அமீர் ஒர் ஆய்வு - பகுதி 1
- பிரிவினையின் விளைவு!
- இஸ்லாமும் தலைமைத்துவமும்
- முஸ்லிம்களின் வழிகாட்டியார்?
- ஆட்சியதிகாரம் அற்ற அரசியல் தலைமைத்துவம்!
- இமாம் எனபதன் பொருள்!
- அமீர் என்பதன் பொருள்!
(பி.ஜெயின் ஆய்விற்கு ஆதாரபூர்வமான மறுப்பு 2000ஆம் ஆண்டு ஜமாஅதுல் முஸ்லிமீனின் வெளியீடாகிய அத்தீனுல் இஸ்லாம் எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்டது)
ஆசிரியரிடமிருந்து.......................!
- பிரிவினையின் விளைவு!
எவர்கள்
தங்கள் மார்க்கத்தை(த் தங்கள் இஷ்டப்படி பலவாராக)ப் பிரித்து (அவர்களும்)
பல பிரிவினராகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் உமக்கு யாதொரு
சம்மந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றது.
அவர்கள் செய்து கொன்டிருந்த(இத்தீய)வற்றைப் பற்றி பின்னர் அவன் அவர்களுக்கு
அறிவித்து விடுவான்
(6:159)
இஸ்லாத்தை விளங்கிக் கொள்வது
மிகவும் இலகுவானது ஏனெனில் கருனையாளனான அல்லாஹ் அப்படித்தான் தனது தீனை
எற்படுதியுள்ளான். எனவே இஸ்லாத்தை வெளிப்படையாக மறுப்பதுடன் அதிலிருந்து
மக்களைத் தூரமாக்க முயற்சிப்போரது வளையிலிருந்து அல்லாஹ்வின் அருளின்
காரணமாக மக்கள் இலகுவாக தப்பிக்கொள்ள முடியம். ஆனால் இஸ்லாம் எனும் பெயரில்
மக்களை வழிகெடுக்கும் தலைவர்களை புரிந்து கொள்வதுதான் பாமர மக்களுக்கு
மிகவும் சிரமமானதாகக் காணப்படுகின்றது. இத்தலைவர்கள் தத்தமக்கென தனித்தனி
பிரிவுகளை உண்டுபன்னி அது இஸ்லாம் எனக்கூறி மக்களை அப்பிரிவின்பால்
அழைக்கின்றனர். ஆனால் அப்பிரிவுகளது ஒவ்வொரு அழைப்பும் நரகிற்கான அழைப்பு
என்பதில் அணுவளவும் சந்தேகம் கிடையாது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூட தங்களது உம்மத்தில் பிரிவுகள் தோன்றும்போது
வாழக்கூடிய முஸ்லிம்களை இத்தகைய பிரிவுகளனைத்தையும் விட்டும் முற்றிலும்
ஒதுங்கி இருக்கும்படி எச்சரிக்கை செய்துள்ளார்கள். எவ்வளவுதான் சிரமங்கள்
ஏற்பட்டாலும்கூட இஸலாத்தின் பெயரிலே இருக்கக்கூடிய பிரிவுகளுடன் ஒருபோதும்
சேரக்கூடாது எனத்தடை செய்துள்ளார்கள். இத்தகைய பிரிவுகளில் ஏதேனும் ஒரு
பிரிவுடன் சேர்ந்துவிட்டால் அந்த ஒரோ தவறு எம்மை நரகில் ஆழ்திவிடும் என்பதே
இவ்வாறு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் தடைசெய்வதற்கான காரணம்
என்பதை அவர்களது ஹதீஸ் கூறிக்கொன்டிருக்கிறது. இஸ்லாம் எனும் பெயரில்
மக்களை வழிகெடுக்ககூடிய பிரிவுகளில் இலங்கை இந்தியா போன்ற நாடுகளிள் தங்களை
தவ்ஹீத்வாதிகள் எனக்கூறிக் கொள்ளக்கூடிய பிரிவினரில் அதிகமானோர் அறிஞராக
கருதக்கூடிய இந்தியாவை சேரந்;த பி.nஐய்னுல் ஆபிதீன் என்பவர் (இவர் பி nஐ
எனும் சுருக்கப் பெயரிலே அறிமுகமானவர் என்பதால் அவ்வாறே நாமும்
குறிப்பிடுகிறோம்) இஸ்லாத்திலிருந்து பிரிக்க முடியாத தலைமைத்துவம்
சம்பந்தமாக 1999-மார்ச் மாதத்திற்கான அல்முபீன் மாத இதழில் அமீருக்கு
கட்டுப்படுதல் ஒர் ஆய்வு எனும் தலைப்பில் ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளார.;
ஐ.எ.சி இன் வெளியீடான அல்முபீன் எனும் மாத இதழ் எம்.ஸம்ஸூல்ளுஹா ரஹ்மானி
அவர்களை ஆசிரியராக கொன்டு வெளி வந்தாலும் மேலே குறிபிடப்பட்டுள்ள ஆய்வு
அல்முபீன் மாத இதழின் ஆசிரியர் குழுவில் முதல் இடம் பிடித்துள்ள பி.Nஐ இன்
கருத்தேயாகும். எனவே பி.nஐ உடைய இந்த ஆய்வு இஸ்லாத்துடன் எவ்வறு
முரன்படுகிறது? என்பதை விபரமாக தெளிவுபடுத்துமாறு பலர் எம்மிடம் வேன்டிக்
கொன்டனர். அது அவசியமானதே என நாமும் கருதியதால் பி.nஐ இந்த ஆய்வில்
கையான்டுள்ள தந்நிரங்கள் இருட்டடிப்புக்கள் போன்;றவற்றோடு அவரது அறியாமை
வழிகேடு என்பவற்றைச் சுட்டிக்காட்டி அவர் முன்வைத்துள்ள கேள்விகளுக்கும்
தெளிவான பதில்களைத் தந்திருக்கின்றோம்.
பி.nஐ இன் ஆய்விற்கான தெளிவான
இந்த மறுப்புரையை படித்ததன் பிறகும் எவருக்கேனும் சந்தேகங்கள் இருந்து
உங்கள் சந்தேகங்களைத் தெளிவாக எமக்கு எழுதி மேலதிக விளக்கங்களை பெற நீங்கள்
விரும்பினால் அதற்கான விளக்கங்களைத் தருவதற்கும் நாம் தயாராகவே உள்ளோம்.
(இன்ஷா அல்லாஹ்)
ஐமாஅதுல் முஸ்லீமீனால்
குர்ஆனைனையும் ஹதீஸையும் மாத்திரம் ஆதாரமாகக் கொண்டு முன்வைக்கப்படும்
தூயஇஸ்லாத்திற்கு முரணாக எவரேனும் கருத்துவெளியிட்டு இருப்பதை நீங்கள்
அறிந்து அது பற்றிய உன்மையை அறிந்து கொள்ளும் எண்ணத்தில் எமக்கு
அக்கருத்தினை அனுப்பிவைத்தால் அது பற்றிய உண்மைகளையும் அதாரங்களுடன்
தெளிவுபடுத்தி மக்கள் நேர்வழி என நினைத்து வழிகேட்டில் சென்றுவிடாதிருக்க
எம்மால் முடியுமான முயற்சிகளை இன்ஷா அல்லாஹ் தொடரந்;து செய்து கொன்டே
இருப்போம் என்பதை வாசகர்களுக்கு அரியதருகிறோம்.
மீன்டும் சந்திக்கும் வரை
அன்புடன் ஆசிரியர்
- இஸ்லாமும் தலைமைத்துவமும்
இஸ்லாம்
என்பது அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள (தீனுல் பித்ரா) இயற்கை மார்க்கமாகும்
இஸ்லாத்தின் எந்தவொரு அம்சமும் இயற்கையுடன் முரண்படக்கூடியதல்ல இதனை
புரிந்துகொள்ளாத சிலர் தமது சுயகருத்துக்களை இஸ்லாம் எனும் பெயரில் மக்கள்
முன்வைக்கும் போது இஸ்லாத்தின் தூய்மைக்குக் களங்கம் ஏற்படுவதுடன்
இஸ்லாமும் ஏனைய மதங்களை போன்று மனிதர்களால் புனையப்பட்ட கற்பனைகள் எனும்
எண்ணம் சிந்திக்ககூடிய உள்ளங்களில் தோன்றுகின்றது. இத்தகைய நிலைமை தோன்றும்
போதெல்லாம் இந்நிலைய மாற்றி அல்லாஹ்வுடைய தீனைத் துய்மையாக மக்கள் முன்
வைப்பது முஸ்லீம்களின் கடமையாகும் இக்கடமையைச் செய்யக்கூடிய
முஸ்லீம்களுக்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
நன்மாராயம் காத்திருக்கின்றது.
இஸ்லாத்தின் உயிரோட்டத்தையே
புரிந்துகொள்ளாமல் சிலர் தமது மனோயிச்சைப்படி அரைகுறை விளக்கத்துடன்
இஸ்லாத்தின் மூலாதாரங்களாகிய குர்ஆனையும் ஹதீஸையும் தொட்டுக்கூடப்
பார்க்காமல் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்ததன் காரணமாக வெறும்
சடங்குகளாக சிலவேளை அறபு மொழியிலே சூட்டப்படுகின்ற ஒரு பெயரோடு
சுருங்கியதாகக் கருதப்படுகின்றது.
மனிதன் கூடி வாழக்கூடிய
தன்மையைக் கொண்டவனாகவே காணப்படுகின்றான் மனிதர்களுக்குமத்தியில்
மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பொதுமுயற்ச்சியும் கூட்டாகவே
மேற்கொள்ளப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த உண்மையாகும் இஸ்லாம் ஒரு
இயற்கை மார்க்கம் என்பதால் இஸ்லாமும் இந்நத் தன்மையிலிருந்து வேறுபடாமல்
கூட்டமைப்பில்லாமல் இஸ்லாமே இல்லை என உமர் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்கள்
கூறக்கூடிய அளவுக்கு அதனை ஏற்றுக் கொன்டோரை ஒரே தலைமைத்துவத்தைக் கொண்டு,
ஒரேகூட்டமைப்பாக வாழுமாறு பணிக்கின்றது.
மனிதனின் மற்றுமொரு நிலை
அவனது ஆரம்பம் முதல் இறுதிவரை அவன் ஏதோ ஒரு வகையில் பிறருக்கு கட்டுப்பட்டே
வாழ்கின்றான் சிறுபிள்ளையாக இருக்கும்போது பெற்றோரின் கட்டுப்பாட்டில்
வளர்கின்றான் சிறிது வளர்து பாடசாலை செல்ல ஆரம்பிக்கும்போது பெற்றோறின்
கட்டுப்பாட்டுடன் ஆசிரியர்களின் கட்டுப்பாடும் சேர்ந்;து விடுகின்றது தனது
நாட்டை ஆட்சி செய்யக்கூடியோறுக்கு கட்டுப்படவேன்டிய நிலையும் அவனுக்கு
இருக்கின்றது இத்தகைய கட்டுபாடுகளுக்கும் மேலாக அவன் எவரிடமாவது ஊழியம்
செய்பவனாக இருந்தால் அவன் ஊழியம் செய்யக்கூடியோருக்கும் அவரது
நிர்வாகத்திற்கும் கட்டுப்பட வேண்டியிருக்கினறது. அதே போல் மனிதன் எந்த
சமூகத்தில் வாழ்கின்றானோ அந்தச் சமூகத்தின் கலாச்சாரங்களுக்கு ஏதோ ஒரு
விதத்தில் அவன் கட்டுப்பட வேன்டியிருக்கின்றது. இப்படி மனிதன் ஏனையோரது
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவனாகவே வாழ்கின்றான். இதன்மூலம் அவனது வாழ்வு
ஒழுங்கமைக்கபட்டாதகவும் பிரயோசனங்களை கொடுக்கக் கூடியதாகவும்
இருக்கின்றது.
இதே போன்றுதான் இயற்கை
மார்கமாகிய இஸ்லாமும் கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொன்டு
அமைக்கபட்டுள்ளது. இஸ்லாம் எனும் அரபு வார்தையின் பொருள் அடிபணிதல்,
சரணடைதல் என்பதாகும். அந்த சொல்லிலிருந்து பிறந்ததுதான் முஸ்லிம் எனும்
பெயர். அடிபணிந்து கட்டுப்பட்டு நடக்கக் கூடியவனை முஸ்லிம் எனக்கூறப்படும்
யாருக்கு அடிபணிவதன் மூலம் ஒருவன் முஸ்லிமாக (அடிபனிந்தவனாக)மாறுகின்றான்
என்பதை அல்குர்ஆன் கூறும்போத.
ஆம! யார் அல்லாஹ்
கண்காணிக்கின்றான் எனும் உணர்வுள்ளவறாக தனது முகத்தை அல்லாஹ்வுக்காக
ஒப்படைக்கின்றாரோ அவருக்கு அவரது கூலி அவரது ரப்பிடத்தில் உன்டு (2:112)
நபிமார்கள் வாழந்;தபோது
அவர்கள் முன்வைத்த இஸ்லாம் எனும் கொள்கையை அந்த நபிமார்களிடம் வந்த ஏற்பதன்
மூலம் மக்கள் முஸ்லீம்கள் ஆனார்கள்.நபிமார்களுடைய காலத்தில் தலைமைத்துவப்
பொறுப்பு நபிமார்களிடமே காணப்பட்டதால் இஸ்லாத்தை ஏற்று முஸ்லீம்களாகக்
கூடியவர்கள் தங்களுக்குரிய நபியிடம் வந்து அல்லாஹ்வுக்கும் அந்த நபிக்கும்
கட்டுப்பட்டு நடப்பதாக வாக்குறுதி அளித்தார்கள். அதாவது பைஅத்செய்து
இஸ்லாத்தை ஏற்றார்கள். எங்களுக்கு முன்மாதிரியான ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களிடம் இஸ்லாத்தை ஏற்றவர்களும் இவ்வாறே இஸ்லாத்தை
ஏற்றிறுக்கின்றனர். ஊதாரணத்திற்காக பின்வரும் ஹதீஸை கூறலாம்.
அம்ரிப்னு ஆஸ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள் :
அல்லாஹ்
என்னுடைய உள்ளத்தில் இஸ்லாத்தை ஏற்படுத்தியபோது ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்த உங்களுடைய வலக்கரத்தை உங்களுக்கு பைஅத்
(உடன்படுக்கை) செய்வதற்காக நீட்டுங்கள் எனக் கூறினேன். உடனே தங்களது
வலக்கரத்தை நீட்டினார்கள். அப்போது எனது கையை (நான்) மடக்கி கொன்டேன்
அம்ரே! உமக்கு என்ன நேர்ந்தது? எனக் கேட்டார்கள் (நான் ஒரு) நிபந்தனையிடப்
போகிறேன் எனக்கூறினேன், என்ன நிபந்தனையிடப் போகிறீர் எனக் கேட்டார்கள்.
நான் மன்னிக்கப்பட வேன்டும் எனக்கூறினேன். (அதற்கு ) அம்ரே! இஸ்லாத்தைத்
தழுவுதல் அதற்கு முன்னால் உள்ள (பாவங்களை) அழித்து விடுகின்றது. ஹிஜ்ரத்
செய்தல் அதற்குமுன்னால் உள்ளவற்றை அழித்துவிடுகின்றது என்பது உமக்குத்
தெரியாதா? எனக்டே;டார்கள்
(ஸஹீஹ் முஸ்லிம்-கி.ஈமான்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் பைஅதுச் செய்து இஸ்லாத்தை ஏற்றதற்கு மற்றுமொறு ஆதாரம் பின்வருமாரு:
இப்னு அப்பாஸ் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:
ழுpமாத் என்பவர் மக்காவிற்கு
வந்தார். அவர் அஸ்த் சனுஆ கோத்திரத்தை சேர்ந்தவர். வியாதிகள் தீர
மந்திறிக்ககூடியவராக இருந்தார். அப்போது மக்காவில் உள்ள சில மடையர்கள்
நிச்சயமாக முஹம்மதுக்கு பைத்தியம் எனக்கூறுவதை செவிமடுத்தார். உடனே
அந்தமனிதரை சந்தித்தால் சிலவேளை அல்லாலாஹ் என்னுடைய கைகளால் அவரைக்
குணப்படுத்தலாம் எனக்கூறினார். பின்னர் (ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம்) அவர்களை அவர் சந்தித்து முஹம்மதே! நிச்சயமாக நான் இந்த
நோய்களுக்கு மந்திரிக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்ளை எனது
கைகளால் குனப்படுத்துகின்றான் உமக்கு (குணடைய நோக்கம்) இருக்கிறதா?
