தொழுபவர்களை விரட்டும் மரதான சின்ன பள்ளி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்
ஆரம்பிக்க முன்னாடியே சொல்லிக்கொள்கிறேன் இது ஜம்மிய்யதுல் உலமாவின் அறிக்கையை பற்றிய விமர்ச்சனம் அல்ல எனவே கட்டுரையை வாசிக்காமல் அரைகுரையுமாக வாசித்திட்டு கொம்மன்ட் செய்ய வேண்டாம்.
15/3/2020 நாயிற்று கிழமை மரதான சின்ன பள்ளிக்கு ளுஹருக்கு போன நேரத்தில் மேழ் மாடியில் தொழுவதற்கே திரந்து இருந்தது கீழே தொழமுடியாது என்று மூடி இருந்தது, ஏன் என்று கேட்டதற்கு பொலீஸார் A/C இருப்பதால் கீழே தொழுவிக்க வேண்டாம் என்று சொன்னதாக கூறினார்கள். அதன் பிறகு அஸர் தொழுவதற்க்கு போனபோது அங்கு Notice Boardஇல் ஜம்மிய்யதுல் உலமாவால் அனுப்பப்பட்ட கடிதம் ஒட்டிக்கொண்டிருந்தார்கள். எனவே என்ன சொல்லப்பட்டிருக்கு என்று பார்த்தேன். அதில் மரு அறிவித்தல் வரை ஜமாஅத் தொழுகையும் ஜும்ஆ தொழுகையும் தான் தொழவேண்டாம் என்று இருந்தது அதை தவிர பள்ளியில் வேறு எந்த அறிவித்தளும் செய்யவில்லை.
மஹ்ரிபுக்கு தொழுவதற்கு பள்ளிக்கு போனால் பள்ளி மூடப்பட்டிருந்தது. தொழவருபவர்களை திட்டி விரட்டிக்கொண்டிருந்தார்கள். ஏன் என்று கேட்டால் அந்த கிழவன் சொல்லுறான் போலீஸார் மூட சொல்லி இருக்கிறார்களாம். நான் கேட்டேன் உலமா சபையின் அறிக்கையில் பள்ளியை மூட சொல்லி இல்லையே ஜமாத் தொழுகை தானே நடத்த வேண்டாம் என்று இருக்கு என்று கேட்டதற்க்கு நீங்க போயி பொலிஸ் உடன் பேசிக்கொள்ளுங்கள் என்று கத்துரான். அப்போ நாங்கள் மஹ்ரிப் தொழுரை இல்லையா? மஹ்ரிப் களா ஆகுமே என்றால் அதெல்லாம் எனக்கு தெரியா என்றும் இடைக்கெட போலீஸ் என்ற வார்த்தையை கூவல் இட்டு பயம் காட்டுராராம். நான் கேட்டேன் குரைந்தது நீங்கள் அறிவித்தீர்களா மஹ்ரிபுடன் பள்ளி மூடப்படும் என்று கேட்டதற்க்கு நீங்கள் போலீஸுடன் பேசுங்கள் என்று போலீஸ் என்று சத்தமாக சொல்லி இருப்பவர்களுக்கு பூச்சாண்டி காட்டுரான் இந்த கிழவன். இஷாவுக்கு மூடி இருந்தால் கூட பரவாயில்லை வீட்டுக்கு போய் தொழுவலாம் என்று சொல்லலாம் இங்கு இருக்கும் கடைகளில் வேலை செய்பவர்கள் எப்படி மஹ்ரிபை தொழுவார்கள்? மஹ்ரிப்க்கு இருப்பதே கொஞ்ச நேரம் தான் என்று சொன்னேன். எப்படியோ இவனால் எந்த பிரயோஜனமும் இல்லை இங்கு பேசிக்கொண்டிருந்தால் மஹ்ரிப் தான் கலாவாகும் என்று மரதான Zahira பள்ளிக்கு போனேன் அதன் கதவு திரந்திருந்தது. அல்ஹம்து லில்லாஹ் உடனே சென்று மஹ்ரிபை தொழுதேன். தொழுதுவிட்டு வரும் போது zahira பள்ளியையும் மூடிவிட்டார்கள். போலீஸ் தான் மூட சொன்னதாக சின்ன பள்ளியில் இருப்பவன் சொன்னது உண்மையா என்று தெரிந்து கொள்ள Zahira பள்ளியில் ஏன் மூடிரீங்க என்று கேட்டேன் அதற்கு அவர்கள் சொன்ன பதில் மரதான சின்ன பள்ளி மூடி இருக்கிறார்கள் எனவே தான் நாங்களும் மூடினோம் என்று.
இது சம்பந்தமாக தேடிப் பார்த்ததில் ஜம்மிய்யதுல் உலமா பள்ளிகளை மூட சொல்லி சொல்லவும் இல்லை இலங்கை அரசாங்கமோ போலீஸோ மூட சொல்லவும் இல்லை. மரதான சின்ன பள்ளியின் சொன்னது அத்தனையும் பொய். இவ்வாரான கேடுகெட்ட மரதான சின்ன பள்ளி நிர்வாகம் மாற்றப்பட வேண்டும். ஜம்மிய்யதுல் உலமாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்த பள்ளி நிர்வாகம் மீது உலமா சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் சொல்லாத ஒன்றை பொய்யாக அரசாங்கத்தின் இட்டுக்கட்டியதற்காவே maradana சின்ன பள்ளி நிர்வாகம் மீது புகார் கொடுக்கலாம்.
சிலர் சொல்லுகிறார்கள் ஜமாஅத் நடக்கவில்லை என்றாலும் அதிகமான மக்கள் வருகிறார்களாம் எனவே தான் மூடினோம் என்று அதற்காக மூட சொல்லி உங்களுக்கு யார் சட்டம் போட்டது உலமா சபையா இலங்கை அரசாங்கமா? சரி அப்படி அதிகமானவர்கள் வருவதால் மூடினாலும் என்ன செய்ய வேண்டும் தொழவருபவர்களில் அருகில் வீடுகள் இருப்பவர்களுக்கு நீங்கள் வீட்டில் தொழுதுக்கொள்ளுங்கள் என்றும் அங்கு வீதிகளில் கடைகளில் வேலை செய்பவர்கள் Bazarக்கு வருபவர்கள் பிரயானிகள் போன்றவர்களை மட்டும் திரந்து உள்ளே விட்டிருக்க வேண்டும். இப்படி அல்லாஹ்வை தொழுபவர்களை பொய் சொல்லி விரட்டி இருக்கக்கூடாது.
இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு. (அல் குர்ஆன் 2:114)
இந்த மரதான சின்ன பள்ளி நிர்வாகமும் தொழுபவர்களை விரட்டியவனும் எந்த கொரோனா நோய்க்கு பயந்து விரட்டினானோ அல்லாஹ் அதே கொரோனா அல்லது அதை விட மோசமான நோய் கொடுத்து எப்படி நாங்கள் அல்லாஹ்வை தொழுவதற்க்கு இடம் இல்லாமல் அலைந்தோமோ அதேபோன்று நோயை குனப்படுத்த முடியாமல் அலையவேண்டும், அவர்களுக்கு இவ்வுளகிலும் மறு உலகிலும் அல்லாஹ் இளிவை ஏற்ப்படுத்துவானாக. ஆமீன்.
No comments