களுக்கு ஏவுகின்றேன். சொல்லப்படுகின்றது, சொன்னார் (எனக்கூறுதல்), அதிகமாகக் கேள்வி கேட்டல், பணத்தை வீண்விரயம் செய்தல் போன்றவற்றை விட்டும் உங்களைத் தடுக்கின்றேன்.
( முஸ்னத் அஹ்மத் - ஸஹீஹ், ஜா.ஸ. 12)

இந்த ஹதீஸில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஏவியுள்ள விடயங்களில் எவரேனும் மாறுசெய்தால் அது அழ்ழாஹ்விடம் அவர் பற்றிய முடிவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அழ்ழாஹ்வுக்குச் செய்ய வேண்டிய இபாதத்தை வேறு எவருக்கும் செய்தால் அது அழ்ழாஹ்வுக்கு இணைகற்பிப்பதாகும். அத்தகையோருக்கு கூவனம் ஹராமாகிவிடும். அழ்ழாஹ்வின் கயிற்றைப் பிடித்து ஒற்றுமையாக இருப்பதற்குப் பதிலாக நாம் பிரிந்து சென்று விட்டால் சுவனம் செல்வதற்கு அதுவும் தடையாகிவிடுகின்றது. ஒரு கூட்டம் மாத்திரம் சுவனம் செல்லும் என்பது அழ்ழாஹ்வின் முடிவாக இருக்க, அழ்ழாஹ்வினதும் அவனது தூதரினதும் கட்டளைகளைப் புறக்கணித்துப் பிரிந்து சென்ற எங்களுக்காக அழ்ழாஹ் தனது சட்டத்தை மாற்றியமைக்க மாட்டான். அதேபோன்று அழ்ழாஹ்வின் நாட்டப்படி முஸ்லிம்களின் விடயங்களுக்குப் பொறுப்பாக ஒரு அமீர் இருக்கும்போது அவருக்குக் கட்டுப்படவேண்டியுள்ளது. இந்தக் கடமையை நிறைவேற்றுவதானால் அல்ஜமாஅத்துடன் இணைந்து கொள்வது அவசியமாகின்றது. இந்தக் கட்டுப்பாட்டை விட்டும் ஒரு சாண் அளவு கையை நாம் உருவிக்கொண்டாலும் அதன்விளைவு பாரதூரமானதாகவே இருக்கும்.


19.பைஅத் செய்வோரை
ஜாஹிலிய்யத்தில் உள்ளோர் தூற்றுவார்கள்!

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் சத்திய அழைப்பை அதனது ஆரம்ப காலத்தில் பெரும்பாலானோர் எதிர்த்தார்கள். இருந்தபோதிலும் ஒருவர் இருவர் என அதனை ஏற்கக் கூடியோரும் இருக்கத்தான் செய்தார்கள். அவ்வாறு ஆரம்ப காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் அழ்ழாஹ்விடத்தில் பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என அல்குர்ஆன் கூறுகின்றது. இருந்தாலும் இஸ்லாத்தை ஏற்காதோர் இவர்களை இழிவாகக் கருதி, பழித்துரைத்தார்கள்.

அக்ரஃ பின் ஹாபிஸ் என்பவர் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை நோக்கிக் கூறுகின்றார்:-
"அஸ்லம், கிபார், முஸைனா போன்ற கோத்திரத்தில் உள்ள ஹஜ் செய்ய வருவோரிடம் திருடக்கூடியோர் தான் உமக்கு பைஅத் செய்துள்ளார்கள்." அதற்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் "அஸ்லம், கிபார், முஸைனா போன்ற கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் (இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதன் மூலம்) பனூ தமீம், பனூ ஆமிர், அஸத், கத்பான் போன்ற கோத்திரங்களை விட சிறந்தவர்களாக ஆகிவிட்டால் (அவர்கள்) நஷ;டமடைந்து, கைசேதமடைந்து விடுவார்களா? " எனக் கேட்டார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.ப.ஸஹாபா 47)