எனககேட்டார் உடனே ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிச்சயமாக
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே! அவனை நாம் புகழ்கிறோம் அவனிடம் உதவியும்
தேடுகிறோம் அல்லாஹ் யாரை நேர்வழி படுத்துகின்றானோ அவனை வழிகெடுக்க கூடியவர்
எவருமில்லை, எவனை வழிகெடுத்து விடுகின்றானோ அவனை நேர்வழி படுத்துவோரும்
எவரும் இல்லை அல்லாஹ்வைத் தவிர எந்த இலாஹூம் இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு
எந்த இணையும் கிடையாது எனவும் அத்துடன் நிச்சயமாக முஹம்மத் ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவனது அடியாரும் அவனது தூதரும் ஆவார்கள் எனவும் நான் சான்று
பகர்கின்றேன். நிற்க.....! எனக்கூறினார்கள் உடனே உங்களது வார்தைகளை எனக்கு
மீன்டும் கூறுவீராக! எனக்கேட்டார். அவற்றை அவருக்கு மூன்று முறை
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அதற்கவர்
நிச்சயமாக நான் குறிகாரர்களினது வார்த்தையையும். சூனியக்காரர்களது
வார்த்தையையும் கவிஞர்களின் வார்த்தையையும் கேட்டிருக்கின்றேன் உம்முடைய
இந்த வார்த்தைகளைப்போன்று அறவே நான் கேட்டதில்லை அவை கடலின் ஆழத்தை அடைந்து
விட்டன. எனக்கூறிவிட்டு இஸ்லாத்தின் உங்களுக்கு பைஅத் செய்வதற்காக உங்களது
கையை தாருங்கள் எனக்கூறினார் பின்னர் அவர்களிடம் பைஅத் செய்தார். பிறகு
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் உமது கூட்டத்தாருக்குமா?
எனக்கேட்டார்கள் எனது கூட்டத்தாருக்காகவும் (பைஅத் செய்கிறேன்)
எனக்கூறினார்.
(ஸஹீஹ் முஸ்லிம்-கி.ஜூம்ஆ)
அமீரின்றி முஸ்லீமாக இருக்க முடியுமா?
இஸ்லாத்தின் பார்வையில்
இஸ்லாம் எனும் கொள்கையை ஒருவன் ஏற்றுக் கொள்ளாத வரையில் ஜமாஅதுல்
முஸ்லிமீனும் அவர்களுக்கான ஒரே இமாமும் காணப்படும் போது அந்த இமாமுக்கு
உடன்படிக்கை செய்து கட்டுப்படுவதன் மூலம் வெளிப்படுத்தாதவரை அவன் முஸ்லீமாக
முடியாது நபிமார்களின் வருகை முடிந்து விட்ட இன்றைய காலத்தில் முஸ்லீம்
என்பவர் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லீம்களின் கூட்டமைப்பாகிய
ஜமாதுல் முஸ்லிமீனின் அமீருக்கும் கட்டுப்படுவது கடமையாகின்றது.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
யார்
தனக்கென ஜமாஅதிற்கான ஒர் இமாம் இல்லாத நிலையில மரனிக்கின்றாறோ நிச்சயமாக
அவரது மரனம் ஜாஹிலிய்ய மரணமாகும் (முஸ்தத்ரக் ஹாகிம்-ஸஹீஹ்)
இந்த ஹதீஸின் மூலம் இஸ்லாம்
எனும் கொள்கையை அதனைச்சொல்லக் கூடிய முஸ்லீம்களின் தலைமைத்துவதிற்கு
கட்டுப்படுவதன் மூலம் ஏற்றுக் கொள்ள வேன்டும் என்பது உறுதியாகின்றது. அந்த
ஒரே தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத நிலையை ஜாஹிலிய்யத் என இந்த ஹதீஸ்
தெளிவுபடுத்துகின்றது. அறியாமை என்ற பொருளைக்கொண்ட இச்சொல் இஸ்லாத்திற்க்கு
அப்பாற்பட்ட நிலையைக் குறிப்பதற்காக குர்ஆனிலும் ஹதீஸிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது உதாரத்திற்கு இந்த அல்குர்ஆனிய வசனத்தைப்
பாருங்கள்.
ஜாஹிலிய்ய சட்டதிட்டங்களையா
இவர்கள் விரும்புகின்றனர்? உறுதியாக நம்பிக்கைக் கொன்ட
மக்களுக்குத்தீர்ப்பு அளிப்பதில் அல்லாஹ்வை விட அழகானவன் யார்?
(5:50)
எனவே இந்த வசனத்தில்
இஸ்லாத்திற்கு அப்பாற்பட்ட சட்டத்தை குறிக்கும் போது ஜாஹிலிய்ய சட்டம் என
அல்லாஹ் கூறுகின்றான். எனவேல இஸ்லாமிய கூட்டமைப்பின் (ஜமாஅதுல்
முஸ்லிமீனின்) தலைமைத்துவத்திற்கு கட்டுப்படாத நிலையில் அதாவது தனக்கென ஒரு
இமாம் இல்லாத நிலையில் மரணிப்பது என்பது இஸ்லாத்தின் பார்வையில்
இஸ்லாத்திற்கு அப்பாலிருந்து மரணிப்பதாகும்.
- தலைமைத்துவத்திற்குரிய தகுதிகள்
தலைமைத்துவத்தை
அடிப்படையாகக் கொண்டு தோன்றக்கூடிய (முஸ்லீம்களின கூட்டமைப்பு) ஜமாஅதுல்
முஸ்லிமீனுக்கு தலைமை தாங்கக்கூடிவருக்கு சில தகுதிகள் கானப்படவேன்டும் என
இஸ்லாத்தின் முலாதாரங்களான குர்ஆனும் ஹதீஸூம் கூறுகின்றன. நபிமார்களின்
காலத்தில் தலைமைத்துவத்திற்குரியவரை தகுதி கண்டறியும் பொறுப்பு மக்களுக்கு
இருக்கவில்லை. ஏனெனில் அந்த நபிமார்களை நேர்வழி காட்டக் கூடிய தலைவர்களாக
அல்லாஹ் தெரிவு செய்திருந்தான். இதுபற்றி அல்லாஹ் கூரும் போது:
மேலும் அவர்களை (நபிமார்களை) எமது கட்டளைப்படி இமாம்களாக (தலைவர்களாக) ஆக்கினோம். (21:73)
நபிமார்களின் பிறகு
தோன்றக்கூடிய முஸ்லீம்களின் தலைவருக்கு குர்ஆனிலும் ஹதீஸிலும்
கூறப்பட்டிருக்கும் தகுதிகள் இருக்கின்றனவா எனக் கண்டறிவது முஸ்லீம்களின்
கடமையாகும். முஸ்லிம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்பதற்கூரிய தகுதிகளாக
மூன்று விடயங்களை இஸ்லாம் கூறுகின்றது.
1. முஸ்லீம்களை வழிநடாத்தும் திறமையுல்ல
முஸ்லீமாக இருத்தல்
விசுவாசிகளே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள். (அவ்வாரே அல்லாஹ்வுடைய) தூதருக்கும்
உங்;களில் நின்றுமுள்ள அதிபருக்கும் வழிப்பட்டு நடவுங்கள். (4:59)
இவ்வசனத்தில் உங்களில்
நின்றுமுள்ள தலைவர்களுக்கு கட்டுப்படுங்கள் என அல்லாஹ் கூறுவதிலிருந்து
முஸ்லீம்களின் தலைவர் முஸ்லீமாக இருக்க வேன்டும் என்பது தெளிவாகின்றது.
அதேபோல் முஸ்லீம்களின் தலைவரிடத்தில் தெளிவான குப்ர் தோன்றும் போது
அவர்களது அதிகாரத்தை பறித்துவிட வேண்டும் எனும் ஹதீஸூம் முஸ்லீமாக
இருக்கும் வரைதான் ஒருவருக்கு முஸ்லீம்களின் தலைவராகும் தகுதி இருக்கின்றது
என்பதை தெளிவுபடுத்துகின்றது.
உபாதா இப்னு ஸாபித் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் என்னிடம் பைஅத் செய்யுங்கள் அப்போது அவர்களுக்கு நாம்
பைஅத் செய்தோம். விருப்பிலும் வெருப்பிலும் சிரமத்திலும் இலகுவிலும்
எம்மைவிட பிறருக்கு முன்னுரிமையலித்த போதிலும் (அமீரது கட்டளைக்கு )
செவிமடுத்து கட்டுப்படவேன்டும் என்பதும் தலைமைத்துவத்தில் இருப்போரிடத்தில்
அல்லாஹ்விடமிருந்து வந்த தெளிவான ஆதாரத்துடன் கூடிய குப்ர்
காணப்பட்டாலேயன்றி அவர்களிடத்திலிருந்து தலைமைத்துத்தை பரிக்கக் கூடாது
என்பதும் எம்மிடம் பைஅத் (உறுதிமொழி) எடுத்தவிடயங்களில் உள்ளவையாகும
(ஸஹீஹ் முஸ்லிம் - கி.இமாரா)
2.ஆணாக இருத்தல்.
அல்குர்ஆனிலே அல்லாஹ் பின்வருமாரு கூறுகின்றான்:
பெண்களின்
நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர் ஏனெனில் அவர்கள் ஒருவரைவிட மற்றவரை
அல்லாஹ் மென்மையாக்கி வைத்திருக்கின்றான் அத்துடன் (ஆன்கள்) தங்களது
பொருள்களிலிருந்து (பென்களுக்காக) செலவும் செய்கினறனர் (4:34)
எனவே நிர்வாகத்திலே மிக உயர்த
நிர்வாகப் பொறுப்பாகிய முஸ்லீம்களின் தலைமைத்துவப் பொறுப்பு ஒரு ஆணிடமே
இருக்க வேன்டும் என்பதை மேற்கண்ட அல்குர்ஆனிய வசனம் காட்டுகின்றது.
அதுமட்டுமல்லாமல் பாரசீகர்கள் தமது அரசர் மரணித்துவிடவே அந்த இடத்துக்கு
ஒரு பெண்னை நியமித்தபோது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
பின்வரும் விதியைக கூறினார்கள்:
தங்களது அதிhரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைக்கும் எந்த ஒரு சமுதாயமும் நிச்சயமாக வெற்றி பெறாது.
(ஸஹீஹ்ஹூல் புஹாரி)
எனவே முஸ்லீம்களின் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்கக்கூடியவர் ஆணாக இருக்க வேன்டும் என்பது நிபந்தனயாகும்.
3. அல்லாஹவுடைய வேதத்தைக்கொனடு வழிநடத்துதல்!
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜதுல் விதாவின்போது பின்வருமாறு முஸ்லீம்களுக்குக் கட்டளையிட்டார்கள்.
உறுப்புக்கள்
துண்டிக்கப்பட்ட அடிமை தான் உங்களுக்கு அமீராக நியமிக்கப்பட்டாலும்
அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொனடு வழி நடாத்தும் வரைக்கும் அவரின சொல்லைக்
N;கட்டு வழிபட்டு நடவுங்கள்!
(ஸஹீஹ் முஸ்லிம் - கி.இமாரா)
அல்லாஹவுக்கு மாறுசெய்யும்
விடயத்தில் கட்டுப்பாடு கிடையாது என்பதை ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
முஸ்லீமான ஒருவர்மீது
பாவமானதை ஏவப்பட்டாலேயன்றி செவிமடுத்து கட்டுப்படுவது கடமையாகும்.
பாவத்தைக் கொன்டு ஏவப்பட்டால் எவ்வித செவிமடுத்தலோ, எவ்வித கட்டுப்பாடோ
கிடையாது.
(ஸஹீஹ்.முஸ்லிம்-கி.இமாரா)
அல்லாஹ்வுடைய வேதத்தைக்கொன்டு
வழிநடாத்தும் வரைக்குமே அமீருக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டுமென
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் நிபந்தனையிட்டிருப்பதால்
நிபந்தனை தவரும் போது நிபந்தனையிட்டதும் இல்லாமல்போய்விடும்
என்பது விதியாகும். எனவே முஸ்லீம்களின் அமீர் அல்லாஹ்வுடைய வேதத்தைக்கொண்டு வழிநடத்துதல் என்பது அவருக்குரிய தகுதிகளில் ஒன்றாகும்.
முஸ்லீம்களின் தலைமைத்துவப்
பொறுப்பை ஏற்பதற்குரிய தகுதிகளாக இம்மூன்றும் தான் அல்லாஹ்வுடைய வேதத்தில்
இருக்கின்றன. இதற்கும் அப்பால் வேறு சில தகுதிகளும் அவசியம் என நரகின் பால்
அழைக்கக்கூடிய சில தலைவர்கள் அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து சரியான எவ்வித
ஆதாரங்களையும் முன்வைக்காது வாதாடுகின்றனர். ஆந்த தகுதிகள் எவை என்பதையும்
அவை இஸ்லாத்தில் ஏற்கக் கூடியனவா? என்பதையும் பின்னால் விபரிக்கின்றோம்.
முஸ்லீம்களின் தலைமைத்துவதிற்குக்
கட்டுப்படுவதன் அவசியம்.
1. மூன்று முஸ்லீம்கள்
தோன்றும் போது அவர்களுக்கென ஒரு தலைமைத்துவத்தை ஏற்படுத்துவது இஸ்லாமிய
பார்வையில் கடமையானதாகும். அந்த தலைமைத்துவத்தையும் அந்த கூட்டத்தையும்
தான் ஜமாஅதுல் முஸ்லிமீனும் அவர்களின் தலைமைத்துவமும் எனும் பெயரால்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தலைமைத்துவம் கானப்படுகின்றபோது இஸ்லாத்தை
ஏற்;க விரும்பும் ஒருவர் அந்த கூட்டமைப்பிடமே செல்ல வேண்டும் எனும்
இஸ்லாமிய விதியைக் கொண்டே இஸ்லாமியத் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படுவதன்
அவசியத்தை எவரும் புரிந்துகொள்ளலாம்;.
2. முஸ்லீம்களின் தலைமைத்துவத்திற்கு வழிப்படுவதன் அவசியத்தை பற்றி அல்லாஹ் பின் வருமாறு கூறுகிறான்:
விசுவாசிகளே! நீங்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடவுங்கள் (அவ்வாரே அல்லாஹ்வுடைய) தூதருக்கும்
உங்களில் நின்றுமுள்ள அதிபருக்கும் வழிப்பட்டு நடவுங்கள்.
(4:59)
3. முஸ்லீம்களின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படுவது சுவனம் செல்ல நினைப்பவருக்கு இன்றியமையாததாகும்.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
ஐந்து
விடயங்கள் உங்களுக்கு நான் ஏவுகின்றேன்: கூட்டமைப்பாக இருங்கள்,
செவிமடுத்து நடவுங்கள், கட்டுப்பட்டு நடவுங்கள், ஹிஜ்ரத்து செய்யுங்கள்,
அல்லாஹ்வின் பாதையில் முயற்ச்சி செய்யுங்கள் மேலும் யார்
ஜமாஅதி(கூட்டமைப்பில் ருந்து சாண் அளவு வெளியேருகின்றாறோ (அவர்) திரும்பி
வந்தாலேயன்றி நிச்சயமாக அவர் தனது கழுத்திலிருந்து இஸ்லாமிய வலையத்தை
களைந்து விட்டார்;. எவர் (பிரிவினைவாத) ஜாஹிலிய்யக் குரல் கொடுக்கினறாறோ
அவர் நரகின் எறி கொள்ளியாவார். அவர் நோன்பு நோற்று தொழுது தான் ஒரு
முஸ்லிம் எனவாதிட்டாலும் சரியே.
(அஹ்மத்.திர்மிதி-ஸஹீஹ் மிஷ்காத்:3694)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:.
யார்
நரகிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவனத்தில் நுழைக்கப்பட வேன்டுமென
விரும்புகின்றாரோ அவர் அல்லாஹ்வைக் கொன்டும் மறுமை நாளைக்கொன்டும்
விசுவாசம் கொண்ட நிலையில் அவருக்கு அவரது மரனம் வரட்டும். அத்துடன்
மனிதர்கள் தன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேன்டு எனஅவர் விரும்புகின்றாறோ
அவ்வாரே அவர்களுடன் நடந்து கொள்ளட்டும். மேலும் யார் இமாமுக்கு பைஅத்
செய்திருக்கின்றாறோ தனது கையின் (உட்)புறத்தையும் தனது உள்ளத்தின்
நம்பிக்கையையும் அவருக்குக் கொடுத்திருக்கிறாறோ அவர முடிந்தால் அவருக்கு
கட்டுப்படட்டும் மற்றொருவர் அவரோ(இமாமோ)டு போட்டி போடவந்தால் அவரது களுத்தை
வெட்டி விடுங்கள்
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா)
தலைமைத்துவத்திற்கு மாறு செய்தலும்
அதனை விட்டு வெளியேறுதலும்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
யார்
எனக்கு வழிப்படுகிறாறோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டுவிட்டார்
யார் எனக்கு மாறு செய்கின்;றாறோ நிச்சயமாக அவர் அல்லாஹ்வுக்கு மாறு
செய்துவிட்டார் யார் அமீருக்கு வழிப்படுகின்றாறோ நிச்சயமாக அவர் எனக்கு
வழிப்பட்டுவிட்டார் யார் அமீருக்கு மாறு செய்கின்றாறோ நிச்சயமாக அவர்
எனக்கு மாறு செய்துவிட்டார்.
