Header Ads

Header ADS

அழ்ழாஹ் அருள்புரிந்தோரின் பாதை எது?


அல்குர்ஆன் விளக்கம்!
அழ்ழாஹ் அருள்புரிந்தோரின் பாதை எது...............?

ஆக்கம் : அபூ முஹம்மத் அல் முஹம்மதீ
எங்களை நேரான வழியில் செலுத்திடுவாயாக! (அது) எவர்கள்மீது நீ அருள்புரிந்தாயோ அவர்களின் வழி!உனது கோபத்திற்கு உள்ளானோரி னதும், வழிதவறிச் சென்றோரினதும் (வழி)யல்ல!
(01:05-07)

அல்குர்ஆனின் முதல் அத்தியாயமாகிய தோற்றுவாய்எனும்அத்தி யாயம் அல்குர்ஆனின் சூறாக்களிலேயே மிகவும் மகத்தானதாகும். இந்த அத்தியாயத்தின் மகத்துவத்தை உணர்த்தக்கூடியவற்றுள் அதுஉள்ளடக் கியிருக்கும் விடயமும் பிரதானமானதாகும். இந்த அத்தியாயத்தை அடியா னுக்கும் தனக்கும் மத்தியில் பங்கிட்டுக் கொண்டதாக ஹதீஸுல்குத்ஸிய் யிலே அழ்ழாஹ் குறிப்பிடுகின்றான்.

இந்த அத்தியாயத்தில் அடியான் தன்னை எவ்வாறு புகழவேண்டும் என்பதை அழ்ழாஹ் மிகஅழகாகக் கற்றுக்கொடுத்துவிட்டு, முதன்முதலாக அடியான் இவ்வாறு கேட்கிறான் என அவனேஅதனைவிபரிப்பதானது, தான் கற்றுக்கொடுப்பதற்கு மேலதிகமாக எதனையுமே அறிந்திராத தனதுஅடியா னுக்கு மிகச்சிறந்ததைஅவனாகவேவழங்குவதாகும்.அவ்வாறுஅழ்ழாஹ்வால் வழிகாட்டப்பட்டமிகப்பெரிய அருளைப்பற்றியே இந்த வசனங்களில் அவன் தெளிவுபடுத்துகின்றான்.

அல்குர்ஆனின் நுழைவாயிலாகக் காணப்படும் (பாதிஹா)தோற்றுவாய் எனும் முதல் அத்தியாயத்தில் அடியான் வேண்டிநிற்கும் ஒரேவிடயம் (யா அழ்ழாஹ்!) எங்களுக்கு நேரான பாதையைக்காண்பித்தருள்வாயாக! (அது) எவருக்கெல்லாம் நீ அருள்புரிந்தாயோ அவர்களது பாதை. உனது கோபத்திற்குள்ளானோரினதோ, வழிதவறியவர்களினதோ(பாதை)யல்ல என் பதாகும். அத்தகைய நேர்வழியைப் பெற்றுக்கொள்வதென்பது மனிதனுக்கு மிகமிக அவசியமானது என்பதை வெறுமனே உணர்த்துவதோடு அழ்ழாஹ் நிறுத்திக்; கொள்ளவில்லை,மாறாக நேர்வழி கிடைக்கப் பெற்றதன் பின்னர் கூட ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் பதினேழு விடுத்தம் ஒவ்வொருஅடியானும் இதனை வேண்டிக்கொண்டேயிருக்கவேண்டும்என்பதற்காகஇந்த அத்தியாயத்தை ஒவ்வொரு தொழுகையிலும் கடமையாக்கியுள்ளான்.

எனவே ஒவ்வொரு அடியானும்அழ்ழாஹ்விடம்பிரார்த்திக்கும் போது முதலாவதாகத் தனக்கு நேர்வழிகாட்டும்படி அவன் பிரார்த்திக்க வேண்டும், நேர்வழியிலே தனது பாதங்களை உறுதிப்படுத்திவைக்கும்படி பிரார்த்திக்க வேண்டும், நேர்வழிகாட்டியதன் பின்னர் தனது உள்ளத்தை வழிகேட்டிலே விட்டுவிடாதிருக்கும்படி பிரார்த்திக்கவேண்டும்.