தவறான மனிதர்களின் திசையை மாற்றி அவர்களை நேர்வழிப் படுத்துவதுதான் இஸ்லாம் செய்யக் கூடிய சேவையாகும். எனவே தவறான செயல்கள் செய்து கொண்டிருந்தோர் பைஅத் செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் சிறந்தவர்களாக மாறிவிடுகின்றார்கள் என்பதை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இங்கு முஸ்லிம் களை இழித்துரைத்தவருக்கு உணர்த்துகின்றார்கள். அப்துழ்ழாஹ் பின் உமர் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
உமர் இஸ்லாத்தை ஏற்றபோது அவர்களது வீட்டைச்சூழ மக்கள் ஒன்றுகூடி "உமர் மதம் மாறிவிட்டார்." எனக்கோஷமிட்டு (முற்றுகையிட்டார்கள்.) சிறுவனாக இருந்த நான் எங்களது வீட்டுக் கூரையில் இருந்தேன். அப்போது ஒரு மனிதர் தம்மீது பட்டினாலான மேலங்கி ஒன்றை அணிந்தவாறு வந்து "(ஆம்!) உமர் மதம் மாறிவிட்டார். அதிலே (உங்களுக்கு) என்ன இருக்கின்றது? நான் அவருக்குப் பாதுகாவலன் ஆவேன்." எனக் கூறினார். உடனே (அங்கு கூடியிருந்த) மக்கள் கலைந்து செல்வதை நான் கண்டேன். "இது யார்?" என நான் கேட்டபோது ஆஸ் பின் வாயில் என (அங்கு நின்றவர்கள்) கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.ப.ஸஹாபா 64)

அநியாயங்களிலும், அத்துமீறல்களிலும் ஈடுபடுவோரை சகித்துக் கொள்ளும் உலகம் ஒரு மனிதன் சத்திய மார்க்கத்தில் நுழைவதை மாத்திரம் அங்கீகரிப்பதற்குத் தயாராக இல்லை. இஸ்லாத்தை ஏற்ற உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு எதிராகப் பெரும் கூட்டமே அணிதிரண்டு விட்டது. உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் மதம் மாறிவிட்டார்கள் எனக் குற்றம் சுமத்தி, பழித்துரைத்தார்கள். ஜாஹிலிய்யத்தில் கண்ணியத்துடன் வாழ்ந்த அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதும் அழ்ழாஹ்வுக்காக இழிவுகளைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நிலைமை அசத்தியத்தின் கைகள் எங்கெல்லாம் மிகைத்திருக்கின்றதோ அங்கு சத்தியத்தை ஏற்கும் முஸ்லிம்கள் பொதுவாக எதிர்கொள்ள வேண்டி ஏற்படுகின்ற ஒன்றாகும். இன்றைய காலத்தில்கூட எல்லா வகையான அநியாயங்களையும் சகித்துக் கொள்ளும் சமூகம், சுவனம் செல்லக் கூடிய ஒரே கூட்டத்தின் இமாமிடம் இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதை மாத்திரம் அங்கீகரிக்கப் பின்வாங்குவதை நாம் காணலாம். அவ்வாறு பைஅத் செய்வோரை இழிவாகக் கருதுவதையும், அவர்களைக் குறை கூறுவதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.
ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த கடமை: முழு உலகையும் அழ்ழாஹ்வின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகும். இதனை சாதிப்பதற்கு அவர்கள் முழு முயற்சியுடன் ஈடுபட்டார்கள். அந்த முயற்சியில் சமூகத் தலைவர்களைக் குறிக்கோளாகக் கொண்டு தஃவா செய்தார்கள். தலைவர்கள் இந்த சத்தியத்தை ஏற்கும்போது அவர்களுக்குக் கட்டுப்பட்டவர்களும் இந்த சத்தியத்தை ஏற்றுக் கொள்வார்கள் எனும் எதிர்பார்ப்பே இதன் காரணமாகும். இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளார்கள். அதேநேரம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட தங்களது தலைவர்களைப் புறக்கணித்து இஸ்லாத்தை மறுத்துவிட்ட சம்பவங்களும் இருக்கத்தான் செய்கின்றன. யூதர்களின் தலைவர் இஸ்லாத்தை ஏற்றபோது நடந்ததைப் பாருங்கள்.

