Tamil Islamic Whatsapp Group Link - (قاعدة المعرفة - அறிவுத்தளம்)
قاعدة المعرفة - அறிவுத்தளம்
குழுமத்தின் விதிமுறைகள்
இக்குழுமத்தில் மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரமே பதிவு செய்ய வேண்டும்.
இக்குழுமத்தில் பதிவு செய்கின்ற அல்லது பகிர்கின்ற பயான்கள், ஆக்கங்கள், வரலாறுகள் நம்பகத் தன்மையுடையதாகவே இருக்க வேண்டும்.
இக்குழுமத்தில் நீங்கள் பதிவு செய்கின்ற/பகிர்கின்ற பதிவுகளை முதலில்
நீங்கள் கேட்டு அல்லது வாசித்து விடயங்களை உள்வாங்கி இருத்தல் வேண்டும்.
காரணம், உங்களின் பதிவுகளிலிலிருந்து யாராவது கேள்விகள் எழுப்பினால்,
அதற்கு நீங்களே பதிலும் கொடுக்க வேண்டும்.
யாராவது பதிகின்ற/பகிர்கின்ற பதிவுகளில் உங்களுக்கு மாற்றுக் கருத்துக்கள்
இருப்பின், அதனை நாகரீகமான முறையில் கேள்வியாக முன் வைக்க வேண்டும்.
அதற்கு பதில் கொடுப்பவரும் நாகரீகமான முறையிலேயே பதில் கொடுக்க வேண்டும்.
*மீறும் பட்ஷத்தில் குழுமத்திலிருந்து நீக்கப்படுவீர்கள்.*
தனி ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தை விமர்சித்து எழுதப்படுகின்ற/பேசப்படுகின்ற பதிவுகளை இக்குழுமத்தில் பகிரக் கூடாது. அவர்கள் இஸ்லாத்திற்கு முரணாகக் கூறியிருக்கின்ற கருத்துக்களுக்கு மாத்திரம் மறுப்புக்கள் கொடுக்கப்படுகின்ற பதிவுகளைத் தவிர,,,
ஏதாவதொரு விடயத்தில் இருவருக்கு மத்தியில் நடைபெறும் கருத்துப்
பரிமாற்றமானது, விவாதமாக உருவெடுக்கும் போது, "குழும நிர்வாகிகள்
குறுக்கிட்டு, குறித்த விடயத்தை எவ்வாறு கையால வேண்டும்?" என்பதைத்
தெரிவிப்பார்கள். அதுவே ஒரு குழும நிர்வாகியுடன் கருத்துப் பரிமாற்றம்
நடைபெற்றால், ஏனைய குழும நிர்வாகிகள் குறிக்கிடுவார்கள்.
குறிப்பு
தயவு செய்து நிபந்தனைகளை பேணி நடக்கக்கூடியவர்கள் மாத்திரம் இந்த குழுமத்தில் இணையலாம்.
🔚🔚🔚🔚🔚🔚🔚🔚
கல்வியின் அவசியம்
"கல்வியைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என நபி முஹம்மத் (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:- அபுதர் (ரழியழ்ழாஹு அன்ஹு)
நூல்கள்:- அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.
அறிவிப்பவர்:- அபுதர் (ரழியழ்ழாஹு அன்ஹு)
நூல்கள்:- அபுதாவூத், திர்மதீ, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்.
⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️⬇️
நபி முஹம்மத் (அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம்) அவர்கள் கூறினார்கள்;
....."யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ, அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அழ்ழாஹ் எளிதாக்குகிறான்".....
அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு)
நூல்:- ஸஹீஹ் முஸ்லிம்.
....."யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ, அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அழ்ழாஹ் எளிதாக்குகிறான்".....
அறிவிப்பவர்:- அபூஹுரைரா (ரழியழ்ழாஹு அன்ஹு)
நூல்:- ஸஹீஹ் முஸ்லிம்.
🏽🏽🏽🏽🏽🏽🏽🏽🏽
🏽🏽🏽🏽🏽🏽🏽🏽🏽
No comments