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமரா)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
யார்
தனது அமீரிடத்தில்; வெறுக்கக்கூடிய ஏதேனுமொன்றைக் காண்கிறாறோ அவர்
பொறுமையாக இருக்கட்டும் ஏனெனில் எவரேனும் ஒருவர் ஜமாஅத்தை விட்டும் ஒரு
சாண் அளவு பிரிந்து மரணிப்பாரெனில் அவரது மரணம் ஜாஹிலிய்ய மரணமாகவேயன்றி
அமையாது.
(ஸஹீஹ் புஹாரி கி.அஹ்காம்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
நிpச்சயமாக
எனக்குப் பிறகு சிலருக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதுடன் நீங்கள்
வெறுக்கக் கூடிய (பல) விடயங்களும் ஏற்படும் எம்மில் யார் அந்த நிலையை
சந்திக்கின்றாறோ அவருக்கு தாங்கள் கட்டளையிடுவது என்ன? என (தோழரகள்)
கேட்டார்கள். நீங்கள் செலுத்த வேன்டிய கடமையைச் செலுத்துங்கள் உங்களுக்கு
கிடைக்க வேன்டியதை அல்லாஹ்விடம் கேளுங்கள்
(ஸஹீஹ் முஸ்லிம் கி.இமாரா)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள:
யார்
கட்டுப்பாட்டிலிருந்து கையை உருவிக் கொள்கின்றாறோ மறுமை நாளில் (அவர்
முஸ்லிம் என்பதற்கு) எவ்வித ஆதரங்களும்மின்றி அல்லாஹ்வை சந்திப்பார்.
(ஸஹீஹ் முஸ்லிம் -கி.இமாரா)
மேற்காணப்படும் ஹதீஸ்களில்
இஸ்லாமும் தலைமைத்துவமும் ஒன்றாகவே கணிக்கப்பட்டிருப்பதை எவரும் புரிந்து
கொள்ளலாம். முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்படுவதை தவிர இஸ்லாத்தன் ஏனைய
அனைத்துக் கடமைகளையும் செய்வதானது இஸ்லாத்தையே ஏற்காத ஒருவர் இஸ்லாமியப்
போதனைகளின்படி நடப்பதற்கு சமமானது. எனவே மேலே தரப்பட்ள்ள ஹதீஸ்களின் மூலம்
ஜமாஅதுல் ழுஸ்லிமீனின் அமீருக்கு மாறு செய்தல் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்வதாகும் அவர்களின்
கட்டுப்பாட்டிலிருந்து வெளியேரிச் செல்லல் இஸ்லாத்திலிருந்தே வெளியேரிச்
செல்வதாகும் என்பன தெளிவாக புரிகின்றது. எனவே இந்த ஹதீஸின் தீர்ப்புப்படி
முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்பட்டு நடப்பது கடமையாகும். அந்த அமீருக்கு
மாறு செய்வது அல்லாஹ்விடத்தில் தண்டனைக்குரிய குற்றமாகும். எவராவது ஒரு
முஸ்லிம் அந்த அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து தனது கையை உருவி விட்டு அவர்
மீன்டும் அமீருடைய கட்டுப்பாட்டிற்குள் வராத பட்ச்சத்தில் இஸ்லாத்தை விட்டே
வெளியேரிச் செல்கிறார்.
இத்தீர்ப்புகளைப் பார்ப்பதன்
மூலம் முஸ்லிம்களின் அமீருக்கு கட்டுப்பட்டு அதில் மரணிக்கும் வரைக்கும்
நிலைத்திருப்பது சுவனம் நுழைய விரும்பும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது
என்பது தெளிவாகின்றது. அறிவுரீதியாக சிந்திப்போரும் இந்த ஹதீஸ்களின்
தீர்ப்பு முற்றிலும் சரியானதாகும் என்பதை ஏற்றுக்கௌ;வார்கள். அதாவது;
இஸ்லாம் எனும் கொள்கையை ஏற்றுக் கொன்டவன் என்பதே முஸ்லிம் எனும்
வார்த்தைக்கு பொருளாகக் காணப்படும் போது அக்கொள்கையிலிருந்து அக்கொள்கையை
ஏற்றுக்கொண்டோரிலிருந்து அவர்களின் அமீரின் கட்டுப்பாட்டிலிருந்து
வெளியேரிச் செல்பவனை எப்படி அந்தக் கொள்கையை ஏற்றுக்கொனடவன் எனக்கூறலாம்?
இஸ்லாத்தை முறிக்கக் கூடியவற்றுள் இதுவும் ஒன்று
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
எந்த
ஒருவரானாலும் தனது தந்தையை அறிந்திருந்தும் தான் வேறு ஒருவரது மகன் என
அவர் வாதிட்டால் அவர் அல்லாஹ்வை நிராகரித்தவனாகவேயன்றி இருக்கமாட்டார்
தனக்கு எவ்வித உறவும் இல்லாத ஒர் கோத்திரத்தைத் தனது மூதாதையர் என
வாதிட்டால் அவர் தனது இடத்தை நரகத்தில் ஏற்படுத்தி கொள்ளட்டும்
(ஸஹீஹ் புஹாரி-கிமனாகிப்)
முஸ்லிம்களின் தலைமைத்துவமும் கூட்டமைப்பும் இல்லாவிட்டால்......?
இஸ்லாத்தையும்
இஸ்லாத்திற்கும் தலைமைத்துவத்திற்குமுள்ள தொடர்பையும் புரிந்து கொண்ட
ஒருவர் முஸ்லிம்களின் கூட்டமைப்பும் அவர்களுக்கென ஒரு அமீரும் இல்லாத
காலத்தில் வாழ நேரிட்டால் அவர் எக்காலத்திலும் அல்லாஹ்வால்
பாதுகாக்கப்படக்கூடியது என வாக்களிக்கப்பட்ட அல்லாஹ்வின் வேதத்தை முற்றாக
நம்பி அவர் ஒரு முஸ்லீமாக வாழ வேண்டும். தலைமைத்துவம் இல்லாமல் கூட்டமைப்பு
இல்லாமல் தம்மையும் முஸ்லீம்கள் என வாதிக்கக் கூடிய பிரிவுகளுடன் ஒரு
முஸ்லிம் ஒருபோதும் இணையக்கூடாதென ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் தடைசெய்ததுடன் ஓரே தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பின்றி
முஸ்லீம்கள் எனவாதிக்கக்கூடியோரை நரகின்பால் அழைக்கக்கூடிய பிரிவுகள்
எனவும் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூரியுள்ளார்கள்.
பிரிவுகள் காணப்படக்கூடிய
காலத்தில் நான் வாழ நேரிட்டால் எனக்குத் தாங்கள் கட்டளையிடக் கூடியதென்ன?
என ஹூதைபா ரலியல்லாஹூ அன்ஹூ ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை
நோக்கி கேட்டபோது ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அவர்களது இமாமையும் பற்றிப்
பிடிப்பீர்;களாக! எனக்கூறினார்கள் அதற்கு ஹூதைபா ரலியல்லாஹூஅன்ஹூ
அவர்களுக்கென ஒரு ஜமாஅதும் ஒரு இமாமும் இல்லையென்றால்? எனக்
கேட்டபோதுஅவ்வனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கு வீராக! உமக்கு மரணம்
வரும் வரையில் ஏதேனும் ஒரு மரத்தைதான் கடித்திருக்க வேண்டிய(தனித்த)நிலை
ஏற்படினும் சரியே!' எனக் கூரினாரகள்.
(ஹீஹ் புஹாரி-ஸஹீஹ் முஸ்லிம்)
எனவே ஜமாஅதுல் முஸ்லிமீனும்
அவர்களுக்கென ஒரு இமாமும் இல்லாதபோது தனித்து விடும் முஸ்லிம்கள் மூன்று
பேர்கள் சேர்ந்து விடும்போது அவர்களுக்கென ஒர் அமீரை தேர்ந்தெடுப்பது
அவர்கள் மீது கடமையாகவும் அப்படி செய்யாமல் இருந்தால் அவர்களுக்கு
தடைசெய்யப்பட்ட ஒன்றாகவும் ஆகிவிடுகின்றது.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் பூமியில் பாலைவனத்தில் இருக்கக்கூடிய
மூவருக்குக்கூட அவரகளிள் ஒருவரை அமீராக நியமிக்காதிருத்தல் ஆகுமானதல்ல.
- முஸ்லிம்களின் வழிகாட்டியார்?
மனிதர்கள்
நேர்வழி என நினைத்து பல்வேறு வழிகேடுகளில் தட்டழிந்து கொன்டிருந்தபோது
அல்லாஹ்வை அடிபனியக்கூடிய ஒரு முஸ்லிம் சமுதாயத்தைத் தோற்றுவிப்பதற்காக
அல்லாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான்.
இப்ராஹீம் அலைஹிவஸல்லம் பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்,
எங்கள் இரட்சகனே! எங்கள்
இருவரையும் உனக்கு (முற்றிலும்) கீழ்படிகின்ற (முஸ்லிமான)வர்களாகவும்
எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்கு
கீழ்படிகின்றவர்களாகவும் ஆக்கிவைப்பாயாக!.... (2:128)
எங்கள் இரட்சகனே! (என்
சந்தயினரான) அவர்களிலிருந்து அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக!
அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து வேதத்தையும்
ஞானத்தையும் கற்பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கிவைப்பார். (2:129)
இப்ராஹீம் அலைஹிவஸல்லம்
அவர்களைப் பின்பற்றுவதாக வாதாடிக்கொண்டிருந்த முஷ்ரிக்கீன்களுக்கும், தக்க
ஆதாரங்கள் இன்றி தாமே சுவனம் செல்லக்கூடியோர் எனத் தனித்தனியாக
வாதாடிக்கொண்டிருந்த யூத கிறிஸ்தவர்களுக்கும் மத்தியில்தான் அல்லாஹ்
உண்மையிலேயே இப்ராஹீமைப் போன்று இணை வைப்பதிலிருந்து முற்று முழுதாக
விடுபட்டு அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு வாழ்வதன் மூலம் சுவனம்
செல்லத்தகுதியானோர் கூட்டமைப்பை உருவாக்குவதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களை அனுப்பினான். தாம் அனுப்பப்பட்ட நோக்கத்தை பூர்த்தி
செய்யுமுகமாக அந்த ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் ஒரு இஸ்லாமிய
சமுதாயத்திற்கு அதாவது ஜமாஅதுல் முஸ்லிமீனுக்கு அடித்தளம் இட்டு
அதனைக்கட்டியெழுப்பி உலகில் அதன் இறுதிக் கடமையின் சில பகுதிகளை
நிறைவேற்றிவிட்டுத் தமது கடமையில் தொடர்ந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின்
அழைப்பு வரவே அவர்கள் அல்லாஹ்விடம் சென்றுவிட்டார்கள். இறுதிக்கடமையை
பூர்த்தி செய்வதற்கு செயல்ரீதியான முன்மாதிரி அவசியம் இல்லை என்பதே
அல்லாஹ்வின் முடிவு என்பதை நாம் அதிலிரிந்து புரிந்து கொள்ளலாம்.
ஆகவே சுவனம் செல்ல விரும்பும்
ஒருவருக்கு மிகத்தெளிவான வழிகாட்டல் வெறும் தத்துவமாக அல்ல நடைமுறை
விளக்கத்துடன் முழுமையாகக் காணப்படுகின்றது. எனவே தான் அல்லாஹ்
உறுதிபடுத்தி பின்வருமாறு கூறுகின்றான்:
அல்லாஹ்வையும் இறுதிநாளையும்
அஞ்சி அல்லாஹ்வை அதிகம் நினைவு கூரக்கூடியோருக்கு(ம்) (அப்பன்புகள் கொனட
நபித்தோழர்களாகிய) உங்களுக்கு(ம்) நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடத்தில்
அழகியதோர் முன்மாதிரி காணப்படுகின்றது (33:21)
இந்த ரீதியில் ஒருவன் எவ்வாறு
முஸ்லிமாகிறான்? அவன் தனது இஸ்லாத்தைப் பறி கொடுக்கக்கூடிய செயல்கள் என்ன?
அவன் முஸ்லிமாக இருப்பதற்கு குறைந்த பட்சமாக அவன் செய்ய வேன்டிய கடமைகள்
என்ன? முஸ்லிம்களின் கூட்டமைப்பாகிய ஜமாஅதுல் முஸ்லிமீன் எப்படித் தோன்றும்
அவர்களின் அமீர் ஆட்சியதிகாரம் உள்ளபோது எப்படி நடந்து கொள்ள வேன்டும்?
ஆட்சியதிகாரம் இல்லாதபோது எப்படி நடந்து கொள்ள வேன்டும்? போன்றவற்றுடன்
சுவனம் செல்ல முயற்ச்சிப்போருக்குத் தேவையான முழு வழிகாட்டல்களும்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் மிகத் தெளிவாகக்
காணப்படுகின்றன.
முஸ்லிம்; உம்மத்தாகிய
ஜமாஅதுல் முஸ்லிமீனை உருவாக்குவதில் அதன் தோற்றமும் ஆட்சியதிகராம்
அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் வரையிலான அதன் வளர்ச்சியுமே முதன்மையானதும்
முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும். இதற்கான முன்மாதிரி ரஸூலுல்லாஹி
ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தே பெறப்பட வேன்டும்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது அட்சியதிகாரத்துக்கு
முந்திய வாழ்வை கவனித்தால் அங்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம்
தம்மை முஸ்லிம்கள் எனக் கூருவதுடன் சுவனத்திற்காகவும் வாதடக்கூடிய
மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வேதத்தை முன்வைத்தார்கள். அக்கொள்கையை
ஏற்றுக்கொன்டோறைத் தனது தலைமையின் கீழ் ஒரே சமுதாயமாக
கட்டியெழுப்பினார்கள். தலைமைத்துவத்திற்கு முடியுமான வரைகட்டுப்பட்டு
நடப்போம் என அவர்களிடம் பைஅத் (உறுதிப்பிரமாணம்) எடுத்தார்கள். ரஸூலுல்லாஹி
ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் பிறந்த பூமியில் அவர்களது கொள்கையாகிய
இஸ்லாத்தை வெளிப்படையாக பின்பற்றுவதில் தடை காணப்பட்டதனால் சுதந்திரமாக
அக்கொள்கையை பின்பற்றக்கூடியதோர் பூமியைத் தேடிக்கொன்டார்கள்.
ஜாபிர் ரழியல்லாஹூ அன்ஹூ கூறுகின்றார்கள்:
ஹஜ்காலத்தின் போது
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் மக்களுக்கு தங்களைப்பற்றி
கூறிக்கொண்டிருந்தார்கள் அப்படிக் கூறும்போது என்னை தனது கூட்டத்தாரிடம்
(சத்தியத்தைக் கூறுவதற்காக) கூட்டிச்செல்லக் கூடியவர் எவரும்
இருக்கின்றாறா? ஏனெனில் எனது ரப்பின் வார்த்தைகளை எத்திவைப்பதைவிட்டும்
நிச்சயமாக குரைஸ் கோத்திரத்தினர் என்னை தடுத்து விட்டனர் எனக்கூறுவார்கள்.
ஒரு முறை ஹம்தான் கோத்திரத்தை சேர்ந்த ஒருவர் வந்து சத்தியத்தை ஏற்றுக்
கொண்டார் பின்னர் அவர்களின் கூட்டத்தினர் அவரைப்பின்பற்றி நடக்காமல்
இருந்துவிடுவார்களோ எனப்பயந்து (ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் )
அவர்களிடம் வந்து எனது கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு செய்தியை
அறிவித்து விட்டு அடுத்த வருடம் உங்களிடம் வருகிறேன் எனக்கூறினார்
அதற்கவர்கள் சரி எனக் கூரினார்கள் அம்மனிதர் சென்றுவிட்டார். ரஜப்
மாதத்தில் அன்சார்கள் வந்தார்கள்.