அழ்ழாஹ் தனதுஅடியானுக்குஅத்தியவசியமானநேர்வழியைஇறக்கி வைத்தது மட்டுமல்லாமல் அதனை நடைமுறைப்படுத்திக்காட்டிடஒருமனிதப் புனிதரை அனுப்பிவைத்திருக்கின்றான்.இருந்தும்கூடஎமதுசமூகத்திலே சிலர் இந்த நேர்வழி எது என்பதில் தாமும் குழப்பத்திலாகிவிட்டதுடன்ஏனையோ ரையும் குழப்பத்திலாக்கிவிட்டனர். அழ்ழாஹ் நாடினால் அத்தகையவர்கள் இந்த அல்குர்ஆனிய விளக்கத்தின்மூலம் அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் நேர்வழியைஅடையமுடியும். அழ்ழாஹ் அதற்கு அருள்புரிவானாக!

மனிதனுக்கு மிகமிக அவசியமான இந்த நேர்வழி எவ்வாறுகிடைக்கும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். முதலாவதாக ஒரு மனிதன் தன் மனதளவில் தூய்மையாக இல்லாதவரை அவனால்அழ்ழாஹ் வினது நேர்வழியை ஒருபோதும் அடைந்துகொள்ள முடியாது.

அழ்ழாஹ் அல்குர்ஆனில் கூறுவதாவது:-
நிச்சயமாக அழ்ழாஹ்விடமிருந்து உங்களிடம் பேரொளியும்,
தெளிவானதொரு வேதமும் வந்திருக்கின்றது. யார் அழ்ழாஹ்வின் திருப் பொருத்தத்தைத் தேடுகின்றாரோ, அவர்களை அதனைக்கொண்டு பாதுகாப் பான வழியில் செலுத்துகின்றான். மேலும் தனது அருளைக்கொண்டு அவர் களை (வழிகேடுகள் எனும்) இருள்களிலிருந்து (நேர்வழி எனும்) ஒளியின் ;பால் செலுத்துகின்றான். தவிர நேரான வழியிலும் அவர்களைச் செலுத்து கின்றான். (05:15,16 )

எனவே நேர்வழிக்காகப் பிரார்த்திக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தப்பிரார்த்தனைஏற்றுக்கொள்ளப்படுவதற்காக அவன்புறமுள்ளவாசலைத் திறக்க வேண்டும். அதுதான் அவனது உள்ளத்தில் அழ்ழாஹ்வின் திருப்; பொருத்தத்தை இலட்சியமாகக் கொள்வதாகும். அது இல்லாத வரை ஒரு மனிதன் எவ்வவளவுபெரியஅறிஞனாக இருந்தாலும் அவனை அழ்ழாஹ்நேர் வழியிலே செலுத்தமாட்டான்என்பதை மேற்கண்டவசனம் உணர்த்துகின்றது. நேர்வழியை அடைந்துகொள்வதற்கு அழ்ழாஹ்வின் திருப்பொருத்தத்தை தேடக்கூடியவர்களாக இருப்பதுபோல் நேர்வழி எது? என்ற தெளிவும் மிக மிக அவசியமானதாகும். இந்தத்தெளிவு இல்லாதவர்கள் நேர்வழியைப்பிரா ர்த்தித்துக்கொண்டே வழிகேட்டிலே சென்றுவிடுவார்கள். இத்தகையவர்கள் ;வழிகேட்டிலே செல்வதற்குக்காரணம் நேர்வழிபற்றிய தெளிவில்லாமல் வழி தவறியோரின் பாதையைக் கைக்கொண்டதுவேயாகும்.

மேலேயுள்ள வசனத்தில் வழிதவறியவர்கள் என அழ்ழாஹ் கூறுவது கிறிஸ்தவர்களையே என ரஸூலுழ்ழாஹி(ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) தெளிவுபடுத்திள்ளார்கள்.அவர் ;கள் வழிகேட்டில் செல்லுவதற்கு மூலகாரணம் மனிதர்களை வரம்புமீறிப் புகழ்ந்ததாகும். ஈஸா (அலைஹிஸ்ஸலாம்)அவர்களை முற்றுமுழுதாகப் பின்பற்ற வேண்டும் என்பதைக்கடந்து அழ்ழாஹ்வின் பிள்ளை எனக்கூறி, புகழ்வதில் வரம்புமீறி விட்டார்கள். வெளிப்படையில் பார்க்கும்போது இச்செயல் சிறந்ததாகத் தோன்றினாலும் அவ்வாறு கூறுவோரை அழ்ழாஹ் நிராகரிப்பாளர்கள்எனக் கூறிவிட்டான்.

