Header Ads

Header ADS

கொரோனா வர்ஷன் - சஊதி அரேபியா கண்டுபிடித்த புத்தம்புது இஸ்லாம்


கொரோனா வர்ஷன்:
==================
.
சஊதி அரேபியா கண்டுபிடித்த புத்தம்புது இஸ்லாம் - “கொரோனா வர்ஷன்”.
.
இந்த லட்சணத்துல இருக்கும் இவங்க தான் பித்அத்தை ஒழிக்கப் பாடு படுறாங்களாம். அத நாங்க நம்பனுமாம்.
.
முதலில் இந்த நூதன வழிமுறைக்கு நபியின் ஸுன்னாவில் எங்கே வழிகாட்டுதல் உள்ளதென்று யாராவது சஊதி அபிமானிகள் கூற முடியுமா? நாங்களும் கத்துக்கணும்ல.
.
ஸுன்னாவை ஏற்கனவே புறக்கணித்து நடக்கும் வழிகெட்ட பிரிவினர்கள் இது போன்றதொரு காரியத்தைச் செய்திருந்தால் கூட ஏதோ கொஞ்சம் சகித்திருக்கலாம்.
.
ஸுன்னாவின் பாதுகாவலர்களாகவும், ஸலபுஸ் ஸாலிஹீன்களின் ஏகபோக வாரிசுகள் போலவும் தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சஊதி பெருந்தகைகளே இந்த அட்டூழியத்தைச் செய்வது தான் கொடுமை.
.
இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா?
.
தொழும் ஸஃப்ஃபில் ஒருபோதும் இடைவெளி விடவே வேண்டாம் என்று கடுமையாக எச்சரித்த நபி (ஸல்) அவர்கள் ஸ்தாபித்த மஸ்ஜிதுன் நபவிக்குள்ளேயே நபியின் கட்டளைக்கு மாறு செய்ய இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அபார துணிச்சல் தான்.
.
உலகம் வெகு சீக்கிரமே அழியப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை. இல்லென்னா இப்படீல்லாம் மார்க்கத்தைச் சிதைத்து அநியாயம் பன்னுவாங்களா? 


-அபூ மலிக்

No comments

Powered by Blogger.