அனஸ் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
................................ அப்துழ்ழாஹ் பின் ஸலாம் ரலியல்லாஹூ அன்ஹூ வந்து : "(மூன்று கேள்விகளைக் கேட்டு அவற்றிற்கான பதில்களைப் பெற்றுக்கொண்டதன் பின்னர்) தாங்கள் அழ்ழாஹ்வின் தூதர் என்பதாகவும், தாங்கள் நிச்சயமாக ஒரு சத்தியத்தைத்தான் கொண்டு வந்திருக்கின்றீர்கள் எனவும் (நான்) சாட்சியம் அளிக்கின்றேன். யூதர்கள் நிச்சயமாக நான் அவர்களின் தலைவர் என்பதையும், அவர்களது தலைவரின் மகன் என்பதையும், அவர்களில் மிக அறிந்தவன் என்பதையும், அவர்களில் மிக அறிந்தவரின் மகன் என்பதையும் அறிந்திருக்கின்றார்கள். நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டேன் என்பதை (அவர்கள்) அறிவதற்கு முன்னர் அவர்களை அழைத்து என்னைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில் (நான்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதனை அவர்கள் அறிவார்களேயானால் எனது விடயத்தில் என்னில் இல்லாததைக் கூறுவார்கள்." எனக் கூறினார்கள். அப்போது ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் (யூதர்களை வருமாறு) செய்தி அனுப்பினார்கள். எனவே (அவர்கள்) வந்து நுழைந்தார்கள். அவர்களை நோக்கி ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் "யூதர்களே உங்களுக்கு என்ன நடந்திருக்கின்றது. அழ்ழாஹ்வைஅஞ்சுங்கள். எந்த அழ்ழாஹ்வைத் தவிர வேறு இலாஹ் இல்லையோ அவன்மீது சத்தியமாக! உண்மையிலேயே நான் அழ்ழாஹ்வின் தூதர் என்பதையும், உங்களிடம் நான் ஒரு சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன் என்பதையும் நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள். எனவே நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்." எனக் கூறினார்கள். அவர்களோ "அதனை நாங்கள் அறிய மாட்டோம்." எனக் கூறினார்கள். மூன்று விடுத்தம் கூறியும் இதனையே அவர்களுக்கு (யூதர்கள்) கூறினார்கள். அப்போது "உங்களுக்கு மத்தியில் அப்துழ்ழாஹ் பின் ஸலாம் என்ன (வகையான) மனிதர்?" எனக் கேட்டார்கள். (அதற்கு அவர்கள்) "அவர் எங்களது தலைவராவார். எங்களது தலைவரின் மகனாவார். எங்களில் மிகவும் அறிந்தவராவார். எங்களில் மிக அறிந்தவரின் மகனவார்." எனக் கூறினார்கள். "அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்?" எனக் கேட்டார்கள். "அழ்ழாஹ்மீது சத்தியமாக! அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்." எனக் கூறினார்கள். "அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்?" எனக் கேட்டார்கள். "அழ்ழாஹ்மீது சத்தியமாக அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்."எனக் கூறினார்கள். "அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால்?" எனக் கேட்டார்கள். "அழ்ழாஹ்மீது சத்தியமாக அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மாட்டார்."எனக் கூறினார்கள். (உடனே) "ஸலாமின் மகனே! இவர்கள் முன்பாக வருவீராக!" எனக் கூறியதும் (அவர்) வெளியே வந்து "யூதர்களே அழ்ழாஹ்வை அஞ்சுங்கள். எந்த அழ்ழாஹ்வைத் தவிர வேறு இலாஹ் இல்லையோ அவன்மீது சத்தியமாக உண்மையிலேயே இவர் அழ்ழாஹ்வின் தூதர் என்பதையும், உங்களிடம் இவர் ஒரு சத்தியத்தைக் கொண்டு வந்திருக்கின்றார் என்பதையும் நீங்கள் நிச்சயமாக அறிவீர்கள்." எனக் கூறினார். அதற்கு அவர்கள் "(நீ) பொய் சொல்லி விட்டாய்." என்றதுடன் "(நபியை நோக்கி) எங்களில் மிகக் கெட்டவன், எங்களில் மிகக்கெட்டவனின் மகன்." எனக்கூறி அவரைக் குறை கூறினார்கள். பின்னர் அவர்களை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வெளியே அனுப்பி விட்டார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி கி.ப.ஸஹபா 74)

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தினால் பரம்பரையாகத் தாம் ஏற்றுக்கொண்டிருந்த தலைவரைக்கூட ஒரு நொடியில் யூதர்கள் புறக்கணித்து விடுகின்றனர். சிறந்த அறிவாளி என அவர்களால் மதிக்கப்பட்ட அப்துழ்ழாஹ் பின் ஸலாம் ரலியல்லாஹூ அன்ஹூ இறுதி வேதம் சத்தியம் என்பதை உறுதிப்படுத்தியபோது அவரைப் பொய்யன் எனக் கூறும் அளவிற்கு யூதர்கள் துணிந்துவிட்டனர்.

