பாங்கு சப்தத்தை கொண்டு நோன்பு திறப்பது பித்அத் ஆகும்
நோன்பு திறக்கும் நேரம் ஓர் இஸ்லாமிய பார்வை
இன்று நம் மக்கள் மத்தியில் பாங்கு சப்தத்தை கொண்டு நோன்பு திறக்கும் வழமை உண்டு. இப்படியான ஒரு வழமை நபி (عليه الصلاة والسلام) அவர்களிடம் இருந்ததா என்று பார்த்தால் இல்லை. நபி (عليه الصلاة والسلام) அவர்கள் வாழ்கையில் பாங்கு சப்தத்தை கொண்டு நோன்பு திறந்ததாக ஒரே ஒரு ஹதீஸ் கூட இல்லை. முதலில் நோன்பு திறக்கும் நேரம் பற்றி இஸ்லாம் என்ன சொகிறது என்பதை பார்ப்போம்.
'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)
இரவு வரை என்றால் எந்தலவு என்பதை நபி (عليه الصلاة والسلام) அவர்கள் தெளிவுப்படுத்துகிறார்கள்.
இறைத்தூதர் (عليه الصلاة والسلام) அவர்கள் கூறினார்கள்:
'சூரியன் மறைந்து, இந்த(கிழக்கு) திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்த (மேற்கு) திசையிலிருந்து பகல் பின்னோக்கி(ப்போ)னால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யவேண்டும்!' (புஹாரி 1954)
இது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். 100% துள்ளியமாக சூரியன் மறையும் நேரத்திலேயே தானா நோன்பு திறக்க வேண்டும்? என்றால் இதற்க்கும் இஸ்லாம் விடை சொல்லுகிறது.
இறைத்தூதர் (عليه الصلاة والسلام) அவர்கள் கூறினார்கள்:
'நோன்பை நிறைவு செய்வதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாயிருப்பார்கள்!'
இதை ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (புஹாரி 1957)
விரைவுப்படுத்துங்கள் என்று சொல்லியிருக்க சிலர் இதுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் பாங்கு சொன்னதும் வேகமாக வாயில் போடவேண்டுமென்று, இவர்களுக்கு நினைப்போ தெரியாது இங்கு க்ரிக்கெட் விழையாட்டு நடக்கிறது என்று வேகப்பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசுவது போன்று பாங்கு சொன்ன உடனே வேகமாக ஈத்தப்பழத்தை வாயில் போடுவதற்கு. இஸ்லாம் ஒவ்வொரு விடையத்திலும் நிதானத்தை கையால சொல்கிறது அப்படி இருக்க நிதானம் இழந்து இப்படியா நோன்பு திறப்பது!! சரி இவர்கள் சொல்லும் கருத்தை தானா இந்த சொல்கிறது அல்ல நான் சொல்லும் கருத்தையா சொல்கிறது என்பதை விழலங்கிக்கொள்ளுவதற்கு ஏனைய ஹதீஸ்களில் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் எப்படி வழிகாட்டினார்கள் என்பதை பார்த்தால் தெளிவாக விழங்கிக்கொள்ள முடியும்.
அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி (عليه الصلاة والسلام) அவர்களுடன் ஒரு பயணத்திலிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் கூட்டத்தில் ஒருவரிடம், 'இன்னாரே! எழுந்து நமக்காக மாவு கரைப்பீராக!' என்றார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!' என்றார். நபி (عليه الصلاة والسلام) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக! எனறார்கள். அதற்கவர் 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டும்!' என்றார். நபி (عليه الصلاة والسلام) அவர்கள். 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!' என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலை நேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!' என்றார். மீண்டும் நபி (عليه الصلاة والسلام) அவர்கள், 'இறங்கி, நமக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர் 'பகல் (வெளிச்சம்) இன்னும் (எஞ்சி) இருக்கிறதே?' என்று கேட்டதற்கும் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!' என்று கூறினார்கள். உடனே அவர் இறங்கி, அவர்களுக்காக மாவு கரைத்தார். அதை நபி (عليه الصلاة والسلام) அவர்கள் அருந்திவிட்டு, 'இரவு இங்கிருந்து (கிழக்கிலிருந்து) முன்னோக்கி வந்துவிட்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!' என்றார்கள். (புஹாரி 1955)
இதில் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் நோன்பு திறப்பதற்கு மாவ் கரைக்க சொன்ன நேரத்தில் அந்த நபர் சொன்ன வார்த்தை "மாலை நேரம் முடிவடையட்டும்" இதில் இருந்து மாலை நேரம் முடிவடையவில்லை என்று தெளிவாக விழங்குகிறது. அது மட்டுமல்ல இன்னுமொரு வார்த்தையையும் அவர் பயன்படுத்துகிறார் "பகல் இன்னும் இருக்கிறதே" இதில் இருந்து தெளிவாகுகிறது மேலே மற்றைய ஹதீஸில் நோன்பு திரப்பதை விருவுப்படுத்துங்கள் என்பதன் அர்த்தம் சூரியன் மறைந்த பின்பு பாங்கு சொன்ன பின்பு வேகப்பந்து வீச்சாலர் போன்று வேகமாக ஈத்தப்பழத்தை வாயில் போடுவதல்ல நோன்பு திறப்பதை முற்படுத்த வேண்டும் என்பதேயாகும். இதே போன்று இன்னுமொரு அறிவிப்பும் வறுகிறது அதை பார்த்தால் இன்னும் தெளிவாகும் இன்ஷா அல்லாஹ்.
இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி (عليه الصلاة والسلام) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி (عليه الصلاة والسلام) அவர்கள் ஒரு மனிதரிடம், '(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!' என்று கூறினார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!' என்றார். மீண்டும் நபி (عليه الصلاة والسلام) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!' என்றார்கள். அப்போதும் அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!' என்றார். நபி (عليه الصلاة والسلام) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!' என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி (عليه الصلاة والسلام) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, 'இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள். (புஹாரி 1941)
இந்த செய்தியில் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் நோன்பு திரக்க மாவ் கரைக்க சொன்னதும் அந்த மனிதர் சொன்ன வார்த்தை "சூரியன்" என்பதாகும். இது ஒரு முஃமீனுக்கு போதும் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் நோன்பு திரந்த நேரத்தை விழங்கிக்கொள்வதற்கு. இப்போ சிலர் பாங்கிற்க்கு 1 அல்லது 2 நிமிடம் முன்னாடி நோன்பை திறன்தால் நோன்பு முறிந்துவிடும் என்று சொல்கிறார்கள் ஆனால் மேலே நான் சுட்டிக்காடிய ஹதீஸ்களில் நோன்பு திரப்பதற்கு மாவு கரைக்க சொன்னதும் அந்த மனிதர் சொன்ன வார்த்தைகள் இவர்களின் கேள்விக்கு போதுமான பதிலாகும். மேலும் கீழே பதிந்துள்ள செய்தியை பார்த்தால் இன்னும் தெளிவை தருகிறது, அதே நேறம் அந்த ஸஹாபாக்களுக்கு நோன்பை கழா செய்யுமாறு நபி (عليه الصلاة والسلام) ஏவினார்கள் என்று கூட அந்த செய்தியில் இல்லை.