அதேபோன்று இந்த உம்மத்திலுள்ள சிலரும் அழ்ழாஹ்வினால் அருள்செய்யப்பட்டவர்களை கண்ணியப்படுத்தவேண்டும் என்பதைக்கடந்து அவர்களைப் பின்பற்றவேண்டும் எனக்கூறி தெளிவானவழிகேட்டில் செல்லு கின்றார்கள். இந்த வழிகேட்டிற்கு ஆதாரமாக இங்கு நாம் எடுத்துக்கொண் டுள்ளஅல்குர்ஆனின்பிரார்த்தனையில் அழ்ழாஹ்வின்அருளுக்குரியவர்களின் பாதையைக்காட்டும்படி பிரார்த்திக்க அழ்ழாஹ் எமக்குக் கற்றுத் தந்திருக் கின்றானே எனக் கூறுகின்றனர். அல்குர்ஆன் வசனத்திலிருந்து அவர்கள் பெற்றிருக்கக்கூடிய விளக்கம் அல்குர்ஆனுக்கு முரணானது, அவர்களால் அழ்ழாஹ்வின் அருளுக்குரியவர்கள் எனக் கருதப்படுவோரது விளக்கத்திற் கு முரணானது என்பதை சிந்திக்க இவர்கள் மறந்துவிடுகின்றனர். எனவே இதுபற்றித் தெளிவுபடுத்துவது அவசியம்.

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களைத் தவிர மார்க்க விடயத்தில் மற்ற எவரையும் பின்பற்றும்படி அழ்ழாஹ் ஒருபோதும் கூறவில்லை. மாறாகமார்க் கவிடயம் தன்னிடமே ஒப்படைக்கப்பட வேண்டும் என ரஸூலுழ்ழாஹி அவர்களே கூறியுள்ளதைக்கவணியுங்கள்:-
ஏதேனும் ஒன்று உங்களது உலக விடயத்தில் உள்ளதாக இருந்தால் அதுபற்றி நீங்களே நன்கறிந்தவர்கள். ஏதேனும் ஒன்று உங்களது தீனில் உள்ளதாக இருந்தால் அது என்னிடமே (ஒப்படைக்கப்படவேண்டும்.)
(ஸஹீஹ் முஸ்லிம்)

ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)அவர்களுக்குப்பின்னர் அவர்களது உம்மத்தில் அழ்ழாஹ்வின் அருளிற்குரிவர்களில் முதண்மையானவர்கள் ஸஹாபாக்கள். அவர்களை நோக்கித்தான் ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்)மேலேயுள்ள கூற்றைக்கூறி னார்கள். அந்த ஸஹாபாக்களையே மார்க்கவிடயத்தில் பின்பற்றமுடியாது என்றிருக்கும்போது, அதன் பிறகு வந்தவர்களை மார்க்க விடயத்தில் எப்ப டிப்பின்பற்றுவது? என்பது முதலாவது கேள்வி. இரண்டாவது அழ்ழாஹ்வின் அருளிற்குரியவர்களை சரிபிழை ஆராயாமல் பின்பற்றுவதுதான்நேர்வழியாக இருந்தால் நபியவர்கள் ஏன் மார்க்க விடயத்தைத் தன்னிடம்ஒப்படைக்கும் படி கூறுகின்றார்கள்?

அதேபோன்று அழ்ழாஹ்வின் அருளிற்குரியவர்களைப்பின்பற்றுவதுதான் நேர்வழி எனும் கருத்தில் ஸஹாபாக்களும் இருக்கவில்லை என்;பதை பின் வரும் சம்பவத்தின்மூலம் நாம் விளங்கிக்கொள்ளலாம்.

மர்வான் பின் ஹகம் (ரலியழ்ழாஹூ அன்ஹூ)கூறுகின்றார்கள்:-
உஸ்மான் (ரலியழ்ழாஹூ அன்ஹூ) அவர்களுடன் சென்றுகொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர் (ஹஜ், உம்ரா ஆகியஇரண்டையும்) சேர்த்துச் செய்வதற்காக தல்பிய்யா சொல்லிக்கொண்டிருந்தார். உடனே யார் அது? என உஸ்மான் (ரலியழ்ழாஹூ அன்ஹூ)கேட்டார்கள். அதற்கு அலி(ரலியழ்ழாஹூ அன்ஹூ) எனக் கூறினார்கள். இதனை விட்டும் உம்மை தடுத்திருக்கின்றேன் என்பது உமக்குத் தெரியாதா? என (உஸ்மான் (ரலியழ்ழாஹூ அன்ஹூ)) கேட்டார்கள். அதற்கு (அலி (ரலியழ்ழாஹூ அன்ஹூ) ) ஆம்! ஆனால் உங்க ளது கூற்றிற்காக ரஸூலுழ்ழாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களது கூற்றை நான் விடக்கூடிய வனல்ல எனக்கூறினாhர்கள்.
(அஹ்மத் பாகம் 2, பக்கம் 136- ஸஹீஹ்)