மக்களின் செயல்பாடுகள் அழ்ழாஹ்வின் வேதத்திற்கு முரண்படும்போதுகூட அதனை அறிஞர்கள் அங்கீகரிக்க வேண்டும் எனும் எதிர்பார்ப்பு அதிகமான பொது மக்களிடம் இன்றும் காணப்படுகின்றது. அவர்களது எதிர்பார்ப்பை அதிகமாக நிறைவேற்றும் அறிஞரை அத்தகைய மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் எவ்வாறெல்லாம் அழ்ழாஹ்வின் வேதத்திற்கு முரண்படுகின்றார்கள் என்பதை எடுத்துச் சொல்வதை அவர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்களது மனோயிச்சைகளைத் தடை செய்யும் சட்டங்களையும், உலக இலாபங்களுக்குத் தடையாக இருக்கும் சட்டங்களையும் அழ்ழாஹ்வின் வேதத்திலிருந்து எடுத்துச் சொல்வதை அவர்கள் அடியோடு வெறுக்கின்றனர். அவற்றை எடுத்துக் கூறும் உண்மையான அறிஞர்களை அவர்கள் தூற்றவும் செய்கின்றனர்.

இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதனையும், இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதையும் மக்கள் குறைசொல்வது பொதுவாக நடைபெறக்கூடியது என்பதைக் கருத்தில் கொண்டு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் இஸ்லாத்தை ஏற்க வருபவர்களிடம் பிறரது பழிச்சொற்களை அஞ்சி சத்தியத்தைப் பிரச்சாரம் செய்வதைக் கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் பைஅத் எடுத்துள்ளார்கள்.

உபாதா பின் ஸாமித் ரலியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:-
(அமீரின் கட்டளைகளை) விருப்பிலும், வெறுப்பிலும் செவிமடுத்துக் கட்டுப்படுவோம் எனவும், அதிகாரத்தை அதற்கு உரியவர்களிடம் இருந்து பறிக்க மாட்டோம் எனவும், நாம் எங்கு இருந்தாலும் சத்தியத்தை எடுத்து நடப்போம் அல்லது எடுத்துச் சொல்வோம் எனவும், அழ்ழாஹ்வின் (தீனுடைய) விடயத்தில் குறைகூறுவோரின் ஏச்சுக்குப் பயப்பட மாட்டோம் எனவும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் (நாம்) பைஅத் செய்தோம்.
(ஸஹீஹுல் புஹாரி கி.அஹ்காம் 43)

மக்களை நேர்வழியில் அழைத்து அவர்களைக் கொண்டு ஜமாஅதுல் முஸ்லிமீனை உருவாக்கி அவர்களை வழிநடாத்தும் பொறுப்பு இறுதித் தூதராகிய ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் வரைக்கும் நபிமார்களி;ன் பணியாகவே இருந்து வந்தது. இறுதித் தூதரின் வருகைக்குப் பின்னர் வேறு நபிமார்கள் வரமாட்டார்கள் என்பதனால் மக்களை நேர்வழியின்பால் அழைக்கும் பொறுப்பு எல்லா முஸ்லிம்களும் செய்யும் ஒரு மிகச்சிறந்த செயலாக ஆகிவிட்டது. இந்தக் கடமையைச் செய்யும்போது நிச்சயமாக மக்களின் இழி சொற்களுக்கு ஆளாக நேரிடும். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதையே பழித்துரைக்கக்கூடிய மனித வர்க்கம், அவர்களையும் இந்த சத்தியத்தின்பால் அழைக்கின்றபோது அவர்களின் அறியாமை காரணமாக அவர்கள் குறைகூறுவார்கள்.