(அஹ்மத் திர்மிதி நசாஇ ஹாகிம்-ஸஹீஹ்)
அலி பின் அபிதாலிப் ரலியல்லாஹூ அன்ஹூ கூறினார்கள்:
அறபிகளிலுள்ள
கோத்திரங்களுக்குத் தன்னை(ப்பற்றி) எடுத்துக் கூறுமாறு அல்லாஹ் தனது
நபிக்குக் கட்டளை இட்டதும் (அதற்காக ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள்) புறப்பட்டார்கள். நானும் அபூபக்கர் ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களும்
கூட இருந்தோம்.அறபிகள் ஒன்று கூடியிறுக்கக்கூடிய இடத்திற்கு வந்ததும்
அபூபக்கர் ரழியல்லாஹூ அன்ஹூ முன்னால் சென்று நீங்கள் யார்? எனக்
கேட்டார்கள். அவர்களோ கோத்திரங்களைப் பற்றி நன்கு அறிந்தவர்களாக
இருந்தார்கள் அதற்கவர்கள் ரபீஆ (கோத்திரத்தைச்) சேர்ந்தவர்கள் எனக்
கூறினார். ரபிஆவின் எந்தக்கிளையைச் சேர்ந்தவர்கள்? எனக் கேட்டார்கள் தஹ்ல்
கிளை எனக் கூறிவிட்டு நீண்ட நேரம் பலவிடயங்களை கதைத்துவிட்டு இறுதியாக
தாங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைக்கூறிவிட்டனர். பிறகு அவ்ஸ்,
ஹஸ்ரஜ்களின் சபையின்பால் சென்றோம். அவர்கள்தான் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களால் தங்களது கொள்கையை ஏற்று தங்களுக்கு புகலிடம்
அளித்து உதவியும் செய்ததனால் அன்சார்கள் (உதவி செய்வோர்) எனப்பெயர்
சூட்டப்பட்டவர்கள். (சத்தியத்தை முன்வைத்து) ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களுக்கு பைஅத்துச் செய்யாது அவரகள் (அந்த இடத்தை விட்டும்)
எழும்பவில்லை.
(ஹாகிம் அபூநஈம் பைஹகி-ஹஸன்)
மதீனாவிற்கு சென்றதன் பிறகு
அல்லாஹ் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆட்சியைக்
கொடுத்தான். அங்குதான் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் இஸ்லாத்தை
அதிகாரத்துடன் பின்பற்றினார்கள் அது வரைக்கும் இஸ்லாத்தை ஏற்று
தலைமைத்துவத்திற்கு கட்டுப்படக்கூடிய ஒரு முஸ்லிம்கள் கூட்டத்தை
உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
உலகில் எங்குமே இஸ்லாமிய
ஆட்சி இல்லாத இன்று ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின்
உம்மத் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றது. எனவே இன்றைய நிலமையில் நாம்
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது ஹிலாபத்திற்கு
முந்திய வாழ்வில் என்ன செய்தார்களோ அதனையே செய்ய வேன்டியுள்ளது. அதாவது தூய
இஸ்லாமாகிய குர்ஆனையும் ஹதீஸையும் முன்வைத்து அதனை ஏற்றுக் கொள்ளக்
கூடியோரை தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கக்கூடிய ஒரே சமுதாயமாகக்
கட்டியெழுப்ப வேன்டும்.
தலைமைத்துவம் ஒரு ஆய்வு எனும்
கட்டுரையின் சுருக்கம்.
பி.ஜெ தனது தலைமைத்துவம் ஒரு ஆய்வு எனும் கட்டுரையில் கூறியிருப்பதன் சுருக்கம் பின்வருமாறு:
இஸ்லாமிய ஆட்சி (ஹிலாபத்)
இல்லாவிட்டால் தலைவரின்றி முஸ்லிம்கள் வாழமுடியும் மேலும் குர்ஆனும்
ஹதீஸூம் கூறுகின்ற இமாம்,அமீர் எனும் வார்த்தைகள் ஆட்சி அதிகாரம் கொன்ட
ஹலீபாவை குறிக்குமேயன்றி ஆட்சி அதிகாரமற்ற முஸ்லிம்களின் தலைவர்களை
குறிக்காது எனவே இன்று இந்தியா போன்ற நாடுகளில் அமீரோ,இமாமோ இல்லை தங்களை
அமீர் என்று கூறிக்கௌ;வோர் மார்க்கத்திலே மோசடி செய்கின்றனர்.
பிரயாணத்திலும் அமீர் நியமிக்கப்பட வேன்டும் எனும் பொருளில்
வந்திருக்கக்கூடிய ஹதீஸில் கூட்டுத் தொழுகை நடத்தப்பட வேண்டும் எனும்
வார்த்தை சில இடங்களிலும் வேறுசில இடங்களில் அமீர் நியமிக்கப்பட வேண்டும்
எனவும் வந்துள்ளன இவற்றில் சரியானது கூட்டாக தொழுகை நடத்தப்பட வேண்டும்
என்பதேயாகும். எனவே அமீர் எனக் கூறக்கூடியவர் ஆட்சி அதிகாரம் கொண்டவரே
பிரயாணத்தில் கடமை அமீர் நியமிப்பதல்ல கூட்டுத்தொழுகை நடத்துவதேயாகும்.
மேற்காணப்படுவது தான் பி.ஜெயின் ஆய்வின் சுருக்கம் இனி அவரது ஆய்வு எந்த அளவு உண்மையானது எனப் பார்ப்போம்.
- ஆட்சியதிகாரம் அற்ற அரசியல் தலைமைத்துவம்!
ரஸூலுல்லாஹி
ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது நபித்துவாழ்வில் சில காலம்
ஆட்சியதிகாரம் உள்ள ஒருவராகவும் சில காலம் தனது கொள்கையாகிய இஸ்லாத்தை
வெளிப்டுத்துவதறக்குக் கூட முடியாமல் இருந்தார்கள் என்பதும் எங்களுக்குத்
தெரியும். சத்தியத்தை நிராகரிப்பதற்காக எந்த உன்மையை மறைப்பதற்கு பி.ஜெ
தலைமைத்துவம் ஓர்ஆய்வு எனும் கட்டுரையில் முழு முயற்சி செய்கிறாரோ அந்த
உன்மை அவரது கட்டுரையின் ஆரம்பத்திலேயே அவரால் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
பி.ஜெ தனது ஆய்வில் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி
என் கூறுகிறார் எனபதை பாருங்கள்.
அமீர்
கலீபா சுல்தான். அமீருக்கு முஃமினீன் என்பது போனற வார்த்தைகளால் நபி
ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடப்படவில்லை அதைவிட விரிந்த அதே
சமயம் ஆட்சிதலைமையையும் உள்ளடக்கி ரஸூலுல்லாஹ் -அல்லாஹ்வின் துதர் என்ற
வார்த்தையால் குறிப்பிடப்பட்டனர் ரஸாலத் - நுபுவ்வத் என்பதில் ஆட்சியும்
அடக்கம்.
இவ்வாறு
ரிஸாலத்தை அடிப்படையாகக் கொன்டு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம்
அவர்கள் மட்டும் ஆட்சி செலுத்தவில்லை. இஸ்ரவேல் மக்களையும் நபிமார்கள்
இப்படித் தான் ஆட்சி செலுத்தியுள்ளார்கள்.
இஸ்ரவேலர்களை
நபிமார்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள் ஒரு நபி மறைந்ததும் இன்னொரு
நபி அவருக்குப் பதிலாக பொறுப்பு வகிப்பார். எனக்குப் பிறகு எந்த நபியம்
கிடையாது கலீஃபாக்கள் உருவாகுவார்கள் ஆனால் அவர்களின் எண்ணிக்கை அதிகப்
படியாகி விடும் என்று அல்லாஹ்வின் துதர் ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள்
கூறியதும் அல்லாஹ்வின் தூதரே (அது தொடர்பாக) எங்களுக்கு என்ன கட்டளையிடப்
போகிறீர்;கள்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
எனக்கேட்டனர். அதற்கு நபிp ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களில்
முதலில் யாரிடத்தில உடன்படிக்கை செய்தீர்களோ அவரிடத்தி;லயே அதை
நிறைவேற்றுங்கள் அவர்களுடைய கடமையை அவர்களுக்கு செலுத்தி விடுங்கள்.
நிச்சயமாக அல்லாஹ் அவர்களைக் கண்காணித்ததைப் பற்றி அவர்களிடமே விசாரனை
செய்வான் என்று பதில் சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா ரலியல்லாஹூ அன்ஹூ ஆதாரம்:புகாரி
இவ்வரு ஹதீஸ்களும் ரிஸாலத் என்பதில் ஸியாஸத் (அரசியல் தலமை)யும் அடங்கும் என்பதற்கு தெளிவான சான்றுகளாக உள்ளன.
(அல்முபீன் - மார்ச் 1999:10,11)
ரஸூலுல்லாஹ் எனும் சொல்
ஆட்சியதிகாரம் கொன்ட நபியைக் குறிக்க பயன்படுத்தலாம் என்பது முற்றிலும்
உன்மையே. இவ்வார்தை ஆட்சி தலைமையை உள்ளடக்கக் கூடிய என்பதற்காக ரஸூலுல்லாஹி
ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் ஆட்சியதிகாரம் இல்லாமல் வாழ்ந்த காலத்தில்
அவர்களை ரஸூலுல்லாஹ் எனக் கூறமுடியாது என எவராவது வாதித்தால் எப்படி
இருக்கும்? இஸலாமிய அறிவுள்ள எவராவது இதனை சரியானது என ஏற்றுக் கொள்வாரகளா?
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எப்போது அல்லாஹ்வால்
வஹி அனுப்பப்பட்டதோ அப்போது முதல் அவர் ரஸூலுல்லாஹ்தான் அவர்களுக்கு
ஆட்சியதிகாரம இருக்கிறதா? இலலையா? எனும் கேள்விக்கே இடமில்லை. இதே போன்று
இமாம் அமீர் எனும் வார்த்தைகள் ஆட்சியதிகாரம உள்ளவருக்குப் பயன் படுத்த
பட்டுள்தை வைத்த ஆட்சி இல்லாதவருக்குப் அவ்வார்த்தைகளை பயன் படுத்த
முடியாது என பி.ஜெ ஒரு அறிவீனமான வார்தை முன்வைத்து அந்த வாதத்தை
நிரூபிப்பதற்காகவே தலைமைத்துவம் ஓர் ஆய்வு எனும் கட்டுரை முழுவதிலும்
முயற்சி செய்துள்ளார.; ஆட்சித் தலைவர் என்ற பொருளைக்கொண்ட ரஸூலுல்லஹ்
எனும் சொல் ஆட்சியதிகாரம் இல்லாமலே நபியவர்களுக்குப் பயன்படுத்தலாம் எனும்
உண்மையை புரிந்து கொண்டவர் மக்கள் பின்பற்றக்கூடிய ஒவ்வொரு தலைவரையும்
குறிக்கக் கூடிய இமாம் எனும் சொல் ஆட்சியதிகாரம் உள்ளவர் இல்லாதவர் என்று
பாகுபாடு இல்லாமல் பயன்படுத்தலாம் என்பதை புரிந்த கொள்ள முடியாமல் இல்லை.
இங்கு பி.ஜெயால் முன்வைக்கப்
பட்;டிருக்கும் ஹதீஸ்கூட அவரது வாதம் அடிப்படையே அற்றது என்பதற்கு தெளிவான
ஆதாரமாகும் இந்த ஹதீஸில் பனூஇஸ்ரவேலர்களில் நபிமார்களே அரசியல் நிர்வாகத்தை
நடாத்தினார்கள் எனக் கூறப்பட்டுள்ளது ஆனால் பனூஇஸ்ரவேலர்களில் மிகப்
பிரபலமான மூஸா அலைஹிஸ்ஸலாம் ஈஸா அலைஹிஸ்ஸலாம் போன்ற நபிமார்களுக்கூட
ஆட்சியதிகாரம் இருக்கவில்லை என்பது பகிரங்கமான உன்மை. பிர்அவ்னுக்குப்
பயந்து மூஸா அலைஹிஸ்ஸலாம் முஸ்லிம்களைக் கூட்டிக ;கொண்டு ஓடியது பற்றி
அல்குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:
(மூஸாஅலைஹிஸ்ஸலாம் பிர்அவ்ன்
ஆகியோரது) இரு படைகளும் ஒருவரை ஒருவர் கண்டபோது நிச்சயமாக நாம் அகப்பட்டுக்
கொண்டோம் என்று மூஸாவுடைய தோழர்கள் கூறினார்கள்.
(26:61)
முழு முஸ்லிம்களையும்
கூட்டிக் கொண்டு அதுவும் அல்லாஹ்வின் கட்டளைப்படி ஓடுகின்றவரையும்
முஸ்லிம்களின் அரசியல் நிர்வாகத்தைச் செய்யக்கூடியவர் எனத் தெளிவாக ஹதீஸ்
கூறுகின்றது. எனவே இ;ந்த ஹதீஸ் நிரூபிக்கக்கூடிய உண்மை முஸ்லிம்கள்
எப்போதுமே தங்களது அனைத்து விடயங்களையும் நிர்வாகிக்கக்கூடிய தலைவாக
தங்களில் உள்ள ஒருவரயே ஆக்கக் கொள்வார்கள் என்பதாகும். அந்தத் தலைவருக்கு
ஆட்சியதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு முஸ்லிம்கள்
கட்டுபட்டு நடப்பார்கள். இந்த இடத்தில் பி.ஜெ பனூ இஸ்ரவேலர்களில் இருந்த
நபிமார்கள் ஆட்சியதிகாரம் கிடைத்ததற்குப் பின்னர் தான் அரசியல் நிர்வாகம்
செய்தார்கள் என மழுப்ப முடியாது அதற்கு இரன்டு தடைகள் இருக்கின்றன ஒன்று
பொதுவாகக் கூறப்பட்டதை குறிப்பிட்தொரு காலத்திற்கு மட்டும் உரியது என
வரையறை செய்வதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் அத்தகைய ஆதாரம் எதுவும்
பி.ஜே-யிடம் கிடையாது இரன்டாவது பனூஇஸ்ரவேலர்களில் இருந்தாக குர்ஆனிலும்
ஹதீஸிலும் வந்திருக்கக்கூடிய ஒவ்வொரு நபிக்கும் ஆட்சியதிகாரம் இருந்தது என
பி.ஜே- நிரூபிக்க வேன்டும் இதுவும் பி.ஜே-யால் முடியாததேயாகும்.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியதிகாரம் இல்லாமலே முஸ்லிம்களின் அரசியல்
நிர்வாகத்தை நாடத்தியிருக்கின்றார்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்து
அல்லாஹ்வை நினைவு கூறக்கூடியோருக்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கின்றது என அல்லாஹ் கூறுகிறான்
எனவே இதன் மூலம் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்
பின்னால் தோன்றக் கூடிய முஸ்லிம்களின் தலைவராகிய அமீர் அல்லது இமாம்
ஆட்சியதிகாரம் இல்லாமலே முஸ்லிம்களின் சகல நிர்வாகத்தையும் நடத்தலாம்
என்பது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமாகின்றது
சத்தியத்தை தெரிந்திருந்தும்
தான் இருக்கும் வழிகேட்டை நிரூபிப்பதற்கு இஸ்லாத்தில் குழறுபடி செய்யும்
முயற்சியாகிய தலைமைத்துவம் ஒர்ஆயவு எனும் கட்டுரையின் துவக்கத்திலேயே
அல்லாஹ் இவ்வாறு அசத்தியவாதியான பி.ஜே-யின் கையினால் அவரது வாதத்தினை
தரைமட்டமாக்கக் கூடிய உண்மையை எழுதச் செயதுள்ளான்
.
ஆட்சியதிகாரம் இன்றி அமீராக முடியுமா?
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்.
(நீங்கள்)
பிரயாணத்தில மூவர் இருந்தாலும் உங்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள்
அவர் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களால் நியமிக்கப்பட்ட
அமீரேயாவார்
(அறிவிப்பவர்: உமர். ஆதாரம்-பஸ்ஸார்-ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள கூறுகிறார்கள்;:
யார் தனக்கென ஜமாஅத்திற்கென ஓர் இமாம் இல்லாத நிலையில் மரணிக்கின்றாரோ நிச்சயமாக அவரது மரனம் ஜாஹிலிய்ய மரணமேயாகும்.