குர்ஆன், ஹதீஸைப் பின்பற்றுவதுதான் அழ்ழாஹ்வின் அருளிற்கு உரிவர்களின் பாதை என்பதை எவ்வளவு உறுதியாக அலி (ரலியழ்ழாஹூ அன்ஹூ) நிரூபித் திருக்கின்றார்கள்.

இஸ்லாம் எக்காலத்திற்கும் பொருத்தமானதாக இருப்பதன்ரகசியமே அது முக்காலத்தையும்அறிந்தஅழ்ழாஹ்வினால் உருவாக்கப்பட்டகொள்கை என்பதனலாகும். அது ஏனைய கொள்கைகோட்பாடுகளைப்போன்று படைப் பினங்களால் உருவாக்கப்பட்டதல்ல.அப்படியான ஒரு மார்க்கத்தில்மனிதக் கருத்துக்களும் பின்பற்றப்படவேண்டும் எனக்கூறி அழ்ழாஹ்வின் கூற்றுக்க ளுடன்மனிதக்கருத்துக்களையும் புகுத்த முயற்சிப்பதன்மூலம்இஸ்லாத்தின் புனிதத்தண்மையை கெடுப்பதென்பது எவ்வளவு பாரதூரமானது..........? இலங்கையிலே நாம் மேலே சுட்டிக்காட்டிய தவறானவிளக்கத்தில் இருப்போர் பெரும்பாலும் ஷhபி மத்ஹபைப் பின்பற்றக்கூடியவர்கள். ஷhபி மத்ஹபில் உள்ளவர்களின் கூற்றுப்படி இமாம் ஷhபிஈ அவர்களுக்குபழைய கூற்று, புதிய கூற்று என இரண்டு வகை உள்ளது. இதன் பொருளைக்கூட இவர்கள் தவறாகவே அர்த்தம் கொள்கின்றனர். அதாவது தேவைக்குஏற்ப இவர்கள் இரண்டு வகையான தீர்ப்பின்படியும் அமல் செய்வார்கள். ஆனால் உண்மை என்னவெனில் பழைய கூற்று என்பது தவறு எனத் தெரிந்ததன் பின்னால் கைவிடப்பட்டதாகும்.அப்படியானால் அதன்படி செயல்படமுடியுமா அதுமட்டுமல்லாமல் அந்த நல்லமனிதர்கள் தமது முடிவு வஹியினது முடி வுகளுக்கு முரணானது எனத்தெரிந்ததும் உடனடியாகமாற்றியிருக்கின்றார் கள். அவர்களைப் பின்பற்ற வேண்டும் எனக்கூறுகின்ற இவர்கள்வஹியின் முடிவுகளுக்கு முரணான தமது முடிவுகள் விடயத்தில்அந்தநல்லவர்களை ஏன் பின்பற்றுவதில்லை..............? அதேநேரம் இமாம் ஷhபிஈகூட வஹியை மாத்திரம் பின்பற்றவேண்டும் என்பதில்தான் உறுதியாக இருந்துள்ளார்கள். இதற்குரிய பல சான்றுகள் இருந்தாலும் ஒன்றை மட்டும் தருகின்றோம்.