இஸ்லாத்தை ஏற்று பைஅத் செய்வதாக இருந்தாலும், அல்லது இஸ்லாத்தைப் பின்பற்றுவதாக இருந்தாலும், அல்லது பிறரை இஸ்லாத்தின்பால் அழைப்பதாக இருந்தாலும் இவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஒரு முஸ்லிமை ஏனையவர்கள் குறை கூறினால் அதனை அந்த முஸ்லிம் பொருட்படுத்தவே கூடாது. ஏனெனில் இந்த உலகம் கூடாததைத்தான் குறைகூறுகின்றது என்பதில்லை. மாறாக அழ்ழாஹ்வினால் நேர்வழி என உத்தரவாதம் தரப்பட்டதைக் குறை கூறுவது எல்லாக் காலங்களிலும் நடந்துவரக்கூய ஒன்றாகும். இவற்றையெல்லாம் சகிப்பதற்குத்தான் அழ்ழாஹ் உண்மை முஸ்லிம்களுக்கு சுவனத்தைத் தருகின்றான். குறை கூறிக் கேலி செய்தோர் மறுமையில் கேலிசெய்யப்படுவார்கள் என்பதும் அல்குர்ஆன் கூறுகின்ற உண்மையாகும்.

20.இறுதியாக.....!

ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஜமாஅதுல் முஸ்லிமீன் இந்த உலகிலிருந்து என்றோ மங்கி மறைந்துவிட்டது. அதன் பின்னர் காலத்துக்குக் காலம் எப்போதெல்லாம் இந்த சத்தியம் உலகில் தோன்றுவதற்கு அழ்ழாஹ் நாடியிருந்தானோ அந்தந்தக் காலங்களிலும் தோன்றி மறைந்துவிட்டது. ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பூமியில் ஜமாஅதுல் முஸ்லிமீனோ, அதற்குரிய இமாமோ இல்லாத நிலைதான் காணப்பட்டது. நரகின் வாயில்களிலிருந்து அழைக்கக்கூடிய அழைப்பாளர்கள் நாலாபுறங்களிலும் காணப்பட்டார்கள். அழ்ழாஹ் இறக்கிவைத்த வேதத்தை முன்வைத்து அவனது தீனை இந்தப் பூமியில் மேலோங்கிடச் செய்வதற்கான அழைப்பை எங்குமே காண முடியயாத நிலைதான் இருந்தது.

பொதுவாக எல்லா மனிதர்களது வாழ்விலும் மதங்களுக்கு என ஒரு பகுதி காணப்படுகின்றது. அந்தப் பகுதியை மதங்கள் பற்றிய உருக்குலைந்த நம்பிக்கைகள்தான் நிரப்பியிருந்தன. அறிவுபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் தாக்குப் பிடிக்கக்கூடிய எந்தவொரு கொள்கையும் இந்த இடத்தை நிரப்புவதற்கு நடைமுறையில் இருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளாக இஸ்லாம் அழ்ழாஹ்வின் வேதத்தில் எழுத்துவடிவில் பாதுகாக்கப் பட்டிருந்தாலும் அதனை நடைமுறையில் பின்பற்றக்கூடிய ஒரு இஸ்லாமிய சமுதாயம் கட்டி எழுப்பப்படவில்லை. முஸ்லிம் உம்மத் என உலகளாவிய ரீதியில் பெரியதொரு கூட்டம் தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறது. என்றாலும் அந்த சமூகத்தில் இஸ்லாத்தின் உயர்வுக்குக் காரணமான எந்த ஒரு அம்சமும் இருக்கவில்லை. அது இஸ்லாமிய சமூகம்தான் என்பதை அறிவதற்குரிய எந்த அடையாளங்களும் அதிலே காணப்படவில்லை. இந்த நிலையில் ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்னர் மீண்டும் ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கான அத்திவாரம் இடப்பட்டது. அழ்ழாஹ்வின் தீனை இந்தப் பூமியில் நிலைநாட்டுவதற்கான அழைப்பு பாகிஸ்தான் மண்ணிலிருந்து ஆரம்பித்தது. தூய இஸ்லாத்தை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் செயல்படுத்திக்காட்டிய அதே விதத்தில் செயல்படுத்த வேண்டும் எனும் இலட்சியம் கொண்ட மூன்று முஸ்லிம் கள் ஒன்றிணைந்தபோது அவர்களுக்கு என ஒரு தலைமைத்துவம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இஸ்லாமியத் தலைமைத்துவத்துடன் ஒருவர் இருவராக மக்கள் தம்மை அதிலே இணைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த சத்தியம் அழ்ழாஹ்வின் உதவியால் இலங்கை மண்ணிலும் ஏறக்குறைய இருபது வருடங் களுக்கு முன்னர் விதைக்கப்பட்டது. இன்று இலங்கையில் அந்த சத்தியம் நேர்வழியை நாடும் மக்களை ஒருவர் இருவராக தன்னோடு இணைத்துக் கொண்டு தனது இலட்சியத்தை நோக்கி அழ்ழாஹ்வின் அருளால் உறுதியுடன் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

இன்றைய ஜமாஅதுல் முஸ்லிமீனின் இலட்சியம் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை முன்மாதிரியாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய உம்மத்தை நடைமுறையில் உருவாக்குவதாகும். வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் அவர்களது முன்மாதிரி காணப்படுகின்றது.