(முஸ்தத்ரக்-ஹாகிம் - ஸஹீஹ்)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
மூன்று பேர் பிரயாணத்தில் சென்றாலும் அவர்களில் ஒருவரை அவர்களுக்கு அமீராக்கிக் கொள்ளட்டும்.
(அபூதாவுத்-ஹஸன் ஸஹீஹ்)
இங்கு
குறிப்pடப்பட்டிருக்கும் ஹதீஸ்கள் ஒவ்வொன்றும் முஸ்லிம்கள் மூன்று பேருக்கு
குறையாமல இருந்தால் அவரகள் தமக்கென ஓரு அமீரை ஏற்படுத்துவது கடமை அப்படி
ஒரு அமீர் இல்லாமல் மரனிப்பது ஜாஹிலிய்யத்தில் மரணிப்பதாகவும் பிரயாணத்தின்
போதும் பாலைவனத்தில் இருக்கும் போது கூட முஸ்லிம்கள் அமீரின்றி இருத்தல்
அகுமானதல்ல எனத் தெளிவாகக ;கூறுகின்றன.
இந்த இடத்தில்தான்
தலைமைத்துவத்திற் குரிய மற்றுமொரு தகுதியாக அமீர் ஆட்சியதிகாரம் கொண்ட
கலீபாவாக இருக்க வேன்டும் என பி.ஜெ- குர்ஆனிலோ,ஹதீஸிலோ இல்லாத ஒரு
நிபந்தனையை முன்வைக்கிறார். இவர் முன்வைத்த சுயகருத்து உடைந்து விடும்
என்பதற்காக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்று ஹதீஸ்களில் அபூதாவுதிலே
வரக்கூடிய ஹதீஸின் வாசகத்தை பி.ஜெ குழறுபடி உள்ளதாகக்காட்ட
முயற்சிக்கின்றார் ஏனெனில பிரயாணத்தில் மூவர் இருக்கும் போது ஒருவர் அமீராக
நியமிககப்படுவதுதென்றால் அவருக்கு ஆட்சியதிகாரம் இருக்காது என்பதை அவரே
தனது ஆய்வில ஒப்புக் கொனடுள்ளார். அந்த ஹதீஸின் வாசகம் பற்றி பி.ஜெ
கூறுவதாவது:
மேலும் முஹம்மத் பின் அஜலான்
என்ற அறிவிப்பாளர் நாபிஉ என்பார் வழியாக அரிவிக்கும் ஹதீஸ்களில் வார்த்தைக்
குழப்பம் உள்ளது என்று உகைலி என்ற ஹதீஸ்கலை அறிஞர் குறிப்பிடுகின்றார்
அபூதாவூதில் இடம்பெறும் ஹதீஸை முஹம்மத் பின் அஜ்லான் நாபிஉ வழியாகவே
அறிவிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
எனவே விக்கும் முஹம்மத் பின் அஜ்லான் வழியாக மற்றவர்கள் அறிஹதீஸ்களில் மூவர் பயணம் சென்றாளல் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றே கூறப்பட்டுள்ளது
மேலும்
அபூஸஈத் (ரழி) அறிவிக்கும் மற்றொரு ஹதீஸ் முஸ்லீமில் இடம்பெற்றுள்ளது
மூவர் இருந்தால் ஒருவர் இமாமத் செய்யட்டும் என்றுதான் அந்த ஹதீஸிலும்
கூறப்படுகின்றது
ஆகவே
பிரயானத்தில் செல்பவர்கள் தனித்துத்தொழுது விடாமல் மூவரில் ஒருவரை இமாமாக
ஏற்படுத்தி தொழ வேன்டும் என்பதுதான் சரியான அறிவிப்பாகும் பயனத்தில் அமீர்
ஏற்படுத்துங்கள் என்பது சரியான அறிவிப்பாகாது இப்னு அஜ்லான் நாபிஉ என்ற
வழியாக அமைந்திருப்பதே இவ்வாறு முடிவு செய்ய போதுமான காரணமாகும்
(அல்முபின் - 1999 மார்ச் பக்கம் 43)
இந்தவாதத்தில் பல தவறான அம்சங்கள் உள்ளன.
1.அபூதாவூதில வரக்கூடிய
ஹதீஸ்பற்றி பி.ஜெ யின் ஆய்வு தவறானதாகும். அந்த ஹதீஸில் அவர்களில் ஒருவரை
அமீராக்கிக் கொள்ளட்டும் எனற வாசகம் ஏற்கக்கூடிய ஒன்றே என்பது தான் சரியான
முடிவாகும். அன்மையில் வாழ்ந்து மரணித்த ஹதீஸ் கலையரிஞர் நாஸூருத்தீன்
அல்பானி என்பவர் அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும் எனும் அதே
வாசகத்துடன் இந்த ஹதீஸை ஹஸன ஸஹீஹ் எனும் ஏற்றுக்கொள்ள முடியுமான தரத்தில்
உள்ளது எனக்குறிப்பிட்டுள்ளார். (பார்க்க: ஸஹீஹ்அபூதாவுத் 2272, 2273)
1. அபூதாவூதில் வரக்கூடிய இந்த ஹதீஸ் பற்றி அலசும்போது இமாம் ஷவ்க்hனி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்:
இதேபோன்ற
அறிவிப்பை ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையுடன் ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் கூறியதாக உமர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் அவர்களது மகன்
அப்துல்லாஹ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் அறிவிக்கும் இரு அறிவிப்புக்கள்
பஸ்ஸார் எனும் நூலிலும், இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹூ அன்ஹூ மூலமாக ஓர்
அறிவிப்பு ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையுடன் தபரானியிலும் பதிவாகியுள்ளன இந்த
ஹதீஸ்களில் ஒன்று மற்றொன்றிற்கு சான்று பகர்கின்றது. (அபூதாவுதின்
அறிவிப்பாகிய) அபூசயீத் ரலியல்லாஹூ அன்ஹூ அபூஹரைரா ரலியல்லாஹூ அன்ஹூ
வாயிலாக அறிவிக்கப்படும் இரு ஹதீஸ்கள் பற்றி இமாம் அபூதாவுத் இமாம்
முன்திரி மௌனம் சாதித்துள்ளனர் இவ்விரண்டினதும் அறிவிப்பாளர்களும் அலி
இப்னு பஹ்ரைத் தவிர புகாரி முஸ்லிமின் அறிவிப்பாளர்களாவர் அவரும் ஞாபகசக்தி
நிரைந்த நம்பகமானவர்.
இமாம் ஷவ்கானி
சுட்டிக்காட்டிய ஒவ்வொரு அறிவிப்பிலும ஒருவரை அமிராக ஆக்கிக் கொள்ளட்டும்
எனக ;காணப்படுகின்றது எனவே தான் இமாம் ஷவ்கானியவர்கள் 'அனேகமானோர்
தலைமைத்துவம் காணப்படுவது கடமையெனக் கூறுகின்றனர் அவர்களுக்கு இவற்றில்
ஆதாரம் இருக்கின்றது எனும் கருத்தை கூறுகின்றார்கள்
(நைலுல் அவ்த்தார் - கி. ஆக்ழியா வல் அஹ்காம்)
பிரயாணத்தில்கூட மூவர்
இருந்தால் ஒருவரை அமீராக்கிக் கொள்ளுங்கள் எணும் வாசகம் கொண்ட ஹதீஸ்களில்
பி.ஜெ சுட்டிக்காட்டியது உட்பட பல அறிவிப்புக்கள் முன்னால்
ஆதாரபூர்வமானவைகளாக நிரூபிக்கப்பட்டு விட்டதால் ஆட்சியதிகாரம் இன்றி அமீரோ
இமாமோ இல்லை எனும் வாதம் உடைந்து விட்டது. ஏனெனில் ஆட்சியதிகாரம் ஒரு
நிபந்தனையா இல்லையா என்பதை தீர்மானிப்பதில் இது மிக முக்கியமானதாகும்
பிரயாணத்தில் இருக்கக்கூடிய அமீரிடம் ஆட்சியதிகாரம் இருக்காது என்பதை பி.ஜெ
ஏற்றுள்ளதால் முஸ்லீம்களின் அமீராக இருப்போரிடம் ஆட்சியதிகாரம் இருக்க
வேன்டியது அவரது தகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்படுவது மிகப்பெரியத் தவறு
என்பதும் தெளிவாகிவிட்டது அவர்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும்
எனக்கூறி ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஆட்சியதிகரம்
இல்லாதவருக்கு அமீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளதால் ஆட்சியதிகாரம்
உள்ளவருக்கு மாத்திரம்தான் அமீர் என்ற வார்ததை பயன்படுத்தப்படும் எனும்
வாதமும் உடைந்து விடுகின்றது.
தனக்கென இமாம் இல்லாத
நிலையில் எவர் மரணிக்கின்றாரோ அவர் ஜாஹிலிய்யத்தில் மரணிக்கின்றார் எனும்
ஹதீஸ் பொதுவான சட்டமேயன்றி இஸ்லாமிய ஆட்சியதிகாரம் காணப்படும் போது அமீர்
இல்லாமல் மரணிப்பது தான் ஜாஹிலிய்ய மரணம் எனப் பிரிப்பதற்கு எந்த ஆதாரமும்
கிடையாது எனவே குழப்பதிற்குரிய வாசகங்கள் எனக்கூறி இஸ்லாத்தின் அடிப்படை
அம்சத்தை மறுக்க முயற்சி செய்த பி.ஜெ உடைய கூற்று தவறானது என்பது
நிரூபனமாகிவிட்டது. சத்தியத்தைத் தெரிந்;து கொன்டும் பி.ஜெ தனது தவறிலேயே
அடம் பிடிக்க முடியாதவாரு அவர் குறிப்பிட்டல்லாத பிரயாணத்தில்
செல்லக்கூடியோர் மூன்று பேர்களாக இருந்தால் ஒருவரை அமீராக நியமிக்க
வேண்டும் எனக் கட்டளையிடக் கூடிய வேறு ஹதீஸ்களையும் முன்வைத்துள்ளோம். இதன்
பிறகாவது பி.ஜெ சத்தியத்தை ஏற்றுக்கொள்வாரா?
பி.ஜே தனது ஆய்வில் அதிகாரம்
இல்லாமல் இமாமோ அமீரோ இல்லை எனத்தலைப்பிட்டு அத்தலைப்பின் கீழ் பல சிறு
சிறு தலைப்புக்களிட்டு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
ஆட்சியதிகாரம் இருந்ததைப்பற்றி குறிப்பிடக்கூடிய ஹதிஸ்களை
குறிப்பிட்டுள்ளார் தனி மனிதராக இருந்த ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி
வஸல்லம் அவர்கள் சத்தியத்தை சொன்னதன் காரணமாக அதனை நபியவர்களிடம் ஓரிருவராக
பைஅத் செய்து ஏற்றனர் இவ்வாறு தோன்றிய ஜமாஅதுல் முஸ்லிமீன் பிற்பட்ட
காலத்தில் ஆட்சியதிகாரமுள்ள நிலையை அடைந்தது என்பதை எவரும் மறுப்பதில்லை
சர்ச்சை என்னவெனில் ஆட்சியதிகாரம் முஸ்லீம்களின் அமீராக இருப்பவருக்கு ஒரு
நிபந்தனையா? என்பது தான் பி.ஜெ பல ஹதீஸ்களை முன்வைத்து சர்ச்சைக்கு
அப்பாற்பட்ட விடயமான ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு
காலத்தில் ஆட்சியதகாரத்தோடு காணப்பட்டார்கள் என்பதை
நிரூபித்திருக்கின்றார் தன்னுடைய ஆதாரங்கள் சர்ச்சைக்கு அப்பாற்பட்டது
என்பதை உணராமல் பி.ஜெ இங்கு அந்த ஆதாரங்களை முன்வைத்துள்ளாரா............?
அல்லது அவரது வழமைப்படி ஒருசாரார் தன்னை நம்பி ஏமாற வேன்டும் எனும்
எதிர்பார்ப்பில்தான் இத்தகையொது முயற்ச்சியை செய்தாரா...........?
சர்ச்சை ஹலீபா எனும் நிலையை
அடையாத முஸ்லிம்களின் அமீருக்குக் கட்டுப்படுவது கடமையா? இல்லையா? என்பதே
ஜமாஅத்தின் இமாமிடம் பைஅத் செய்யாமல் மரணிப்பது ஜாஹிலிய்ய மரணம் என பொதுவாக
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் கூறியதன் பின் ஹலீபாவல்லாத
தலைவருக்குக் கட்டுப்படுவது கடமையல்ல என்பதற்கு ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ
அலைஹி வஸல்லம் அவர்களது ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்டப்பட வேண்டும்
முஸ்லிம்களுக்கு ஆட்சியதிகாரம் இல்லாத காலத்தில் இமாம் இருந்தும்
அவருக்குக் கட்டுப்படுவதாக பைஅத் செய்யாமல் மரணிக்கக் கூடியவர் முஸ்லிமாகவே
மரணிக்கின்றார் எனும் பொருள் கொண்ட குர்ஆன் வசனம் முன்வைக்கப்பட வேன்டும்
அவ்வாறில்லாது நாம் நினைத்தபடி சட்டங்களை பாகுபடுத்தும் உரிமை
எவருக்குமில்லை.
- இமாம் எனபதன் பொருள்!
எந்தவொரு அறபுச் செல்லுக்கும் விஷேடமானதொரு பொருள் இஸ்லாமிய ஷரிஅத்தில் கூறப்படாத பட்சத்தில் அறபு மொழியலே அச்சொல்லுக்கு என்ன பொருள் காணப்படுகின்றதோ அப்பொருளைக் கருத்தாகக்கொண்டு அல்குர்ஆன் இறக்கப்பட்டுள்ளது என மேற்கன்ட அல்குல்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது.
இமாம் என்ற சொல்லுக்கு இஸ்லாம் விசேடமான பொருளைக் கூறாததால் அரபு மொழியில் அச்சொல்லின் பொருள் பின்வருமாறு:
இமாம்:
1. ரயிஸ் அல்லது அவரல்லாத பின்பற்றப்படக் கூடியவர்
(முஹீதுல் முஹீத் -அரபு அகராதி)
2. பின்பற்றக் கூடியவர் அதாவது அவர் செய்வதைப் போன்று செய்யப்படக் கூடியவர்
3. முன்மாதிரியாகக் கொள்ளப்படக்கூடியது
3. தெளிவான பாதை
(முன்ஜித் - அரபு அகராதி)
அம்ம எனும் சொல்லிருந்து பிறந்ததே இமாம் எனும் சொல். அம்ம என்பதின் பொருள் முன்னின்று வழி நடத்தினார் என்பதாகும். எனவே இமாம் எனும் சொல் மொழி ரீதியாக முன்னின்று வழிநடத்தக் கூடிய ஒவ்வொருவருக்கும் பயன்படுத்த முடியுமான ஒரு சொல்லாகும் இப்படிப் பயன்படுத்துவதற்கு இஸ்லாம் ஏதேனும் நிபந்தனை இடுவதாகக் கூறுவதானால் அதற்கான ஆதாரம் முன்வைக்கப்படவேண்டும். இமாம் எனும் சொல் அட்சியாளருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதற்கோ அல்லது தொழுகை நடாத்துபவருக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதற்கோ குர்ஆன் ஹதீஸ் மொழி ஆகிய எந்த ஒன்றிலும் ஆதாரம் கிடையாது ஆட்சியாளருக்கு அல்லது தொழுகை நடத்துபவருக்கு இச்சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இவர்களை மாத்திரமே இச்சொல் குறிக்கும் என வாதிடுவது நகைப்புக்குரியது.
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பிறகு இந்த உம்மத்தின் முதல் கலீபாவாகவும் அறபைத் தாய் மொழியாகக் கொண்டவர்களுமாகிய அபூபக்கர் ரலியல்லாஹூ அன்ஹூ இமாம் எனும் வார்த்தையை விளக்குவதைப் பாருங்கள்.