இமாம் நவவி ஸஹீஹ் முஸ்லிமின்
விளக்கவுரையில் எழுதியுள்ளதாவது:-
ஒரு ஸஹாபி ஒரு கூற்றைக்கூறிவிட்டால், அல்லது ஒருசெயலைச் செய்துவிட்டால் அது மவ்கூப் எனப்படும். அதனை ஆதாரமாகக் கொள்ள முடியுமா எனக் கேள்விதொடுத்துவிட்டு:-இது விரிவானதும்,கருத்துவேறுபாடு உடையதுமாகும். அது எல்லோருக்கும் சென்றடையாத வரையில் அதுஇஜ் மாஃ எனக்கூறமுடியாது. அது ஆதாரமாக அமையுமா?அதிலே ஷhபிஈ(ரஹ்) அவர்களுக்கு பிரபல்யமான இரண்டு கூற்றுக்கள் இருக்கின்றன. அதிலே
மிகவும் சரியானது புதியதாகும். அது ஆதாரமல்ல என்பதாகும். இரண்டாவது அது பழைய கூற்று, அதாவது அது ஆதாரம் என்பதாகும்.
( பாகம்:05, பக்:36 )

மற்றொரு இடத்தில் இமாம் நவவி அவர்கள் எழுதுகின்றார்கள்:-
எமது தோழர்களிடமும், அவர்களல்லாத ஏனைய சட்டக்கலைவல்லுனர் களிடமும் சரியான முடிவு என்னவெனில் ஒரு சட்டக்கலை வல்லுனர் ஒரு கூற்றைக் கூறி பின்னர் அதிலிருந்து வாபஸ் பெற்று விட்டால் அவருடைய கூற்றாக அது தொடர்ந்தும் இருக்காது என்பதுடன், அவர் கூறியதாககூறப் படவும் மாட்டாது. மேலும் அவர்கள் கூறியுள்ளதாவது:- பழைய கூற்றைக் கூறுவதும், இமாம் ஷhபிஈ அவர்களது கூற்று எனக் கூறப்படுவதும் நேரடிப் பொருளிலல்ல, ஏற்கெனவே அவர்கள் இருந்தமுடிவு எனும்பொருளிலாகும், நிகழ்காலத்தில் அது அவர்களதுகூற்றுஎன்பதனாலல்ல. (பாகம்:05,பக்:224)
ஸஹாபியின் கூற்று ஆதரமாகக்கொள்வதற்குத் தகுதியானதல்ல என இமாம் ஷhபிஈ அவர்கள் எவ்வளவு தெளிவாகக்கூறியுள்ளார்கள். அது மட்டுமா, அக்கூற்றை எடுத்து எழுதியிருப்பதும் ஷhபிஈமத்ஹபின்தூணாகக் கருதப்படும் இமாம் நவவியவர்கள்.

இமாம் ஷhபிஈ அவர்களும், இமாம் நவவிஅவர்களும்அழ்ழாஹ்வின் அருளிற்குரிவர்கள் என்பதில் அந்த மத்ஹபைப் பின்பற்றுபவர்களுக்குமாற் றுக் கருத்து அறவே இருக்காது. அப்படி இருக்கும்போது அந்த இமாம்கள் இருவரும் ஸஹாபியின் கூற்றைப் பின்பற்ற முடியாது எனக் கூறியிருப்பது தெளிவாகியதும் தூய்மையுடையோர் அசத்தியங்களை அடியோடு விட்டு விட்டு, வஹியை மட்டும் பின்பற்றும் ஒரே கூட்டத்துடன் இணைந்து விடுவர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனெனில் அத்தகைய நோக்கம் உள்ளவர்களைத்தான் நேர்வழியில்செலுத்துவதாக அழ்ழாஹ்அல்குர்ஆனில் தெளிவாகக் கூறிவிட்டான்.அந்த வசனம் மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அழ்ழாஹ்வின் திருப்தியை இலட்சியமாகக் கொள்ளாதவர்கள் இந்த சத்தி யத்திலே நுழைவதால் இஸ்லாத்திற்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ எவ் விதப் பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

எனவே அழ்ழாஹ்வின் அருளிற்குரிவர்களின் பாதை அழ்ழாஹ்வினால் இறக்கிவைக்கப்பட்ட வஹியைப் பின்பற்றுவதைத் தவிர வேறில்லை. சில வேளை மனிதர்கள்எனும் காரணத்தினால் அழ்ழாஹ்வின்அருளிற்குரிவர்கள் ஏதேனும் தவறுதலாக சொல்லியிருந்தாலோ, அல்லது செய்திருந்தாலோ அதனைப் பின்பற்றக்கூடாது என்பதுதான் இமாம் ஷhபியினது கருத்தாகும். அதனைத்தான் இமாம் நவவி சரிகண்டுள்ளார்கள்.அதனையே நாமும் வஹி யின் ஒளியில் சரியானதாகக் காணுகின்றோம். இப்போது நாம் சிந்திக்க வேண்டியது ஸஹாபியின் கூற்றை ஆதாரமல்ல எனக் கூறிய ஸஹாபியல் லாத இமாம் ஷhபிஈ, தங்களது கூற்றை ஆதாரமாகக்கொள்வதைதங்களது மத்ஹபாக அங்கீகரிப்பார்களா? அவ்வாறு செய்வோரை சரிகாண்பார்களா?