அழ்ழாஹ்வை மிக அதிகமாக அஞ்சும் முஸ்லிமாக
இஸ்லாமிய சமூகத்தின் ஆரம்பகர்த்தாவாக
இஸ்லாமிய சமூகத்தின் தலைவராக
இலட்சிய உறுதி கொண்ட அழைப்பாளராக
மனித நலனில் அக்கறையுள்ள சமூக சேவையாளராக
பிறருக்கு ஏவும் நல்லவற்றை நடைமுறைப்படுத்துபவராக
தெரிந்ததைத் கற்றுக்கொடுக்கும் ஆசானாக
தெரியாததைக் கற்றுக்கொள்ளும் மாணவனாக
களங்கமற்ற அரசியல் தலைவராக
பதவியாசைக்கு முற்றுப்புள்ளியிட்ட சமூகஞானியாக
உலகப்பற்றற்ற துறவியாக
இப்படி எந்தத்துறையை எடுத்தாலும் அதிலே ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது அழகிய முன்மாதிரி காணப்படுகின்றது. இவை வெறுமனே ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களது புகழ்பாடுவதற்காக அழ்ழாஹ்வினால் அவர்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளல்ல. மாறாக உலக முடிவுநாள் வரைக்கும் வாழவிருக்கின்ற அத்தனை முஸ்லிம்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருப்பதற்காகவே அழ்ழாஹ் தனது தூதருக்கு இத்தனை விNஷடங்களை வழங்கினான்.

எனவே சுவனம் செல்ல விரும்புபவர்களுக்கு, அதற்காக செய்ய வேண்டிய கடமைகளை மிகச் சிறப்பாக நிறைவேற்ற விரும்பும் மனிதர்களுக்கு ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைவிட சிறந்த முன்மாதிரி கிடையாது. சுவனம் செல்லவேண்டும் எனும் ஆசைகொண்;டோரை ஒன்றிணைத்து, அவர்களை வழிநடாத்துவதற்கான கூட்டமைப்பே ஜமாஅதுல் முஸ்லிமீன் என்பதால் அது தனது ஒவ்வொரு செயலையும் ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றியே அமைத்துக் கொள்கின்றது. முழு உலகமும் இதற்கு எதிர்த் திசையில் சென்றால் கூட அது எமது இந்த வழிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்திவிட மாட்டாது. அந்த வகையில் ஒரு இஸ்லாமிய சமூகத்தைக் கட்டி யெழுப்பும் பணியை ரஸூலுழ்ழாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் எவ்வாறு நிறைவேற்றினார்கள் என்பது பற்றித் தெளிவான ஆதாரங்களுடன் முழுமையான ஒரு நூலை உங்கள் முன் சமர்ப்பித்துள்ளோம். இதனை நீங்கள் நிதானமாக வாசித்தபின், இதில் கூறப்பட்டுள்ள உண்மைகள் உங்களுக்குத் தெளிவாகிவிட்டால் உங்களையும் இந்த சத்தியத்துடன் இணைத்து உங்கள் வெற்றிக்கும், இஸ்லாத்தின் உயர்விற்கும் இன்றே உழைக்கத் துவங்குங்கள். இதில் உங்களுக்கு சந்தேகங்கள் எழுமானால் உங்களது சந்தேகங்களை நிவர்த்திசெய்ய அழ்ழாஹ்வுக்காக நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதிலே தவறுகள் காண்போர் ஆதாரங்களுடன் அதுபற்றி எமக்குத் தெளிவு படுத்த முடியுமானால், அவர்களது கூற்றுக்களை நன்றியுடன் செவிமடுத்து அதனை அலசி ஆராய்வதன் மூலம் எமது தவறுகளைத் திருத்திக்கொள்ளவும் நாம் தயாராகவே உள்ளோம்.


பைஅத் இஸ்லாத்தின் நுழைவாயில்!! பகுதி-1 


No comments

Powered by Blogger.