கைஸ் பின் அபீ ஹாஸிம் அறிவிக்கிறார்கள்:
அஹ்மஸ் கோத்திரத்தை சேர்ந்த ஸைனப்பின்துல் முஹாஜிர் என அழைக்கப்படும் பெண்ணிடம் (ஒரு முறை) அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் வந்தார்கள். அப்பெண் கதைக்காமல் இருப்பதை பார்த்துவிட்டு, ஏன் கதைக்காமல் இருக்கின்றாள்? எனக் கோட்டார்கள். கதைக்காமலே ஹஜ் செய்கிறாள் எனக்கூறினர். அப்பெண்ணை நோக்கி கதைப்பாயாக! நிச்சயமாக இது ஆகுமானதல்ல. இது ஜாஹிலிய்ய செயலில் நின்றும் உள்ளதாகும் எனக்கூறினார்கள். உடனே (அப்பெண்) கதைத்தாள். நீங்கள் யார் எனக்கேட்டாள். முஹாஜிர்களின் ஒருவன் எனக்கூறினார்கள். எந்த முஹாஜிர்கள்? எனக்கேட்டாள். குரைஷிகளில் உள்ளவர்கள் எனக்கூறினார்கள். குரைஷிகளில் எந்த கிளையைச் சேர்ந்தவர்? எனக்கேட்டாள். நிச்சயமாக நீ அதிகம் கேள்வி கேட்கக்கூடியவள்?, நான் அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) எனக்கூறினார்கள். ஜாஹிலிய்யத்தின் பிறகு அல்லாஹ் ஏற்படுத்திய இந்த சிறந்த ஆட்சியதிகாரத்தில் எதுவரைக்கும் நாம் நிலைத்திருப்போம்? எனக்கேட்டாள். உங்களது இமாம்கள் உறுதியுடன் இருக்கும் காலம் வரை நீங்கள் அதில் நிலைத்திருப்பீர்கள் எனக்கூறினார்கள். இமாம்கள் என்போர் யார்? எனக்கேட்டாள். உனது கூட்டத்தாருக்கு ரயீஸ்களும், மதிப்புக்குரியவர்களும் அவர்கள் இவர்களுக்கு ஏவுவார்கள், இவர்கள் அவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். (அத்தகையவர்கள்) இருக்கவில்லையா? எனக்கேட்டார்கள். அதற்கவள் ஆம் எனக்கூறினாள். அவர்களேதான் (ஆனால் குறிப்பிட்ட கோத்திரத்திற்கல்லாது இமாம்களாகிய) அவர்கள் மக்களுக்கென இருப்பார்கள்.
(ஸஹீஹூல் புகாரி- கி.ம. அன்ஸார் 3834)
அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்கள் இமாம்கள் என்போர் யார்? எனக்கேட்கப்பட்ட போது பி.ஜெயின் கண்டுபிடிப்புக்களில் எதனையும் குறிப்பிடவில்லையே...? அறபு அகராதியில் எப்படி இமாம் எனும் சொல்லிற்கு ரயீஸ் என உதாரணம் காட்டப்பட்டுள்ளதோ அதேபோன்று தான் அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களும் ரயீஸ்கள் என விளக்குகின்றார்கள். ரயீஸ் என்றால் ஆட்சியதிகாரம் இல்லாத தலைவர் என்பதை பி.ஜெயும் ஏற்றிருக்கின்றார்.
(பார்க்க அல்-முபீன்-99 மார்ச் பக்51)
பி.ஜெ மதிப்பதாகக் கூறும் அபூபக்கர் (ரலியல்லாஹூ அன்ஹூ) அவர்களினது தெளிவான விளக்கத்திற்கு பிறகாவது பி.ஜெ தவ்பாச் செய்து இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வாரா? அல்லாஹ்தான் அவருக்கு சத்தியத்தை ஏற்கக்கூடிய மனப்பக்குவத்தைக் கொடுத்து அவரை நரகிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே எமது பிரார்த்தனையாகும்.
ஆட்சியதிகாரம் உள்ளவரை மாத்திரமே இமாம் அல்லது அமீர் எனக் குறிப்பிடலாம் எனும் இடிந்து வீழ்ந்துவிட்ட கற்பனைக் கோட்டையின் அடையாளம் கூட இருக்கக்கூடாது என்பதற்காக இமாம் எனும் சொல் ஆட்சியதிகாரம் எனும் எவ்வித நிபந்தனையுமில்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ள மற்றுமொரு ஹதீஸையும் குறிப்பிடுகின்றோம்:
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
நிச்சயமாக நான் எனது உம்மத்தினர் மீது பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கக் கூடிய இமாம்களைப் பற்றியேயாகும்.
(திர்மிதி-ஸஹீஹ். ஸி.அ. ஸஹீஹா 1582)
ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களது உம்மத்தை வழிகேடுக்கக்கூடிய தலைவர்களை ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் இமாம்கள் எனக் கூறியுள்ளார்கள். இங்கு ஆட்சியதிகாரத்துடன் உள்ள தலைவர்கள்தான் வழிகெடுப்பார்கள் என்பது பொருளல்ல. மாறாக மார்க்கம் எனும் பெயரில் மக்கள் நம்பிப் பின்பற்றும் போது அவர்களுக்கு நேர்வழியாகிய குர்ஆனையும் ஹதீஸையும் கற்பிக்காது, அவையல்லாதவற்றைக் கூறி மக்களை வழிகெடுக்கக்கூடிய, ஒவ்வொரு தலைவரையும் பற்றி ரஸூலுல்லாஹி ஸல்லால்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் தனது உம்மத்தினர்களை எச்சரிக்கின்;றார்கள். இந்த ஹதீஸூம் இமாம் எனக் கூறப்படுவதற்கு ஆட்சியதிகாரம் ஒரு நிபந்தனையல்ல எனும் உண்மையை நிரூபிக்கக்கூடிய ஆதாரங்களில் ஒன்றாகும். இங்கு வழிகெடுக்கும் இமாம்கள் என்றதும் அவர்கள் ஆட்சியதிகாரம் கொண்டவர்களாகத்தான் இருப்பார்கள் எனும் கருத்தை தீனிலே சுயகருத்தைப் புகுத்தும் பி.ஜெயால் கூட கூறமுடியாது. எனவேதான் பி.ஜெ இமாம் எனும் சொல்லுக்கு புதுக்கருத்து ஒன்றையும் உருவாக்கியுள்ளார். அல்-குர்ஆனிலே அக்கருத்தை எப்படித் திணிக்கின்றார் எனப்பாருங்கள்.:
அல்குர்அனை ஆய்வு செய்கையில் இமாம் என்ற வார்தை வழிகாட்டி பிரமுகர் என்ற அரத்தத்திலும் இடம் பெற்றுள்ளது.
நிராகரிப்பவர்களின் இமாம்களுடன் போர் செய்யுங்கள்
(அல்குர்ஆன் 9:12)
(இப்ராஹீமே) நிச்சயமாக நன் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்குகின்றேன்
(அல்குர்ஆன் 2:124)
இன்னும் நம் கட்டளைகளைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக நாம் அவர்களை ஆக்கினோம். (அல்குர்ஆன் 21:73)
மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியினரிடமிருந்து எங்களுக்கு கண்; குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (அல்குர்ஆன் 26:74)
மேற்கன்ட வசனங்களிலும் இமாம் என்ற வாரத்தை வழிகாட்டி பிரமுகர் என்ற பொருள் பயன் படுத்தப்பட்டுள்ளதைக் கான்கிறோம்.
(அல் முபீன் 1999 மார்ச் - பக்கம்)
இங்கு பி.ஜெ பிரமுகர் என்ற பொருளில் வந்ததாகக் குறிப்பிடுவது அவர் சுட்டிக்காட்டியிருக்கும் (9:12) வசனத்தையேயாகும் ஏனைய வசனங்கள் மூன்றும் அவரது கருத்துப்படி வழிகாட்டி எனும் பொருள் கொண்டவைகளாகும் பிரமுகர் எனும் பொருள் தான் பி.ஜெ புதிதாக புகுத்த முயலும் கருத்தாகும் இமாம் எனும் சொல்லுக்கு பிரமுகர் எனும் பொருள் எந்த அகராதியில் காணப்படுகின்றது? அல்லது இப்பொருளை நிரூபிக்கக்கூடிய குர்ஆன் ஹதீஸ் எங்கு கானப்படுகின்றது..........? இதுவே எமது கேள்வியாகும் பி.ஜெயால் பதில்கூறமுடியுமா........?
இலங்கை உலமா சபை தற்போதைய தலைவர் உட்பட இலங்கை அன்சாருஸ் ஸூன்னா எனும்பிரிவில் தலைவராலும் அப்பிரிவிலுள்ள மற்றும் சிலஉலமாக்களாலும் பிரயேகத் தவறுகள் அற்றது என உத்தரவாதம் அளிக்கப்பட்டு சவூதி அரேபியா அரசாங்கத்தினால் அச்சிடப்பட்டுள்ள குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பாருங்கள்:-
நிராகரிப்போரின் தலைவர்களுடன் போரிடுங்கள். (9:12)
தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டோர் மிகஅதிகமாகப் பயன்படுத்தப்படும் அல்-குர்ஆனிய மொழிபெயர்ப்பாகிய அப்துல் ஹமீது பாகவி அவர்களது மொழிபெயர்ப்பிலும் இச்சொல் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்:
நிராகரிப்போரின் தலைவர்களுடன் போரிடுங்கள். (9:12)
மற்றொறு மொழிபெயர்ப்பாகிய டாக்டர் முஹம்மது ஜான் அவர்களின் மொழிபெயர்ப்பு பின் வறுமாரு காணப்படுகின்றது:-
நிராகரிப்போலின் தலைவருடன் போரிடுங்கள். (9;:12)
பி.ஜே கூறுவது போல் ஒருவர்கூட இங்கு இமாம் எனும் சொல்லிற்கு பிரமுகர் என்று பொருள் கொடுக்காதது ஏன்? உண்மை என்னவெனில் அச்சொல்லிற்கு அப்படி ஒரு பொருள் கிடையாது எனவே தான் அனைவருமே தலைவர் என மொழிபெயர்த்துள்ளனர். பி.ஜெ மாத்திரம் தான் தப்பித்துக்கௌ;வதற்காக குர்ஆனிலே அவருக்குத் தேவையான கருத்தைப் புகுத்துகின்றார். கப்ர் வணக்கம் செய்வோரர் மத்ஹபுகளைப் பின்பற்றுவோர் தங்களது தவறுகளை உணர்ந்;து திருந்த வேண்டும் எனக்கூறி முழக்கமிடும் பி.ஜெ யின் நிலைதான் இது. அவர் செய்யக்கூடிய தவறு தெளிவாக நிரூபிக்கப்பட்ட பின்னர் அவரது தவறை சரியென மாற்றுவதற்காக அல்குர்ஆனிய வசனங்களையே மாற்ற முயற்ச்சிக்கின்றார் அல்லாஹ்தான் இத்தகைய வழிகெடுக்கக்கூடிய தலைவர்களை விட்டும் பாமர மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
பி.ஜே குறிப்பிட்டுள்ளது போன்று பிரமுகர் எனும் பொருளில் அல்குர்ஆனில் எந்த ஒரு இடத்திலும் இமாம் எனும் சொல் பயன்படுத்தப்படவில்லை இமாம் எனும் செல்லிற்கு பிரமுகர் எனும் பெருளே இல்லை எனும்போது அப்பொருளில் எப்படி பயன்படுத்தப்படமுடியும்? இமாம் எனும் சொல்லிற்கு பிரமுகர் எனும் பொருள் பி.ஜெயால் புகுத்தப்பட்டதுதான் என்பது இன்னும் உறுதியாகும் பொருட்டு அல்குர்ஆனில் இமாம் என்று வரக்கூடிய ஒவ்வொரு வசனத்தையும் இங்கு தருகிறோம்
(ஷூஐபுடைய மக்களாகிய) தோப்புடையோரும் நிச்சயமாக அக்கிரமக்காரர்களாகவே இருந்தனர். ஆகவே அவர்களிடமும் நாம் பழிவாங்கினோம். (அழிந்த)இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான வழியில் தான் இருக்கின்றன. (15 :78,79)
நிச்சயமாக நாமே மரித்தோரை (மறுமையில்) உயிர் கொடுத்து எழுப்புவோம். அவர்கள் செய்து அனுப்பியவைகளையும் அவர்கள் விட்டுச்சென்றவர்களையும் நாம் எழுதுகின்றோம். இவை ஒவ்வொன்றையும் தெளிவான ஏட்டில் பதித்தே வைத்திருக்கின்றோம் (36:12)
அன்றி நாம் அவருக்கு (அவரது) கோரிக்கையின்றியே இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அருள் புரிந்தோம். இவர்கள் யாவரையும் நல்லடியார்களாகவும் நாம் ஆக்கினோம். ஆன்றி நம் கட்டளைகளை (ஜனங்களுக்கு) ஏவி, நேரான வழியை அறிவிக்கக்கூடிய தலைவர்களாகவும் ஆக்கினோம். (21:72,73) இதே பொருளில் (17:71)
இதற்கு முன்னர் மூஸாவுடைய வேதம் (ஜனங்களுக்கு) வழிகாட்டியாகவும், அருளாகவும் இருந்தத (46:12) இதே பொருளில் (11:17)
உடன்படிக்கை செய்து கொண்ட பின்னரும் அவர்கள் தங்களுடைய சத்தியங்களை முறித்து, உங்களுடைய மார்க்கத்தை பற்றியும் குற்றங்குறைகளை குறிக்கொண்டிருந்தால் (நிச்சயமாக) நிராகரிப்போரின் இத்தகைய தலைவர்களுடன் போரிடுங்கள் (9:12) இதே பொருளில (28:5),(32:24)
இன்னும் இப்ராஹீமை அவரது 'ரப்' பல கட்டளைகளைக்கொண்டு சோதித்த போது, அவர் அவற்றை பூரணப்படுத்தினார். நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு முன்மாதிரியாக ஆக்குகிறேன் என (அல்லாஹ்) கூறினான். (2:124)
மேலும் அவர்கள் எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும் எங்கள் சந்ததியினரிடமிருந்து எங்களுக்கு கண்; குளிர்ச்சியை அளிப்பாயாக! அன்றி பரிசுத்தவான்களுக்கு வழிகாட்டியாகவும் எங்களை ஆக்குவாயாக என பிரார்த்திக் கொண்டிரப்பார்கள். (25:74)
இமாம் எனும் சொல் வரக்கூடிய இந்த அல்-குர்ஆனிய வசனங்களில் எந்hவொரு இடத்திலும் பிரமுகர் எனும் பொருளில் அச்சொல் பயன்படுத்தப்படவில்லை. இமாம் எனும் சொல் வரக்கூடிய வேறு வசனங்கள் நாம் அறிந்தவரையில் அல்-குர்ஆனில் இல்லை. எனவே இமாம் எனும் சொல்லிற்கு பிரமுகர் எனும் பொருள் பி.ஜெயின் கற்பனையே தவிர அதில் எவ்வித உண்மையுமில்லை.
ஆகவே தலைமைத்துவத்திலிருந்து ஆரம்பிக்கக்கூடிய ஜமாஅதுல் முஸ்லிமீனை (முஸ்லிம்களின் கூட்டமைப்பை) வழி நடாத்தக்கூடிய அமீரை ஆட்சியதிகாரமுள்ள, இல்லாத எல்லா நிலைகளிலும் இமாம் எனும் பெயர் கொண்டு அழைக்கலாம் என்பது தெளிவாகின்றது.
ஒருவரை இமாம் என அழைப்பதற்கு அவருக்கு அறபு மொழி ரீதியாகவும் ஆட்சியதிகாரம் நிபந்தனையல்ல என்பதை நாம் மேலே அறபு அகராதியிலிருந்து நிரூபித்துள்ளோம். ஆதில் முதலாம் அகராதியில் இமாம் என்பதற்கு ஒத்த கருத்துச்சொல்லாக ரயீஸ் எனும் சொல் உதாரணமாக காட்டப்பட்டுள்ளது. ரயீஸ் என்பவர் ஆட்சியதிகாரம் இல்லாத தலைவர் என்பதை பி.ஜெ இவ்வாறு ஏற்கின்றார்.
இதுபோல் ஹதீஸ்களில் அதிகாரம் இல்லாதவர்களை, ஆட்சி இல்லாதவர்களை தலைவர் ஸய்யித் என்ற வார்த்தையால் அழைக்கப்படுவதைக் காண்கிறோம். இன்றைய சங்கங்கள், ஜம்இய்யாக்கள், இயக்கங்களின் தலைவர்களை ஸய்யித் என்றோ அல்லது இதே போன்ற பொருளைக் கொண்ட ரயீஸ் என்று அழைக்கலாமே தவிர அமீர் என்று அழைப்பது பொருத்தமாகாது.
(அல்-முபீன் 1999 – மார்ச் பக்கம்-51)
ரயீஸ் எனும் சொல் ஆட்சியதிகாரம் இல்லாத தலைவரைக் குறிக்கும் என்பதைக் கூறிவிட்டு இமாம் எனும் சொல்லும் அதே பொருளைக்கொண்டது என்பதை அகராதிகள் கூறும் போது மட்டும் பி.ஜெ அதனை மறுக்கின்றார்.