ஆகவே ஒவ்வொருமனிதனுக்கும் அவசியம் கிடைக்க வேண்டியது என அழ்ழாஹ்வினால் உணர்த்தப்பட்டுள்ள நேர்வழி கிடைப்பதற்குஅவசிய மான இரண்டாவது நிபந்தனை அழ்ழாஹ்வினால் இறக்கியருளப்பட்ட வஹி யை மாத்திரம் அவர் பின்பற்ற வேண்டும் என்பதாகும். இதன் மூலம் தான் ஒருவர் அழ்ழாஹ்வின் அருளிற்குரியவராக மாறுகின்றாரே ஒழிய, சரியிலும் பிழையிலும் நபியல்லாத சாதாரன மனிதரைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு மனிதன் ஒரு போதும் நேர்வழியை அடையமுடியாது. இந்த விடயம் பற்றி அழ்ழாஹ்வின் தீர்ப்பு எவ்வளவு தெளிவாகக்காணப்படுகின்றது.

(நபியே!) வஹீமூலம் உமக்கு அறிவிக்கப் பெற்றதை நீர் பற்றிப் பிடித்துக் கொள்ளும். நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கின்றீர்.
( 43:43 )

எவ்வளவு தெளிவாக வஹீமூலம் அறிவிப்பப்பட்டதை உறுதியாகப் பற்றிப்பிடிக்கும்படி அழ்ழாஹ் கூறுகின்றான். அதுமட்டுமா அவ்வாறுவஹீயை மட்டும் பின்பற்றும் தனது தூதரைப்பார்த்து நிச்சயமாக நீர் நேரான பாதை யில் இருக்கின்றீர்! என்று உறுதியாக அழ்ழாஹ் கூறுகின்றான். பின்பற்றப் படவேண்டிய வஹி என்பது குர்ஆன், ஹதீஸ் அல்லாத வேறொன்றுகிடை யாது. குர்ஆன், ஹதீஸ் அல்லாத வேறொன்றைப் பின்பற்ற வேண்டும் என அறியாமை காரணமாகக் கூறுவோர்கூட இந்த இரண்டும்அல்லாதவை வஹி எனக் கூறத்துணியமாட்டார்கள்.எனவே நேர்வழியைத்தெரிந்துகொள்வதற்கு அழைந்து திரிய வேண்டிய அவசியமே கிடையாது. அது அழ்ழாஹ்வினால் அருளப்பட்ட வஹியில் முழுமையாகவும் தெளிவாகவும் காணப்படுகின்றது. எனவேதான் நேர்வழியைத் தேடிக்கொண்டிருந்த தனதுதூதரைஅவரின்பால் இறக்கியருளப்பட்டுள்ள வஹியைப் பற்றிப் பிடிக்குமாறு அழ்ழாஹ் கற்றுக் கொடுக்கின்றான். இந்தவிடயத்தில் மேலும் தெளிவைக் கொடுப்பதற்காக அழ்ழாஹ் மற்றுமொரு இடத்தில் கூறுவதாவது:-

( நபியே!) உமது ரப்பிடமிருந்து உமக்கு (வஹிமூலம்) இறக்கப் பட்டதுதான் சத்தியம் என்பதையும், யாவரையும் மிகைக்கக்கூடிய மிக்க புகழுக்குரியவனின் (நேரான) பாதையைக் காட்டக் கூடியது என்பதையும் அறிவாளிகள் கண்டுகொள்வார்கள். ( 34:06 )