"நாங்கள் நபி (عليه الصلاة والسلام) அவர்களின் காலத்தில் மேக மூட்டமாக இருந்த ஒரு நாளில் (சூரியன் மறைந்து விட்டதுதென்று எண்ணி) நோன்பை திறந்து விட்டோம்" பிறகு சூரியன் தோன்றி விட்டது என்று அஸ்மா (ரழி) அவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புஹாரி)
நோன்பு திறப்பதை விரைவுப்படுத்துமாறு இஸ்லாம் சொல்லியிருக்க ஹதீஸ்களில் "மாலை நேரம் முடிவடையட்டும்" | "பகல் இன்னும் இருக்கிறதே" | "சூரியன்" போன்ற வார்த்தைகள் மூலம் நபியவர்கள் நோன்பு திரப்பதை எந்தளவு முற்படுத்திருக்கிறார்கள் என்று தெளிவாக இருக்க இன்று ஒரு வருடத்திற்கு முன்னாடி அந்த வருடத்தின் இறுதி மாதம் வரை இந்த கிழமையில் இந்த ஊரில் இந்த நாளில் சரியாக இந்த நிமிடத்தில் தான் சூரியன் மறையும் என்று கேலண்டரில் சொல்லப்பட்ட அந்த நேரத்தில் தான் துள்ளியமாக இவர்கள் நோன்பை திறக்கிறார்கள். சரி அதையாவது சரியா செய்ராங்களா?? குறைந்தது துள்ளியமாக கேலண்டரில் சொல்லப்பட்ட நேரத்திலாவது திறக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை சூரியன் மறையும் நேரத்தை அடைந்தும் நோன்பு திற்ககாமல் பாங்கு சப்தத்தை கேட்கும் வரை இருக்கிறார்கள் அதிலும் சிலர் ரேடியோவில் பாங்கு போனாலும் பள்ளியில் பாங்கு சொல்லும் வரை ஈத்தப்பழத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பார்கள். இதை விட பெரிய வேடிக்கை என்னவென்றால் ஒரு ரேடியோ ஸ்டேஷனில் பாங்கு சொல்லி முடியும் போது தான் இன்னொரு ரேடியோ ஸ்டேஷனில் டி.வி சென்னலில் பாங்கு சொல்கிறார்கள். இவர்கள் சூரியன் மரையும் என்ற துள்ளியமான கெலண்டரில் சொல்லப்பட்ட நேரத்தை அடைந்தாலும் நோன்பை திறக்காமல் ஒரு வேலை அப்படி 2 நிமிடங்கள் தாமத்தப்படுத்தி ரேடியோ அல்லது டீ.வி அல்லது பள்ளியில் பாங்கு சொன்னாலும் அது வரை காத்திருந்து பாங்கு சப்தத்தை கேட்ட பின்பே நோன்பை திறக்கிறார்கள்.
மேலே நான் பதிந்த இரண்டு ஹதீஸுலிம் நபி (عليه الصلاة والسلام) அவர்கள் நோண்பு திரப்பதற்கு அந்த மனிதருக்கு மாவுகரைப்பீராக சொன்ன நபி (عليه الصلاة والسلام) நோன்பு திரப்பதற்க்கு பாங்கு சொல்வீராக என்று எந்த ஒரு ஸஹாபிக்கும் ஏவவில்லை எனவே இது தெளிவாக காட்டிவிட்டது நோன்பு திறக்க பாங்கு தேவையில்லை என்று. மேலும் ஒரு சந்தேகம் பாங்கு சப்தத்தை கொண்டு நோன்பு திரப்பது என்றால் பாங்கு சொல்பவர் எப்படி நோன்பு திரப்பார் பாங்கு சொல்லிட்டு நோன்பு திரந்தால் "நோன்பு திரப்பதை விரைவுப்படுத்துங்கள்" என்ற ஹதீஸுக்கு நேர் முரனானதாகும்.
ஒருவர் துள்ளியமாக சூரியன் மறையும் நேரத்தில் தாமத்தப்படுத்தாமல் நோன்பை திரக்க வேண்டும் ஏனென்றால் அன்று கடிகாரம் இல்லை நேரத்தை அறிந்துக்கொள்ள ஆனால் இன்று சூரியன் மறையும் நேரம் எங்களுக்கு தெரியும். என்று தான் அவர் விழங்குவதாக சொன்னால் அது அவரின் விளக்கம். இந்த ஹதீஸ்களில் இருந்து அவர் விழங்கிய கருத்து சரியானதாக இருந்தால் இருந்தால் அவருக்கு இரன்டு நன்மையும் எனக்கு ஒரு நன்மையும் கிடைக்கும் அல்லது நான் விழங்கிய கருத்து தான் சரி என்றால் எனக்கு இரண்டு நன்மையும் அவருக்கு ஒரு நன்மையும் கிடைக்கும். ஆனால் இது இரண்டும் இல்லாம நோன்பு திரப்பதை பாங்கு சப்தத்தை கேட்கும் வரை தாமதப்படுத்தி யார் நோன்பு திறக்கிறார்களோ தெளிவான இஸ்லாத்திற்க்கு முரனான பித்அத்தை செய்கிறார்கள்.
அல்லாஹு அஃலம்.
- Ashfaaq Reshard -
No comments