ஹதீஸிலும் கூட இமாம் எனக்கூறப்படுவதற்கு ஆட்சியதிகாரம் ஒரு நிபந்தனையாகக் கூறப்படவில்லை. பி.ஜெ தனது வழக்கப்படி. தான் கூறக்கூடிய சுயகருத்தை நிரூபிப்பதற்கு உண்மைக்கு மாற்றமான ஒன்றைச் சொல்லி பின்வருமாறு ஏமாற்ற முயற்சிக்கின்றார்.
மன்னர் என்ற கருத்தில் அமைந்த இமாம் என்ற பதத்தை மாத்திரம் எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் திருத்தூதர் என்ற பதத்தில் நேரடியாக ஆட்சியும் அதிகாரமும் உள்ளடங்காவிட்டாலும் நபி(ஸல்) அவர்கள் அதிகாரம் படைத்த ஆட்சித்தலைவராகவே இருந்தனர். (அல்-முபீன் 1999 – மார்ச் பக்கம்-14)
இங்கு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப்பற்றி பி.ஜெ இவ்வாறு கூறுவதன் மூலம் முதலில் தனது கருத்திற்கே முரண்படுகிறார். பின்வரக்கூடிய ஹதீஸை கவனியுங்கள்:
உர்வா இப்னு ஸூபைர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் கூறுகின்றார்கள்:
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹூ அன்ஹூ இடத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு முஷ்ரிக்குகள் இழைத்த மிகக்கொடிய தீமைப்பற்றிக் கேட்டேன் அதற்கவர்: 'ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் தொழுது கொண்டிருந்த போது உக்பா இப்னு அபூ முஈத் வந்து தனது போர்வையை (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின்) கழுத்திலே போட்டு கடுமையாக இறுக்கினான். அப்போது அபூபக்ர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் வந்து அவர்களைத் தள்ளி விட்ட பின் அல்லாஹ் என்னுடைய ரப் ஆவான் எனக் கூறிய ஒருவரை கொலை செய்கின்றீர்களா? அவரோ உங்களிடத்தில் உங்கள் ரப்பிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்து இருக்கின்றார்?' எனக் கேட்டார்கள். (ஸஹீஹூல் புஹாரி – கி.ப.அஸ்ஹாபின்னபி)
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களால் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக நிரூபிக்கின்றது. பி.ஜெயுடைய வாதப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் அதிகாரம் படைத்த ஆட்சித்தலைவராகவே இருந்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாமல் பேனது ஏன்...? ஏனெனில் தன்னையே பாதுகாத்துக்கொள்ள முடியாதவர் அமீரே அல்ல என அதே பி.ஜெ தான் இவ்வாறு கூறுகின்றார்.:
ஒரு இமாம் அல்லது அதீர் என்பவர் போர் பிரகடனம் செய்யும் அதிகாரத்தையும், போருக்கென்று படையை அனுப்பும் அதிகாத்தையும் பெற்றவராக இருக்கவேண்டும். இன்னும் படையை நகர்த்திச் சென்று போரிடும் அதிகாரத்தையும் சக்தியையும் பெற்றிருக்க வேண்டும்.
(அல்-முபீன் 1999- மார்ந் பக்கம் 31)
நபியவர்களுடைய ஆரம்பகால வாழ்கையாகிய மக்கா வாழ்வின் போது ஆட்சியை பெறுவது ஒருபக்கமிருக்க அல்லாஹ்வின் வீடாகிய கஃபதுல்லாஹ்வில் தொழக்கூடிய சக்திகூட இல்லாத நிலையில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை முன்னால் கொடுக்கப்பட்டுள்ள ஹதீஸ் மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது.
உண்மை இப்படி இருக்க ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் ஆட்சித் தலைவராகவே இருந்தனர் என்பது சந்தேகமற்ற இரட்டடிப்பு அல்லவா..? அல்லது அல்லாஹ்வின் தூதர் எனும் வார்த்தையில் ஆட்சித்தலைவர் எனும் பொருள் இருக்கின்றது எனக்கூறிய பி.ஜெ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் மக்காவில் வாழ்நத பதிமூன்று ஆண்டுகால நபித்துவ வாழ்க்கையில் அவர்கள் நபியே அல்ல என்று தனது சுயகருத்தை பாதுகாக்க மற்றொரு வாதத்தை ஆரம்பிக்கப் போகின்றாரா??
இதே ரீதியில் பொதுவாக ஹதீஸிலே இமாம் (வழிநடாத்தக்கூடியவர்) எனும் கருத்தில் வரும் சொற்கள் அனைத்தையும் பி.ஜெ தனது வழிகெட்டை நிரூபிப்பதற்காக ஆட்சி நடத்தும் அதிபதி என்று பொருள் கொடுத்துள்ளார். அப்படி அவர் வழிந்து பொருள் கொடுத்த ஒரு ஹதீஸை உதாரணத்திற்காக தருகின்றோம்:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
மூன்று நபர்களுடன் அல்லாஹ் மறுமை நாளில் கதைக்க மாட்டான், அவர்களைத் தூய்மைப் படுத்த மாட்டான் மேலும் அவர்களுக்கு நோவினைத் தரக்கூடிய தண்டனையும் இருக்கின்றது. பாதை ஓரத்தில் மேலதிகமான நீரை எடுத்து வைத்திருந்தும் வழிப்போக்கருக்குக் கொடுக்காதவர், ஒரு இமாமிடத்தில் பைஅத்துச்செய்தவர் (எனினும் அவர்) தனது உலக இலாபத்துக்காகவேயன்றி அவருக்கு பைஅத்துச் செய்யவில்லை அவர் நாடக்கூடியதை அவருக்குக் கொடுத்தால் அதனை (பைஅத்தை) நிறைவேற்றுவார், இல்லாவிட்டால் நிறைவேற்ற மாட்டார். அஸரிற்குப்பின்னால் மற்றொரு மனிதரோடு வியாபாரம் செய்பவர். (அவர்) அப்போது அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இன்னின்ன விலை கொடுத்து வாங்கினேன் என்பதாக கூறுகின்றார். (மற்றவர்) அவரை உண்மையெக்கூறி வாங்குகின்றார். அப்பொருளிற்கோ (சத்தியம் செய்து கூறப்பட்ட) விலை கொடுக்கப்படவில்லை.
(ஸஹீஹூல் புஹாரி – கி.அஹ்காம்)
இந்த ஹதீஸில் வரக்கூடிய இமாம் எனும் வார்த்தைக்கு ஆட்சிநடாத்தும் அதிபதி எனும் பொருள் எந்த அகராதியில் உள்ளது? அல்லது எந்த அல்-குர்ஆனிய வசனம், எந்த ஹதீஸ் இங்கு இமாம் எனும் சொல்லின் பொருள் ஆட்சி நடத்தும் அதிபதி என்பதைக் குறிப்பிடுகின்றது...? தமக்குத் தேவையான கருத்தை புகுத்தி மொழிபெயர்ப்பதால் அது உண்மையாகிவிடுமா??
தலைவர் என்ற பொருள் கொண்ட இமாம் எனும் சொல்லிற்கு ஆட்சி நடத்தும் அதிபதி என மொழிபெயர்த்து விட்டு பி.ஜெ எழுதுவது:
இமாம் என்பது தொழுகை நடாத்தக்கூடியவரைக் குறிக்கும் என்பதை நாம் அறிவோம். முழுமையான அதிகாரம் பெற்ற மன்னரையும் இவ்வார்த்தை குறிக்கும் நபி(ஸல்) அவர்கள் இமாம் என்ற வார்த்தையை இவ்விரு அர்த்தங்களிலும் பயன் படுத்தியுள்ளனர். உதாரணமாக புகாரியில் 41 இடங்களில் இமாம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றுள் 26 இடங்கள் தொழுகை நடாத்தக்கூடியவர் என்ற பொருளிலும் 15 இடங்கள் ஆட்சி நடத்தும் அதிபதி என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
(அல்-முபீன் 1999 மார்ச் பக்கம் 13)
ஆட்சி நடத்தும் அதிபதி எனும் பொருளுடன் 15 இடங்களில் வருவதாக பி.ஜெ குறிப்பிடகின்றவற்றுள் முன்னால் தரப்பட்டிருக்கின்ற ஹதீஸூம் ஒன்றாகும். அதில் இவர் குறிப்பிடுகின்ற பொருள் பி.ஜெ வலிந்து கொடுத்த பொருளேயன்றி மொழி ரீதியாகவோ அல்லாஹ்வுடைய வேதத்தைக் கொண்டோ நிரூபிக்கப்பட்டதல்ல.
மேலும் ஆட்சியதிகாரம் ஏற்பட்ட பிறகுதான் ஒரு அமீருக்கு கட்டுப்படுவோம் எனும் வாதம் பகுத்தறிவுக்குக் கூட பொருத்தமானது அல்ல. இதை பி.ஜெ யும் நன்கறிவார். எனவே தான் அரசியல் தலைவராக வேண்டும் எனும் ஆசை வந்தவுடனே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்றதோர் பிரிவை உருவாக்கி அதற்கென ஒரு தலைமைத்துவத்தை மட்டுமல்லாது பொதுச்செயலாளர் என்ற பதிவியையும் உருவாக்கி, அதிகாரம் கூடிய பொதுச்செயலாளர் பதிவியிலும் தானே அமர்ந்துவிட்டார். பி.ஜெ யின் சுயரூபத்தை அறியாமல் ஏமார்ந்து நிற்கும் அவரது கட்சித் தொண்டர்கள் என்றாவது உண்மையறிந்து நீர் ஜனாதிபதியாக வந்தநன் பிறகு நாம் உம்மோடிணைந்து உமக்கு கட்டுப்படுகின்றோம் எனக்கூறிவிட்டால் பி.ஜெயின் நிலைமை என்னவாகும்?
பகுத்திறிவு கூட சமூகத்தில் ஒரு இலட்சியத்திற்காகப் பாடுபட நினைக்கும் போது முதலாவது நடவடிக்கையாக ஒரு பெயரையும், அக்கொள்கையை ஏற்கக் கூடியோரை வழிநடாத்தக்கூடிய தலைமைத்துவத்தையும் ஏற்படுத்துதல் அவசியம் எனக்கருதுவதால் தான் இப்படியான முயற்சிகளில் ஈடுபடக்கூடிய பி.ஜெ உட்பட ஒவ்வொருவரும் தாம் விரும்பும் பெயரில் ஒரு அமைப்பை உண்டுபண்ணி அதற்hகன தலைமைத்துவத்தையும் ஏற்படுத்துகின்றனர். இப்படியான ஒரு முயற்சியை ஆரம்பிக்கும் போது அவ்வமைப்பின் தலைவர் ஆட்சியதிகாரமிக்க ஒருவராக இருக்க வேண்டும் எனும் கருத்தை அல்லாஹ் வழிகேட்டிலேயே விட்டுவிட்ட பி.ஜெ கூட அங்கு கூறுவதில்லை. ஆனால் அல்லாஹ்வுடைய தீனில் மாத்திரம் மொழி, அல்லாஹ்வின் வேதம், பகுத்தறிவு போன்ற அனைத்திற்குமே முரணாக ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும் என பி.ஜெ வாதிடுவதைப் பாருங்கள்:
நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்குக் கட்டுப்படுங்கள் உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்குக் கட்டுப்படுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையையும் இறுதிநாளையும் நம்புபவராக இருந்தால் அதை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள் இதுதான் உங்களுக்கு அழகான முடிவாக இருக்கும் (அர்-குர்ஆன் 4:59)
அமீருக்கு கட்டுப்படுவதை வலியுறுத்தும் அல்லாஹ்வின் கட்டளை இது. அமீர்களுக்கு கட்டு;ப்படுங்கள் என்று கூறாமல் உலில் அம்ரி என்று கூறுகிறான்
உலூ என்றால் உடையவர்கள் என்று பொருள்
அம்ரு என்றால் அதிகாரம் என்று பொருள்
ஆட்சியதிகாரம் உள்ளவர்களுக்குக் கட்டுப்படுவதைத்தான் இவ்வசனம் கூறுகின்றது என்பதில் இரண்டாவது கருத்தே இருக்க முடியாது. (அல்-முபின் 1999 மார்ச் பக்கம்-25)
முதலாவது பி.ஜெ இங்கு அம்ர் என்றால் அதிகாரம் என மாத்திரம் கூறி ஒரு இருட்டடிப்புச் செய்திருக்கின்றார். அம்ர் என்பதை விபரமான விளக்குவதற்கு முன்னால் இங்கு பி.ஜெ இரண்டு எதிரும் புதிருமான கருத்துக்களை கூறுகின்றார். இந்த வசனம் அமீருக்குக் கட்டுபடுவதை வலியுத்துவதாகவும் கூறுகின்றார். அதே நேரம் அமீர்களுக்கு கட்டுப்படுங்கள் என்று கூறாமல் உலில் அம்ரி (அவரது கருத்துப்படி ஆட்சியதிகாரம் உள்ளவர்கள்) எனக் கூறுவதாகவும் கூறுகின்றார். இவ்விரண்டில் ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.
உலில் அம்ர் என்பது அமீரைக் குறிக்குமானால் இவ்வசனம் அமீருக்குக் கட்டுப்படுவதை வலியுறுத்தும் அது சரியானது எனக் கூறுவாரானால் அமீர் எனக் கூறாமல் உலில் அம்ர் எனக் கூறப்பட்டிருப்பதை பி.ஜெ பிரித்துக்காட்டுவது தவறானதாகும். பிரயோசனம் அற்றதுமாகும் அல்லது பி.ஜெ அழுத்தம் கொடுத்திருப்பது போல் உலில் அம்ர் என்பது அமீர் எனக்கூறுவதிலிருந்து வித்தியாசம் இருக்குமானால் அமீருக்குக் கட்டுப்படுவதை இவ்வசனம் வலியுறுத்துகிறது எனும் அவரது கூற்று தவறாகிவிடும். வழிகேடர்கள் முரண்படுவதென்பது விந்தையானதல்ல.
மேலும் இந்த (4:59) அல்-குர்ஆனிய வசனத்தின் மொழிபெயர்ப்பில் இஸ்லாத்திற்கு முரணான ஒரு நிபந்தனையை அடைப்புக்குறிக்குள் சோர்த்துள்ளார். அதாவது (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கட்டுப்படுங்கள் என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது இங்கு அமீருக்குக் கட்டுப்படுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனையான நேர்மையாக அதிகாரம் வகிக்க வேண்டும் என்பது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் கட்டளைக்கு நேர்முரணானது என்பதை பின்வரக்கூடிய ஹதீஸைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்:
சல்மனிப்னு யஸீத் ரலியல்லாஹூ அன்ஹூ ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம்: அல்லாஹ்வின் தூதரே எமக்கு எதிராக அமீர்கள் தோன்றி அவர்களுக்கு செலுத்த வேண்டிய கடமைகளை எம்மிடம் கேட்டுவிட்டு எமக்கு செலுத்த வேண்டிய கடமைகளை செலுத்தாது தடுத்துக்கொண்டால் தாங்கள் எமக்கு கட்டளையிடுவது என்ன? எனக் கேட்டார்கள். (ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவரை விட்டும் திரும்பிக் கொண்டார்கள். பின்னரும் கேட்டார்கள் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் செவிமடுத்து கட்டுப்படுங்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டது அவர்கள் மீதேயாகும் உங்கள் மீது சுமத்தப்பட்டது உங்கள் மீதேயாகும். (ஸஹீஹ் முஸ்லிம-கி.இமாரா)
**************
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
பூமியில் பாலைவனத்தில் இருக்கக்கூடிய மூவருக்கு(க்கூட) அவர்களில் ஒருவரை அமீராக நியமிக்காமலிருத்தல் ஆகுமானாதல்ல
(அஹ்மத்-ஸஹீஹ்)
****************
- அமீர் என்பதன் பொருள்!
அமீர் எனும் அறபுச் சொல்லிற்கு அகராதியில் காணப்படக் கூடிய பொருளை முதலில் பார்ப்போம்.
அமீர்:
1. தலைமைத்துவப் பரம்பரையை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் ஒரு கூட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றவர்.
2. நிர்வாகப் பொறுப்பு இல்லாவிட்டாலும் தலைமைத்துவப் பரம்பரையை சேர்ந்தோருக்கும் பயன்படுத்தப்படும்.
(முன்ஜித் அறபு அகராதி)
எனவே ஆட்சியதிகாரம் கொண்டவரைத் தான் அமீர் எனப்பட முடியும் எனும் வாதம் அறபு மொழிக்கு நேர் முரணானது என்பத இங்கு தெளிவாகின்றது.