உண்மையான அறிஞர்களின்முடிவு அழ்ழாஹ்விடமிருந்து இறக்கப் பட்டது மட்டும்தான் சத்தியம் என்பது எவ்வளவு தெளிவாவும் அழகாகவும் கூறப்பட்டுள்ளது. அழ்ழாஹ் இறக்கியருளியது குர்ஆனையும் ஹதீஸையும் தவிர வேறொன்று உள்ளதா....? அப்படியானதொன்று இல்லையெனும்போது குர்ஆன், ஹதீஸைத் தவிரவுள்ளதை நேர்வழியில் இருப்போர் எதற்;காகப் பின்பற்ற வேண்டும்.......? ஆனால் குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாதவற்றை மட்டுமல்ல, குர்ஆனிற்கும் ஹதீஸிற்கும் முரணானவற்றைக்கூடப் பின்பற்று மாறு அழைப்பவர்கள் நேர்வழியில் இருப்பதாக நினைத்திருப்பதுஅவர்களை மட்டுமல்ல, அவர்களை நம்பிச்செல்லும் ஒவ்வொரு மனிதனையும் மீட்சியே இல்லாத அழிவிலே ஆழ்த்திவிடும். இத்தகையவர்கள் குர்ஆன்,ஹதீஸைக் கொண்டு அழ்ழாஹ்வின் அருளிற்குரிவர்களை அளவிடுவதற்குப் பதிலாக, மனிதர்களில் தாம் விரும்பும், நபியல்லாத ஒருவரைத்;தேர்வுசெய்துகொண்டு அவரை வைத்துவஹீயை அளவிடுகின்றார்கள். அதாவது அந்தமனிதர் சிலவேளைகளில் மனிதன் என்ற ரீதியில் விடக்கூடிய தவறுகளையும் பின் பற்றுவதை முஸ்லிம்கள் மீது கடமையாக்குகின்றார்கள். இவர்களது இந்த செயலும் அழ்ழாஹ்வினால் வழி தவறிச் சென்றவர்கள் என அடையாளம் காட்டப்பட்ட கிறிஸ்தவர்களிடம் அப்படியே காணப்பட்டது. இதனைத்தான் அழ்ழாஹ் வழி தவறிச் சென்றோரின் பாதையல்ல எனக் கூறுவதன் மூலம் உணர்த்துகின்றான்.

இதன்பிறகும் நேர்வழி கிடைப்பது அழ்ழாஹ்வின் அருளிற்குரியவர் களைப் பின்பற்றுவதன் மூலமா..........? அல்லது வஹியை மாத்திரம் பின்பற் றுவதால் நேர்வழிபெற்று, அழ்ழாஹ்வின் அருளிற்குரியவர்களாக மாறமுடி யுமா.................? எனும் சந்தேகம் எவருக்கேனும் இருக்குமானால் அடியோடு அந்த சந்தேகத்தினை அகற்றிடக்கூடிய மற்றுமோர் அல்குர்ஆனிய வசனத் தைத் தருகின்றோம்.

அழ்ழாஹ் கூறுகின்றான்:-
மேலும் யார் அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப் படுகின்றார்களோ அவர்கள்அழ்ழாஹ்வின்அருளைப்பெற்;ற நபிமார்கள், உண்மையாளர்கள், தியாகிகள், நல்லடியார்கள் போன்றோருடன் இருப்பார் கள். இவர்கள்தான் மிக்க அழகான தோழர்கள்.
( 04 : 69 )

இந்த அல்குர்ஆனிய வசனம் நமது கேள்விக்கு நேரடியாகப் பதில் தருகின்றது. யாரெல்லாம் அழ்ழாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப் படுகின்றனரோ, அவர்களை அழ்ழாஹ்வின் அருளைப் பெற்றவர்களின் வரி சையில் சேர்ப்பதாக அழ்ழாஹ்வே வாக்குறுதி அளிக்கின்றான். இப்போது அழ்ழாஹ்வின் அருளிற்குரியோரின் பாதை எது என்பதுதெட்டத்தெளிவாகப் புரிகின்றதல்லவா.........? அதன்படி செயல்படக் கூடிய பெரும் பாக்கியத்தை அழ்ழாஹ் எம் அனைவருக்கும் தந்தருள்வானாக!

செயலாற்றுவதற்கு நம் உபதேசம்!
 
அழ்ழாஹ்வின் அருளிற்குரியர்களின் பாதை வஹி யை மாத்திரம் பின்பற்றுவது என நம்பிக்கைகொண்டு, அவ்வாறு செயல்பட்டும் வாருங்கள்!அழ்ழாஹ்வின்அரு ளிற்குரியோரை கண்ணியப்படுத்துங்கள்,ஆனால்வரம்பு மீறி சரிபிழைபாராமல் அவர்களைப் பின்பற்றாதீர்கள்!! 

No comments

Powered by Blogger.