ஹதீஸை எடுத்துப் பார்த்தால் அதுவும் பிரயாணம் ஆரம்பிக்கும் போதிலிருந்து முடியும் வரைக்கும் தலைவராக நியமிக்கப் படுகின்றவரைக் கூட அமீர் என்றே கூறுகின்றது.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்:-
மூன்று நபர்கள் பிரயாணத்திலிருந்தாலும் (அவர்கள்) தங்களில் ஒருவரை அமீராக்கிக் கொள்ளட்டும். (அறிவிப்பவர் அப்துல்;லாஹ் பின் உமர் (ரழியல்லாஹுஅன்ஹு) பஸ்ஸார்- ஸஹீஹ்)
பிரயாணத்திலிருக்கக் கூடிய
அமீருக்கு எவ்வித ஆட்சியத்காரமோ, படைப்பாளங்களோ இருப்பதில்லை இருந்தும் கூட
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அத்தகைய தலைவரை அமீர் என்றே
குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே அகராதியின் படியும், ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலின் படியும் ஆட்சியதிகாரம் உள்ள, இல்லாத எல்லாத்தலைவர்களையும் அமீர் எனக் கூறலாம் என்பது நிரூபணமாகின்றது.
அல்லாஹ்வுடைய வேதமாகிய குர்ஆனையும் ஹதீஸையும் எடுத்துப் பார்த்தால் ஆட்சியதிகாரம் உடையவரைத்தான் அமீர் எனச் சொல்லப்படும் என்பதற்கு ஒரு ஆதாரமாவது கிடையாது. இமாம் எனும் சொல் ஆட்சியதிகாரம் அற்றவருக்குக் கூறப்பட முடியாது என்றதொரு வாதத்தை முன்வைத்து அதற்கான ஆதாரங்களாக குறிப்பிட்ட ஒரு காலத்தில் இமாமுக்குக் காணப்பட்ட அதிகாரங்களைக் காட்டும் ஹதீஸ்களை பி.ஜெ முன்வைத்தார். அதே போன்று அமீர் என்பவருக்கு ஆட்சியதிகாரம் இருக்க வேண்டும் என்ற தனது மனோ இச்சைப் படியான நிபந்தனைக்கு ஆதாரம் காட்ட முடியாமல் குறிப்பிட்டதோரு காலத்தில் அமீருக்குக் காணப்பட்ட அதிகாரங்கள் பற்றிய ஹதீஸ்களையே முன்வைக்கின்றார். ஆட்சியதிகாரம் உள்ளவரை அமீர் எனக் குறிப்பிடலாமா? முடியாதா? ஏன்பது சர்ச்சையல்ல. ஆட்சியதிகாரம் இல்லாதவரை அமீர் எனக் கூற முடியாது என்ற பி.ஜெ யின் சுய தீர்ப்பிற்கு அவர் ஆதாரம் முன்வைக்க வேண்டும். ஹதீஸ்களை முன்வைத்துள்ளதாக பாமர மக்களை ஏமாற்றுவதற்காக சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஆதாரங்களை முன்வைத்துவிட்டு பி.ஜெ இப்படி எழுதுகின்றார்.
எனவே அகராதியின் படியும், ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களின் வழிகாட்டலின் படியும் ஆட்சியதிகாரம் உள்ள, இல்லாத எல்லாத்தலைவர்களையும் அமீர் எனக் கூறலாம் என்பது நிரூபணமாகின்றது.
அல்லாஹ்வுடைய வேதமாகிய குர்ஆனையும் ஹதீஸையும் எடுத்துப் பார்த்தால் ஆட்சியதிகாரம் உடையவரைத்தான் அமீர் எனச் சொல்லப்படும் என்பதற்கு ஒரு ஆதாரமாவது கிடையாது. இமாம் எனும் சொல் ஆட்சியதிகாரம் அற்றவருக்குக் கூறப்பட முடியாது என்றதொரு வாதத்தை முன்வைத்து அதற்கான ஆதாரங்களாக குறிப்பிட்ட ஒரு காலத்தில் இமாமுக்குக் காணப்பட்ட அதிகாரங்களைக் காட்டும் ஹதீஸ்களை பி.ஜெ முன்வைத்தார். அதே போன்று அமீர் என்பவருக்கு ஆட்சியதிகாரம் இருக்க வேண்டும் என்ற தனது மனோ இச்சைப் படியான நிபந்தனைக்கு ஆதாரம் காட்ட முடியாமல் குறிப்பிட்டதோரு காலத்தில் அமீருக்குக் காணப்பட்ட அதிகாரங்கள் பற்றிய ஹதீஸ்களையே முன்வைக்கின்றார். ஆட்சியதிகாரம் உள்ளவரை அமீர் எனக் குறிப்பிடலாமா? முடியாதா? ஏன்பது சர்ச்சையல்ல. ஆட்சியதிகாரம் இல்லாதவரை அமீர் எனக் கூற முடியாது என்ற பி.ஜெ யின் சுய தீர்ப்பிற்கு அவர் ஆதாரம் முன்வைக்க வேண்டும். ஹதீஸ்களை முன்வைத்துள்ளதாக பாமர மக்களை ஏமாற்றுவதற்காக சர்ச்சைக்கு அப்பாற்பட்ட ஆதாரங்களை முன்வைத்துவிட்டு பி.ஜெ இப்படி எழுதுகின்றார்.
இஸ்லாமிய
ஆட்சி முறையில் ஒரேயொரு தலைவர் இருப்பார் அவர் கலீபா அல்லது அமீருல்
முஃமினீன் என்று கூறப்படுவார். அவர் பல பணிகளுக்கும் பகுதிகளுக்கும்
அதிகாரிகளை நியமிப்பார். அவர்களே அமீர்கள் எனப்பட்டனர் என்பதை மேலே நாம்
எடுத்துக் காட்டிய சான்றுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஒருவர் அமீராக
இருக்க வேண்டுமானால் அவருக்கு மேலே ஒரு இமாம்ஃ கலீபாஃ சுல்தான்ஃ அமீருல்
முஃமினீன் இருந்தாக வேண்டும். அவர்களால் அவர் நியமிக்கப்பட்டிருக்கவும்
வேண்டும்.மேலே
நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகமும் கூட
இதை விளக்குகின்றது. அமீராக ஆக்கினார்கள், அமீராக நியமித்தார்கள் என்பது
போன்ற வார்த்தைகள் தான் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளதே தவிர அவர்களாக அமீராக
ஆனார்கள் என்று கூறப்படவில்லை. அல்லது மக்களால் அமீர்களாக
ஆக்கப்பட்டார்கள் என்றும் கூறப்படவில்லை.
(அல்முபின் 1999 – மார்ச் பக்கம்:22)
இதிலே இஸ்லாத்திற்கு முரணான பல அம்சங்கள் காணப்படுகின்றன. அவை ஒவ்வொன்றாக ஆதாரங்களுடன் விபரிக்கின்றோம்.
(அல்முபின் 1999 – மார்ச் பக்கம்:22)
1. முஸ்லிம்களின் ஒரே தலைவர் கலீபா அல்லது அமீருல் முஃமினீன் எனக் கூறப்படுவார் என்பது தவறாகும். முஸ்லிம்களின் ஒரே தலைவரை அமீர் எனவும் கூற முடியும். அவருக்கு ஆட்சியதிகாரம் இருந்தால் அவரை கலீபா எனக் கூறப்படும்.
முஸ்லீம்களின் ஒரே தலைவரை அமீர் எனவும் குறிப்பிடலாம் என்பதற்கு இதற்கு அடுத்து வரக்கூடிய சிறு தலைப்பாகிய சவாலும் பதிலும் எனும் தலைப்பின் கீழ் ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.
முஸ்லீம்களின் ஒரே தலைவரை அவருக்கு ஆட்சியதிகாரம் இல்லாவிட்டாலும் கூட அவரை இமாம் எனவும் குறிப்பிடலாம் என்பதற்கான பல ஆதாரங்களில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.
'பிரிவுகள் காணப்படக்கூடிய காலத்தில் நான் வாழ நேரிட்டால் எனக்கு நீங்கள் கட்டளையிடக் கூடியதென்ன?' என ஹுதைபா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்கள் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களை நோக்கிக் கேட்ட போது, 'ஜமாஅதுல் முஸ்லிமீனையும் அதனது தலைமைத்துவத்தையும் பற்றிப் பிடிப்பீராக!' எனக் கூறினார்கள். அதற்கு ஹுதைபா (ரழியல்லாஹுஅன்ஹு) அவர்களுக்கென ஒரு ஜமாஅத்தும், ஒரு தலைமைத் துவமும் இல்லை என்றால்? எனக் கேட்டபோது 'அவ்வனைத்துப் பிரிவுகளை விட்டும் ஒதுங்கிவிடுவீராக! ஊமக்கு மரணம் வரும்வரையில் ஏதேனும் ஒரு மரத்தின் வேரைத்தான் கடித்திருக்க வேண்டிய (தனித்த) நிலை ஏற்படினும் சரியே!' எனக் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹ் முஸ்லீம்)
இந்த ஹதீஸில் இமாம் எனக் குறப்பட்டுள்ள முஸ்லிம்களின் தலைவர் ஆட்சியதிகாரத்துடன் இருப்பார் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே ஆட்சியதிகாரம் உள்ளவர், இல்லாதவர் என்ற பாகுபாடு இல்லாமல் முஸ்லிம்களின் ஒரே தலைவரை இமாம் எனக் கூறலாம் என்பது நிரூபணமாகின்றது.இதற்கு மாற்றமாக ஆட்சியதிகாரம் இல்லாதவரை இமாம் எனக் கூற முடியாது என எவரும் வாதித்தால் அவர் அதற்கான ஆதாரத்தை முன்வைக்க வேண்டும்.
முஸ்லிம்களின் ஒரே தலைவரை கலீபா என அழைக்கப்படுவதற்கு இஸ்லாமிய பரிபாஷையில் அவருக்கு ஆட்சியதிகாரம் இருக்க வேண்டும். அல்லாஹ் அல்குர்ஆனிலே பின்வருமாறு கூறுகின்றான்.
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் விசுவாசங் கொண்டு நற்கருமங்களைச் செய்தால், அவர்களுக்கு முன் சென்றவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாக்கிய பிரகாரமே இவர்களையும் நிச்சயமாக பூமிக்கு அதிபதிகளாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை ஸ்திரப்படத்தி வைப்பதாகவும், இவர்களுடைய பயத்தை அமைதியும் பாதுகாப்புமாக மாற்றிவிடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். (24:25)
தாவூதே! நிச்சயமாக நாம் உம்மைப் பூமியில் கலீபாவாக ஆக்கினோம். எனவே நீர் மனிதர்களுக்கிடையில் நியாயமாக தீர்ப்புக் கூறும், மனோ இச்சையைப் பின்பற்றாதீர். (அது) உம்மை அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் வழிகெடுத்து விடும். (38:26)
இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முதலாவது அல்குர்ஆனிய வசனத்தில் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களையும் அன்னாரது தோழர்களையும் பார்த்து 'லயஸ்தஹ்லிபன்னகும்' எனக் கூறி பின்னால் அவர்களை கலீபாக்களாக மாற்றுவதாக அல்லாஹ் கூறுகின்றான். இதிலிருந்து அச்சந்தர்பத்தில் ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) அவர்களும் அன்னாரது தோழர்களும் கலீபாக்களாக இருக்கவில்லை என்பது நிரூபனமாகின்றது. அதே போல் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டாவது அல்குர்ஆனிய வசனத்தில் தாவூது அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் வழங்கியதைக் குறிப்பிடும் போது கலீபா ஆக்கினோம் என அல்லாஹ் கூறுகின்றான். இதன் மூலம் இஸ்லாமிய பரிபாஷையில் ஆட்சியதிகாரம் உடைய முஸ்லிம்களின் ஒரே தலைவரை கலீபா எனக் குறிப்பிடப்படம் என்பது தெளிவாகின்றது. ஆனால் அவரை கலீபா என மாத்திரம் தான் குறிப்பிடப்பட வேண்டும் என்பது இதன் பொருளல்ல.
ஆட்சியதிகாரம் உள்ளவரே கலீபா என அழைக்கப்படக்கூடிய முஸ்லிம்களின் தலைவர் என்பதை பி.ஜெ. யும் ஏற்றிருக்கின்றார்.
2. முஸ்லிம்களின் ஒரே தலைவரினால் பல பணிகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் அமீர் எனப்படுவர் என்பதும் பி.ஜெ. யின் மற்றும் ஒரு தவராகும். இஸ்லாமிய பரிபாஷையில் மக்களை எல்லா விடயங்களிலும் கட்டுப்படுத்தி வழிநடாத்தக் கூடியவர் அமீராவார். ஸகாத் வரி என்பவற்றைச் சேர்ப்பதற்காக நியமிக்கப்படும் பணியாளர்களை அமீர் எனக் கூறுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது எனவே தான் ஹதீஸ்களைத்திரிபு படுத்தி பி.ஜெ. தனது சுய கருத்தை தீனிலே புகுத்த முயற்சி செய்துள்ளார். இது பற்றி தனித்தலைப்பிலே நாம் எழுதியுள்ளோம்.
3. ஒருவர் அமீராக இருக்க வேண்டுமானால் அவருக்கு மேலே ஒரு இமாம்ஃகலீபாஃசுல்தானன்ஃஅமீரல் முஃமினீன் இருந்தாக வேண்டும் எனும் பி.ஜெயின் நிபந்தனையும் தவரானது. முஸ்லிம்களின் ஒரே தலைவரை அமீர் எனக் குறிப்பிடலாம் என்பதற்கு சவாலும் பதிலும் எனும் சிறு தலைப்பின் கீழ் ஆதாரம் காணப்படுகின்றது. பி.ஜெ. தனது இந்த நிபந்தனைக்கு அமீராக்க ஆக்கினார்கள். அமீராக நியமித்தார்கள் என்பன போன்ற வார்த்தைகள் தான் இங்கு பயன் படுத்தப்பட்டுள்ளனவே தவிர அவர்களாகவே அமீர்களாக ஆகினார்கள் என்று கூறப்படவில்லை எனக் கூறி ஆதாரம் காட்டுகின்றார் தானாக அமீர் ஆகுவது பற்றி ஹதீஸ்கள் தெளிவாகக் கூறிக்கொண்டு இருக்கின்றன. உதாரணத்திற்கு பின்வரக்கூடிய ஹதீஸை குறிப்பிடலாம்.
ரஸுலுல்லாஹி (ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம்) கூறுகின்றார்கள்.
அபூதரே! நிச்சயமாக நான் உம்மை பலவீனமானவனாகக் காண்கின்றேன். மேலும் நிச்சயமாக எதனை எனக்கு விரும்புகின்றேனோ அதனையே உமக்கும் விரும்பகின்றேன். இருவருக்குக்கூட நீராகவே ஒருபோதும் அமீராகாதீர். அனாதைகளின் சொத்துக்களையும் ஒரு போதும் பொறுப்பேற்காதீர்.
(ஸஹீஹ் முஸ்லிம்-கி இமாரா)
இந்த ஹதீஸில் தானாக அமீராக ஆகுவது பற்றி குறிப்பிடப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், இருவருக்கு அமீராக ஆகுவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மூன்று பேர் கொண்ட ஒரு ஆட்சி உலகம் இதுவரை காணாத ஒன்று. ஆட்சியதிகாரம் இல்லாதவர் அமீராகலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் தெளிவான சான்றாகும். இப்படியான பல ஹதீஸ்கள் இருக்கும் போது, அதுவும் ஹதீஸ் நூல்களில் மிக முக்கியமான நூலாகிய ஸஹீஹ் முஸ்லிமில் காணப்படும்போது, அப்படி ஹதீஸ்களில் கிடையாது எனக்கூறுவது எவ்வளவு பெரிய அபத்தம் என்பதை வாசகர்கள் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். எனவே முஸ்லிம்களின் ஒரே தலைவர் அமீர். இமாம் என அழைக்கப் படுவதுடன் ஹதீஸில் வந்திரக்கக் கூடிய அல்லது குலபாவுர் ராஸிதீன்களின் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயர்களையும் பயன்படுத்தலாம். ஆட்சியதிகாரம் உள்ளவர் தான் அமீர், அல்லது இமாம் எனும் பி.ஜெ. யின் கற்பனை, அவர் இருக்கும் வழிகேட்டை நிரூபித்து, அவரையும் முஸ்லிம் எனக்காட்டுவதற்கு மார்க்கத்தில் அவர் செய்யும் குளறுபடியே அன்றி, அதில் எவ்வித உண்மையும் இல்லை.
அமீர் ஒர் ஆய்வு - பகுதி 2
No comments